Saturday, 11 January 2014

பாரதியாரின் கவிதைகளில் பெண்ணியப் பார்வை



கட்டுரை-10

பாரதியாரின் கவிதைகளில் பெண்ணியப் பார்வை
மா. ஜெகதாம்பாள் முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர், அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி)                சேலம்-7.
முன்னுரை
                சங்க காலம் தொடங்கி இருபதாம் நூற்றாண்டு வரை பெண்களின் வாழ்க்கை ஒரே போக்காக அமைந்துள்ளது. அந்தந்த காலக்கட்டங்களில் அரசியல் மற்றும் மத தாக்கங்களின் காரணமாகப் பெண்களின் நிலையில் சிற்சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவே தவிர பொpய மாற்றம் எதுவும் ஏற்படவில்லை. அப்படிப்பட்ட நிலையில் பாரதியார் காலம் பெண்ணடிமை மிகுந்திருந்த காலமாகும். பெண்கள் கல்வியின்றி மூடப்பழக்கங்களில் சிறைப்பட்டு சிந்திக்கும் திறனின்றி, தனித்து இயங்கும் ஆற்றல் இல்லாமல் இல்லறச் சிறையில் கற்பு என்ற சமூக விலங்குகளால் பூட்டப்பட்டு சமையலறையில் முடங்கிக் கிடைந்த காலமாகும்.
இத்தகைய காலக்கட்டத்தில் பாரதியார் தம் ஆயுதமாகிய கவிதையின் மூலமாகவும், பிற படைப்புகளின் மூலமாகவும் பெண்ணடிமையை நீக்க முற்பட்டார். நிலைப்பாடுகளை இக்கட்டுரையின் வழிக்காண்போம்.

பெண் விடுதலை
                பாரதியாரின் பாடல்களில் விடுதலை உணர்வே அதிகமாகக் காணப்படுகிறது. பெண் விடுதலை என்பது பெண்களின் உரிமைகளை எடுத்துக் கூறுவதாகும். பெண் விடுதலை பெறும்போது தான் சமூகத்திற்கும், நாட்டிற்கும் பயனுள்ள ஒன்றாக அமைகிறது. பாரதியார் வாழ்ந்த காலத்தில் பெண்கள் அடிமைகளாக வாழ்ந்தனர். இந்தப் பெண்ணடிமை நிலையினைக் கண்டு பாரதியார்.
                                மாதர் தம்மை இழிவு செய்யும்
                                                மடமையைக் கொளுத்துவோம்
                                வைய வாழ்வு தன்னி லெந்த
                                                வகையிலும் நமக்குள்ளெ        
தாத ரென்ற நிலைமை மாறி
                                                ஆண்களோடு பெண்களும்
                                சரி நிகர் சமானமாக
                                                வாழ்வ மிந்த நாட்டிலே!          (சுதந்pரம் :3)
என்று கூறுகிறார். பாரத சமுதாயம் முழுவதிலும் நிலவி வருகின்ற பெண்ணடிமை நிலைமாறி ஆணும், பெண்ணும் சாpநிகர் சமமாக வாழவேண்டும் என வலியுறுத்துகின்றார். பாரதியார் விடுதலையைப் பற்றி பாடும்போது ஆணும், பெண்ணும் சமூகத்தில் விடுதலைப் பெற்றிருத்தல் வேண்டும் என்னும் நோக்கில்
                                காட்டிலுள்ள பறவைகள் போல் வாழ்வோ மம்மா
                                                                                                                (பாரதி அறுபத்தாறு : 48)
என்று பாடியுள்ளார். பறவைகளைப் போன்று தடைகளற்றுச் சுற்றித் திhpதல் வேண்டும் என முழுமையான விடுதலையைக் கூறியுள்ளார். குடும்பத்தில் பெண்ணுக்குரிய உரிமைகள் அனைத்தையும் பெற்று வாழ்வதன் தேவையை,
                                ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
                                அறிவிலோங்கி இவ்வையம் தழைக்குமாம்         (புதுமைப் பெண் : 4)என்னும் வரிகளில் விடுதலை என்பது அன்பின் அடிப்படையில் அறத்தின் அடிப்படையில் கிடைக்க வேண்டிய ஒன்று என அறிவுறுத்துகின்றார்.

பெண் கல்வி
                பாரதியார் பெண்கல்வி குறித்து தம் கவிதைகளில் சிறந்த முறையில் கூறியுள்ளார். வறுமை, தீண்டாமை, பெண்ணடிமை நிலை போன்றவற்றை மாற்றுவதற்கும் கல்வியே அடிப்படையாக இருக்க முடியும் என்பதை அவர் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
                                பெண்ணுக்குள் ஞானத்தை வைத்தான் - புவி
                                பேணி வளர்த்திடும் ஈசன்                                                       (முரசு :9)
என்ற கவிதை வரிகள் வாயிலாக பெண்களின் அறிவாற்றலைப் பற்றி எடுத்துரைக்கிறார் பாரதி. ஏட்டையும், எழுதுகோலினையும் தொடுவது பெண் குலத்திற்கு ஆகாது என்னும் எண்ணத்தில் மூழ்கியிருந்த சமயத்தில், பாரதி புதுமைப் பெண்ணைப் படைத்திருக்கிறார். இதனை,
                                நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
                                நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
                                திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
                                செம்மை மாதர் திறம்புவதில்லையாம்” (புதுமைப் பெண் :6)
என்ற வரிகளில் புதுமைப் பெண்ணானவள் நேர்கொண்ட பார்வை கொண்டவளாகவும், உலகத்தில் யாருக்கும் அஞ்சாதவளாகவும், கல்வியிலும், பண்பிலும், அழகிலும் சிறந்தவளாகவும் இருக்கும் பெண் எந்நிலையிலும் மாறுபடாதவளாய் இருப்பாள். பெண்கள் கல்வி நிலையில் உயர்ந்து, விரும்பும் தொழில் செய்து வாழும் உhpமை பெற வேண்டும் என்பதும் பாரதியின் கனவாக இருந்தது. இதனை,
                                பட்டங்கள் ஆள்வதும், சட்டங்கள் செய்வதும்
                                                பாரனில் பெண்கள் நடத்த வந்தோம்
                                எட்டு மறைவினில் ஆணுக்கிங்கே பெண்
                                                இளைப்பில்லை காணென்று கும்மியடி
                                                                                                                (பெண்கள் விடுதலைக்கும்மி :6)
என்ற வாpகளில் பாரதியார் புதுமைப் பெண்ணை சிறந்த முறையில் புவிக்கு அறிமுகப்படுத்துகிறார். மேலும், மூடபழக்கவழக்கங்கள் நிறைந்த இந்நாட்டில் பெண்கள் பகுத்தறிவாளர்களாக சிந்தனையாளராகத் திகழ வேண்டுமென பாரதியார் கூறுகிறார்.
                                போற்றி போற்றியோ நாலாயிரம் போற்றி! நின்
                                பொன்னடிக்குப் பல்லாயிரம் போற்றி கான்!
                                சேற்றிலே புதிதாக முளைத்த தோர்
                                செய்ய தாமரைத் தே மலர் போலொளி
                                போற்றி நின்றனை பாரத நாட்டிலே
                                துன்ப நீக்குஞ்சுதந்திர போpகை
                                சுற்றி வந்தனை மாதரசே யெங்கள்
                                சாதி செய்த தவப்பயன் வாழி நீ!                      (புதுமைப் பெண் :1)
என்ற வரிகள் உவமையின் வழியாக புதுமைப் பெண்ணின் செயல்பாடுகளை விளக்கிக் காட்டுகிறார்.            தாமரையின் பிறப்பிடம் சகதியாக இருந்தாலும், தோற்றத்தில் அழகாக இருக்கிறது. அதன் பயன்கள் எண்ணிலடங்காதவை. அது இறை வழிபாட்டிற்குhpய மலராகவும், மக்கள் வாழ்வில் இரண்டறக் கலந்து விட்ட மலராகவும் காணப்படுகிறது. இத்தகையவளே புதுமைப் பெண் என்று கூறியுள்ளார்.

பெண் சக்தி
                பாரதியார் பெண்ணைப் பாடும்போது பல இடங்களில் அவளைத் தெய்வமாககிய சக்தியாகவே கூறியுள்ளார்.
                                காதல்செயு மனைவியே சக்தி, கண்டீர்
                                கடவுணிலை அவளாலே யெய்த வேண்டும்       (பாரதி அறுபத்தாறு :50)என்ற வரிகளின் மூலம் மனைவியினால் மட்டுமே ஒருவன் உயர்வினை எய்த முடியும். கடவுள் நிலை பெற முடியும். பெண்மை தமக்கு இழுக்கு நேரும் போதெல்லாம் பெருகும் வௌளமாய், குமுறும் எhpமலையாய், சக்தி வடிவாய் கிளம்புவதாக பாரதியார் கூறியுள்ளார். இதனை,
                                ஆக்கந்தா னாவாள், அழிவு நிலையாவாள்,
                                போக்குவர வெய்தும் புதுமையெலாந் தானாவாள்
                                மாறிமா றிப்பின்னு மாறிமா றிப்பின்னும்
                                மாறிமா றிப்போம் வழக்கமே தாரைவாள்!     (பாஞ்சாலி சபதம் :55)
என்று கூறுகிறார். மேலும், உலகத்து தீமைகள் ஒழிப்பவள் மாசக்தி என்றால், இல்லத் தீமையை அழித்து ஒழிப்பவள் தாய் என்னும் சக்தி என்பதை,
                                தாய்க்குமே லிங்கேயோர் தெய்வ முண்டோ”(பாரதி அறுபத்தாறு :47)என்றும், “சக்தியரு ளாலன்றோ பிறந்தோம் பார் மேல்
 (பாரதி அறுபத்தாறு :9)என்றும் பெண்ணின் பெருமையைப் பேசுகிறார்.
கற்பு
                கற்பு என்ற கோட்பாட்டை பெண்ணிற்கு மட்டும் வைத்து ஆண்களை சுதந்திரமாக தவறு செய்யுமாறு கடவுள் படைத்துவிட்டதாக நம்பியிருக்கும் ஆண்களுக்கு,
                                கற்பு நிலையென்று சொல்லவந் தாhpரு
                                கட்சிக்கும்ஃது பொதுவில் வைப்போம்
                                                                                                                (பெண்கள் விடுதலைக்கும்பி :5)
என்று கண்டிக்கிறார். மேலும்  பெண்களைக் கற்பு பேணும் பொருட்டு வீட்டிற்குள் அடைத்து வைக்கும் மூடப்பழக்கத்தைக் கண்டித்துள்ளார். பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதால் கற்பு போய்விடாது என்று உணர்த்தும் அவர், கற்புடைய பெண்களால் இல்லம் உயர்வதுடன், நாடும் உயரும் என்பதை, “மாதர்தம் கற்பின் புகழினிலே உயர்நாடு                                                (பாரத நாடு :3)என்ற அடியின் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

ரிநிகர் சமானம்
                ஆணும், பெண்ணும் சாpநிகர் சமானம் என்ற கொள்கை பாரதியின் உயர்ந்த கொள்கையாகும். ஆணுக்குப் பெண் இளைப்பில்லைஎன்றும், ஆண்களோடு பெண்களும் சாpநிகர் சமானம் என்றும் கூறியுள்ளார். அதை,
                                வல்ல சகுனிக்கும் மாண்பிழந்த நாயகர்தாம்
                                என்னை முன்னே கூறி யிழந்தாரோ? தம்மையே
                                முன்ன மிழந்து முடித்தென்னைத் தோற்றாரா?”               
(பாஞ்சாலி சபதம் :48)என்று சீறும் பெண்ணாக திரௌபதியை காட்டுகிறார். இதன்மூலம் ஆணுக்குப் பெண்களைச் சமமாக உணர்த்தியுள்ளார்.
புதுமைப் பெண்ணின் கடமைகள்
                ஏட்டையே பெண்கள் தொடுவது தீமையென்று எண்ணியிருந்த காலக்கட்டத்தில் புதுமைப் பெண்களின் கடமைகளாக பாரதியார் கூறியுள்ளவை,
                                வேதம் படைக்கவும், நீதிகள் செய்யவும்
                                வேண்டி வந்தோ மென்று கும்மியடி
                                சாதம் படைக்கவுஞ் செய்திடுவோந் தெய்வச்
                                சாதி படைக்கவுஞ் செய்திடுவோம்
                                காதலொருவனைக் கைப்பிடித்தே யவன்
                                காhpயம் யாவினுங் கைகொடுத்து
                                மாதர றங்கள் பழமையைக் காட்டிலும்
                                மாட்சி பெறச் செய்து வாழ்வமடி
                                                                                                (பெண்கள் விடுதலைக்கும்பி : 7,8)
என்று விடுதலைக்கும்மியடித்து மகிழ்ந்து பாடுவதைக் காண்கிறோம்.

முடிவுரை
                பாரதியாரின் பெண் விடுதலை, பெண் கல்வி குறித்த கவிதைகளில் சமுதாயத்தில் பெண்களின் முன்னேற்றம் பெற்று, ஆணுக்குப்  பெண் சாpநிகர் சமானமாக வாழவேண்டுமானால் பெண்கள் கல்வியறிவு பெறவேண்டும் என்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.

No comments: