Saturday, 11 January 2014

பாரதியின் பல்வகைப் பாடல்களில் அறிவியல்



கட்டுரை-15

பாரதியின் பல்வகைப் பாடல்களில் அறிவியல்


 பா.மணிவண்ணன்முனைவார்பட்ட ஆய்வாளார்,   தமிழ்த்துறை,    அரசு கலைக்கல்லூரி(தன்னாட்சி),சேலம் - 7.

                காலங்காலமாக இலக்கியங்கள் பல்வேறு மாற்றங்களைப் பெற்றுவந்துள்ளன. தற்காலத்தில் நாவல், சிறுகதை, கவிதை, தலித்தியம், பெண்ணியம், அரவாணியம் என்ற நிலைகளில் இலக்கியங்கள் காணப்படுகின்றன. இத்தகைய இலக்கியங்களானது, சமூகத்தின் செயல்பாடுகளை உள்ளவாறே பதிவு செய்து, மக்களிடம் அதைக் கொண்டு சோர்க்கும் களமாகத் திகழ்கிறது. அவற்றில் கவிதை சிறப்பான இடத்தை வகிக்கிறது. நாவல், சிறுகதை போன்று விரிவாக ஒரு பொருளைச்ர் சொல்லாமல் ஓரிரு வரிகளில் சுருக்கமாகத் தொpவிக்கும் சிறப்பினைக் கவிதைப் பெற்றுள்ளது. இத்தன்மையுடைய கவிதை எழுத்தாளார்களில் உலகம் போற்றும் கவிஞராகத் திகழ்ந்தவார் பாரதியார்ர் ர். புதுக்கவிதையின் தந்தை என்றழைக்கப்படும் சிறப்புக்குரியவார். இத்தகைய சிறப்புடைய கவியின் கவிதைகளில் பெண்ணியம், உளவியல், மானுடவியல், பண்பாட்டுவியல் போன்ற பல்துறைகள் காணப்படுகின்றன. அதில் அறிவியலும் ஒன்று. இவரின் கவிதைத் தொகுதியில், பொதுமைப் பாடல்கள் என்ற பகுதியில் பல்வகைப் பாடல்களின் கவிதை தொகுப்பில் அடங்கியுள்ள கவிதைகளில் அறிவியல் கருத்துகளை ஆராயும் விதத்தில் இக்கட்டுரை அமைகிறது.

கணிதவியல்
                கணிதத்தை அறிவியலின் இளவரசிஎன்று அறிஞார்கள் அழைக்கின்றனார் கணிதம் மனித வாழ்க்கையில் பிறப்பு முதல் இறப்பு வரை பயணம் செய்யும் அறிவியலின் தலைச்சிறந்தப் பகுதியாகும். எண்ணல், நீட்டல், முகத்தல், அளத்தல் போன்ற முறைகளில் கணிதம் செயல்படுகிறது. பாரதியார்ர் ர் கவிதைகளிலும் கணிதம் பற்றிய கவிதைகளைக் காணமுடிகிறது. அவர் கோடி என்ற எண்ணையும், யோசனை என்ற சங்ககாலக் கணிதப் பெயரான நீட்டலளவையும் பயன்படுத்தியுள்ளதை,
                                எண்ணில்பல் கோடி யோசனை யெல்லை                                                                                                        (ச.மெய்யப்பன் (உ.ஆ), பாரதியார்ர் ர் கவிதைகள், ப - 457)   என்ற கவிதை வரி வெளிப்படுத்தியுள்ளது. 4 காதம் அளவு யோசனை தூரம்ஆகும். ‘1 காதம்என்பது 1200 கெசம் ஆகும். ‘1 யோசனைஎன்பது 4800 கெசம் என்ற அளவினைக் குறிக்கிறது. அப்பொழுது கோடி யோசனை என்பது 4.8 ந+11 என்ற மிகப்பெரிய அளவினைக் குறிக்கிறது. அப்பொழுது பலகோடி யோசனை என்பது பழக்கத்தில் இல்லாத மீப்பெரு அளவினைக் குறிப்பதாக அமைகிறது.

கடலியல்

                கடலில் உள்ள அனைத்து விதமான பொருட்களையும், வளங்களையும் பற்றி ஆராயும் இயல் கடலியல் ஆகும். கடலில் உள்ள வளம் கொழிக்கும் பொருட்களில் முத்து சிறப்பிடத்தைப் பெறுகிறது. முத்து கடலின் மிக அழமான பகுதியில்தான் காணப்படும். ஆதலால்தான், முத்தினை எடுக்கச் செல்பவரை, ‘முத்துக்குளிப்பவர்என்று அழைக்கின்றனார். முத்து, சிப்பியின் உதவியால் பிறக்கிறது. இது பெட்டியைப் போன்று மூடித்திறக்கும் அமைப்பை உடையது. கடலில் உள்ள நுண்ணுயிhர்களைத் தின்றுதான் இந்தச் சிப்பிகள் உயிhர் வாழ்கின்றன. சிப்பியினுள் அரிப்பை உண்டாக்கக் கூடிய மணல் அல்லது கடினப் பொருள் ஏதேனும் நுழைந்துவிடும் பொழுது, அஃது முத்தாக உருப்பெறுகிறது என்பதை, “இதனுள் (ஓட்டுக்கும் மென்தோலுக்கும் அல்லது மென்தோலுக்கும் மெல்லுடலுக்கும் இடையில்) சிறுமண் துகள்களோ அல்லது அதற்கிணையான முத்துச்சிப்பியின் மென்தோலுக்கு எரிச்சல் அல்லது அரிப்பைத் தரக்கூடிய பொருள் ஏதும் நுழைந்து விட்டால், மேன்டில் என்னும் மென்தோல், முத்துச்சிப்பியினுள் நுழைந்துவிட்ட வேற்றுப்பொருளைச் சுற்றி மினுமினுப்புத் தன்மையைத் தரக்கூடிய திரவத்தைச் சுரக்கின்றது. இத்தகைய திரவம் சுரப்பது தொடார்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கும். இச்செயலினால், முத்துச்சிப்பியினுள் நுழைந்த மண்துகள் அல்லது நுண்ணிய பொருளைச் சுற்றிலும் படிந்த சுரப்பியின் படிவத்தால் அழகான குளிhர்நிலவு போன்ற வெண்முத்து உண்டாகிறது” (வி.சுந்தரராஜ் முதலிய இருவார், கடல்வளம் - 1, முத்துச்சிப்பி, ப - 108)
என்ற கருத்தானது முத்து உருவாகும் தன்மையினைப் பதிவு செய்துள்ளது.
                                கடலில் மூழ்கி நன்முத் தெடுப்பீhர்         (ச.மெய்யப்பன் (ப.ஆ), பாரதியார் ர் கவிதைகள், ப - 458)என்ற கவிதை வரியில் பாரதியார்ர் ர், முத்து உருவாகும் விதம் பற்றியும், முத்து எடுப்பதற்காக முத்துக் குளிப்பதையும் மறைமுகமாகப் பதிவு செய்துள்ளார்.  சங்க காலம் முதல் பல காலக்கட்டத்தில் முத்துக்குளிப்பும், தொழிலும் நடைபெற்று வந்தன. ஆனால், தற்காலத்தில் முத்துக்குளிப்பு என்ற, தொழிலும் குறைந்துவிட்டது. கடலின் ஆழப்பகுதியான தரைப்பகுதிக்குச் சென்று, முத்தெடுக்கும் கடினமானச் செயலைத் தற்காலத்தில் யாரும் செய்ய முன் வருவதில்லை. அதுமட்டுமல்லாமல், இயற்கையான முத்து உற்பத்தி அழிவுற்றது எனலாம். செயற்கை முறையில் ஜப்பான் போன்ற சில நாடுகள் முத்துகளை உற்பத்தி செய்கின்றன.

வளி மண்டலவியல்

                காற்று இருக்கக்கூடிய பகுதிகளுக்கு வளிமண்டலப்  பகுதி என்று பெயார். காற்று, உயிரினங்களின் வாழ்க்கையில் நாடி போன்று செயல்படுகிறது. காற்று இல்லையென்றால் உயிரினங்கள் இல்லை. இத்தகைய காற்று சில நேரங்களில் மனித இனத்தை அழிவுக்கும் உள்ளாக்குகிறது. அதற்குப் புயல் காற்று என்பது பெயார். புயல் காற்று என்பது சாதாரண நிலையில் வீசும் காற்றைவிட பன்மடங்கு அதிகமாக வீசும் நிலையைக் குறிக்கும்.
                                தரையிலோ, கடலிலோ எங்காவது ஓரிடத்தில் வளிமண்டலத்தில் திடீரென்று காற்றின் அழுத்தம் குறையும். குறைந்த அந்தக் காற்றின் அழுத்தத்தை ஈடு செய்ய சுற்றுப் புறத்திலுள்ள காற்று அதிவேகத்துடன் அவ்விடத்தை நோக்கி வீசும். இவ்வாறு அழுத்தம் குறைந்த இடத்தை நோக்கி வீசும் காற்றுக்குப் புயல் (ளுவழசஅ) என்பது பெயார். புயலின் தீவிரம், காற்றின் அழுத்தம் திடீரெனக் குறையும் வேகத்தைப் பொறுத்ததாகும்” (கூ. அருணாச்சலம், அறிவியல் ஆயிரம் தொகுதி ஏ, ப - 47)என்ற கருத்தாக்கம் புயல் காற்றின் தன்மையை எடுத்துரைக்கிறது. பாரதியாரும் இத்தகைய அறிவியல் சிந்தனையில் திறம் வாய்ந்தவராக விளங்கியதை,                                காற்றடிக்குது, கடல்குமுறுதுஎன்ற கவிதை வரி குறிப்பிட்டுள்ளது. புயல்காற்றால் கடல் கொந்தளிப்பு ஏற்படுகின்ற நிலையை இதன்வழி அறியமுடிகின்றது.

வானியல்

                வானின் கண் நிகழும் பல்வேறு விதமான செயல்பாட்டினை ஆராயும் இயலை வானியல் என்று அறிவியலாளார்கள் அழைக்கின்றனார். காலையிலும், மாலையிலும் வானம் சிவந்து காணப்படும் நிலையை நாம் அனைவரும் கவனித்திருப்போம். இது எவ்வாறு ஏற்படுகிறது என்றால், சூரிய ஒளி காற்றினூடே பாயும் போது, காற்றிலுள்ள மூலக்கூறுகளில் பட்டு சிதறலுக்கு உட்படுகின்றது. சூரியனின் வெண்மையான ஒளியிலுள்ள நீலவண்ணக் கதிhர்கள் குறைவான அலைநீளம் கொண்டிருப்பதால், அவை அதிகஅளவு சிதறலுக்கு உட்படுகின்றன. ஆனால் சூரியனின் ஒளியில் உள்ள சிவப்பு மற்றும் மஞ்சள் அதிக அலைநீளம் கொண்டவை. அதனால், அவை காற்றினூடே நேராகப் பாய்ந்து செல்கின்றன. இத்தன்மையினால் வானம் சிவந்து காணப்படுகிறது. இத்தகைய வானியல் நுட்ப அறிவை பாரதியார்ர் ர் திறம்பட பெற்றிருந்தார்.
                                “--------- விண்ணில்
                                செவ்வெளி காட்டி---
     (ச.மெய்யப்பன் (ப.ஆ), பாரதியார்ர் ர் கவிதைகள், ப - 448)என்ற கவிதை வரியில் காலை நேரத்தில் வானில் செவ்வொளி ஏற்பட்டதையும்,                          
செவ்வொளி வானில் மறைந்தே - இனம்
                                தேன்நில வெங்கும் பொழிந்தது   (ச.மெய்யப்பன் (ப.ஆ), பாரதியார்ர் கவிதைகள், ப - 448)என்ற கவிதை வரிகளில் மாலை நேர செவ்வானத்தையும் பற்றி பாரதி பதிவு செய்துள்ளார்.

முடிவுரை

·               பாரதியாரின் பலதுறை அறிவியல் ஆற்றலைப் பற்றி அறியமுடிகிறது.  தமிழர்கள் இயல்பாகவே தங்கள் வாழ்வில் அறிவியலை எவ்வித சோதனையுமின்றி கையாளுகின்ற போக்கினையும், தமிழன் அறிவியல் வளார்ச்சிக்கு மிகப்பொpய உந்து சக்தி என்பதும் பெறப்படுகிறது.· புயல் ஏற்படும் விதம், முத்துப் பிறக்கும் நிலை, கணிதம் பயன்படுத்தும் முறை, வானின் நுட்பம் என்ற எல்லா நிலையிலும் சிறப்புற்றிருந்த பாரதியின் அறிவியல் சிந்தனையை நன்கு அறியமுடிகிறது.

No comments: