Saturday, 11 January 2014

‘பிறகு’ நாவல் காட்டும் சடங்குகள்



கட்டுரை-20

பிறகுநாவல் காட்டும் சடங்குகள்  

 கு. கோமதி,முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர் தமிழ்த்துறை,அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),சேலம் - 7.

முன்னுரை
                மனிதன் பிறப்பு முதல் இறப்பு வரை ஒவ்வொரு காலகட்டத்திலும் தம் முன்னோர் பின்பற்றிய குறிப்பிட்ட செயல்களை மாற்றாமலும் தவிர்காமலும் தொடர்ந்து செய்துவரும் பண்பினனாக விளங்குகிறான். அத்தகைய கூறுகளையே நாம் சடங்கு என அழைக்கிறோம். இதனை,         மனிதன் ஆதியிலே கூட்டாக வேலை செய்தான். பொருட்களை உற்பத்தி செய்யும் உபகரணங்களும் மிருகங்களை திருத்தமுற உடல்பலத்தின் அவசியம் குறைந்து, மனிதன் தனித்து வேலை செய்ய முடிந்த காலத்தும் பழைய கூட்டு வாழ்க்கை நினைவுகள் அவனை விட்டுப்பிடியவில்லை. அவை சடங்குகளாக மாறின  (க.கைலாசபதி, பண்டைய தமிழர்வாழ்வும் வழிபடும், ப.211) என்று க.கைலாசபதி சடங்கிற்கு விளக்கம் அளிக்கிறார். அவ்வகையில் சக்கிலிய இனமக்களின் வாழ்க்கையில் காணலாகும் பூப்புச்சடங்கு, திருமணம், மணவிலக்கு, இறப்புச்சடங்;கு குறித்து சடங்குகளை நாவல் வழி ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.

(அ) பூப்புச்சடங்கு
                மனித வாழ்க்கையில் பிறப்பு எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறதோ அதுபோல பெண் என்பவளுக்கு பூப்பு நிகழ்வும் முக்கியமானதாகிறது. பெண்ணின் உடல் தாய்மைக்குடிய பக்குவ நிலையை அடைவதைப் பூப்படைதல்என்கிறோம். பெண்ணுக்குத் திருமணம் செய்வதற்காரிய இல்லறத்தகுதி வந்துவிட்டதைப் சமுதாயத்திற்கு தெரிவிக்கும் நிகழ்ச்சியாக பூப்புச்சடங்கு அமைகிறது. பூப்பெய்திய பெண்ணின் வீட்டாருக்கு மட்டுமல்லாமல் அப்பெண் வாழும் ஒட்டுமொத்த குடிகளுக்குமான குடும்பவிழாவாகக் கொண்டாடப்படுகின்ற நிலையினை நாவல் வழி அறிந்துக் கொள்ளமுடிகின்றது.
குடிசை கட்டுதல்
                பூப்பெய்திய பெண்ணுக்கு மஞ்சள் நீராட்டுதல் முதல் சடங்காகும். பூப்பெய்திய பெண்ணை வீட்டில் தனியாக ஒதுக்கி வைக்கும் பழக்கம் பல சாதியினாரிடம் இன்றளவும் காணப்படுகிறது. சடங்கில் தாய்மாமன் முக்கிய இடம்பெறுகிறார். தாய்மாமன் இல்லையென்றால் சடங்கே இல்லை என்னும் அளவிற்கு தாய்மாமன் முக்கியபங்கு வகிக்கின்ற காரணத்தினால் தாய்மாமன் இல்லாதவர்க்கு மாமன் முறையில் உள்ளவர்கள் இச்சடங்கினை செய்யும் நிலை காணப்படுகிறது. பிறகு நாவலில் பூப்பெய்திய முத்துமாடிக்கு தாய்மாமன் இல்லாததால் பெற்றோராகிய அழகிடியும், ஆவடையும் வருந்துகின்ற நிலையினை பூமணி,               அழகிடி சமாளித்துக் கொண்டு சொன்னான். அதுக்கென்ன மொறகாரன் ஆரவாச்சும் கூப்பீட்டு வந்து குச்சிலுக் கம்பப் புடிக்கச் சொல்லு. இல்லாறதுக்கு கருமலையில போயி முட்டுறதா” (ப. 48)என்று கூறுவதன் மூலம் தாய்மாமன் பூப்புச்சடங்கில் முக்கிய இடம் பெறுவதையும், இல்லாதவர்கள் மாமன்முறையுடையவர் அச்சடங்கு செய்ய தகுதியுடையவராக விளங்கியதையும் அறியமுடிகின்றது.
                கம்மந்தட்டைக் கொண்டு மூன்றாம்நாள் குடிசைக்கட்டுதல், பூப்பெய்தியப் பெண்ணுக்கு தீயசக்திகளால் ஆபத்து நோரிடாமல் இருக்க பண்ணாரிவாளினை கொடுத்து குடிசைக்குள் அனுப்புதல் போன்ற சடங்குகளை குடிசைக்கட்டும் போது செய்கின்றனா;. இச்சடங்கின் போது பெண்கள் மும்முறை குலவையிடும் பழக்கமும் காணப்பட்டதைப் பூமணி பதிவுசெய்துள்ளார்.
மாவிடித்துக் கொடுத்தல்
                குடிசைகட்டும் நிகழ்வினை அடுத்து, பெண்வீட்டார் கம்பு அல்லது கேழ்வரகு தானியத்தை வாங்கி, வறுத்து மாவாக்கி, மாவு உருண்டைகளை தயாடிக்கின்றனர். குடிசை கட்டும் நிகழ்வு முடிந்தவுடன் ஊடிலுள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் வீட்டில் உள்ளவர்களின் எண்ணிக்கைக்கேற்ப மாவுருண்டைகளைக் கொடுக்கும் வழக்கம் இவ்வினமக்களிடம் காணப்படுகின்றது. இதனை,
                                ஆவட நாளைக்கே வீடெண்ணி கம்புமாவு இடிச்சுக் குடுத்துருவாளே” (பூமணியின் ஐந்து நாவல்கள், ப.49)
என்று கூறுவதிலிருந்து குடிசைக்கட்டும் நிகழ்வின்போது ஊரார் அனைவருக்கும் வீடுகளின் எண்ணிக்கைக்கேற்ப மாவிடித்துக் கொடுக்கும் பழக்கமானது காணப்படுவதை அறியமுடிகிறது. இன்றைய நிலையில் கற்கண்டு (அ) இனிப்புப்பண்டங்கள், பெண்வீட்டிற்கு வருபவா;க்கு மட்டும் வழங்கப்படும் குடும்பவிழாவாக மாறியுள்ளதையும் காணமுடிகிறது.
பெண்வீட்டாருக்கு விருந்தளித்தல்
                பெண்வீட்டார் மாவிடித்து கொடுத்த நாளிலிருந்து பெண்ணை வீட்டுக்கு அழைக்கும் நாள்வரை சடங்கான பெண்ணுக்கு சத்தான உணவுவகைகளை வழங்கவேண்டும் என்ற நோக்கில் சடங்கான பெண்ணிற்கும், பெண்ணின் வீட்டாருக்கும் இவ்வின மக்கள் நாளுக்கொருவா; உணவுசமைத்து வழங்கும் பழக்கமானது இக்குடிகளிடம் காணப்படுகிறது. இதனை,
                அதிலிருந்து வீட்டுக்கொருநாள் தொடர்ந்து சோறு பொங்கிப் போடுவார்கள். பலகாரம் பட்சணமெல்லாம் முறைப்படி வரும்” (பூமணியின் ஐந்து நாவல்கள், ப.49)என்பதன்வழி ஊர்க்காரர்களுக்கு பெண் சடங்கானதைத் தொரிவிக்கும் பொருட்டு பெண் வீட்டார் மாவிடித்துக் கொடுப்பதும், அன்றிலிருந்து ஊடிலுள்ள வண்டாடி முதல் ஒவ்வொரு குடும்பத்தினரும் பெண்வீட்டாருக்கு உணவு தயாடித்துக் கொடுக்கும் வழக்கம் சமூகத்தில் நிலவியமையை அறியமுடிகிறது.    இன்றைய நிலையில் இத்தகைய பழக்கவழக்கங்கள் இரத்தபந்தங்களிடையே மட்டும் நிலவுவதைக் காணமுடிகிறது. இதனை,                 குடிசையிலிருக்கும் பெண்ணுக்குத் தாய்மாமன் மனைவி இனிப்பு வகைகளோடு உணவுப்பொருட்களைத் தருவாள். பிறகு பெண்ணின் அத்தை, அண்ணி, பட்டி முறையானவா; ஒவ்வொரு நாளும் உணவளிப்ப;” (எஸ்.கௌமாடிஸ்வாரி, கொங்க நாட்டாடியல் குலச்சடங்குகள், ப. 32)என்பதன் வழி உணரமுடிகிறது. மாமன், அத்தை, பட்டி உறவினர் குடும்பங்கள் மட்டும் பெண்வீட்டிற்கு உணவு சமைத்து கொடுகின்ற நிலையினைக் காணமுடிகிறது. இப்பழக்கம் காலமின்மையைக் காரணம் காட்டி, பணத்தை பெண்வீட்டாருக்கு முறையாகவும் மாறியுள்ளது. பெண்ணை வீட்டிற்கு அழைக்கும் கடைசி நாளன்று குடிசையைத் தீயிட்டுப் பொசுக்கும் பழக்கமும் பிற இனத்தவரை போல இம்மக்களிடமும் காணமுடிகிறது.
(ஆ) திருமணச்சடங்கு
                இருமணம் இணைவது திருமணம் என்றாலும் இருகுடும்பங்கள் இணையும் விழாவாகத் திருமணவிழா நடத்தப்படுகின்றது எனலாம். திருமணம் என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் வாழ்க்கை ஒப்பந்தம் ஆகும். சக்கிலிய இன மக்களின் இத்திருமண சடங்கில் முக்கியப் பொறுப்பளியாக வண்டாடி தலைமையேற்றுச் சிறப்பக நடத்தி வைக்கின்றார்.
ரிசம் போடுதல்
                பெண்பர்க்கும் படலம் முடிந்து திருமணம் செய்வதற்கு முன்னா; ரிசம்போடுதல் சடங்கு சிறப்பக நடைபெறும். இருவீட்டாடின் உறவினர்களும், ர் வண்டாடிகளும் பெண்வீட்டார் முன்பு கூடுகின்றனா;. மாப்பிள்ளையின் சகோதாரிகள் பரிசுப்பெட்டிநிறைய அடிசி, மஞ்சள், எண்ணெய் அடங்கிய பரிசப்பெட்டியையும், தாம்பூலத்தில் வெற்றிலை, பக்கு, ரிசபணம் ஆகியவற்றைக் கொண்டு வருகின்றனா;. வண்டாடி மணமக்களின் தந்தைமார்களை அழைத்து இன்னார் மகளை, இன்னாரது மகனுக்கு பரிசம் போடுகிறேன் என்று கூறி பெற்றோர்களிடம் வெற்றிலைப்பக்கினை மும்முறை மாற்றிக்கொள்ள கொடுப்பர். பெண்கள் குலவியிடுவார்கள். இவ்வாறாக செவல்பட்டி முத்துமுருங்கன் மகன் வயிரவனுக்கும், தொரச்சியாவரம் அழகிடி மகள் முத்துமாடிக்கும் இருபத்து ஒரு ரூபய் பரிச பணத்தை வைத்து பரிசம் போடப்படுகிறது. பரிசம் போடுதல் முடிந்தாலே பதி திருமணம் முடிந்ததற்குச் சமமாக கருதப்பட்டது. பரிசம் போடுதல் இன்றைய நிலையில் நிச்சியத்தல் என்ற சொல்லால் குறிக்கப்பட்டு வருகிறது.
கருகமணி கட்டுதல்
                ரிசம் போடுதல் நிகழ்வை அடுத்து விருந்து நடைபெறும். விருந்து நிகழ்வினை அடுத்து நிச்சயித்த பெண்ணுக்கும் ஆணுக்கும் வண்டாடி, சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு மணம் முடித்து வைப்பர். வண்டாடி மீண்டும் கனத்த குரலில்,
                                தொரச்சியாவரம் அழகிடி மக முத்துமாடி…”
                                கைபுடிச்சக் குடுக்குறமய்யா கைபுடிச்சக் குடுக்கிறொம்
                                சம்மதம்யா சம்மதம்
என்று  கூறி,  முத்துமாடியின்  கையைப்  பிடித்து தாய்மாமன் மாப்பிளையான வயிரவன் கையில் ஒப்படைக்க, கருகமணி அணிவிக்கும் சடங்குடன் திருமணநிகழ்வு நிறைவடைகிறது.
(இ) மணவிலக்குச் சடங்கு
                மணமக்களிடையே பிரச்சினை ஏற்படும்போது, அதனை ஏற்று காலம் முழுவதும் கண்ணீடில் வாழ வேண்டிய நிர்பந்தத்தை விரும்பதவா;கள் இவ்வினமக்கள் மணமுறிவு பெற்று மறுமணம் செய்து மகிழ்வுடன் வாழும் பண்பட்டை உடையவா;களாக திகழ்கின்றார்கள். விருப்பத்தை ஊர் வண்டாடிகளிடம் தொரிவிக்க, சம்பந்தபட்டவா;களும், ர் வண்டாடிகளும் கூடி, பிரச்சனையைக் களைய முற்படுகின்றனா;. தீர்வு கிட்டாதநிலையில் மணமுறிவே ஏற்புடையதாக ஏகமானதாக முடிவு செய்யப்பட்டு, வரவு. செலவு கணக்குகளையும், பிள்ளைகள் இருப்பின் எவருடன் வளரவேண்டும் என்பதும் ஊரார் முன்னிலையில் முடிவு செய்யப்பட்டு, மணமுறிவுச்சடங்கு நிகழ்த்தப்படும். அவ்வகையில் வயிரவன் முத்துமாடி அழகில்லை, வரதட்சணை போன்ற காரணங்களை முன் வைத்து அவளை பிடிய விரும்புகிறான். இதனை, “அவள எனக்கு புடிக்கல. அவ்வளவுதான். பெறகெதுக்கு அனாவசியாமாப் பேசீட்டு பேசாம உண்டானத வாங்கீட்டு முந்திநூலக் குடுத்துட்டுப் போகவேண்டியதுதான. இல்ல செய்மொறையிருந்தாலும் சொல்லட்டும். காச வுட்டெறிஞ்சிறென்” (பூமணியின் ஐந்து நாவல்கள், ப.130)என்பதிலிருந்து மணமுறிவு நிகழ்வின் போது, கடன் கொடுத்தல், வாங்கல் செய்முறைகள் ஏதேனும் இருந்தால் அவற்றை ஈடுசெய்ய பணம் கொடுத்தலும், உறவை முறித்துக்கொள்ளும் பழக்கமும் இம்மக்களிடையே காணப்படுகிறது.
                சடங்கு நடைபெறும் இடத்தை சாணியால் மெருகி, இலை விடித்து மஞ்சள் பிள்ளையார் பிடித்து, நீர் நிறைந்த செம்பு, ஆவராங்குச்சியில் மஞ்சள் தடவி வைக்கின்றனா;. முந்திசேலை, கழுத்து கருகுமணி அனைத்தையும் வைத்து, வண்டாடி இவ்விருக்கும் எந்தவிதமான பந்தமும் இல்லை, பத்தியமும் இல்லை என்று மும்முறை கூறி மூன்றாவது முறை கூறுகையில் ஆவாரங்குச்சியை உடைக்கிறார். அத்துடன் திருமணஉறவும் உடைக்கப்படுகிறது.
(ஈ) இறப்புச்சடங்கு
                கிராமத்தில் இறப்பு நிகழ்ந்தால் அந்த இழப்பை தனது குடும்பத்தில் ஏற்பட்டு துயரமாக எண்ணி, இழப்பு நிகழ்ந்த குடும்பத்துனருடன் அனைவரும் இணைத்து துன்பத்தையும், வேலைகளையும் பகா;க்கின்ற பண்பனது மக்களிடையே காணப்படுகிறது. இறப்புச்சடங்கிற்கு தேவைப்படும் செலவுகளை சாரிகட்ட இறப்பிற்கு வருவா;களிடமும், தாங்கள் பணிபுடியும் முதலாளிமார்களின் வீடுகளிலும் பணத்தை யாசகம் பெற்று, இறப்புக் காடியங்களை செய்யபயன்படுத்துகின்றனா;. இதனை,
                சக்கிலியக் குடியிலிருந்து புறப்பட பகடைகள் மேகலக்குடித் தெருக்களுக்குள் நுழைந்து வசூல் பிடித்தார்கள். பிறகு ஒருவன் கோடியெடுக்க வடக்கூருக்கு ஓடினான். இன்னொருவன் வாகைமரத்துக்கு விரைந்தான். சக்கணனின் உடல் கட்டணத்தில் புறப்பட நேரமாகிவிட்டது.” (பூமணியின் ஐந்து நாவல்கள், ப.128)
சக்கணனின் இறப்புச்சடங்குகளை செய்வதற்கு, அனைவாரிடமும் பணம் பரிவா;த்தனை செய்யப்பட்டு அதனைக்கொண்டு படைகட்டுதல், இழவு செய்தி சொல்ல ஆட்களை அனுப்புதல், அடக்கம் செய்வது என அனைத்து சடங்குகளையும் செய்யப் பயன்படுத்திய நிலையினை அறியமுடிகிறது. மேலும் சக்கலியக்குடியின் அனைத்து வண்டாடி வேலைகளைகளுக்கும் நிர்வாகியாக இருந்து பொறுப்புகளைப் பகிர்ந்துக்கொடுப்பர்.
முடிவுரை
                முன்னோர்களின் வாழ்க்கை முறைகளை அழியாமல் காக்கும் கருவூலாக சடங்குகள் திகழ்கின்றன. சடங்குகள் காலமாற்றத்தால் பல்வேறு மாறுதல் அடைந்தாலும் தொன்மை மாறாமல் இருப்பதை சடங்குகள் பழங்கவழக்கங்கள் நமக்கு பறைசாற்றுகின்றன. சக்கிலியின மக்களிடம் காணலாகும் பூப்புச்சடங்கில் பெண்வீட்டார் அனைவருக்கும் மாவிடித்துக்கொடுக்கும். பழக்கமும், இறப்பு சடங்கிற்கு ஊர்மக்களிடம் பணம் பெற்று சடங்கு செய்யும் நிலையினையும், மணவிலக்கின் போது செய்யப்படும் சடங்குகள் குறித்தும் அறிந்துகொள்ள முடிகிறது.


No comments: