திணைமாலை நூற்றைம்பதும் சிற்றிலக்கிய மாலை இலக்கியங்களும்
[க.கதிரவன், துணைப்பேராசிரியர், தமிழ்த்துறை & ஆய்வுமையம், அரசுக்கல்லூரி சித்தூர், பாலக்காடு, கேரளா 678104]
ஒரு பொருள் குறித்து பல செய்யுள்கள் பாடுதல் மாலை
எனப்படும்.
மாலை என்னும் சொல் மாலா என்னும் வடசொல்லிலிருந்து
தோன்றியது என்பர். இஃது தவறு. மாலுதல் என்னும் வினைக்கு மயங்குதல் என்று
பொருள். பகலும் இரவும் மயங்கும் பொழுது மாலை எனப்படுவதும் பலவாகிய
பூக்கள் ஒன்றாக மயங்குமாறு இறுக்கிக் கட்டப்படுவது மாலை எனப்படுவதும் மாலை தமிழ்ச்சொல்லே
எனக்காட்டும்.
96 பிரபந்தங்களுக்குள் மாலை என்று முடியும் நூல்கள் 28 உள.