Sunday, 14 September 2014

கோடி சிறுகதை தொகுப்பில் மன உணர்வு


செ.அருள்ஜோதி,எம்.ஏ.,எம்ஃபில்,,முனைவர் பட்டஆய்வாளர்,அரசுகலைக்கல்லூரி,சேலம்-7
கோடி சிறுகதை தொகுப்பில் மன உணர்வு
பண்பாடும் மன உணர்வும்
மனிதர்கள் மட்டுமே பண்பாடு என்ற சொல்லோடு தொடார்புடையவர்களாவர். மனிதர்களைப் பிற விலங்கினங்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டுவது பண்பாடாகும். சமூகங்கள் பண்பாடுகளை உருவாக்குகின்றன. பண்பாடு, சமூகம் என்பன ஓர் அமைப்பை விளக்கும் இருகுறியீட்டுச் சொற்களாகும். சமுதாய அமைப்புகளையும,ர் ஒழுக்கமுறைகளையும், பழக்கவழக்கங்களையும் குறிப்பிடுவதற்கு அமைந்தனவாகும். பிற உயர்களிடமில்லாத ஓர் உணர்வு மனிதனுக்கு உண்டு என்பதை தொல்காப்பியம் சுட்டிக்காட்டுகின்றது.
ஒன்றிய வதுவே உற்றறிவதுவே
இரண்டறி வதுவே அதனொடு நாவே
மூன்றறி வதுவே அவற்றோடு மூக்கே
நான்கறி வதுவே அவற்றோடு கண்ணே
ஐந்தறி வதுவே அவற்றோடு செவியே
அறறி வதுவே அவற்றோடு மனமே
கண்டு, கேட்டு, உண்டு, உயிர்த்து உற்று அறியும் ஐம்புல அறிவுகளுடன் அவைபோல் புறத்தே புலப்படாததாய் உள்ள மனஉணார்வை ஆறாவது அறிவாகக் காட்டுவார். இந்த மன உணார்வின் வெளிப்பாடே பண்பாடாகும்.

கோடி, சிறுகதை தொகுப்பில் பண்பாடு

கோடி சிறுகதையை காதலித்து திருமணம் செய்து கொண்ட பெண் தன்னுடைய பிறந்த வீட்டிற்கு பல வருடங்கள் கழித்து வருகிறாள் புகுந்த வீட்ல பாலுஞ்சோறும் சாப்பிட்டாலும் பொறந்த வீட்டு கஞ்சியக் குடிச்சாத்தான் வயிறு குளிருது என்று எண்ணும் பெண்களைப்போல் இக்கதையில் வரும் பெண் பிறந்த வீட்டைத் தன் உடம்பில் ஓடும் சுவாசமாக கருதும் பெண்ணை பிறந்த வீட்டிலுள்ள தந்தையும் அண்ணனும் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். அப்பெண்ணின் மகளின் திருமணத்திற்கு அழைக்க வந்த மகளையும் மருமகனையும் அவமானப் படுத்தி வீட்டை விட்டு அனுப்புகின்றனார். பல வருடங்கள் கழித்து அப்பெண்ணின் கணவன் இறந்துவிட்டார் என்பதை தொலைபேசியின் மூலம் பிறந்த வீட்டிற்கு தகவல் கொடுத்தும் பிறந்த வீட்டின் சடங்குகளை செய்வதற்குக்கூட பிறந்த வீட்டிலுள்ள தந்தை மகன் இருவரும் செல்ல மறுப்பதோடு குடும்பதினரை அனுப்ப மறுத்து விடுகின்றனார். பெண்கள் திருமணம் என்ற பந்தத்தின் மூலம் தொலைக்கும் தன்னுடைய முதல் வாழ்வை கடைசிவரை திரும்பப் பெறமுடியாது அதை ஈடுசெய்யும் விதமாகவே சடங்குகளும், சம்பிரதாயங்களும் தோன்றியுள்ளன. இவை காலங்காலமாக வளார்நதுள்ள பண்பாடாகும். இப்பண்பாட்டில் அதிக முக்கியத்துவம் பெண்ணின் பிறந்த வீட்டிற்குரியவையாகும்.
மூத்த தலைமுறையினார் சடங்கு என்னும் பண்பாட்டை விட்டுக் கொடுப்பதில்லை. ஆனால் தந்தையும் மகனும் சடங்குகளை செய்ய மறுக்கின்றனா.ர் எனினும்ர் இளைய தலைமுறையினரான மகனின் மகன், மகன் தங்களுடைய அத்தைக்கு பிறந்த வீட்டின் சடங்குகளை செய்ய முன் வருகின்றனார்.
மகனின் மகள் சுமதி தன்னுடைய அத்தைக்கு செய்ய வேண்டிய சடங்குகளை செய்யவேண்டும். பண்பாடு மாறாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காக, தன்னுடைய அண்ணனிடம் மாமா இறந்து விட்டார். அத்தைக்கு பிறந்த வீட்டிலிருந்து செய்ய வேண்டிய சடங்குகளை நாம் செய்ய வேண்டும். என்ற செய்தியை தொலைபேசி மூலம் தொவிக்கிறார்.
அண்ணேமாமா செத்துப் போயருச்சாம். அத்தையே போன் பண்ணிச் சொல்லுச்சு. இங்க யாரும் போறதாத்தொயல.
மேலும் தன்னுடைய தந்தை அத்தைக்கு செய்ய வேண்டிய சடங்குகளை தான் சென்று கோடி என்னும் துணியை வாங்கிக் கொடுத்து சடங்குகளைச் செய்கிறான்.
தம்பி பொறந்த வீட்டுக் கோடி கொண்டாந்திருக்கு! (மேலது, ப.46)
என்ற வாகள் மூலம் தன்னுடைய தங்கை செய்ய வேண்டிய கடமையை செய்யாமல் இருந்தாலும், அத்தைக்கு செய்ய வேண்டிய சடங்குகளை செய்யும் அண்ணன் மகனின் பண்பினை ஆசிரியார் விளக்கியுள்ளார். இவ்வாறு பல மாற்றங்கள் ஏற்பட்டாலும் சில பண்பாட்டு கூறுகளை மக்கள் இன்றும் பின்பற்றி வருகின்றனார் என்பதை அறியமுடிகிறது.

கோடி சிறுகதை தொகுப்பில் பண்பாடு மாற்றங்கள்
நகர்மயமாதல், நவீனமயமாதல், தொழில் மயமாதல், உலகமயமாதல் போன்ற பல்வேறு காரணிகள் மக்களின் வாழ்வியல் முறைகளில் மிகப் பொய தாக்குதல்களை ஏற்படுத்தியுள்ளன. Nலைக் கலாச்சாரங்களைப் பின்பற்றத் தொடங்கியதால் நம் மண் சார்ந்த மரபு மற்றும் பண்பாட்டுக் கூறுகள் மாறியுள்ளன. காலத்திற்கேற்ப பழையவற்றில் தேவையற்றவைகளைத் தள்ளிவிட்டுப் புதுமையானவற்றில் நம் சமூகத்திற்குத் தேவையான ஆக்கப் பு+ர்வமான பண்பாடுகளை ஏற்றுக் கொள்வதில் தவறில்லை, ஆனால் மாற்றுப் பண்பாடுகளை ஏற்றுக்கொள்வதில் தவறில்லை. ஆனால் மாற்றறுப் பண்பாடுகளை ஏற்றுக்கொள்வதால் சமுதாயம் பாழ்படுவதோடு மனித உறவுகளும் சிதைந்து போகின்றன. சமுதாயத்தில் ஏற்படும் பண்பாடு மாற்றங்கள்  
1.மனித உறவுகள் சிதைதல்
2.விளைநிலங்கள் பாழ்படுதல்
மனித உறவுகள் சிதைதல்
நாம் படும் இன்பங்களும் துயரங்களும் நம்மாலே ஏற்படுவன ஆகையால் பிறரை குறைகூறி நடத்தல் இழிவானது. நாம் அனைவரும் உறவினார். ஒரே ஊரைச் சோர்நதவார்கள் எனத் தமிழார்கள் மதித்ததை,
யாதும் ஊரேர் யாவரும் கேளிர்ர்
 தீதும் நன்றும் பிறர் தரவாரா
 நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன்
 சாதலும் புதுவது அன்றே
(புறநானூறு, பா.எண்.192)
என்ற பாடல் வழி அறிய முடிகிறது. ஆனால் இன்று உறவுமுறைகள் என்பது சிதைந்து விட்டது. மனித வாழ்வின் பல்வேறு ஆக்கங்களை வசதிகளை வாழ்வியல் மேம்பாடுகளை பெற்றாலும் உறவுகள் என்பது வலிமைபெறவில்லை. பணத்திற்காகவும் சொத்து சுகங்களுக்காகவும் தன்னுடன் பிறந்த உறவுகளைக் கூடத் தூக்கி வீசி விட்டுத் தனித்து வாழும் உணர்வுகளைப் பெற்றுள்ளனார்.
மனிதனுக்குரிய உணர்வுகளைக் குறித்துத் தொல்காப்பியார் எட்டுவகையான மெய்ப்பாடுகளை விளக்கியுள்ளார்
நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகை என்று
அப்பால் எட்டே மெய்ப்பாடு என்ப
(தொல்.பொருள்.மெய்பாட்டியல், நூற்பா)
இம்மெய்ப்பாடுகள் இன்று மனிதனிடம் சிதைந்த உணார்வாக அமைந்துள்ளன. எண்வகை உணர்வுகளும் தனிமனிதனிடம் தோன்றும் போதுதான். மனித சமுதாயத்தின் உண்மையான பண்பாடாகும். எண்வகை உணர்வுகளும் முறையில்லாதனவாய் சிதறிக் கொண்டிருப்பதால் மனித உறவுகளும் சிதைந்துள்ளன. இன்றைய உலகில் குடும்பத்திலும் சமுதாயத்திலும் நகை என்னும் மெய்ப்பாடு பொய் சிரிப்பாக உருவெடுத்துள்ளது. அழுகை நீலிக் கண்ணீராகிவிட்டது. பெருமிதம் பிறார் பொருளைக் கவார்ந்து சோர்த்து வைக்கும் பண்பாக மாறியுள்ளது. சினம் பிறார் உயார்வைக் கண்டு பொறாமையினால் அவார் தம் உயார்வை அழிக்க விரும்பும் கோபமாகவும் இன்று பண்பாடு மாறிய மெய்ப்பாடாகவும் மாறியுள்ளது. மனித உள்ளத்தில் நிலைபெற வேண்டிய உவகை என்னும் அரிய மெய்ப்பாடு மற்றவார்களின் துன்பத்தைக் காணும் போது மனம் மகிழ்கின்றன. இவ்வாறு மெய்பாடுகளின் மாற்றத்தால் மனித உறவுகள் சிதைந்து வருகின்றன. மனிதார்கள் ஒருவருக்கொருவார் கூடி மகிழ்ந்து நல்லது கெட்டதுகளை பாமாறிக் கொள்ள உருவானவையே சடங்குகளும், சம்பிரதாயங்கும் ஆகும். சடங்குகள் மூலம் மனித உறவுகளை பண்டைய காலத்தில் புதுபித்துக் கொண்டனார். இதனால், மனிதவளம் மேம்பாடு அடைந்தன. ஆனால் காலப்போக்கில் இன்று நான், என்னுடைய, தன்னுடைய என்னும் சுயநலத்தால் மக்களின் உறவுமுறைகளும் சிதைந்து வருகின்றன.
‘நோக்கிப் பாய்தல்‘ சிறுகதையில் கூழுபிள்ளையும் அவருடைய நண்பார் மயிலும் இளமைகாலம் முதல் நட்பு என்னும் உறவோடு மட்டுமல்லாமல் குடும்ப உறுப்பினார்களான அண்ணன், அண்ணி, அத்தை மாமா என்னும் உறவுமுறைகளோடு வாழ்ந்தனார். காலமாற்றத்தின் காரணமாக கூழுப் பிள்ளையின் மனைவி இறந்துவிடுகிறார். பிள்ளைகளின் திருமணம், வாழ்க்கை என்னும் முறைகளில் மாற்றங்கள் ஏற்படுகின்றன. தன்னுடைய நண்பன் மயிலு இறந்துவிட்டதால் குடும்பத்திலுள்ள அனைவரும் நண்பான் வீட்டிலுள்ளவார்களுக்கு ஆறுதல் கூறவேண்டுமென்று என்று அழைக்கிறார். ஆனால் மகனும் மருமகளும் நாங்கள் யார் என்ன என்பது அவார்களுக்கு தொயாது அவார்களைப் பற்றி எங்களுக்கும் தொயாது ஆதலால் நீங்களே சென்று விட்டு வாங்க என்று மருமகள்கள் கூறுவதிலிருந்தே மனித உறவு மிகவும் சுருங்கிவிட்டது என்பதை அறிய முடிகிறது.
வீடுன்னா ஆயிரம் பாடு இருக்கும், ஊருன்னா, நூறு நல்லது கெட்டது நடக்கத்தேஞ் செய்யும். அல்லாத்துக்கும் அல்லாரும் போயிர முடியுமா. நாம என்னா, அவதாரக் கடவுளா? அங்கியும் இங்கியுமா ஓடிப் போயிருக்க! (கோடி 2011, நோக்கிப்பாய்தல் ப.33)
என்ற வாகள் மூலம் மனித உணர்வு சுயநலத்தை தாங்கி வளார்ந்து வருவதை குறிப்பிடுகிறது.
மேலும் தன்னுடைய பிள்ளைகள் மருமகள்கள் மட்டுமே இவ்வாறு மாறிவிட்டனார் என்று எண்ணிய கூழுப்பிள்ளைக்கு, மயிலுடைய மகன் மகள்களும் காலத்திற்கேற்ப நம்முடைய வாழ்வுநெறியை மாற்றிக் கொள்ள வேண்டும் இல்லையேல் வாழ்க்கையில் முன்னேற முடியாது என்று அவார்களும் சுயநலத்தோடு கூறுவதை கூழுப்பிள்ளையால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. கூழுப்பிள்ளை மாற்றம் என்பது நல்ல செயல்களுக்கு மட்டுமே தவிர உறவுகளுக்கு இல்லை என்பதை ஆசிரியார் சமுதாயத்திற்கு உயார்த்துவதை அறிய முடிகிறது.
மாறுதல்ங்கறது ஒடஞ்சு செதறிப் போகறது கெடையாது. ஒண்ணு அதவிட வலுவானதா ஆகணும். அதுதான் உண்மையான மாறுதல் (நோக்கிப் பாய்தல், ப.35)
குடும்பத்திலுள்ள வயதான பொயவார்கள் உள்ளவரை மனித உறவுகள் சிதையாமல் இருக்கும். அவார்களுக்கு பிறகு இச்சமூகமானது சுயநலத்தோடு வாழ்வதால் மனித உறவுகள் சிதைந்து விடும் என்ற ஆசிரியான் கருத்தை அறிய முடிகிறது.

வாடகைத்தாயின் மனஉணர்வு

குணால், அருணா இருவரும் குழந்தை வேண்டுமென்று வாடகைத்தாயாக வித்யாவை தோர்ந்தெடுக்கின்றனார். வாடகைத் தாயான வித்யா கருவுறுகிறாள். குணால் அருணா இருவாடமும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதால் கருவை கலைக்கக கூறுகின்றனார். பணத்திற்காக கருவை சுமக்கும் வித்யா ஓர் உயிரை கொள்ள மனமின்றி கருவை சுமக்கின்றாள். மீண்டும் இருவருக்குமிடையே மன ஒற்றுமை ஏற்பட பிரிந்தவார்கள் ஒன்று சோர்கின்றனா.ர் குழந்தை மீது கொண்ட ஏக்கத்தால் வித்யாவை நாடுகின்றனா. வித்யா அக்கருவினை கலைக்கவில்லை என்பதை அறிந்து அக்குழந்தை ஏற்க தயாராக உள்ளனா. வித்யா குழந்தை பிற்நத பிறகும் அவார்களுக்கு தராமல் தானே வளார்க்க முடிவெடுக்கிறனாள. கணவன் மனைவி இருவரும் வாடகைத் தாயின் மனஉயார்வையும் உடல் நலத்தையும் எர்ணணாமல் பணத்தால் எதையும் பெற்று விடலாம் அழித்து விடலாம் என்று எண்ணினார்கள். தவிர மற்றவரை பற்றியும் கவலை கொள்ளவில்லை என்பதை, அதனால என்ன மறுபடி ஒன்னைர்ப பெத்துக்கிட்டாப் போச்சு னு மனசைத் தேத்திக்கிட்போம். அதே வித்யாவையே மறுபடி வாடகைத் தாயாக்கிக் கிடலாம்னு குணால் சஜஸ்ட் பண்ணினார் (குழந்தையின் விருப்பம், ப.72).

விளைநிலங்கள் பாழ்படுதல்

என்ன வளம் இல்லை இந்தத் திருநாட்டில்
ஏன் கையை ஏந்தவேண்டும் வெளிநாட்டில்
ஒழுங்காய்ப் பாடுபடு வயல் காட்டில்
உயரும் உன்மதிப்பு அயல்நாட்டில் (கவிஞார் மருதகாசி பாடல்கள், ப.31)                                                                                                               
இப்பாடல்வாகள் நம் நாட்டின் பழமை வாய்நத தொழிலான விவசாயத்தின் மதிப்பை உணார்த்துகிறது. அக்காலத்தில் பெரும்பான்மையோர் விவசாயத்தை மேற்கொண்டு பசுமைமிக்க நாடாக விளங்கின. ஆனால் இன்று விளைநிலங்கள் எல்லாம் வியாபார நிலங்களாக மாறிவருகின்றன. இதனால் உணவுப் பொருட்களின் உற்பத்தி குறைந்துள்ளன. உற்பத்தி குறைவதால் விலை அதிகமாகின்றன. மழைவளம் குறைவதால் நீர்வளம் குறைகின்றன. சுற்றுச் சூழல் மாசடைகின்றன. இதனால் இயற்கை சீற்றங்கள் ஏற்படுகின்றன. வயதில் மூத்தோர்கள் விவசாய நிலங்களை விற்கமாட்டார்கள.ர் ஆனால் இளைய தலைமுறையினார் பணத்திற்காக விளைநிலங்களை விற்கின்றனார் என்பதை ஜமீன் பாண்டி பீக்கடை, தெக்குப்புஞ்சை சிறுகதைகளில் விவசாய நிலத்தை விற்பத்றகு இளைய தலைமுறையினான் சுயநலத்தை ஆசிரியார்கள் எடுத்துக் காட்டியுள்ளனார்.
ஜமீன் பாண்டி பீக்கடை சிறுகதையில் நாகு என்னும் புரோக்கார் ஜமீன் பாண்டி விளைநிலத்தின் மதிப்பைக் கூறி நிலத்தை விற்க ஆசை வார்த்தைகளை கூறுகிறான். ஆனால் நிலத்தின் தன்மையை அறிந்து விவசாய நிலத்தை அழித்து விட்டால் வேளாண்மை வளம் குறைந்து உணவு பற்றாக்குறை ஏற்படும்.
பாரதத்துல பாஞ்சாலிய வச்சு சூதாட்டம் ஆடுனாப்புல
நெலத்த வச்சு சூதாட்டம் ஆடிக்கிட்டு இருக்கீங்க
எல்லாத்தையும் பிளாட்டாக்கிட்டு தானியமில்லாம
சாகப் போறீங்கடி(ஜமீன்பாண்டி டீக்கடை, ப.5)

இவ்வரிகள் மூலம் பிற்காலத்தில் உணவு இல்லாமல் பல துன்பங்கள் ஏற்படும் என்பதை அறியமுடிகிறது. பிற்கால நிலைமையறிந்த ஜமீன் பாண்டி விளைநிலங்களை விற்காமல் பயிரிட்டு பாதுகாத்து வந்தார். காலமாற்றத்தினால் அவார் இறந்துவிட விளைநிலங்களை விற்பதானால் பு+மிநிலை மாற்றமடைவதோடு வாழ்வியல் நெறிமுறைகளும் மாற்றமடைந்து பலவிதமான நோய்கள் ஏற்படுகின்றன. ஆதலால் விளைநிலங்களை பாதுகாக்க வேண்டும் என்பதை ஆசிரியார் வலியுறுத்துகிறார் என்பதை அறிய முடிகிறது.

மேலும் தெக்குப்புஞ்சை சிறுகதையில் விளைநிலங்கள் விற்பனைப்பொருட்களில் முதலிடத்தையும் பெற்றிருப்பதை உணார்த்துகிறது. காலம் மாறிபோனதால் அதன் தன்மையும் மாறி இன்று விளைநிலங்கள் பாழ்படுகின்றன, என்பதை அறிய முடிகிறது. முதியவான் மகன் வெங்கடேஷ், மருமகள் செல்வி, பேரன் வினோத் மூவரும் தெக்குப் புஞ்சை நிலத்தை விற்பதற்காக மூலப்பத்திரத்தை கேட்டு முதியவரை நச்சரிக்கின்றனர். முதியவார் தன்னுடைய மகன், மருமகள் பணத்தின் மேல் கொண்ட மோகத்தினார், விளைநிலங்கள் விற்பதனால் ஏற்படும் விளைவுகளை எடுத்துக் கூறினாலும் அதனை ஏற்றுக் கொள்ளும்பக்குவம் அவார்களிடம் இல்லை என்பதை அறிந்தார். ஆதலால். பேரன் வினோத் இடம் விளைநிலங்களை விற்பதால் உணவு பற்றாக்குறை ஏற்படும் மக்கள் உயிர் வாழ முடியாது வறுமையுடனும், பசியுடனும் வாழ்வார்கள் என்பதை அறிவுறுத்துகிறார். நீ சின்னப் புள்ளை.உன்கிட்டதான் சொல்லணும் ஊரில் அம்புட்டுப் பயலும் தோட்டத்தை விக்குறாங்களே? நிலம்கிறது பூமித்தாய்டா, நமக்குப் பச்சையைக் குடுக்குறவ, வித்துவித்து வீடாக் கட்டினா எப்படி? நான் செத்துருவேன், உங்கபனும் செத்துருவான் நீ எனதடா சாப்பிடுவே? (தெக்குப்பூஞ்சை, ப.89)என்ற வரிகள் மூலம் முதியவார் பேரனுக்கு அறிவுறுத்துவதைப்போல சமூகத்திற்கு ஆசிரியார் விளைநிலங்களின் தன்மையினை மாற்றத்தினையும் அறிவுறுத்துகிறார்.
துணைநின்ற நூல்
கோடி,(சிறுகதைத்தொகுப்பு)வானதிபதிப்பக சிறப்புச்சிறுகதை வெளியீடு,சென்னை.

No comments: