அன்னையைப்
போல் ஒரு தெய்வமில்லை.
முனைவர் ஜ.பிரேமலதா
ஒவ்வொரு மதத்திலும் எத்தனை கடவுளர்கள். சில
மதங்கள் பெண்களை மிகுதியாகக் கடவுளாக வழிபடுகின்றன. சில
மதங்களில் பெண்கள் வழிபடப்படுவதுமில்லை. இஃது
அவரவர் சமய,
மத உரிமை. ஆனால் எந்தச் சமயமாக, மதமாக
இருப்பினும் தாயை
ஒரு தெய்வமாகப் போற்றாத மதமோ
சமயமோ இல்லை. உலகின் அனைத்து மதங்களும் சமயங்களும் தாயைத்தான் முதலில் போற்றுகின்றன. இவ்வாறு அனைத்து மக்களும் ஒன்றுபடும் இந்தக் கருத்தினை அனைவரும் உணர்ந்தால் உலகில் எதற்கித்தனை கடவுளர்கள்?
