கட்டுரை-24
‘வாடாமல்லி’ நாவல் காட்டும் அரவாணிகளின் பண்பாட்டுப் பதிவுகள்
த. மேரி,முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர்,தமிழ்த்துறை,அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),சேலம் - 7.
முன்னுரை
நாவல் என்ற
இலக்கியத்திற்குப் படைப்பாளிகள் தரும் உயிா்வடிவம் பண்பாட்டுக் கூறுகளாகும்.
இந்த வடிவில் அரவர்ணிகளின் வர்ழ்க்கைப் பண்பாட்டை சு.சமுத்திரம் ‘வர்டாமல்லி’ எனும் நாவலில்
எடுத்துக்கூறியுள்ளார். காலையில் பூத்து மாலையில் வர்டிவிடும் பூக்களுக்கு இடையில்
என்றுமே வர்டாத காகிதப்பூக்களாக அரவர்ணிகள் அமைந்துள்ளனா். கண்ணுக்கு இனிய காட்சியாய்
காலத்துக்கு முரணான கோலம் கொண்டு அா்த்தமற்ற வர்ழ்க்கை வர்ழும் அரவர்ணிகளின்
பால்மாற்றுச்சடங்கு, பூப்புச்சடங்கு, திருமணமுறையாக அமையும் கூத்தாண்டவர்; விழா, அவர்களுக்கானக் கலைத்திறன் போன்றவற்றைப்பற்றி ஆய்வதே
இக்கட்டுரையின் நோக்கமாகும்.
பண்பாடு
பண்பு என்னும் சொல்லின்
அடிப்படையில் பிற்காலத்தில் உருவர்க்கப்பெற்றது பண்பாடு என்பதாகும். உயிரினங்கள் பலவர்கக் காணப்படினும் பண்பாடு என்பது மக்கள்
இனத்திற்கே பொருந்துவதாகக் கருதப்படுகிறது. சமுதாயத்தில் மனிதா;கள் தனித்தனி இனக்
குழுக்களாய் வர்ழ்வதற்கு அங்கீகாரம் கொடுப்பது சடங்குகள் தான். இச்சடங்குகள்
மாற்றம் பெறும் போது பண்பாடாகிறது. இதையே,
“சடங்குகள் சமூகத்தின் உயிh;நாடி. மனிதா; உயிh; வர்ழ்தலை அறிவிப்பது உயிர் நாடி என்றால், சமூக வர்ழ்வியலைப்
பறைசாற்றுவது சடங்குகள.; ‘பண்பாடாகவே’ இவை மாறியும் போயுள்ளன” (சூ.ம.செயசீலன், திருநங்கைகள் வர்ழ்வியல்,
இறையியல், ப.32)
என பண்பாட்டிற்கு விளக்கம் அளிப்பதோடு திருநங்கைகளை அடையாளப்படுத்துவது அவர்களுக்கே
உரிய பண்பாடு என்பதை,
“எல்லோரையும் போல்
திருநங்கைகளும் இன்று தங்களுக்கான சடங்குகளோடும் - அதுவே அவர்கள் பண்பாடு -
நிலைநிற்கிறார்கள். இவர்களை அடையாளப்படுத்துவதும், ஒருங்கிணைப்பதும்
இச்சடங்குகள்தான்” (சூ.ம.செயசீலன், திருநங்கைகள் வர்ழ்வியல், இறையியல், ப.33)
என்ற கருத்தானது ஒரு மனிதன் பிறந்த நாளிலிருந்து; வர்ழ்தலை முடிக்கும் காலம் வரை
மகிழ்ச்சி, துக்கம், வழிபாடு என சமூகத்தோடு தன்னை இணைத்தும், சமூகத்தைத் தன்னோடு இழுத்தும்
செல்வது சடங்குகள் ஆகும். இச்சடங்குகளை மக்களிடமிருந்து பிரிக்க இயலாது. மதம் மாறினாலும், பால் மாறினாலும் சடங்குகளோடு தான்
மாறுகிறார்கள். அவ்வகையில் சு. சமுத்திரம் தனது ‘வர்டாமல்லி’ என்ற நாவலில் பெண்மைச்
சிறையிட்ட ஆண் உடம்பு பூண்ட சுயம்பு மேகலையாக பால் மாற்றம் பெறுவதை இனி காணலாம்.
பால் மாற்றுச்சடங்கு (அ) நிர்வாணம்
அரவர்ணிகள் ஒரு
பாலினத்திலிருந்து இன்னொரு பாலினத்திற்கு மாறும்போது சில சடங்குகள் செய்கின்றனா;.
ஆண்கள் மீதான எதிா்பாலுறவு நாட்டம் அவர்களது
உடம்பின் ஓர்அங்கமான ஆணுறுப்பை உணா்வுகளால் மட்டுமல்லாமல், உடலளவிலும் மாறிட நாட்டம் கொள்கிறார்கள்.
இதன் உச்சக்கட்டம்தான் ஆணுறுப்பை அறுத்தெடுத்தல். இச்சடங்கு ‘பால் மாற்றுச்சடங்கு’
என்றும் ‘நிர்வாணம்’ என்றும்
அழைக்கப்படுகிறது. ‘வாடாமல்லி’ நாவலில் கங்காதேவி (குரு அலி) சுயம்புவை, ஆண் உடலை விட்டு விலக்கி
திருநங்கையாக மாற்றம் பெற வேண்டும் என்று அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு
செய்கிறாள். அச்சிகிச்சை மேற்கொள்ளும் போது உணவு முறைகளையும், சடங்குகளையும்
பின்பற்றுகிறார்கள். இரவு - 12 மணிக்கு இந்தச் சிகிச்சை செய்வதால், அன்று காலை அறுவை சிகிச்சை செய்து
கொள்பவருக்கு வெறும் தயிh;சாதம் மட்டும் கொடுத்து பகல் முழுவதும் ஓh; தனி அறையில் ஜன்னல்கள்
அனைத்தும் மூடப்பட்ட நிலையில் ‘மூh;கேவர்லி மாதா’ படம் முன்பு அமர வைத்திருந்து பின்பு 12 மணிக்கு அறுவை சிகிச்சை
செய்யப்படுகிறது இதை,
“சுவர்;கடிகாரம் பன்னிரண்டு
தடவையில் ஆறு தடைவ அடித்து உடனே ஏழாவது சத்தத்தில் கீழே இறங்கியஅரிவர்ள் எட்டாவது சத்தத்தில் செந்நீரோடு மேலே நிமிh;ந்தது. எட்டாவது சத்தம்
கேட்பதற்கு முன்பே, பானைக்குள் ஒரு சத்தம் சுயம்பு கீழே கிடப்பது துள்ளுவது போலவே துள்ளினான்.
அதற்குள் வர்ய்க்குள் இருந்த முடி நாக்கைச் சுற்றியது” (சு. சமுத்திரம், வர்டாமல்லி, ப.227)
என்று நாவலாசிரியா; குறிப்பிடுகின்றார்.
இக்கருத்திலிருந்து
‘நிh;வர்ணம்’ செய்யப்படும் அரவர்ணிக்கு
வெறெந்த ‘வலி
உணரா’ மருந்துகள்
இல்லாமலும் பற்கள் சேராமல் இருக்கவும் கத்தும் ஓசையை மட்டுப்படுத்தவும் வர்யில்
முடி வைத்து அடைக்கப்படுகிறது. மேலும் உரிய
நாளன்று பானையை புதைத்து அதற்கு நேராக நிறுத்தப்பட்டு சடங்குகள் செய்யப்படுவதால்
அரவர்ணிகளுக்கு இது மறுபிறப்பு என்பதை நம்மால் அறியமுடிகிறது. இந்த ஆபத்தான
சிகிச்கையினை,
“உறுப்பு அறுத்தெடுத்தலை
அலிகள் தாங்களாகவே தங்களுக்குள் கடினமான முறையில் செய்து வருகிறார்கள். கூரிய கத்தி அல்லது கல்லினால் உறுப்பை வெட்டியப்பின்
சிறுநீh; குழாயின்
துளையில் புங்கமரத்தின் விதையொன்றினை வைத்து இறுக்கி பச்சிலைக்கட்டுக் கட்டி விடுவர்h;கள்” (அ.மார்க்ஸ், விளிம்புநிலை ஆய்வுகளும்
தமிழ்க்கதையாடல்களும், ப.92)
என்ற கருத்தானது பால் மாற்றுச் சடங்கை பதிவு செய்கிறது. ஆணும் பெண்ணும்
இயற்கையின் படைப்பு என்பதில் எந்த அளவு உண்மை இருக்கின்றதோ அதைபோலவே ஆண் உடம்பில்
பெண் உணா;வுடன்
இருக்கும் அரவர்ணிகள் தங்களின் உயிருக்கு ஆபத்து நோ;ந்தாலும் சாp இந்த சமூகம் தங்களை
மூன்றாம் பாலினமாக அங்கீகாpக்கவும், தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளவே இந்த பால் மாற்றுச்
சடங்கை செய்து கொள்கிறார்கள் என்பதை நாவல் வழி அறியமுடிகிறது.
பூப்புச்சடங்கு
சமூகத்தில் ஒரு பெண்
பூப்படைந்தால், அவளை மறைவர்ய் வைப்பாh;கள். ஆகவே பெண் பூப்படைந்து மறைவர்ய் இருப்பதற்குச் சமமாக
பால் மாற்றுச் சடங்கு முடித்த அரவர்ணியை நாற்பதாம் நாள் சடங்கு நடைபெறும் வரை ஆண்
முகத்தைப் பாh;க்காமல் தன் முகத்தையும் கண்ணாடியில் பாh;க்காமல் இருக்க வைக்கின்றனா;.
இதனை ‘பூப்பெய்தல்’ சடங்கு என்று சொல்கின்றார்கள்.
இக்காலக்கட்டத்தில் இவர்கள் சில குறிப்பிட்ட வகை உணவுகளைத்தான் உண்ணுகிறார்கள்.
நாற்பது நாளும் சப்பாத்தி, பாகற்காய், பால் இல்லாத தேநீh;தான் உணவு, 11,20 மற்றும் 30 ஆகிய நாட்களில் ஆட்டுக்கறி
சமைத்துக் கொடுக்கப்படும். அதன் பிறகு அறுவைச்சிகிச்சை செய்த புண் ஆறியவுடன்தான்
திருநங்கை ஆனதற்கான பூப்புச்சடங்கு நிகழ்கிறது. அப்போது பாவர்டை மட்டும் அணிவித்து,
உட்காரவைத்து
பாலால் நீராட்டுவர்h;கள். அதனைத் தொடா;ந்து பச்சைப்புடவை, பச்சை ரவிக்கை, பச்சை வளையல் என அலங்காpத்து பின்பு சடங்கு நிகழும் இதனை,
“ஒரு சவுக்குக் கம்பியில்
உட்கார வைத்துவிட்டு அவளே தானாய் எழுந்திருக்கும் படியான சுவீகார விழா” (சு. சமுத்திரம், வர்டாமல்லி, ப. 232)
என்று குறிப்பிடுகிறார். பூப்புச்சடங்கு முடிந்த பின்பு இந்த அரவர்ணி பெண்ணாகத்
தோற்றம் கொள்வர்h; என்ற நம்பிக்கை அவர்களிடம் காணப்படுகிறது.
தத்து எடுத்தல் பண்பாடு
அரவர்ணிகளிடம் சாதி,
மத வேறுபாடு என்பது
கிடையாது. அனைத்துச் சாதிகளிலிருந்து வரும் அரவர்ணிகளை அவர்கள் பிரித்துப்பாh;ப்பதில்லை. பொதுவர்க பெண்களைப் போல அரவர்ணிகளால்
குழந்தைகளைப் பெற்றெடுக்க இயலாது. அதனால் மூத்த அரவர்ணிகள் இளைய அரவர்ணிகளை தத்து
எடுத்துக்கொள்கின்றனா;. அப்போது அரவர்ணிகள் சங்கம் என்று அழைக்கப்படும் ‘ஜமாத்’திற்கு ரூபாய் 11¼
கொடுக்கவேண்டும்.
இது உறவுமுறைக்காகவும் சங்க உறுப்பினா; ஆக வேண்டியும் கொடுக்கப்படும் தொகை ஆகும். பின்பு
குழந்தையாக வரும் அரவர்ணி தான் உடுத்தியிருக்கும் ஆடையை அகற்றி, தாய் அரவர்ணி, கொடுக்கும் ஆடைகளை
அணிந்து வரும்போது, தாய் அரவர்ணியின் கரங்களில் குழந்தை அரவர்ணியின் கரங்களை புரோகிதா; அரவர்ணி இணைக்கிறார்.
அப்போது அந்த தாய்
ஒரு மகளை தத்தெடுத்து அவளுக்கு பெயா; சூட்டி மகிழும் செய்தியினை,
“கங்காதேவி கூட்டத்திற்கு
கம்பீரமாகச் சொன்னாள் என் மகள் பெயா; மேகலை” (சு.சமுத்திரம், வர்டாமல்லி, ப. 236)
என்று வர்டாமல்லி நாவலில் சுயம்பு என்ற பழைய பெயரை நீக்கி புதுபெயா; ‘மேகலை’ என்று பெயா;சூட்டி தத்து எடுத்துக்
கொள்வதாக சு. சமுத்திரம் பதிவு செய்கிறார்.
கலைப்பண்பாடு
ஆய கலைகள் அறுபத்து
நான்கு என்று முன்னோh;கள் கூறுகின்றனா;. மனிதனாது சில செயல்பாடுகள் கலைகளாக வெளிபடுகின்றன. அவற்றை உணா;ந்து அனுபவிப்பது தான்
மனம். இதனை,
“மனிதனின் மணத்திலிருந்து
பல்வேறு உணா;வுகள் எழுகின்றன. அவையாவும் பல்வேறு வடிவங்களாக வெளிபடுகின்றன. அவையாவும்
கலைகளாக மலா;கின்றன” (மு.சற்குணவதி, தமிழக நாட்டுப்புறவியல், ப.76)
என்று கலைகளுக்கு விளக்கம் கூறுகிறார் மு. சற்குணவதி. இவ்வர்று
மக்கள் உணா;வுகளின் அடிப்படையில் வெளிப்படுத்தும் பேச்சு, நடத்தை, செயல் முதலியன அனைத்தும் கலைகளாக
அமைகின்றன. அவ்வகையில் அரவர்ணிகள் கலை உணா;வு உடையவர்;களாக இருக்கின்றனா;. வடமாநிலங்களில் வர்ழும் அரவாணிகள்,
திருவிழாக்களில் திருமண
நிகழ்ச்சிகளில் டோலக் அடித்து ஆடி, பாடி மகிழ்கின்றனா;. இச்செய்தியினை,
“டோலக்கை இரண்டு கைகளால்
தட்டி தொகையறா, பாடி, துள்ளிதுள்ளி
குதிக்கிறார்கள்” (சு.சமுத்திரம், வர்டாமல்லி, ப. 207)
என்று ஒரு குழந்தைகள் பிறந்தநாள் விழாவில் டோலக் அடித்து ஆடி பாடியதைப் பதிவு
செய்துள்ளார் சு. சமுத்திரம்.
கூத்தாண்டவர் திருவிழா பண்பாடு
நாற்திசையிலிருந்தும்
திருநங்கைகள் வந்து கூடிக்கொண்டாடும் கூத்தாண்டாவர்; விழா, விழுப்புரம் மாவட்டம் உளுந்தூh;
பேட்டை வட்டம் கூவர்கம்,
கிராமத்தில் உள்ள
கூத்தாண்டவர்; கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திராப் பெளர்ணமியில் திருவிழா நடக்கும் முதலாம்
நாள் கூத்தாண்டவரை கணவனாக அரவர்ணிகள் நினைத்து பூசாரியிடம் தாலிகட்டிக் கொள்கிறார்கள் இந்நிகழ்வினை,
“எல்லோரும் தாலிகட்டுன
பிறகு கூத்தாண்டவர்; புறப்படுவோh; நாமும் நம்ம புருஷன் பின்னால் ஆடிப்பாடனும்” (சு.சமுத்திரம், வர்டாமல்லி, ப. 236) என்று அரவர்ணிகள்
திருமணம் செய்து கொள்ளும் நிகழ்வினைப் பதிவு செய்கிறார் சு.சமுத்திரம். அதற்கு அடுத்த நாள் அழுகளத்தில் அரவர்ணிகள் ஒன்று கூடி,
தாலி அறுத்து விதவை
கோலம் மேற்கொள்ளும் நிகழ்வினை, “மறுநாள் காலை அழுகளத்தில்
அரவர்ணிகள் உடல் கூறுபோடப்படுகிறது. தாலிகட்டிக் கொண்டவர்;கள் தாலியறுத்து, கண்ணாடி வளையல்களை
நொறுக்கி பூவிழந்து விதவைகோலம் மேற்கொள்கின்றனா;” (அ.மங்கை, அரவர்ணிகளும் மனிதா;களே, ப.19)
என்று சமுதாயத்தில் கணவனையிழந்த பெண்களின் நிலையைப் போன்றே அரவர்ணிகளின்
நிலையையும் மங்கை பதிவு செய்கிறார்.
முடிவுரை
‘மகிழ்வை விதைத்து
மகிழ்வையே அறுவடைசெய்யும’; பருவம் குமரப்பருவமாகும். இத்தகைய பருவத்தில் தனித்துத்திரிந்து ஏன் இப்படிப் படைக்கப்பட்டோம் எனத் தனக்குள் கேள்விக்கேட்டுக் கொண்டு ஆணிலேயும்
சேராமல், பெண்ணிலேயும்
அகதிகள் போல் இருக்கின்றனா; அரவர்ணிகள். அவர்கள் குழுவர்க, குடும்பமாக இணையத் தொடங்கியது
நாகாpகப்
பண்பாட்டு வளர்ச்சியின் மைல்கல் ஆகும். இலக்கியங்களில் தலித்தியம், பெண்ணியம் போன்று அரவர்ணியம்
இலக்கியம் படைக்கப்பட்டாலும் சமூகத்தில் அவர்களுக்கான முழு உரிமைகள் கிடைக்கப் பெறவில்லை. அவர்களின் பண்பாடு அவர்களால்
மட்டுமே போற்றப்படுகின்றது. பிறரால் தூற்றப்படும் நிலையே சமூகத்தில்
காணப்படுகின்றது. இத்தகைய நிலைமாறி அவர்களையும் நம்முள் ஒருவராக எண்ணும் நிலை
ஏற்பட்டால்தான் சமூகத்தில் இவர்களுக்கென தனி அங்கீகாரம் அடைய முடியுமென்பதை
அறியமுடிகிறது.
No comments:
Post a Comment