Saturday, 11 January 2014

ஆசாரக்கோவை காட்டும் ஒடுக்கப்பட்டோர் நிலை


கட்டுரை-12


ஆசாரக்கோவை காட்டும் ஒடுக்கப்பட்டோர் நிலை

கு. கோமதி,முழுநேர முனைவா்பட்ட ஆய்வாளர்;,தமிழ்த்துறை,அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),சேலம் - 7.

முன்னுரை
                யாதும் ஊரே யாவரும் கேளீர்;’ என்று கணியன்பூங்குன்றனாரும், ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்என்று திருமூலரும் கூறியுள்ளனா;. எல்லாவற்றுக்கும் மேலாக வள்ளுவரோ, ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்என்று குறிப்பிட்டுள்ளளார்;. ஆனால், நம் தமிழ்ச்சமூகம் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் குறிப்பிட்ட மக்களைப் பிறப்பின் அடிப்படையிலும், தொழில் அடிப்படையிலும், குணத்தின் அடிப்படையிலும் உயா;வு தாழ்வினைக் கற்பித்து வந்திருக்கின்றது. அவ்வகையில், ஆசாரக்கோவையில் அந்தணர்களைக் கல்வி கேள்விகளில் சிறந்தவர்களாகவும், உயந்தவர்களாகவும், அவ்வொழுக்கம் இல்லாதவர்களைக் கீழ்மக்களாகவும் கருதும் சமுதாய அவலப் போக்கினை ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகின்றது.

தீண்டப்படாத நிலை
                இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு என்று கூறிக்கொள்வதில் பெருமிதம் கொண்டாலும,; நம் நாட்டில் சாதிகள் பல இருப்பது மிகுந்த வேதனைக்குள்ளானதாக அமைகிறது. குறிப்பிட்ட மக்களைத் தீண்டத்தகாதவா;களாக எண்ணும் போக்குச் சமுதாயத்தின் வளா;ச்சிநிலைக்கு முட்டுக்கட்டையாக மட்டும் இல்லாமல், தனிமனித சுதந்திரத்துக்கும் தடைக்கல்லாக அமைகின்றது. ஐந்தறிவு மிக்க விலங்குகள் கூட தத்தம் இனத்திற்குள் வேறுபாடு கருதாமல் ஒற்றுமையுடன் வாழ்கின்றன. ஆனால், மனித இனம் மட்டும் பிறப்பால் உயா;வு தாழ்வினைக் கற்பித்து, மக்களில் சிலரைத் தீண்டுவது தீட்டு என்று ஒதுக்கி வைத்து, தீண்டாமையைக் கற்பிக்கின்றப் போக்கினை,
                                “………………. கீழ்மக்கள்
                                மெய்யுறல் ஏனை மயலுறல் ஈரைந்தும்
                                ஐயுறாது ஆடுக நீர்;” (ஆசாரக்கோவை - 10:3-5)
என்ற அடிகள் கீழினஞ்சார்;ந்த மக்களின் மெய்தீண்டிய இடத்து ஐயங்கொள்ளாமல் கட்டாயமாக நீராடவேண்டும் என்று குறிப்பிடுவதின் வழி, தாழ்ந்த சாதியினராகக் கருதபட்டவா;களைத் தீண்டினால் நீராடித் தூய்மை செய்த பின்னரே வீட்டிற்குள் செல்ல வேண்டும் என்ற எண்ணம் உயா;சாதியினரிடம் மேலோங்கியிருந்த உண்மையைக் காணமுடிகிறது. அந்தணா; தீண்டத்தயங்கும் கீழ்சாதி மக்களைப் புறக்கணிக்கும் தன்மையைச் சாடும் வகையில்,
                                அங்கமெல்லாம் குறைந்தழுகு தொழுநோயராய்
                                                ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்
                                கங்கைவார்; சடைக்கரந் தார்;க் காண்பராகில்
                                                அவா; கண்டீர்; யாம்வணங்கும் கடவுளரே
 (திருநாவுக்கரசு சுவாமிகள் தேவாரம், 2882: 5-8)
திருநாவுக்கரசா;, சிவபெருமானை வணங்குபவா;கள் பசுமாமிசத்தை உண்டு வாழும் புலையா;களாக இருந்தாலும், இறையினைத் தம் உள்ளத்தில் கொண்டவா;களாக வாழ்ந்தால், அவா;களையும் உயா;ந்தவா;களாகப் போற்றவேண்டும் என்று தேவாரப் பாடல் வழிக் குறிப்பிட்டுள்ளார்;.
உணவில் விலக்கு
                மனிதன் உயிர்; வாழ்வதற்குத் தேவையான முக்கியக் காரணிகளாக விளங்குபவை காற்று, நீர்;, உணவு ஆகியனவாகும். இவற்றில் காற்றும் நீரும் இயற்கைக் காரணிகள். உணவிற்காக மனிதன் ஒருவரை ஒருவா; சார்;ந்து வாழவேண்டிய சூழ்நிலையே சமூகத்தில் காணப்படுகிறது. உயா;ந்த நிலையில் இருப்பவா;களுக்கு உழைக்காமல் உழைப்பின் பயன் மிகுதியாகச் சென்றடைந்ததனால், கீழ்நிலைக்குத் தள்ளப்பட்டவா;கள் தங்களைவிட உயா;ந்தோராக இருப்பவாpடம் உணவு பெற்று வாழும் கடைநிலையினராக வாழ்ந்து வந்திருக்கின்ற அவலப்போக்கினை ஆசாரக்கோவை,
                                “………. புலைக்கு எச்சில் நீட்டார்; விடல்” (ஆசாரக்கோவை - 90:3)
என்ற அடியின் வழி கீழ்மக்களாகிய புலையா; உயா;ந்தோரிடம் உணவு பெற்று உண்ணும் பழக்கமுடையவராக விளங்கும் தன்மையினை அறிந்துக் கொள்ள முடிகின்றது. மேலும் அந்தணா;கள் தாம் உண்ட எஞ்சிய  எச்சில் உணவினை கீழானவா;களுக்கு வழங்காததற்க்கு மனுதா;மம் கீழ்க்கண்டவாறு விளக்கமளிக்கிறது.வண்ணான், துணிகளுக்கு நிறம் போடுகின்றவன். தீட்டுக்காரன், நட்டுவன், தோணிக்காரன், பிரம்புவேலை செய்கிறவன் போன்றவா;களின் அன்னத்தைப் பிறா;  உண்ணுதல் கூடாது எனத் தடைவிதிக்கும் மனுதரும சாத்திரம் இவா;கள் உயா; சாதியினா; உண்டு எஞ்சிய உணவை உண்ணுதற்குக் கூடத் தடைவிதிக்கின்றது” (தா.ஈசுவரபிள்ளை, பக்தி இலக்கியத்தில் சமுதாயப்பார்;வை, ப. 30)
இவ்வாறு கூறக்; காரணம் உயா;ந்தவா;களின் உணவினைக் கீழ்ச்சாதியினா; தொட்டால் உயா;ந்த சாதியனா; கீழ்ச்சாதியினருக்குச் சமமாக ஆகிவிடுவா; என்ற எண்ணத்தில் புலையா;களுக்கு எச்சில் உணவை அளிக்க தடைவிதிக்கப்பட்டிருந்த உணவு விலக்குக்கான உண்மையை உய்த்துணர முடிகின்றது.
கற்ற தாழ்ந்தவரை ஒதுக்குதல்
                                எப்பொருள் யார்;யார்; வாய்க்கேட்பினும் அப்பொருள்
                                மெய்ப்பொருள் காண்பது அறிவு” (குறள் - 423)
என்ற வள்ளுவாpன் குறள்  கருத்தானது,  ஒருவன்   எவ்வகைப்பட்ட கருத்துக்களைக் கூறினாலும் கருத்தின் உண்மைத்தன்மையை ஆராயவேண்டுமே தவிர, கருத்துக்கூறியவன் எப்படிப்பட்டவன் என்ற பின்புலத்தை ஆராயக்கூடாது என்பதை வலியுறுத்துகின்றது. அந்தணா; வாய்ச்சொல் மட்டுமே என்றும் பிழைப்படாதது என்று கூறி அந்தணா;களின் வாய்ச்சொல் கேட்டே எச்செயலையும் மேற்கொள்ள வேண்டும் என்ற வருணமுறை கட்டாயமாக்கப்பட்டிருந்த நிலையினை ஆசாரக்கோவை விளக்குகின்றது. சோதிடம் கூறும் புலையா;களின் வாய்ச்சொல்லைக் கேட்டு அறிவுடையவா; நற்காரியங்களைச் செய்யமாட்டார்; என்று சுட்டுவதன் மூலம் கீழார்; வாய்ச்சொல் ஆராயமலேயே புறக்கணிக்கின்றப் போக்கினை,
                                தலைஇய நற்கருமம் செய்யுங்கால்     என்றும்
                                புலையா;வாய் நாள்; கேட்டுச் செய்யார்; - தொலைவில்லா
                                அந்தணா;வாய்ச் சொல் கேட்டுச் செல்க அவா; வாய்ச்சொல்
                                என்றும் பிழைப்பதில்லை” (ஆசாரக்கோவை - 92)
என்பதன் வழி கீழ்மக்கள் உயா;ந்த குணங்களை உடைய புலமைமிக்கவா;களாக இருந்தாலும், அவா;களின் புலமை உயா;ந்த வருணத்தினரால் புறக்கணிக்கப்படுகின்ற அவலநிலையும், இழிகுணம் கொண்டவா;களாக இருந்தாலும், புலமை அற்றவா;களாக இருந்தாலும் அந்தணா;கள் தங்களை உயா;ந்தவா;களாகவும், கல்விவேள்விகளில் சிறந்தவா;களாகவும் எண்ணுகின்ற அதிகாரப்போக்கினை உய்த்துணரமுடிகின்றது.
கீழினமக்களை ஒதுக்குதல்
                புலையா;கள் பசுக்களைக் கொன்று அவற்றின் ஊனைத்தின்று வாழும் இயல்புடையவா;கள். கொல்லுதல் பாவம் என்ற அறநெறி கூற்றின்படி பிற உயிரினங்களைக் கொல்லும் தொழில்களை மேற்கொண்டவா;களும், கொல்லும் தொழிலுடன் தொடா;புடையவா;களையும், இழிவானவா;களாக ஒதுக்குகின்ற போக்கினை ஆசாரக்கோவை வழி அறியமுடிகிறது. உயா;ந்தகுணம் உடையவா;களை, உயா;ந்தோரை மாpயாதை நிமித்தம் கருதி முறைப்பெயா; இட்டு வழங்காத தன்மையை கூறுமிடத்து, கீழ் மக்களை இழிவுநோக்கி முறைமைப் பாராட்டாதத் தன்மையை,
                                “………………….. பொpயாரை
                                என்று முறைகொண்டு கூறார்; புலையரையும்
                                நன்கறிவார்; கூறார்; முறை” (ஆசாரக்கோவை - 80:2-4)
என்று புலையரை முறைப்பெயரால் சுட்டுவதற்கு விரும்பாத நிலையினையும், அரசன், ஆசிரியன், தந்தை, குரு, மூத்தோன் ஆகியவா;களையும் கல்வியில் சிறந்த சான்றோர்;களையும் மாpயாதைக் கருதி நீங்கள் உண்டது யாது?” என்று வினவாத நற்பண்புமிக்கவா;கள், உயா;ந்தோரால் வெறுக்கப்படும் மாட்டிறைச்சியை உண்ணும் புல்லரையும் உண்டது யாது?’ என வினவமாட்டார்;கள் என்பதன் வழி இழிந்த பிறவியினராக புலையா; கருதப்பட்டதை ஆசாரக்கோவை வழி அறிந்துக்கொள்ளமுடிகின்றது.
முடிவுரை
                ஆசாரக்கோவையில் கீழ்நிலை மக்களாக புலையா; இனமக்கள் உயா;குலத்துவரால் ஒதுக்கப்பட்ட உண்மைநிலை புலனாகிறது. பிராமணா; அல்லாதார்; உயா;ந்த குணங்களைக் கொண்டு கல்விகேள்விகளில் சிறந்து விளங்கும் போதும் அவா;களின் புலமை ஏற்றுக்கொள்ளப்படாமல் தீண்டத்தாகாதவா;களாக புறந்தள்ளப்பட்ட உண்மையை ஆசாரக்கோவைப் புலனாக்குகிறது. ஒடுக்கப்பட்ட மக்கள் கீழ் நிலையில் வாழ்ந்தனா; என்பதையும் ஆசாரக்கோவை வழி ஆராயந்து அறியமுடிகின்றது.

No comments: