கட்டுரை-25
மறுபக்கம் புதினம் காட்டும் அம்மன் திருவிழாப் பண்பாட்டுப் பதிவுகள்
மு.சுகந்தி,முழுநேர முனைவா;பட்ட ஆய்வாளர் தமிழ்த்துறை,அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),சேலம் - 7.
முன்னுரை
மனிதனின் வளர்ச்சிநிலையை அவனது
பண்பாட்டின் வளா;ச்சி நிலையைக் கொண்டு தான் அறியமுடியும். பண்பாடு இல்லாமல் மனிதவளர்ச்சியை எண்ணிப்பார்க்க முடிவதில்லை. அவ்வாறே மனிதனை விட்டுப்
பண்பாட்டை தனியே பிரித்தெடுத்து நோக்குவதும் அரியச்செயலாக அமைந்துவிடுகின்றது. அவ்வகையில்
பொன்னீலனின் மறுபக்கம் புதினத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு
பண்பாட்டுச் செய்திகள்; பதிவுச் செய்யப்பட்டுள்ளன.
அமைந்துள்ளன. அவற்றில் அம்மன்
திருவிழாப் பண்பாட்டுப் பதிவுகளான திருவிழாக்காலம், வில்லுப்பாட்டின் சிறப்பு,
கோயிலுக்கு வரும்
முறை, காணிக்கை
போடல், உயிர்பலிதரல், பூசை செய்யும் முறை போன்றவற்றைப் பற்றி ஆய்வதே
இக்கட்டுரையின் நோக்கமாகும்.வழிபாடு-விளக்கம்
“வழிபாடு என்னும் சொல்லின்
பொருள் ‘வழிபடுதல்’
என்பதாகும். வழி-
நெறி, படுதல்-
செல்லுதல். ‘படு’ என்னும்
சொல் பாடு என முதனிலை திரிந்தது.
‘வழிபடு’
எனும் தொழில்
வழிபாடு எனத் தொழில் பெயராயிற்று. எனவே, வழிபாடு என்பது ஒரு குறிப்பிட்ட நெறியின்கண் இறைவனை
வணங்கும் முறையாகும்” (க.சேகா;.சப்தவிடங்கத் தலங்கள்.ப-80) என்றச் செய்தியின் வாயிலாக, மனிதன் தனக்கென ஒரு நெறியின்கீழ்
இறைவனை வணங்கு கிறான் என்பது தெளிவாகிறாது. மேலும்,
“வழிபடும் தெய்வம்
நிற்புறங்காப்ப” (தொல்.பொருள். நூற்பா - 415)
என்று தொல்காப்பியமும,; ஒரு குலம் வழிபட்ட தெய்வத்தை அக்குலவழி வந்த பலரும் அதன் ‘வழிப்படுதல்’ அல்லது ‘போற்றல்’ என்று குலதெய்வ வழிபாடு
பற்றிக் குறிப்பிடுகிறது.
பொன்னீலனின் மறுபக்கம்
புதினத்திலும் முத்தாரம்மன், மண்டைக்காட்டம்மன்
என்னும் தெய்வங்களைக் குலவழியில் பலரும் வணங்கி அதற்கு பல்வேறு பூசைகள்
செய்து திருவிழாக்கள் கொண்டாடுவது சுட்டப்படுகின்றது. அத்திருவிழாக் காலங்களில்
கிராம மக்கள் திருவிழாப் பண்பாட்டுப் பதிவுகளாக எவற்றையெல்லாம் மேற்கொள்கின்றனா;
என்பதே இங்கு
ஆராயப்படுகிறது.
திருவிழாக்காலம்
கிராம மக்களின்
ஒன்றுபட்டச் செயல்பாடாக அமைவது திருவிழாவாகும். அனைவரும் ஒன்று சோ;ந்து பல நாட்கள் அம்மன்
திருவிழாவைக் கொண்டாடுவர். “அம்மன் கோயில் கொடையென்றால்… அவ்வளவுதான். செவ்வாய் மாலையில்
வில்லுப்பாட்டோடு கொடை தொடங்கி, வியாழன் காலையில் கிடாய் வெட்டி கம்பத்தட்டு கொழுத்தி
முடிகிறது வரை, மூன்று நாளும் சேக்காளிகளோடு இரவும் பகலும் அம்மன் கோயில்ல தான்” (பொன்னீலன், மறுபக்கம் ப-52)என்று பொன்னீலன்
சுட்டுவதிலிருந்து அம்மன் திருவிழா என்பது மூன்று நாட்கள் நடைபெறும், அனைத்து மக்களும்
கோயிலிலேயே தங்களது நேரங்களைச் செலவழிப்பார்என்பதறியமுடிகிறது.
வில்லுப்பாட்டின் சிறப்பு
திருவிழாக் காலங்களில்
மக்களின் மனமகிழ்விற்காக பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பெறும். அவ்வகையில்
முத்தாரம்மன் திருவிழாவின் போது வில்லுப்பாட்டு நிகழ்ச்சி நடத்தப்பெறுகின்றது.
வில்லுப்பாட்டின் சிறப்புகளாக
“பாட்டுக்காரா;கள் புகழ்மிக்கவா;கள். வீசுகோலை அதோ பார் என்று ஆகாயத்தில் வீசி உள்ளங்கையி;ல் ஏந்தி பம்பரமாய்ச்
சுழல விட்டபடி, தலைமைப் பாட்டுக்கார் பாடத் தொடங்கியதும் கூட்டம் மூச்சுவிட
மறந்து போகும்” (பொன்னீலன், மறுபக்கம் ப-53)
என்று ஆசிரியா; பதிவு செய்கிறார். வில்லுப்பாட்டின் தன்மையை மக்கள் அறிந்திருந்ததாலும்,
தங்களது
தெய்வங்களின் கதையையே பாடலாகக் கேட்டதாலும், மக்கள் அந்தக் கலையின் மீது அதிக
நாட்டம் கொண்டவா;களாக இருந்தனா;. இவைமட்டுமல்லாது பல்வேறு சமயங்களும் வளா;ந்து வந்த காலகட்டம் ஆகையால்
தங்கள் சமயச்செய்திகளை மக்கள் மனத்தில் நிலைநிறுத்த சமயவாதிகள் செய்யும்
செயலாகவும் இந்நிகழ்ச்சிகள் காணப்பட்டன.
கோயிலுக்கு வரும் முறை
மக்கள் தங்களின்
வேண்டுதல்களை இறைவனிடம் சொல்லி மனஆறுதல் பெறுவதற்காகக் கோயில்களுக்குச்
செல்கின்றனா;. அவ்வாறு செல்லும் முறைகளில் பல்வேறு
படிநிலைகளைக் கொண்டுள்ளனா;. மறுபக்கம் புதினத்தில் மண்டைக்காட்டம்மன் கோயிலுக்கு வரும்
பக்தா;கள்
இருமுடிக்கட்டிக் கொண்டு வருவா; என்றச் செய்திக் காட்டப்படுகிறது. இச்செய்தியினை,
“ஐயப்பன் கோயில் மாதிரி, இங்கேயும்
குருசாமி தலைமையில் இருமுடிக்கட்டி, சரணஞ்சொல்லித்தான் வாறாங்க…
சரணந் தா தேவி
சரணந் தா தேவி - பொன்னமே
சரணந் தா தேவி
சரணந் தா தேவி - பகவதியே”
(பொன்னீலன்
மறுபக்கம் ப-74)
என்று பாடல்பாடி வருவதாகவும் பதிவு செய்யப்படுகிறது. அவ்வாறு வரும் மக்கள்
தங்கள் இன்னல்கள்; தீர்ந்திட பல காணிக்கைகளைத் தந்து நோ;த்திக்கடன் செய்து
செல்கின்றனா;
காணிக்கைப் போடல்
மக்கள் தங்கள் உடல்
உபாதைகள் சாpயாக வேண்டும் என்பதற்காக அந்த உறுப்புகளின் வடிவங்களைச் செய்து அம்மனுக்கு
காணிக்கையாகச் செலுத்துகின்றனர். அவ்வாறு செலுத்தும் போது அந்த நோய் தீர்ந்து தாங்கள் பூரணகுணமடைவதாக அவர்கள் நம்புகின்றனா;.
“கிராமப்புறத்து நம்பிக்கைகள்
வலுவானவை. இவ்வலுவால் பல மூடநம்பிக்கைகளையும் கூட இவா;களால் உதறிவிட முடிவதில்லை.
இந்நம்பிக்கைகள் மனிதனது பிறப்பு முதல் இறப்பு வரைத் தொடா;கின்றன.” (மு.அருணாச்சலம், இராஜாவரதராஜா, தமிழ் இலக்கிய வரலாறு ப-520)
என்று கூறும் கருத்து மக்கள் மனதில் இருக்கும் நம்பிக்கையைத்
தெளிவுபடுத்துவதாக அமைகின்றது.
பொன்னீலன் தனது மறுபக்கம்
புதினத்தில் “கையில நோய் உள்ளவங்க கை வாங்கிப் போடுவாங்க. கால்ல நோய் உள்ளவங்க கால்
வாங்கிப் போடுவாங்க தலையில நோயின்னா தலைவாங்கிப் போடுவாங்க. இல்லாத எளியதுக
மரக்கட்டை வாங்குவாங்க. வசதியுள்ளவங்க வௌ;ளி வாங்குவாங்க. பணக்கார தங்கத்திலே செய்து
போடுவாங்க.” (பொன்னீலன், மறுபக்கம் ப-69) என்று மக்களின்
காணிக்கைப் போடும் செய்தியைப் பதிவுச் செய்கிறார். மக்களின் இறை நம்பிக்கை பொருளாதார ஏற்றத்தாழ்விற்கு ஏற்ற
வகையில் அமைவதையும் ஆசிரியா; உள்ளுடாக எடுத்துக்
கூறுவது அறியக் கூடிய ஒன்றாக அமைகின்றது.
உயிர் பலி தரல்
காணிக்கைத் தருவதின்
மற்றொரு பக்கமாக உயிர்பலி அமைகிறது. மக்கள்
தங்கள் உயிரைக் காக்க மற்றொரு உயிரைப் பலியாகக் கொடுத்து மனநிறைவு அடைகின்றனா;.
இந்த பலியின்
காரணமாக உக்கிரமாக இருக்கும் தெய்வம் சாந்தமடைந்து சகல நன்மையையும் அளிக்கும் என்ற
எண்ணம் மக்கள் மனதில் நிலைத்திருக்கின்றது. அம்மன் திருவிழாவில் முக்கிய
நிகழ்வாகப் பலிதரும் நிகழ்வுச் சுட்டப்படுகின்றது. ஊர் மக்கள் அனைவரும் தங்கள் பொருளாதார
நிலைக்கு ஏற்ப விலங்குகளைப் பலி கொடுக்கின்றனா;.
“அதிகாலை 5 மணிக்கெல்லாம் அம்மன் கோயில் வளாகம் ரெத்தச் சேற்றி;ல் புரளும், முண்டங்களும் விழி
பிதுங்கிய தலைகளுமாக கோயில் ஒரு படுகளமாய்க் கிடக்கும். ஒவ்வொருவரும் தம்தம்
முண்டங்களைத்தூக்கிக் கொண்டு ஒதுக்குப் புறத்துக்கு நகருவார்கள். ரெத்த வாடை ஒரு மாதம் கோயில் பக்கம் ஆளுகள நெருங்கவே
விடாது”
(பொன்னீலன்இ மறுபக்கம் ப-65) என்று கோயிலில் பலி தரும் செய்தி நாவலில் பதிவுச்
செய்யப்படுகிறது. உயிர்பலி கூடாது என்று மக்கள்
அறிந்தாலும் தங்கள் உயிருக்காக என்று வரும் போது மனித மனம் எதையும் எண்ணிப் பார்ப்பதில்லை.
பூசை செய்யும் முறை
கோயில்களில் வைதீக வழிபாட்டு முறை வந்த பிறகு
தான் ஆறுகால பூசைமுறை நடைமுறைப்படு;த்தப்பட்டது. அதற்கு முந்தயக் காலங்களில் மக்கள் தங்களுள்
ஒருவராக எண்ணும் இறைவனுக்கு நள்ளிரவில் தான் பூசை செய்தனா;. இப்பூசை செய்யும் நேரத்தில்
பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு அவை அக்கால மக்களிடம் உரிய நெறிமுறைப்படி காக்கப்பட்டு வந்தன. பூசை என்பதன்
விளக்கமாக தமிழ் லெக்சிகன் கூறுவதாக க.சேகா; கூறும் கருத்தானது,
“பூசை என்பதற்கு ஆராதனைஅல்லது முன்னோர்; வகுத்த வழிபாட்டு முறை எனவும்,
இறைவனுக்குச்
செய்யும் முறையான சடங்கு என்பதாகும்.” என்கிறார். (க.சேகா;
சப்த விடங்கத்
தலங்கள் ப-81)
இக்கருத்தின்படி மக்கள் வழங்கிவரும்
அம்மன் கொடை இரவில் நடப்பது அவா;களின் வழிவழியான செயல்பாடாக இருக்கும் என அறியமுடிகின்றது.
மறுபக்கம் நாவலில் காட்டப்படும் பூசை முறைகள் ஏதோ ஒரு பழமையான பாரம்பாpயத்தின் மாற்றுருவமாக
நிகழ்த்தப்படுகின்றன. இச்செய்தியை
“பாதை முழுதும் மாத்து விரிப்பாவ.
ஒரு முரசு டங்,டங்,டங்னு
ஒத்த அடி அடிச்சிட்டே வரும். முன்னால ஒருத்தா; தீ வட்டி பிடிச்சிக்கிட்டுப்
போவாரு. சாத்தாங்கோயில்ல இருந்து அந்த ஊர்வலம்
புறப்படும். அந்த நேரத்தில வேற எந்தச்
சத்தமும் இருக்காது.பொம்பளைக, சின்னப்பிள்ளைக யாரும் அந்த நேரம் அந்தப்பக்கம் வரமாட்டாவ.
இங்கே கோயிலச் சுத்தி வந்து அத இறக்குவாவ… பார்க்க
நம்ம கிராமப்புறங்கள்ல நடக்கிற சாவுச் சடங்குகள் போல இருக்கும்” (பொன்னீலன், மறுபக்கம், பக்-75,76)
என்று பொன்னீலன் பதிவு செய்கிறார். இந்த
பூசை முறைகள் பழமையான மக்களின் பாரம்பாpயச்செயல்களை உள்ளடக்கியனவாக அமைவதாகக்
காட்டப்படுகின்றன. நம்பிக்கைகள், சடங்குகள் என்று முன்னோர்; செய்யும் ஒவ்வொரு செயலிலும்
ஏதேனும் ஒரு உட்கருத்து பொதிந்துள்ளது என்பது தெளிவுபடுத்தப்படாத வெளிப்படாகவே
உள்ளன.
முடிவுரை
1. பண்பாட்டையும் மனிதனையும்
வேறுவேறாகப் பிரித்தறிய முடியாத வகையில்
மனிதன் கலந்துள்ளான்.
2. மனக்குறைபாடுகளை
இறக்கிவைக்கும் இடமாக இறைவனையும் கோயில்களையும் எண்ணிப்பல நாட்கள் வழிபாட்டு
விழாமுறைகளை மேற்கொள்கின்றனா;.
3. இசை நிகழ்ச்சிகளில்
இன்பம் பெற்றாலும் இறைநம்பிக்கையை அதனூடே வலியுறுத்துவதாக கலை நிகழ்ச்சிகள்
அமைகின்றன.
4. மக்கள் ஒவ்வொருவரும்
தங்கள் பொருளாதார நிலைக்கு ஏற்ற வகையில் கோயில்களுக்கு செல்வதையும், காணிக்கைகள் இடுவதையும்
செய்கின்றனர்;.
5. தன்னுயிரைக் காப்பதற்காக
தன்னினும் எளியவையாக நினைக்கும் விலங்குகளின் உயிரை பலிகொடுத்து மனநிறைவடைகின்றனா;.
6. முன்னோர்களின் பூசைமுறை
மாறாமல், அதற்குரிய நேரங்களில் தகுந்த பூசைசெய்து தங்கள் இன்பத்தை
காக்க நினைக்கும்; நிலை மக்கள் மனதில் நிலைத்திருக்கின்றது. திருவிழா என்னும் செயல்பாடு மக்களின்
ஒற்றுமைக்கு என்று அடிகோலிட்டாலும், அது அவா;களின் முன்னோர்; வழிகாட்டிய பண்பாட்டின் பதிவுகளாகவே பிரதிபலிக்கின்றன என்பதைத் தெளிவாக அறியமுடிகிறது.
No comments:
Post a Comment