Sunday, 14 September 2014

வானதி இலக்கிய சிந்தனைச் சிறுகதைகளில் பாலியல்-வன்முறை



செ.அருள்ஜோதி முனைவர் பட்ட ஆய்வாளர்,தமிழ்த்துறை
அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),சேலம்-7

வானதி இலக்கிய சிந்தனைச் சிறுகதைகளில் பாலியல்-வன்முறை

மேனாட்டார் வருகையால் தமிழ் இலக்கியங்கள் மறுமலர்ச்சிப் பெற்றன. வளர்ச்சிப் பெற்ற இலக்கியங்களில் சிறுகதை இலக்கியமும் ஒன்றாகும். சிறுகதைகளின் வளா்ச்சியில் இதழ்கள் முக்கிய பங்கு வகித்ததோடு எழுத்தாளார்களை உருவாக்கின. இதனால் தரமான சிறுகதைகளைத் தேர்ந்தெடுக்க முடியாமல் வாசகர்கள் தடுமாறினார். இந்நிலையில் வானதி பதிப்பகம் இலக்கியச் சிந்தனை என்ற அமைப்பை உருவாக்கி மாத சிறுகதைகளை தேர்ந்தெடுத்து ஆண்டுதோறும் பன்னிரண்டு சிறுகதைகளை தொகுத்து சிறந்த சிறுகதையின் தலைப்பை நூலின் தலைப்பாக வெளியிட்டு வருகின்றது. அச்சிறுகதை தொகுப்புகளில் நாற்று (2000), மனசு (2003), கழிவு (2004) ஆகிய தொகுப்புகளில் வரும் சிறுகதையில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறையை ஆராயும் நோக்கில் இக்கட்டுரை அமைந்துள்ளது.

இலக்கியமும் சமுதாயமும்
சமுதாயத்தில் நிகழும் நிகழ்வுகளை உணர்வோடு வெளிப்படுத்தும் மொழியாலாகிய கலையே இலக்கியமாகும். அத்தகைய இலக்கியம் அறிவோடு உணர்ச்சியையும் இணைத்து உள்ளத்தைப் பண்படுத்தக்கூடிய ஆற்றல் வாய்ந்த கருவியாகவும் சமுதாயச் சூழ்நிலையை உருவாக்கக் கூடிய வித்தாகவும் விளங்குகிறது. சமுதாயச் சூழலுக்கேற்ப மாறக்கூடிய தன்மையையும் பெற்றுள்ளது.
சமுதாய வளர்ச்சிக்கேற்ப இலக்கியமும் புதுமையான வளர்ச்சியோடு வளர்ந்து வருகிறது. அறிவியல் வளா;ச்சி பெற்று ஆக்கத்தினை உண்டாக்குகிறது, உறவின் அன்பினை சிதைக்கும் அழிவையும் உண்டாக்குகிறது. இலக்கியம் சமுதாயத்திலிருந்து பெறும் அனுபவத்தினை எடுத்தியம்புகிறது. நாம் ஒரு சந்தைக்கடை சமூகத்தில் இருக்கிறோம், வன்முறை நிறைந்த சமூகத்தில வாழ்கிறோம். இதில் கிடைக்கிற அனுபவத்தின் வெளிப்பாடாகத் தான் இலக்கியம்இருக்க முடியும் (ராஜம் கிருஷ்ணன், தேடல் இருப்பதால் எழுதுகிறேன், ப-66).

என்று ராஜம் கிருஷ்ணன் இன்றைய சமுதாய நிலைக்கேற்ப மாறுபடுகின்ற இலக்கியத்தின் தன்மையைப் பற்றிக் கூறியுள்ளாh;.

பாலியல் வன்முறை
உலகம் முழுவதும் பால் வகை என்பது ஆண் பெண்ணை அதிகாரம் செய்யும் முறைமையிலேயே அமைந்துள்ளது. ஆண் தனக்குhpய சமூகக்களன்களாக இராணுவம், தொழிற்சாலை அரசியல், தொழில் நுட்பம், குடும்பம் போன்றவற்றில் பெண்களை அடிமைப்படுத்துகிறான். காலம்காலமாகப் பெண்களைப் பெண்களாகப் பார்க்கும் பார்வை சமுதாயத்தில் இல்லாமல் போயிற்று அவர்களை அடிமைகளாகப் பார்க்கும் பார்வை ஏற்பட்டுவிட்டது.(பிரேமா.இரா.பெண்ணியம் அணுகுமுறைகள், ப-84)
என்னும் கூற்றுக்கேற்ப சமுதாயத்தில் பெண்களை கணவன், காதலன், அதிகாhpகள் முறையே அடிமைப்படுத்தி வருகின்றனா;. ஆண் வா;க்கம் பெரும்பாலும் பெண்களைப் போகப்பொருட்களாக நினைத்து பாலியல் வன்முறைகளை செய்து வருகின்றனா;.

கணவனால் பாலியல் வன்முறை
குடும்ப நிறுவனத்தில் பெண்கள் எவ்வித எதிh;ப்பாh;ப்பும் இன்றிப் பணியாட்களாக இயங்க வேண்டும் எனச் சமுதாய மரபு வலியுறுத்துகிறது.
(நிர்மலா ராணி வி. பெண்ணியத்திறனாய்வு, ப-10)என்னும் கூற்றுக்கேற்ப மதுரா பொன்வேலி என்னும் சிறுகதையில் சுகன்யா படித்த பண்புள்ள பெண்ணாக மட்டுமல்லாமல் சமுதாயத்தில் சிறந்த மருத்துவராக உள்ளாள். குடும்ப வாழ்க்கையில் கணவன் பாஸ்கரன் சுகன்யாவை அடிமைப்படுத்துவதோடு வலுக்கட்டாயமாகப் பாலுறவு கொள்பவன்.அவனுக்கு அந்த நேரத்தில் அவள் பதில் தேவையாய் இருக்கவில்லை. சில நிமிடங்களில் தேவை கரைந்ததும் சுகன்யாவை விட்டுவிட்டுப் புரண்டு படுத்தான்.(மனசு (2003), பொன்வேலி சிறுகதை, ப-117)என்ற வரிகள் மூலம் பாஸ்கரனின் பாலியல் வன்முறையை ஆசிரியா; உணர்த்துகிறார்.  மேலும் தன்னுடைய மனைவியின் வயிற்றில் வளரும் கரு பெண் குழந்தை என்பதை அறிந்தவன் அக்கருவை கலைக்க முடிவெடுக்கிறான். சுகன்யா உங்கம்மாவும் பெண்தான், உங்களோடு படுத்துக் கொள்கிற நானும் பெண்தான் (மேலது ப-118) என்று கூறி கருவை கலைக்க முடியாது என்று மறுத்துவிடுகிறாள்.
ஆண் ஆதிக்கம் கொண்ட பாஸ்கரன் நான் கொடுத்ததாக இருந்தால் கலைக்க சம்மதித்திருப்பாய் டாக்டர் கதிரேசன் கொடுத்ததை கலைக்க மாட்டாய் என்று அவளுடைய கற்பினை கலங்கப்படுத்தி அவளை கொடுமைப்படுத்து முறையை அறிய முடிகிறது. இக்கொடுமைகளிலிருந்து பெண்கள் விடுபட்டு சுயநலத்துடன் வாழ வேண்டும் என்பதை சிறுகதையில் இறுதியில் சந்தேகப்படும் மிருகத்துடன் வாழ்வதைவிட தன்னுடைய கருவில் வளரும் குழந்தையைப் பெற்று சுயகௌரவத்துடன் வாழலாம். என்று வீட்டை விட்டு வெளியேறும் சுகன்யாவைப் போல் பெண்கள் பாலியல் வன்முறையை எதிh;த்து துணிவுடன் இச்சமூகத்தில் வாழ வேண்டும் என்று அறிவுறுத்துகிறார்.

காதலில்-பாலியல் வன்முறை
காதல் என்ற பெயரில் பெண்ணிற்கு நம்பிக்கையை ஏற்படுத்தி பாலியல் தேவைக்குப் பயன்படுத்தி ஏமாற்றி விடுகின்றனர். இக்காதல் உறவு ஆணுக்குப்பெண் ஒத்துழைக்கும் வரை, சமூகத்திற்கு தெரியும் வரை, பெண்கருத்தாக்கும் வரை இயல்பாகவே நடைபெறுகிறது. பாலியல் செயல்முறைகளுக்காக ஆண்கள் காதல் அறம் என்பார்  கற்பின் விலை என்னவென்பர் (பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், 1937: 100).
பாலியல் ரீதியாகப் பெண் ஏமாற்றப்படும் பொழுதுதான் காதல் என்பது வன்முறையாகத் தோன்றுகிறது. வஞ்சிக்கப்பட்ட பெண் அந்த ஆணிடம் விசுவாசமாக நடக்க மறுத்து, தனது உணர்ச்சியைச் சுதந்திரமாகப் பகிர்ந்து கொள்ள முனைந்தால் ஆணாதிக்கம் தன்னைப் பாதுகாக்க, அதை அவளின் நிலையற்ற தன்மையின் பலவீனமாக இட்டுக்காட்டுகின்றது. (இரயாகரன்.பி, ஆணாதிக்கமும் பெண்ணியமும், ப-143).என்பதனை விளக்குகிறார் திருமணத்திற்கு முன்பு பெண்கள் கர்ப்பம் அடைவதால் சமூகத்தில் பல்வேறு அவமானங்களையும் இடையுறுகளையும் சந்திக்க நெரிடுகின்றன. பாவண்ணனின் காத்திருப்பவள் என்னும் சிறுகதையில் திருமணத்திற்கு முன்னர் செல்வம் என்ற இளைஞனால் ஏமாற்றப்பட்டு வயிற்றில் குழந்தையைச் சுமக்கும் தேவகி சமூகத்தில் தனக்கு ஏற்படும் அவலங்களை எண்ணிப்பாh;க்கிறாள். செல்வம் கூறியபடி கருவினை கலைக்க பணத்துடன் வரவில்லை என்றால் ஏரியில் விழுந்து தற்கொலை செய்து கொள்ள எண்ணுகிறாள். அந்த ஏரியில் ஒருபெண் தற்கொலையை செய்துகொண்டால் அவளைப்பற்றி பலரும் பலவாறாக பேசுவதைக் கேட்கிறாள். தானும் தற்கொலை செய்து கொண்டால் சமூகம் பலவாறு பேசும் என்பதை அறிந்து அவ்விடத்தைவிட்டு செல்கிறாள். இந்தக் காலத்தில் யார நம்ப முடியுது? கட்டிக்கறேன்னு எவனாவுது சத்தியம் பண்ணதும் செய்யக் கூடாதத செஞ்சிருக்கும் வயித்துல புள்ள தங்குனதும் பார்ட்டி எஸ்கேப் ஆயிருப்பான் போல (கழிவு (2004), காத்திருப்பவள் ப-117).
இவ்வாறு தான் காதலித்த பெண்ணை கற்பமாக்கிவிட்டு ஆண்கள் கைவிடுகின்றார்ஆசிரியர் . இச்சமுதாயத்தில் காதலால் பாலியல் முறையால் தன்னை இழந்து தற்கொலை செய்துகொள்கின்றனர் என்பதை எடுத்துக்காட்டுகிறார்.
அதிகாரிகளின் பாலியல் வன்முறை
நம் நாடு விடுதலைப் பெற்றதே தவிர நடைமுறையில் பெண்கள் அடிமைநிலையில் தான் வாழ்கின்றனர். காமம் மிகக் கொண்டவன் கருணையில்லாதவன் என்பது ஆன்றோர் கருத்து. தன் மனைவியைத் தவிர மற்றப் பெண்களைத் தாயாய்ப் பார்க்க மறந்தவன் விலங்குக்கு ஒப்பானவன் என்பது உலகியலர்; கருத்து. நம் பண்பாடும் அதுவேயாகும்.
ஒழுக்கமின்மையும் சபலபுத்தி கொண்டவர்களால் சமூகத்திற்குப் பல இன்னல்கள் ஏற்படுகின்றன. வேலியே பயிரை மேய்ந்த கதை என்றும் பழமொழிக்கேற்ப நாட்டை காக்க வேண்டிய இராணுவ வீர்ர்களே பெண்களின் கற்பை சூறையாடுகின்றனர். என்பதை கசங்கிய மலர்கள் சிறுகதையில் இராணுவ வீரர்கள் புகைவண்டியில் வந்த ஆக்ராவில் வாழும் கூலி தொழிலாளி பெண்கள் ஐவரிடம் பாலியல் வன்முறையை செய்து அவர்களின் கற்பை சூறையாடுகின்றனர்.இராணுவ வீரர்களின் மீது காவல்துறையில் பெண்கள் கொடுத்த புகாரை வாங்க மறுத்துவிடுகின்றனர்.. இச்செய்தி செய்தித்தாளில் படித்த மீரா, அவளது கணவன் நீதிபதியிடம் கூற கிருஷ்ணபட் வேதனை அடைந்த பெண்களுக்காக வாதிட வருகின்றார்.
ஐந்து பெண்மணிகளின் கற்புக்குப் பங்கம் ஏற்பட்டுள்ளது, இதைச் செய்தவர்கள் இராணுவ வீரர்கள் என்று எண்ணும் போது வீட்டையும் நாட்டையும் காக்க வேண்டியவர்கள் பொது இடத்தில் மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொண்டுள்ளார்கள் (நாற்று 2000, கசங்கிய மலர்கள், ப-62).
கிருஷ்ணபட் வாதிட்டு அப்பெண்களுக்கு நஷ்ட ஈடுவாங்கிக் கொடுத்ததோடு இனி எந்த அதிகாரிகளும் பெண்களை தவறாக நடத்தக்கூடாது என்று வாதிட்டு வெற்றி பெற்றார். ஐந்து பெண்களும் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் வன்முறை மற்ற எந்த பெண்களுக்கும் ஏற்படக்கூடாது உரிமை பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை அறிவுறுத்தியுள்ளார்.

முடிவுரை
வளர்ந்து வருகின்ற சமுதாயத்தில் பெண்களைப் பாதுகாக்க சட்டங்களை இயற்றுவதை காட்டிலும் ஆண்கள் தங்களுடைய ஆணாதிக்கத்தை விட்டுவிட்டு பெண்களுக்கு உற்ற நண்பர்களாக வாழ்ந்தால் பாலியல் வன்முறையை ஒழிக்க முடியும். பெண்கள் அடிமைப்பட்டு பாலியல் கொடுமைகளை அனுபவித்து ஆண்களுடன் வாழ்வதைவிட தங்களுக்கு ஏற்படும் வன்முறையை எதிh;;த்து வாழ்ந்தால் மட்டுமே பாலியல் வன்முறையை அழிக்க முடியும்.அடிமைநிலையிலிருந்து பெண்கள் உளவியல் மாற்றமும் ஆளுமை வளர்ச்சியுமே பெண்களின் முன்னேற்றத்திற்கு வித்திடமுடியும் என்பதை இக்கட்டுரை உணர்த்துகிறது.
துணைநின்ற நூல்
வானதிபதிப்பக சிறப்புச்சிறுகதை வெளியீடு,சென்னை.

No comments: