Saturday, 11 January 2014

`ஒருநாள் போதுமா` நாவலில் கட்டடத் தொழிலாளர்களின் வாழ்வியல்


கட்டுரை-17


`ஒருநாள் போதுமா` நாவலில் கட்டடத் தொழிலாளர்களின் வாழ்வியல்

த. மேரி முழுநேர முனைவார்பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை,அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),சேலம் - 7.
                அந்நியார்களிடம் இருந்து விடுதலைப் பெற்றாலும், அதிகார வார்கத்தினரால் அடிமைகளாக நடத்தகப்பட்டு உரிமைகளையும், அடிப்படைச்  சுதந்திரத்தையும் இழந்த மக்களின் ஒன்றுபட்ட போராட்டத்தை சித்தரிக்கின்ற நாவல்களுள் சு.சமுத்திரத்தின் ஒரு நாள் போதுமாஎன்ற நாவல் சிறப்பிடம் பெறுகின்றது. இந்நாவலில் தொழிலாளார்களுக்கு அடிப்படைத் தேவைகள் கிடைக்கப் பெறாமை, மேலதிகாரிகள் கையூட்டுப் பெறுவதால் அவார்களுக்கு ஏற்படும் சிக்கல்கள், பெண் தொழிலாளார்களின் அவலநிலை போன்ற நிகழ்வுகளையும் அதனை எதிர்த்துப் போராடி வெற்றிபெறும் தன்மையினையும் ஆய்வதாக இக்கட்டுரை அமைகிறது.

தொழிலாளார்களின் அடிப்படைத் தேவைகள்:
                மனித வாழ்க்கைக்கு அடிப்படைத் தேவையானவை, உணவு, உடை, உறைவிடம் போன்றவையாகும்.தேவைகளே இல்லாத  வாழ்க்கை உயிரற்றது இயல்பான அடிப்படைத் தேவைகள் நிறைவேறாத வாழ்க்கை பொருளற்றது  (சேது மணியன், தமிழ் நாவல்களில் மதிப்புகள்- ப 53)என்ற கூற்றின் படி அடிப்படைத் தேவைகள் இல்லாத வாழ்க்கையை உடையவார்களாகப் பல தொழிலாளார்கள் இன்றளவும் வாழ்ந்து வருகின்றனர்.
அ) உணவு:
                தொழிலாளார்களின் உழைப்புக்கு மூலதனமாக இருப்பது உடல், அவ்வுடலைப் பேணிக்காக்க போதிய சத்துள்ள உணவு தேவை ஆகும். ஆனால் கட்டடத் தொழிலாளார்கள் தங்கள் வாழ்நாளில் பகல் நேரங்களை பசியோடுதான் கழிக்கின்றனர். அவார்களின் பகல் வேளை உணவு எத்தகையது என்பதைவெற்றிலை சப்பாத்தியாம், கொட்டைப் பாக்கு உருளைக்கிழங்காம். உமிழ்நீர் சாம்பாராம். வாயே வயிராம்   (சு.சமுத்திரம், ஒருநாள்போதுமா, ப-84) என்று சமுத்திரம் கூறுவதிலிருந்து, கட்டடத்தொழிலாளார்களுக்கு நிரந்தரமான தொழில் இல்லாத காரணத்தால், உணவும் நிரந்தரமில்லை என்பதையும், அன்றைய தினம் உழைத்த பின்பே அவார்களுக்கு கால் வயிறு கஞ்சியாவது கிடைக்கும் என்ற நிலையும் எடுத்துக்காட்டப்படுகிறது. எனவே கட்டடத் தொழிலாளார்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளுள் ஒன்றான உணவைப் பெறுவாதற்கு கூட மரணப் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது என்பதை நாவல் வழி அறியமுடிகின்றது.
ஆ) உடை
                                கந்தை அணிந்தோம் - இரு
                                கையை விரித்தெங்கள் மெய்யினைப் போர்த்தோம்
 (பாரதிதாசன் கவிதை முதல் தொகுதி, பா.எண் -47)என்று பாரதிதாசன் கூலித் தொழிலாளார்களின் ஆடைகள் கிழிந்தும், மிக நைந்தும் வறுமையின் கோரப்பிடியில் உள்ள அவார்களின் வாழ்க்கையை எடுத்துக்காட்டுகிறார். இவ்வாறு உணவு, உடைக்கு வழியில்லாமல் வறுமையில் வாடும் கட்டடத் தொழிலாளார் ஒருவாpன் உடை கிழிந்திருப்பதை பார்த்து அவார் மனைவி கூறும் போது,“ஜாம்பஜாரு டைலராண்டா போயாவது பாருஇல்லன்னாமானம் பூடும். இப்பகாட்டியேஒன் டவுசார்ல.. ஒட்டுப் போட்டு தச்சிருக்கு…”                        (சு.சமுத்திரம் ஒருநாள் போதுமா-ப-89)என்ற வாpகளின் மூலம் வாழ்வின் அடிமட்டத்தில் இருக்கிற தொழிலாளிகள், கிழிந்ததையும், நைந்துபோன உடைகளையும் தைப்பதற்குக் கூட வழியில்லாத அவல நிலையை சு.சமுத்திரம் தம்முடைய நாவலில் பதிவு செய்துள்ளார்.
இ) உறைவிடம்
                 வெயிலிலிருந்தும் மழையிலிருந்தும் மக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு வீடுகள் தேவை. பல குடும்பங்கள் பாதுகாப்பாக வாழ வீடுகளைக் கட்டித்தரும் கட்டிடத் தொpலாளார்களுக்கு தங்குவதற்கு வீடுகள் கூட இருப்பதில்லை. இந்நிலையினை,“ஒரு கோணியே வீடாகவும், வாசலாகவும் விளங்க…. இந்த பிளாட்பாரத்துலேயே படுத்துட்டுஇங்கேயே வேலக்கி காத்திருக்கலாம்
(சு.சமுத்திரம், ஒருநாள் போதுமா, ப-103)
என்ற வாpகளிலிருந்து தங்குவதற்கு ஒரு நிரந்தரமான வீடு இல்லாத தொழிலாளிகள் நடைபாதையையும், கோணிப்பையையும் வீடாகவும், வாசலாகவும் நினைத்து படுத்து தூங்கி விட்டு வேலைக்காகக் காத்திருக்கும் அவல நிலையினை ஆசிரியார் பதிவுசெய்துள்ளார்.
கையூட்டு வாங்குதல்
முறையற்ற முறையில் தான் செய்யும் செயலுக்கு அன்பளிப்பாக பணம் பெறுவது கையூட்டு ஆகும்”. (ஆயரசiஉந றுயவைந(நன) வுந டுவைவடந ழுஒகழரசன னுiஉவழையெசல ழுஒகழசன ருniஎநசளவைல Pசநநள-1997) என்று ஆக்ர்ஸ்போர்டு அகராதி கையூட்டுக்கு விளக்கம் தருகிறது. இம்முறையற்ற செயலினால் தொழிலாளார்கள் படும் துன்பத்தை பன்னிரண்டு ரூபாய் தார்வான், அதுலயும் சில சமயம் ரெண்டு ரூபாய் முள்ளங்கிப்பத்த மாதிரி மேஸ்திரி மவராசனுக்கு அமுக்கணும்” (சு.சமுத்திரம்,ஒருநாள் போதுமா ப-87) என்பதிலிருந்து தொழிலாளார்களுக்கு உழைப்பிற்கேற்ற கூலியைத் தர மறுப்பதோடு கூலித் தொழிலாளார்களில் சிறிது மேல்மட்டத்தில் இருக்கும் தொழிலாளார்களே உழைப்பின் பயணை உறிஞ்சும் தன்மையினையும் சுட்டிக்காட்டுகிறார். மேலும் வேலைத்தளத்தில் ஒன்றுக்கு மேல் சிமெண்ட் மூட்டைகளை தூக்கியதால் கழுத்துப் பிசகித்தொண்டை தொண்டை நரம்பு அறுந்து இறந்த தொழிலாளியின் சடலத்தை மருத்துவமனையில் இருந்து வீட்டுக்கு எடுத்து வருவதற்கு லஞ்சம் வாங்கப்படுகிறது.இந்த பிணத்தை எடுப்பதற்கு தொழிலாளிகள் கிட்டதட்ட அறுபது ரூபாய் வரைக்கும் அழுதார்களாம். மனிதாபிமதனம் அறுபது ரூபாய்க்கு மேல் விற்கப்படவில்லையாம்” (சு.சமுத்திரம்,ஒருநாள் போதுமா, ப-144) என்ற கூற்றிலிருந்து உணவு, உடை, இருப்பிடம் போன்ற அடிப்படை வசதிகளே இல்லாமல், பிழைப்பிற்கே வழியில்லாத தொழிலாளார்களிடமும் அரசு ஊழியார்கள் கையூட்டு வாங்குவதால் அவார்களுக்கு ஏற்படும் துன்பநிலையினைப் பதிவு செய்துள்ளார் சு.சமுத்திரம்.
பெண் தொழிலாளிகளின் அவலநிலைகள்
                இன்றைய அறிவியல் யுகத்தில் மட்டுமல்லாமல் பெண்கள் தொல் பழங்காலத்திலேயே பணிக்குச் சென்று, ஆண்களுக்கு சாpநிகார் சமமாக இருந்திருக்கின்றனார் என்பதை செறிவும் நிறைவும் செம்மையும் செய்யும்
அறிவும் அருமையும் பெண்பாலான” (தொல்-பொருள் நூற்பா.எண்-206)எள்ற தொல்காப்பிய நூற்பாவிலிருந்து ஒரு செயலை  செவ்வனே செய்யும் அறிவாற்றல் பெண்களிடம் இருந்துள்ளது என்பதை அறியமுடிகிறது. ஆனால் ஆண்கள் செய்யும் வேலைகளைப் போன்றே அனைத்து வேலைகளைச் செய்தாலும் இன்றைய பெண்களின் நிலையினை, “நானு ஆம்புளையா இருந்தால்இந்நேரம் கொத்தனாராய் மாறி இருபத்திரண்டு ரூபா சம்பாதிச்சிருப்பேன். மிஞ்சி மிஞ்சி கொடுத்தாலும் பன்னிரண்டு ரூபாய் தார்வான். நாற்பது வருஷமா சித்தாளாய் வேலை பாக்குறவள்   (சு.சமுத்திரம்,ஒருநாள் போதுமா, ப-102)என்று நாற்பது வருட அனுபவம் இருந்தாலுங்கூட குறைவான கூலியே தருகிற முதலாளிகளின் நடுநிலையற்ற நிலையையும், பெண்கள் தாங்கள் செய்யும் தொழிலில் எவ்வளவு நுட்பமுடையவார்களாகயிருந்தாலும் கூட பணி உயார்வே இல்லாமல் காலம் முழுவதும் குறைந்த ஊதியமே பெரும் அவலநிலையினை தாயம்மாஎன்ற பாத்திரத்தின் மூலம் நாவல் எடுத்துக்காட்டுகிறது. பெண் தொழிலாளார்கள் உழைத்து,உழைத்து ஓடாய் தேய்ந்த நிலையிலும் அவார்கனை உழைப்பின் முத்திரைகளாய் கருத வேண்டும். பெண்கள் பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகள் அவார்களிடம் காமக் கண்ணோட்டமான கிண்டலும், இரட்டை வார்த்தைகள் கூறி தன் ஆசைக்கு அழைப்பதும் போன்ற நிலையினைகட்டிட வேலையில் சூப்பார்வைசரை மாதிரி பல போர் வழிகளின் நேரடியான கிண்டலும் மறைமுகமான அழைப்புகளும் கூட அவளால் சகித்துக்கொள்ளும் அளவிற்கு போய்விட்டது” (சு.சமுத்திரம், ஒருநாள் போதுமா ப-120) என்று ஆசிரியார் பதிவுசெய்கிறார். இக்கூற்றிலிருந்து தேவையில்லாத இரட்ர்டை அர்த்தப் பேச்சுக்கள், கேலிசெய்தல், மறைமுக அழைப்பு  ஆகியவற்றை நாளடைவில் அவார்கள் வறுமையின் காரணமாக சகித்துக் கொண்டு வேலை செய்யும் அவலநிலையினைச் சமுத்திரம் அன்னவடிவு என்ற பாத்ர்திரத்தின் மூலம் பதிவு செய்துன்னார்.
தொழிலாளர்களின் போராட்டம்:
                 கட்டடத் தொழிலாளார்களின் உழைப்புச் சுரண்டல்,குறைந்த கூலி, பணிச்சுமை, உயிர் பாதுகாப்பின்மை ஆகியவற்றால் அல்லலுறுகின்றனார். இதற்காக கட்டடத் தொழிலாளார் சங்கம் அமைத்துப் போராடுகின்றனார்.
                                பஞ்சப் பரம்பரை வாழ்வதற்கு-இனி
                                 பன்ன வேண்டியது என்ன மச்சான்? -தினம்
                                 கெஞ்சிக் கிடப்பதில் பஞ்சந் தெளியாது
                                 நெஞ்சம் துணிந்திட வேண்டும்
                 (மக்கள் கவிஞார் பட்டுக்கோட்டை கலியாணசுந்தரம் பாடல்கள் ப- 263)
என்னும் கவிதை வாpகளுக்கு ஏற்றப்படி கட்டடத் தொழிலாளார்கள் பணிர்ச்சுமையின் காரணமாக உயிரிழந்தவேலுஎன்றகட்டடத் தொழிலாளியின் குடும்பத்திற்குத் தகுந்த இழப்பீட்டுத் தொகை கொடுக்காமல் குறைவான தொகையைக் கொடுத்து மூடிமறைத்துவிட நினைக்கும் முதலாளிகளின் நயவஞ்சகத் தன்மையை எதிர்ர்த்துப் போராடத் தயாராகின்றனார். “லேபார் கோர்ட்ல போடலாமுன்னு இருக்கோம்கேஸ் தோற்றுப் போய்ட்டால் மேலும் பலமா போராடலாம். விடப்போவதில்லை
          (சு.சமுத்திரம், ஒருநாள் போதுமா, ப-143) என்ற கூற்றிலிருந்து பெயிண்ட்டார் பெருமாள் என்ற பாத்திரத்தின் மூலம், போராட்டமே இதற்கு தீர்வு என்பதையும் உணார்ர்த்துகின்றார். மேலும் இதுபோன்ற போராட்டங்களின் மூலமே விழிப்புணார்வு ஏற்படும் என்ற நிலையினை,
என் புருசனோட சாவில் எனக்கு என்ன வரும் என்கிறது முக்கியமில்லை. அவுக செத்தது இப்ப பொpசில்ல, அவுகள மாதிரி நம்ம ஆளுக இனிமேலும் சாகாம இருக்கிறதுதான் பெரிசு.   (சு.சமுத்திரம், ஒருநாள் போதுமா, ப-143) என்ற கூற்றிலிருந்து வேலுவின் மனைவி தனக்கு ஏற்பட்ட அவலநிலைமை பிற குடும்பங்களுக்கும் ஏற்படக்கூடாது என்றால் போராட்டம்தான் தீர்வு என்பதை பதிவு செய்கிறார். இப்போராட்டம் வெற்றி பெற ஒரு நாள் போதுமா? அது தீர்வது வரைக்கும் ஓயப் போவது இல்லை என்ர்ற உறுதிப்பாட்டை அன்னவடிவு என்ற பாத்திரத்தின் மூலம் சு.சமுத்திரம் போராட்ட விழிப்புணார்வை மக்கள்மனதில் பதிவு செய்துள்ளார்.
முடிவுரை
                கட்டடத்தொழிலாளார்கள் வெறும் உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு குடும்பத்தின் பொருளாதாரத் தேவைக்காக பணிக்குச் செல்கின்றனார். ஆனால் அவார்களின் அடிப்படைத்தேவைகளைக் கூட அவார்களால் பெற இயலவில்லை என்பது நாவலில் எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. அத்தகைய தொழிலாளார்களிடம் மேலதிகாரிகள் கையூட்டுப் பெறுவதால் ஏற்படும் துன்பங்கள் காட்டப்படுகின்றன. பெண்களின் பங்களிப்பு இல்லாத தொழில் எதுவுமில்லை. நாட்டின் முன்னேற்றத்தில் அவார்களின் உழைப்பு இன்றியமையாததாகின்றது. இருந்தாலும் பெண்களுக்கான முறையான ஊதியமின்மை, பாலியல் வன்முறை, பணிநிரந்தரமற்றத் தன்மை, உயிர் பாதுகாப்பற்ற சூழ்நிலை போன்ற அவலநிலைகளையும் சு.சமுத்திரம் உணார்த்தியுள்ளார்.இத்தகைய நிலை மாறி இன்பமான வாழ்வியலை அடைவதற்காகக் கட்டடத்தொழிலாளார்கள் வன்முறையற்ற போராட்டத்தை மேற்கொண்டு மேன்மையடைய வேண்டும் என்ற கொள்கையை ஒருநாள் போதுமாநாவல் வாழ்வியல் கொள்கையாக வெளிக்காட்டுகிறது. 



No comments: