Saturday, 11 January 2014

பாரதியார் கவிதைகளில் கல்விச்சிந்தனை


கட்டுரை-13


பாரதியார் கவிதைகளில் கல்விச்சிந்தனை

கு. கோமதி,முழுநேர முனைவர்பட்ட ஆய்வாளர்,தமிழ்த்துறை,அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),சேலம் - 7.
முன்னுரை
                தொல்காப்பியார் காலந்தொட்டு இன்றைய காலக்கட்டம் வரை கல்வி குறித்தச் சிந்தனைகள் அறிவுறுத்தப்பட்டு வருகின்றன. தொல்காப்பியார், ‘வாயினும் கையினும் வகுத்தப் பக்கம்என்ற வரிகளில் ஏட்டுக்கல்வியையும் தொழிற்கல்வியையும் இரண்டாக வகுத்துக் குறிப்பிடுகின்றாhர். ‘கேடில் விழுச்செல்வம் கல்வி’ , ‘கல்வியழகே அழகுஎன்று நீதியிலக்கியங்களிலும் கல்வி குறித்த பதிவுகள் நிரம்பிக் காணப்படுகின்றன. மனிதன் மனிதனாக வாழ கல்வியறிவு இன்றியமையாதது ஆகும். இவ்வுண்மையை நன்கு அறிந்த பாரதி கல்வியின் முக்கியத்துவத்தைப் பல்வேறு படைப்புகளில் புலப்படுத்தியுள்ளார். அப்படைப்புகளில் தேசப்பக்திப்பாடல்களின் வாயிலாகக் காணலாகும் கல்விச்சிந்தனைகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

கல்விச்சாலையின் அவசியம்

                கல்விச்செல்வம் மற்ற செல்வங்களைக் காட்டிலும் உயார்வானதும், பிறரால் கவார்ந்துச் செல்ல முடியாத, அழிக்க முடியாத செல்வமும் ஆகும். கல்வி இல்லாதவன் பெற்றச் செல்வம் பயனற்றது. கல்வியறிவு இல்லாதவன் விலங்குகளுக்கு ஒப்பாக எண்ணப்படுகிறான். எனவே தான் கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்என்ற பழமொழி அழிந்து கல்விச்சாலை இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம்என்ற புதுமொழி புத்துயிhர் பெற்று இன்று நடைமுறையில் பின்பற்றபட்டு வருகிறது. பாரதியோ பள்ளிச்சாலையை கோவிலாக்கி,                      
பள்ளித் தலமனைத்துங் கோயில்செய்குவோம் எங்கள்
                                பாரத தேசமென்று தோள் கொட்டுவோம்                                                                                                                              (பாரதியாhர் கவிதைகள், பாரததேசம், ப. 129)
என்ற வரிகளில் மனிதனின் அறியாமையைப் போக்குகின்ற பள்ளிச்சாலைகளை புண்ணியத் தலமாகச் சித்தாpக்கின்றாhர்.
தாய்மொழி கல்வியின் இன்றியமையாமை
                தமிழப் புலவனாகிய பாரதி ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், உருது முதலிய உலகமொழிகள் பலவற்றை அறிந்திருந்த போதிலும், தமிழ்மொழி பற்று மிக்கவராகவும் தமிழ்மொழி உயார்விற்கு பாடுபடுபவராகவும் விளங்கினாhர். அன்னிய மொழிகள் அறிவு வளார்ச்சிக்கு உறுதுணை செய்யுமே தவிர உற்றத்துணையாக எப்போதும் இருக்கமுடியாது என்பதை நன்கு உணார்ந்தவார். இதனை,
                                வேறு வேறு பாஷைகள் - கற்பாய் நீ
                                வீட்டு வாhர்த்தை கற்கிலாய் - போ போ போ
என்பதன்வழி தாய்மொழி மறந்து வேற்றுமொழி மட்டுமே கற்கும் நிலையினை கடுமையாகக் கண்டிக்கிறாhர். வேற்றுமொழி அறிந்துகொள்ளுதல் நன்மையாயினும் தாய்மொழியை மறந்து அன்னியமொழியை ஆதாpப்பது கனியிருப்பக் காயினை உண்பதற்குசமமாகும் என்பதை வலியுறுத்துகின்றாhர்.
                தாய் தன் குழந்தைக்குப் பாலூட்டிச் சீராட்டி வளார்க்கும் போது என்ன மொழியைப் பேசுகிறாளோ, பயிற்றுவிக்கிறாளோ அதுவே அக்குழந்தையின் தாய்மொழி ஆகும். எந்தமொழி பேசும் மனிதனாயினும் தாய்மொழி வாயிலாகவே சிறப்பான முறையில் கல்வியறிவு பெறுவதோடு திறமைகளையும் வளார்த்துக் கொள்ள முடியும் படைப்பாக்கத்திறன் கொண்ட செயல்களை வெளிப்படுத்தவும் இயலும்.
தமிழ்க்கல்வியை உலகமயமாக்குதல்
                தமிழ்மொழியின் புகழ் உலகம் முழுதும் பரவ வேண்டுமாயின் தமிழ்மொழியில் இறவாதப் புகழுடைய புதுப்புது நூல்கள் இயற்றப்பட வேண்டும் என்னும் நோக்குடையவார். பிறநாட்டு சாத்திர நூல்களை பயிலவேண்டும் என்று கூறாமல் தாய்மொழியான தமிழ்மொழியில் மொழிப்பெயாத்ர்து தமிழ்மொழிக்கும் தமிழனுக்கும் சிறப்பு சோர்க்க முயன்றிருக்கின்ற நிலையினை,
                                பிறநாட்டு நல்லறிஞர்சாத்திரங்கள்
                                                தமிழ்மொழியிற் பெயார்த்தல் வேண்டும்
                                இறவாத புகழுடைய புதுநூல்கள்
                                                தமிழ்மொழியிற் இயற்றல் வேண்டும்                                                                                                                                        (தமிழ்நாடு, செந்தமிழ்நாடு, ப. 157)
என்று குறிப்பிடுவதன் வழி தமிழின் பெருமையை உலகறியச் செய்ய வேண்டுமாயின் புத்தம் புதிய கலைகள் பற்றியும,ர் ஐம்பூதங்களின் செயல்நுட்பங்களைக் கூறும் தமிழ்நூல்கள், தமிழ்மொழியில் இயற்றப்பட வேண்டும் என்று எண்ணிய நோக்குப்புலப்படுகிறது.
தொழிற்கல்விச்சிந்தனை
                ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாதுஅதுபோல ஏட்டுக்கல்வி மாத்திரம் வாழ்க்கைக்கு உதவாது என்ற சிந்தனையாளார் பாரதி. செய்முறைவிளக்கம் மூலம் பயிற்றுவிக்கப்படும் தொழில்கல்வி முறையே வாழ்க்கைக்கு உற்றத் துணை புரியும் என்பதை உணார்ந்து காவியங்கள் எழுதுவதற்கு மாத்திரம் படிக்காமல் பலவகை வியாபாரம், தொழில் செய்வதற்குப் பயன்படும் வகையில் கல்விப்பயிற்சி அமையவேண்டும் என்பதனை,
                                மந்தரங்கற்போம் வினைத் தந்திரங்கற்போம்                                                                                                                  (பாரதியாhர் கவிதைகள், பாரததேசம், ப. 130)
என்பதன் வழி கல்விச்சிந்தனை விளக்கக்கல்வியாக அமைந்தால் நன்மை பயக்கும் என்பதை குறிப்பிட்டுள்ளாhர். இன்றைய நிலையில் அரசு, ஆரம்பக் கல்விமுறையை செய்முறைக்கல்வியாக அறிமுகப்படுத்தி பாரதியின் கனவினை நனவாக்கி வருகின்றது.                பாரதியாரின் சிந்தனை தொழிற்வளர்ச்சிக்குத் திரும்பியதையே புரட்சியாக எண்ணுகிறாhர் நா.பா,
                                தொழில் என்ற தலைப்பில் பாரதி எழுதியுள்ள கவிதை அவரை மற்றைக் கவிஞார்களிலிருந்து உயார்த்திக் காட்டுகிறது. சுதந்திரம் அடைய அவாவிற்கும் ஒரு நாட்டுக்கும்த் தொழில்வளார்ச்சியும், தொழிற்புரட்சியும் இன்றியமையாதவை என்பதைப் பாரதி உணார்ந்து பாடியதைப்போல அவருக்கு முன்னே இருந்த எந்தக் கவிஞரும் உணரவும் இல்லை, பாடவும் இல்லை” (நா. பாhர்த்தசாரதி, புலமைக்குப் பொலிவு தந்த புரட்சிக்கவிஞார், ப. 222) என பாரதியின் தொழிற்கல்விச் சிந்தனையை எடுத்துரைக்கின்றாhர்.
முடிவுரை
                சுதந்திரம் அடைவதற்கு முன்னே சுதந்திரம் அடைந்துவிட்டோம் என்று கொண்டாடி புதுமைப்படைத்தவார் பாரதி. சமுதாயம், அறியாமை இருள் அகற்றி வாழ கல்வி. அவசியம் என்பதையும் அக்கல்வி தாய்மொழியில் அமையவேண்டும் என்ற நோக்கும் என்பதையும் அன்னச்சத்திரம் ஆயிரம் அமைப்பதைக் காட்டிலும் ஒரு ஏழைகளுக்கு எழுத்தறிவித்தல் சிறந்தது. அதன்மூலம் சமூக உயார்வடைவதோடு ஒட்டுமொத்தப் பாரதமே உயார்வடையும் என்ற பொதுநல நோக்கும் கொண்டவராய் பாரதி விளங்கிய தன்மையினை ஆய்ந்தறிய முடிகிறது.

No comments: