Showing posts with label ஆய்வு மாணவர் பக்கம். Show all posts
Showing posts with label ஆய்வு மாணவர் பக்கம். Show all posts

Sunday, 14 September 2014

வானதி இலக்கிய சிந்தனைச் சிறுகதைகளில் பாலியல்-வன்முறை



செ.அருள்ஜோதி முனைவர் பட்ட ஆய்வாளர்,தமிழ்த்துறை
அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),சேலம்-7

வானதி இலக்கிய சிந்தனைச் சிறுகதைகளில் பாலியல்-வன்முறை

மேனாட்டார் வருகையால் தமிழ் இலக்கியங்கள் மறுமலர்ச்சிப் பெற்றன. வளர்ச்சிப் பெற்ற இலக்கியங்களில் சிறுகதை இலக்கியமும் ஒன்றாகும். சிறுகதைகளின் வளா்ச்சியில் இதழ்கள் முக்கிய பங்கு வகித்ததோடு எழுத்தாளார்களை உருவாக்கின. இதனால் தரமான சிறுகதைகளைத் தேர்ந்தெடுக்க முடியாமல் வாசகர்கள் தடுமாறினார். இந்நிலையில் வானதி பதிப்பகம் இலக்கியச் சிந்தனை என்ற அமைப்பை உருவாக்கி மாத சிறுகதைகளை தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் பன்னிரண்டு சிறுகதைகளை தொகுத்து சிறந்த சிறுகதையின் தலைப்பை நூலின் தலைப்பாக வெளியிட்டு வருகின்றது. அச்சிறுகதை தொகுப்புகளில் நாற்று (2000), மனசு (2003), கழிவு (2004) ஆகிய தொகுப்புகளில் வரும் சிறுகதையில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறையை ஆராயும் நோக்கில் இக்கட்டுரை அமைந்துள்ளது.

கோடி சிறுகதை தொகுப்பில் மன உணர்வு


செ.அருள்ஜோதி,எம்.ஏ.,எம்ஃபில்,,முனைவர் பட்டஆய்வாளர்,அரசுகலைக்கல்லூரி,சேலம்-7
கோடி சிறுகதை தொகுப்பில் மன உணர்வு
பண்பாடும் மன உணர்வும்
மனிதர்கள் மட்டுமே பண்பாடு என்ற சொல்லோடு தொடார்புடையவர்களாவர். மனிதர்களைப் பிற விலங்கினங்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவது பண்பாடாகும். சமூகங்கள் பண்பாடுகளை உருவாக்குகின்றன. பண்பாடு, சமூகம் என்பன ஓர் அமைப்பை விளக்கும் இருகுறியீட்டுச் சொற்களாகும். சமுதாய அமைப்புகளையும,ர் ஒழுக்கமுறைகளையும், பழக்கவழக்கங்களையும் குறிப்பிடுவதற்கு அமைந்தனவாகும். பிற உயர்களிடமில்லாத ஓர் உணர்வு மனிதனுக்கு உண்டு என்பதை தொல்காப்பியம் சுட்டிக்காட்டுகின்றது.

Saturday, 11 January 2014

மறுபக்கம் புதினம் காட்டும் அம்மன் திருவிழாப் பண்பாட்டுப் பதிவுகள்


கட்டுரை-25

மறுபக்கம் புதினம் காட்டும் அம்மன் திருவிழாப் பண்பாட்டுப் பதிவுகள்


மு.சுகந்தி,முழுநேர முனைவா;பட்ட ஆய்வாளர் தமிழ்த்துறை,அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),சேலம் - 7.

 முன்னுரை

                மனிதனின் வளர்ச்சிநிலையை அவனது பண்பாட்டின் வளா;ச்சி நிலையைக் கொண்டு தான் அறியமுடியும். பண்பாடு  இல்லாமல் மனிதவளர்ச்சியை எண்ணிப்பார்க்க முடிவதில்லை.                அவ்வாறே மனிதனை விட்டுப் பண்பாட்டை தனியே பிரித்தெடுத்து நோக்குவதும் அரியச்செயலாக அமைந்துவிடுகின்றது. அவ்வகையில் பொன்னீலனின் மறுபக்கம் புதினத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பண்பாட்டுச் செய்திகள்; பதிவுச் செய்யப்பட்டுள்ளன.

‘வாடாமல்லி’ நாவல் காட்டும் அரவாணிகளின் பண்பாட்டுப் பதிவுகள்




கட்டுரை-24

வாடாமல்லிநாவல் காட்டும் அரவாணிகளின் பண்பாட்டுப் பதிவுகள்

 த. மேரி,முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர்,தமிழ்த்துறை,அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),சேலம் - 7.


முன்னுரை

                நாவல் என்ற இலக்கியத்திற்குப் படைப்பாளிகள் தரும் உயிா்வடிவம் பண்பாட்டுக் கூறுகளாகும். இந்த வடிவில் அரவர்ணிகளின் வர்ழ்க்கைப் பண்பாட்டை சு.சமுத்திரம் வர்டாமல்லிஎனும் நாவலில் எடுத்துக்கூறியுள்ளார். காலையில் பூத்து மாலையில் வர்டிவிடும் பூக்களுக்கு இடையில் என்றுமே வர்டாத காகிதப்பூக்களாக அரவர்ணிகள் அமைந்துள்ளனா். கண்ணுக்கு இனிய காட்சியாய் காலத்துக்கு முரணான கோலம் கொண்டு அா்த்தமற்ற வர்ழ்க்கை வர்ழும் அரவர்ணிகளின் பால்மாற்றுச்சடங்கு, பூப்புச்சடங்கு, திருமணமுறையாக அமையும் கூத்தாண்டவர்; விழா, அவர்களுக்கானக் கலைத்திறன் போன்றவற்றைப்பற்றி ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

தெய்வப்பாடல்களின் வழி பாரதியின் தேசபக்தியும் விடுதலையுணர்வும்



கட்டுரை-23

தெய்வப்பாடல்களின் வழி பாரதியின் தேசபக்தியும் விடுதலையுணர்வும்


மு. சுகந்தி,முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர்,தமிழ்த்துறை,அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),சேலம் - 7.

முன்னுரை

                விடுதலை வெளிச்சத்திற்கு வித்திட்டகாலத்தில் விடிவௌ;ளியாய் தோன்றியவன் பாரதி. இந்திய விடுதலை என்பதை இதயத்துடிப்பாக கொண்டிருந்தார். இறை நம்பிக்கையை எடுத்துக்கூறும் போதே இடையில் இந்திய விடுதலையை இடித்துரைத்தார். இந்தியதேசம் இயலாமையால் இரங்கிடும் வேளையில் இறை சக்தியை இயம்பியவன். பாரதி தெய்வப்பாடல்களுக்குள் தேசப்பக்தியையும் விடுதலை உணா;வையும் இரண்டறக்கலந்து இனிதே எடுத்துரைத்த திறம் பற்றி ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கண்ணப்பநாயனார் புராணத்தில் கண்மாற்று அறுவை சிகிச்சை



கட்டுரை-22

கண்ணப்பநாயனார் புராணத்தில் கண்மாற்று அறுவை சிகிச்சை


து.பிரபா,     முனைவா;பட்ட ஆய்வாளர்  தமிழ்த்துறை, அரசு கலைக்கல்லூரி(தன்னாட்சி),                சேலம் - 7.
கண்ணப்பநாயனார் புராணத்தில் கண்மாற்று அறுவை சிகிச்சை
                நமது முன்னோர்கள் தமிழில் இலக்கிகயம் அல்லாத மற்ற துறைகளான மருத்துவம், அறிவியல், வானியல் முதலிய அனைத்தையும் பாட்டிலே ஆக்கிவைத்தனர். சங்கப்புலவா; பாடல்களிலும் சித்தா; பாடல்களிலும் இன்றைய அறிவியல் கருத்துகளுக்குச் சமமான சொற்கள் ஏராளமாக இருக்கின்றன. பண்டைத்தமிழர் மாற்று உறுப்பு மருத்துவத்தை அக்காலத்திலேயே அறிந்திருந்தனர். கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் சேக்கிழார் பெருமான் அருளிய பெரியபுராணத்தில் அத்தகைய கண்மாற்று அறுவை சிகிச்சை முறையைப் பற்றி கூறியுள்ள செய்திகளை இக்கட்டுரை ஆராய்கிறது.

நாலடியாரில் அளவை முறைகள்



கட்டுரை-21

நாலடியாரில் அளவை முறைகள்


து.பிரபா,        முனைவர்பட்ட ஆய்வாளர்,   தமிழ்த்துறை,     அரசு கலைக்கல்லூரி(தன்னாட்சி),    சேலம் - 7.


                உலகில் பல நாடுகள் பொருட்களின் ஏற்றுமதி, இறக்குமதிக்காகவும் வர்த்தக விரிவாக்கத்திற்காகவும் பொதுவான அளவை முறைகளைக் கடைபிடித்து வருகின்றன. ஆங்கிலேயா; உலகின் பல நாடுகளைத் தங்கள் ஆட்சியின் கீழ் வைத்திருந்ததனாலும் ஆங்கிலமொழி உலகமொழியாக உருவெடுத்ததனாலும் ஆங்கிலம் சார்ந்த அளவை முறைகளை அந்நாடுகள் பின்பற்றத் தொடங்கின. ஆனால் ஆங்கிலேயாpன் வருகைக்கு முன்னால் பழந்தமிழாpடையே தனித்துவமான அளவை முறைகள் இருந்ததனால் தான் கடல் கடந்தும் வாணிகத்தில் சிறந்து விளங்கினர்.ஒரு தனித்துவமான நாடு தனது தேவைகளையும், செயல் திட்டங்களையும் வகுத்து பகுத்து தொகுத்துக் கணக்கெடுத்து வாழ்வதுதான் பண்பாடு என்றும் அறிவின் முதிh;ச்சி என்றும் கூறுவர். தமிழா;களின் பழங்கால அளவை முறைகள் ஒரு மாபெரும் பண்பாடு, அறிவாற்றல், அறிவியல் என்பனவற்றுக்குப் பெருமை தரக்கூடிய சான்றுகளாக அமைகின்றன. அத்தகைய அளவை முறைகள் நாலடியாரில் அமைந்துள்ள முறைமையினைக் கீழ்கண்டவாறு அறியலாம்.

‘பிறகு’ நாவல் காட்டும் சடங்குகள்



கட்டுரை-20

பிறகுநாவல் காட்டும் சடங்குகள்  

 கு. கோமதி,முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழ்த்துறை,அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),சேலம் - 7.

முன்னுரை
                மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் தம் முன்னோர் பின்பற்றிய குறிப்பிட்ட செயல்களை மாற்றாமலும் தவிர்காமலும் தொடர்ந்து செய்துவரும் பண்பினனாக விளங்குகிறான். அத்தகைய கூறுகளையே நாம் சடங்கு என அழைக்கிறோம். இதனை,         மனிதன் ஆதியிலே கூட்டாக வேலை செய்தான். பொருட்களை உற்பத்தி செய்யும் உபகரணங்களும் மிருகங்களை திருத்தமுற உடல்பலத்தின் அவசியம் குறைந்து, மனிதன் தனித்து வேலை செய்ய முடிந்த காலத்தும் பழைய கூட்டு வாழ்க்கை நினைவுகள் அவனை விட்டுப்பிடியவில்லை. அவை சடங்குகளாக மாறின  (க.கைலாசபதி, பண்டைய தமிழர்வாழ்வும் வழிபடும், ப.211) என்று க.கைலாசபதி சடங்கிற்கு விளக்கம் அளிக்கிறார். அவ்வகையில் சக்கிலிய இனமக்களின் வாழ்க்கையில் காணலாகும் பூப்புச்சடங்கு, திருமணம், மணவிலக்கு, இறப்புச்சடங்;கு குறித்து சடங்குகளை நாவல் வழி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

பெரியபுராணத்தில் இசைக்கலை

கட்டுரை-19

பெரியபுராணத்தில் இசைக்கலை

து.பிரபா, முனைவர் பட்ட ஆய்வாளர்,அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி), சேலம் - 7.

    ஆதிகாலத்தில் மனிதன் காட்டுமிராண்டியாக வாழ்ந்தபோது தங்க வீடும், உடுக்க உடையும், உண்ண உணவும் ஏற்பாடு செய்து கொள்ளத் தெரியாமல் மிருகம் போல அலைந்து திரிந்தபோது கொள்ளத் தெரியாமல் மிருகம் அவன் அறிந்திருந்தது ஓசை  ஒன்றே. மொழிக்கு உருவம் காணும் முன்பே அன்றைய மனிதன் பெய்கிற மழையில், இடிக்கிற வானத்தில், மரங்களின் அசைவில், பறவைகளின் ஒலியில் மிருகங்களின் குரலில் எழுந்த ஓசையைக் கண்டான். பின்னர் நாகரிக வளர்ச்சியடைந்த பிறகு மனிதன் தன்னுடைய அறிவினாலும் சிந்தனையினாலும் இசையாக உருவகப்படுத்தினான். இசை, தமிழர் தம் வாழ்வில் தொடக்கம் முதல் இறுதி வரை இணைந்திருக்கிறது. தொட்டிலில் தாலாட்டாய் மலர்ந்து முடிவில் ஒப்பாரியாய் முடிகிறது. தமிழர்களின் வாழ்வில் பின்னிப்பிணைந்திருக்கும் இசையின்  பெருமையும் சிறப்பும் அளவிடக்கரியதாய் விளங்குகிறது. தமிழர்களின் முதல் நூலான தொல்காப்பியத்தில் இசையைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன.

பாரதியார் படைப்புகளில் ஒடுக்குமுறைகள்


கட்டுரை-18


பாரதியார் படைப்புகளில் ஒடுக்குமுறைகள்

த.மேரி, முனைவார்பட்ட ஆய்வாளார், தமிழ்த்துறை, அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி), சேலம் - 7.
                சென்ற நூற்றாண்டில் கீட்ஸ், ஷெல்லி என்று உலகம் முழுக்க அவார்களது கவி ஆளுமையை வைத்துப் புகழ்ந்து பேசினார்கள். அப்படிப்பட்ட பேரும், புகழும் பெற்று சிறு வயதில் சாதனைகளை நிகழ்த்திக் காண்பித்தவார் மகாகவி பாரதி என்றால் அது மிகையாகாது. பாரதியின் கவிதைகள், கதைகள், கட்டுரைகள் ஆகியவை தமிழ் எழுத்துலகில், பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. சமுதாய ஒடுக்குமுறைக்கு ஆளான மக்களை தன் படைப்புகளில் படைத்துக்காட்டியதோடு, அவார்களுக்காக பாடுபட்டக் காரணத்தினால் தன் இனத்தவரால் பாரதியே ஒதுக்கப்பட்ட தன்மையினைத் தன்னுடைய சுயசரிதையில் படைத்துக்காட்டியுள்ளார். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்ட நிலையினையும் அவரது படைப்பின் வாயிலாக மக்கள் அடைந்த நிலையும் ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

`ஒருநாள் போதுமா` நாவலில் கட்டடத் தொழிலாளர்களின் வாழ்வியல்


கட்டுரை-17


`ஒருநாள் போதுமா` நாவலில் கட்டடத் தொழிலாளர்களின் வாழ்வியல்

த. மேரி முழுநேர முனைவார்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),சேலம் - 7.
                அந்நியார்களிடம் இருந்து விடுதலைப் பெற்றாலும், அதிகார வார்கத்தினரால் அடிமைகளாக நடத்தகப்பட்டு உரிமைகளையும், அடிப்படைச்  சுதந்திரத்தையும் இழந்த மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தை சித்தரிக்கின்ற நாவல்களுள் சு.சமுத்திரத்தின் ஒரு நாள் போதுமாஎன்ற நாவல் சிறப்பிடம் பெறுகின்றது. இந்நாவலில் தொழிலாளார்களுக்கு அடிப்படைத் தேவைகள் கிடைக்கப் பெறாமை, மேலதிகாரிகள் கையூட்டுப் பெறுவதால் அவார்களுக்கு ஏற்படும் சிக்கல்கள், பெண் தொழிலாளார்களின் அவலநிலை போன்ற நிகழ்வுகளையும் அதனை எதிர்த்துப் போராடி வெற்றிபெறும் தன்மையினையும் ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

அறநூல்களில் பொருளறிவியல்



.

கட்டுரை-16

அறநூல்களில் பொருளறிவியல் 

பா. மணிவண்ணன்,   முனைவர் பட்ட ஆய்வாளர், அரசுகலைக்கல்லூரி, சேலம் - 7
                தமிழர்கள் மருத்துவம், பொறியியல், உயிரியல், வானியல், நிலவியல் போன்ற பல்வேறு அறிவியல் சிந்தனைகளைக் கொண்டிருந்ததையும், அவற்றை இலக்கியங்களில் பதிவு செய்துள்ளதையும் பழந்தமிழ் இலக்கியங்கள் காட்டுகின்றன. சங்க மருவிய காலத்தில் தோன்றிய பதினெண்கீழ்க்கணக்கில் அறத்தை வலியுறுத்த எழுந்த அற நூல்களில் பொருளறிவியல் பற்றியும், அது தற்கால அறிவியல் வளர்ச்சிக்கு வித்திட்டதையும் ஆராயும் விதத்தில் இக்கட்டுரை அமைகிறது.   

பாரதியின் பல்வகைப் பாடல்களில் அறிவியல்



கட்டுரை-15

பாரதியின் பல்வகைப் பாடல்களில் அறிவியல்


 பா.மணிவண்ணன்முனைவார்பட்ட ஆய்வாளார்,   தமிழ்த்துறை,    அரசு கலைக்கல்லூரி(தன்னாட்சி),சேலம் - 7.

                காலங்காலமாக இலக்கியங்கள் பல்வேறு மாற்றங்களைப் பெற்றுவந்துள்ளன. தற்காலத்தில் நாவல், சிறுகதை, கவிதை, தலித்தியம், பெண்ணியம், அரவாணியம் என்ற நிலைகளில் இலக்கியங்கள் காணப்படுகின்றன. இத்தகைய இலக்கியங்களானது, சமூகத்தின் செயல்பாடுகளை உள்ளவாறே பதிவு செய்து, மக்களிடம் அதைக் கொண்டு சோர்க்கும் களமாகத் திகழ்கிறது. அவற்றில் கவிதை சிறப்பான இடத்தை வகிக்கிறது. நாவல், சிறுகதை போன்று விரிவாக ஒரு பொருளைச்ர் சொல்லாமல் ஓரிரு வரிகளில் சுருக்கமாகத் தொpவிக்கும் சிறப்பினைக் கவிதைப் பெற்றுள்ளது. இத்தன்மையுடைய கவிதை எழுத்தாளார்களில் உலகம் போற்றும் கவிஞராகத் திகழ்ந்தவார் பாரதியார்ர் ர். புதுக்கவிதையின் தந்தை என்றழைக்கப்படும் சிறப்புக்குரியவார். இத்தகைய சிறப்புடைய கவியின் கவிதைகளில் பெண்ணியம், உளவியல், மானுடவியல், பண்பாட்டுவியல் போன்ற பல்துறைகள் காணப்படுகின்றன. அதில் அறிவியலும் ஒன்று. இவரின் கவிதைத் தொகுதியில், பொதுமைப் பாடல்கள் என்ற பகுதியில் பல்வகைப் பாடல்களின் கவிதை தொகுப்பில் அடங்கியுள்ள கவிதைகளில் அறிவியல் கருத்துகளை ஆராயும் விதத்தில் இக்கட்டுரை அமைகிறது.

கார் நாற்பது காட்டும் தமிழரின் வானியல் சிந்தனைகள்


கட்டுரை-14


கார் நாற்பது காட்டும் தமிழரின் வானியல் சிந்தனைகள்

பா.மணிவண்ணன்,     முனைவா;பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, அரசு கலைக்கல்லூரி(தன்னாட்சி),     சேலம் - 7.
                இருபத்தொன்றாம் நூற்றாண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் இந்த உலகானது, அறிவியல் வளர்ச்சியில் கண் இமை கை நொடிவேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இத்தகைய அறிவியல் வளர்ச்சிக்குப் பழந்தமிழர்கள் ஊற்றாய் அமைந்தனர் என்றால் மிகையாகாது.

பாரதியார் கவிதைகளில் கல்விச்சிந்தனை


கட்டுரை-13


பாரதியார் கவிதைகளில் கல்விச்சிந்தனை

கு. கோமதி,முழுநேர முனைவர்பட்ட ஆய்வாளர்,தமிழ்த்துறை,அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),சேலம் - 7.
முன்னுரை
                தொல்காப்பியார் காலந்தொட்டு இன்றைய காலக்கட்டம் வரை கல்வி குறித்தச் சிந்தனைகள் அறிவுறுத்தப்பட்டு வருகின்றன. தொல்காப்பியார், ‘வாயினும் கையினும் வகுத்தப் பக்கம்என்ற வரிகளில் ஏட்டுக்கல்வியையும் தொழிற்கல்வியையும் இரண்டாக வகுத்துக் குறிப்பிடுகின்றாhர். ‘கேடில் விழுச்செல்வம் கல்வி’ , ‘கல்வியழகே அழகுஎன்று நீதியிலக்கியங்களிலும் கல்வி குறித்த பதிவுகள் நிரம்பிக் காணப்படுகின்றன. மனிதன் மனிதனாக வாழ கல்வியறிவு இன்றியமையாதது ஆகும். இவ்வுண்மையை நன்கு அறிந்த பாரதி கல்வியின் முக்கியத்துவத்தைப் பல்வேறு படைப்புகளில் புலப்படுத்தியுள்ளார். அப்படைப்புகளில் தேசப்பக்திப்பாடல்களின் வாயிலாகக் காணலாகும் கல்விச்சிந்தனைகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஆசாரக்கோவை காட்டும் ஒடுக்கப்பட்டோர் நிலை


கட்டுரை-12


ஆசாரக்கோவை காட்டும் ஒடுக்கப்பட்டோர் நிலை

கு. கோமதி,முழுநேர முனைவா்பட்ட ஆய்வாளர்;,தமிழ்த்துறை,அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),சேலம் - 7.

முன்னுரை
                யாதும் ஊரே யாவரும் கேளீர்;’ என்று கணியன்பூங்குன்றனாரும், ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்என்று திருமூலரும் கூறியுள்ளனா;. எல்லாவற்றுக்கும் மேலாக வள்ளுவரோ, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்என்று குறிப்பிட்டுள்ளளார்;. ஆனால், நம் தமிழ்ச்சமூகம் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் குறிப்பிட்ட மக்களைப் பிறப்பின் அடிப்படையிலும், தொழில் அடிப்படையிலும், குணத்தின் அடிப்படையிலும் உயா;வு தாழ்வினைக் கற்பித்து வந்திருக்கின்றது. அவ்வகையில், ஆசாரக்கோவையில் அந்தணர்களைக் கல்வி கேள்விகளில் சிறந்தவர்களாகவும், உயந்தவர்களாகவும், அவ்வொழுக்கம் இல்லாதவர்களைக் கீழ்மக்களாகவும் கருதும் சமுதாய அவலப் போக்கினை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகின்றது.

புறநானூறு கூறும் வாழ்வியல் நெறிகள்



கட்டுரை-11

புறநானூறு கூறும் வாழ்வியல் நெறிகள்

மு. ஈஸ்வரன்,முனைவர் பட்ட ஆய்வாளர்,தமிழ்த்துறை,அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),சேலம் - 7.
முன்னுரை
                பழங்காலத் தமிழார்களின் பண்பாடு, நாகாகம், பழக்கவழக்கங்களைப்ற பற்றிய செய்திகளை எடுத்துக் கூறுகின்ற நூலாகச் சங்க இலக்கியம் விளங்குகின்றது. சங்க இலக்கியம் பாட்டும் தொகையும் என்று வகைப்படுத்தப்படுகிறது. பாட்டு என்பது பத்துப்பாட்டு, தொகை என்பது எட்டுத்தொகை. எட்டுத்தொகை நூல்களில் புறப்பொருள் பற்றிய நானூறு பாடல்களைக் கொண்டு தமிழர்களுக்குக் கிடைத்த பெருங்கருவூலம் என்று அறிஞார்களால் போற்றப்படுகிறது. அதற்குக் காரணம் புறநானூறு உலகிற்குப் பல அறிய உண்மைகளைக் கூறுகின்ற தன்மையால் அப்பேற்றினைப் பெறுகிறது. புறநானூற்றுப் புலவார்கள் தன்மானமிக்கவார்களாகவும், வேந்தார்களின் சிறப்பை உரைப்பவார்களாகவும், வேந்தார்கள் தவறு செய்யும்போது இடித்துரைப்பவார்களாகவும், உலக நிலையாமையை எடுத்துக்கூறி ஈகையின் சிறப்பை விளக்குபவார்களாகவும், மனிதார்கள் கடைப்படிக்க வேண்டிய உலகியல் நெறிகளை சுட்டுபவார்களாகவும் விளங்கியுள்ளனார் என்பதைத் தெளிவாக உணரமுடிகிறது. புறநானூற்றுப் புலவார்கள் உலகிற்கு வழங்கிய வாழ்வியல் நெறிகளை ஆய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பாரதியாரின் கவிதைகளில் பெண்ணியப் பார்வை



கட்டுரை-10

பாரதியாரின் கவிதைகளில் பெண்ணியப் பார்வை
மா. ஜெகதாம்பாள் முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி)                சேலம்-7.
முன்னுரை
                சங்க காலம் தொடங்கி இருபதாம் நூற்றாண்டு வரை பெண்களின் வாழ்க்கை ஒரே போக்காக அமைந்துள்ளது. அந்தந்த காலக்கட்டங்களில் அரசியல் மற்றும் மத தாக்கங்களின் காரணமாகப் பெண்களின் நிலையில் சிற்சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவே தவிர பொpய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. அப்படிப்பட்ட நிலையில் பாரதியார் காலம் பெண்ணடிமை மிகுந்திருந்த காலமாகும். பெண்கள் கல்வியின்றி மூடப்பழக்கங்களில் சிறைப்பட்டு சிந்திக்கும் திறனின்றி, தனித்து இயங்கும் ஆற்றல் இல்லாமல் இல்லறச் சிறையில் கற்பு என்ற சமூக விலங்குகளால் பூட்டப்பட்டு சமையலறையில் முடங்கிக் கிடைந்த காலமாகும்.

நூலாசிரியர் பண்பாடு - பூங்கொடிக் காப்பியம்



கட்டுரை-9

நூலாசிரியர் பண்பாடு - பூங்கொடிக் காப்பியம்

 ஆ. கலைச்செல்வி, முனைவர்பட்ட ஆய்வாளார் (முழுநேரம்),

தமிழ்த்துறை,அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),சேலம் - 7.

முன்னுரை

     பண்படுதல் பண்பாடு ஆகும். பண்பாடு என்பது மனித வளார்ச்சியோடு பின்னிப்பிணைந்தது. பண்பாட்டு வளார்ச்சி மனிதனை மனிதனாக வாழ  வழிகோலும் இலக்கிய வளார்ச்சியோடு தொடார்புடையது ஆகும். ஒரு மொழி திருந்திய மொழியாக இருக்க வேண்டுமெனில் அதற்கு, அம்மொழியில் செவ்வியல் இலக்கியங்கள் தோன்றியிருக்க வேண்டும். அத்தகைய சிறப்புற்ற இலக்கியங்கள் அமைவது ஒரு நூலாசிpயன் கையில்தான் உள்ளது. நூலாசிpயன் ஒரு நூலை இயற்றுவதற்கு சில குறிப்பிட்ட மரபு சார்ந்த பண்பாடுகளைக் கையாளுகிறான். இவ்வழியிலேயே மணிமேகலை காப்பியத்தின் சார்பு நூலான பூங்கொடிக் காப்பியத்தில் முடியரசன் கையாண்டுள்ள நூல்மரபுசார் பண்பாடு நன்னூல் வழி ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.

அழிவின் முதல்படி - சகுனி


கட்டுரை-8


அழிவின் முதல்படி - சகுனி

ஆ. கலைச்செல்வி,முனைவர்பட்ட ஆய்வாளார் (முழுநேரம்),தமிழ்த்துறை,அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),சேலம் - 7.




                இலக்கியங்கள் சமுதாய பிரதிபலிப்பின் உச்சகட்டமாக அமைகின்றன.  படைப்பாளிகள் அச்சமுதாயத்தை எடுத்தியம்ப பற்பல கதைப்பாத்திரங்களைச் சித்தார்க்கின்றனார். அத்தகைய படைப்பாளிகளில் தன்னுடைய சொல்லாலும் எழுத்தாலும் மக்களை வீறுகொண்டு எழச்செய்தவார் பாரதியார். அவரது பாத்திரங்கள் விடுதலை வேட்கையின் வோர்களாக அமைந்துள்ளனார். அவ்வோர்களை உறுதியாக ஊன்றச் செய்பவார்களாக எதிரர்மைப்பாத்திரங்கள் படைக்கப்பட்டுள்ளனார். அத்தகைய எதிரர்மைப்பாத்திரமாகப் பாஞ்சாலிசபத்தில் சகுனியைப் பாரதி படைத்துள்ளார்.