Saturday, 11 January 2014

கண்ணப்பநாயனார் புராணத்தில் கண்மாற்று அறுவை சிகிச்சை



கட்டுரை-22

கண்ணப்பநாயனார் புராணத்தில் கண்மாற்று அறுவை சிகிச்சை


து.பிரபா,     முனைவா;பட்ட ஆய்வாளர்  தமிழ்த்துறை, அரசு கலைக்கல்லூரி(தன்னாட்சி),                சேலம் - 7.
கண்ணப்பநாயனார் புராணத்தில் கண்மாற்று அறுவை சிகிச்சை
                நமது முன்னோர்கள் தமிழில் இலக்கிகயம் அல்லாத மற்ற துறைகளான மருத்துவம், அறிவியல், வானியல் முதலிய அனைத்தையும் பாட்டிலே ஆக்கிவைத்தனர். சங்கப்புலவா; பாடல்களிலும் சித்தா; பாடல்களிலும் இன்றைய அறிவியல் கருத்துகளுக்குச் சமமான சொற்கள் ஏராளமாக இருக்கின்றன. பண்டைத்தமிழர் மாற்று உறுப்பு மருத்துவத்தை அக்காலத்திலேயே அறிந்திருந்தனர். கி.பி. பன்னிரண்டாம் நூற்றாண்டில் சேக்கிழார் பெருமான் அருளிய பெரியபுராணத்தில் அத்தகைய கண்மாற்று அறுவை சிகிச்சை முறையைப் பற்றி கூறியுள்ள செய்திகளை இக்கட்டுரை ஆராய்கிறது.

கண்களின் சிறப்பு

                மனித உடலில் ஐந்து புலனுறுப்புகள் உள்ளன. அவை கண்கள், காதுகள், மூக்கு, நாக்கு, தோல் ஆகியனவாகும். கண்கள் நமக்குப் பார்வை உறுப்பாகச் செயல்படுகிறது. திருவள்ளுவரும், ‘பார்வையின் நுட்பத்தை அறிந்து செயல்படுவோர் பெரியோரது விருப்பு, வெறுப்புகளை அவர் கூறாமலேயே கண்ணை நோக்கி உணர்ந்து கொள்வார் என்று கண்களின் சிறப்பினைக் கூறுகின்றார். இதனை,
                                பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின்
                                வகைமை உணா;வார்ப் பெறின்” (குறள் - 709)
என்ற குறட்பாவின் வாயிலாக அறியலாம்.

உதிரம் தோன்றுதல்

                திண்ணனார் வேட்டையாடச் சென்ற ஆறாம் நாள் காலை ஊனமுதும், பூசனைப் பொருளும் கொண்டுவரும் வழியில் பலவகையான நிமித்தங்கள் வழியில் தென்பட்டன. உடனே இவ்வாறான பறவைகள் எதிர்ப்பட்டால் இரத்தப்பெருக்கினை உண்டாக்கும் என்பா;’ என்று எண்ணியவராய் ஈசனார்க்கு என்ன ஆயிற்றோ என்று அதிர்ந்து நெருங்கிச் சென்றார். இதனை,
                                மொய்த்த பல் சகுனம் எல்லாம்
                                                முறை முறை தீங்கு செய்ய
                                இத்தகு தீய புட்கள்
                                                ஈண்டமுன் உதிரம் காட்டும்” (பெரியபுராணம் : 817-2-3)
என்ற பாடலடிகளின் வாயிலாக அறியலாம். ஈசனார் சிவகோசாரியார்க்குத் திண்ணனார் பூண்ட அன்பினைக் காட்டும் வகையில் தம் கண்கள் ஒன்றனில் திடீர் என உதிரம் பாய்ந்து பெருகுமாறு இருந்தார். தூரத்தில் வந்து கொண்டிருந்த திண்ணனார் இதனைக் கண்டதும் விரைந்து ஓடிவந்தார். இதனை,
                                திண்ணனார் ரிவு காட்டத்
                                                திருநய னத்தில் ஒன்று
                                துண்ணென உதிரம் பாய
                                                இருந்தனர் தூரத் தேஅவ்” (பெரியபுராணம் : 818-2-3)
என்னும் அடிகள் தெளிவுறுத்துகிறது.

மூலிகை வார்த்தல்

                மருத்துவன் நோயாளியின் நோயை அறிகுறிகளால் அறிந்து அது வருவதன் காரணத்தை ஆராய்ந்து அது தீரும் முறையையும் தெளிந்து கவனமாக மருந்து தருதல் வேண்டும். இதனை,
                                நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
                                வாய்நாடி வாய்ப்பச் செயல்” (குறள் - 948)
என்று வள்ளுவா; கூறுகிறார். திண்ணனாரும் பெருகும் இரத்தத்தைத் தடுப்பதற்கு எத்தகைய செயல் செய்தால் இரத்தப்போக்கு நிற்கும் என்று எண்ணி, வேடர்களுக்கு நீண்ட அம்புகளால் உண்டாகும் புண்களைத் தீர்க்கும் மூலிகைகளைக் கொண்டு வரச்சென்றார். ரிய பச்சிலை மூலிகைகளைப் பறித்து மருந்தைப் பிசைந்து ஈசனாரின் திருவிழியில் அதன் சாற்றை வார்த்தார். பின்னும் இறைவனின் கண்ணில் இரத்தம் குறையாது ஒழுகியதைக் கண்டு, இத்தகு நிலைக்கு இனிசெய்ய வேண்டியது யாது? என்று ஆய்ந்த திண்ணனார், ஊனுக்கு ஊன் இட்டு உற்ற நோயைத் தீர்க்கலாம் என்று எண்ணினார். இதனை,
                               
மற்றவா; பிசைந்து வார்த்த
                                                மருந்தினால் திருக்கா ளத்திக்
                                கொற்றவா; கண்ணில் புண்ணீர்
                                                குறைபடாது இழியக் கண்டும்
                                இற்றையின் நிலைமைக்கு என்னோ              
இனிச்செயல் என்று பார்ப்பார்
                                உற்ற நோய் தீர்ப்பது ஊனுக்கு
                                                ஊனென்னும் உரைமுன் கண்டார்?” (பெரியபுராணம் : 826-1-4)
என்ற பாடலடிகளின் வாயிலாக அறியலாம்.

கண்மாற்று அறுவைசிகிச்சை

                இரத்தம் குறையாது ஒழுகியதைக் கண்டு இச்செயலுக்கு என் கண்ணை அம்பால் இடந்து அப்பினால் ஈசனார் கண்ணுக்கு இது தகுந்த மருந்தாகி இரத்தம் பெருகுவது நிற்கும்என்று தம் வலது கண்ணை அம்பு கொண்டு பெயா;த்து ஈசனாரின் வலது கண்ணில் அப்பினார். இவ்வாறு அப்பியதும், இரத்தப்பெருக்கு நின்றது. இதனை,
                                இதற்கின் என்கண் அம்பால்
                                                இடந்து அப்பின் எந்தை யார்கண்
                                அதற்கு இது மருந்தாய் புண்ணீர்
                                                நிற்கவும் அடுக்கும் என்று
                                மதா;த்தெழும் உள்ளத் தோடு
                                                மகிழ்ந்துமுன் னிருந்து தம்கண்
                                முதல்சரம் அடுத்து வாங்கி
                                                முதல்வா;தம் கண்ணில் அப்ப” (பெரியபுராணம் : 827-1-4)
என்ற பாடலடிகளின் வாயிலாக அறியலாம். ஈசன் மேலும், தன் அன்பாரின் அன்புப் பெருக்கத்தை வெளிக்காட்டும் வகையில் மற்றைக்கண்ணிலும் இரத்தம் பெருகி வழிகிறதே என்று இடது கண்ணையும் இடந்து எடுத்து இரத்தக் கசிவை நிறுத்துவேன் என்றார். இதனை,
                                புண்தரு குருதி நிற்க
                                                மற்றைக்கண் குருதி பொங்கி
                                மண்டும் மற்று இதனுக்கு அஞ்சேன்
                                                மருந்து கை கண்டேன் இன்னும்
                                உண்டொரு கண்அக் கண்ணை
                                                இடந்துஅப்பி ஒழிப்பேன் என்று” (பெரியபுராணம் : 830-2-4)
என்ற பாடலடிகளின் வாயிலாக அறியலாம். ஒருவருடைய கண்ணை மற்றொருவருக்குப் பொருந்தும் அறிவியல் பூர்வமான சிகிச்சை முறைக்கும் முறை இதன்மூலம் உணா;த்தப்படுகிறது. மேலும் கண்ணப்பநாயனாரே கண்தானத்திற்கும், கண்மாற்று அறுவை சிகிச்சை முறைக்கும் முன்னோடி என்பதையும் அறியலாம்.
                               

No comments: