கட்டுரை-7
குழந்தை வளர்ப்பு - ஓர் உளவியல் நோக்கு
செல்வி ஆ.கலைச்செல்வி,முனைவர் பட்ட ஆய்வாளர்,துமிழ்த்துறை,அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),சேலம் - 636 007.
ஒரு சமுதாயத்தின் முக்கிய தூண்களாக விளங்குபவர்கள் குழந்தைகளாவர். ஒரு குழந்தையானது, தன் பெற்றோரையும் தன் சுற்றுச்சூழலையும் கண்டே வளருகிறது. ஆதன் வழி அக்குழந்தையானது தனது பழக்க வழக்கங்களில் மேம்பாடு அல்லது தாழ்நிலை அடைகிறது. இந்நிலையை மு.வ. தம்முடையக் கட்டுரை நூலான ‘குழந்தை’ என்பதன் வாயிலாக அல்லி, அழகன் போன்ற குழந்தைப் பாத்திரங்களையும் மேலும் சில பாத்திரங்களையும் கடைத்து அதில் தானும் பங்கேற்று பிறருக்கு உணர்த்தியுள்ளார்.

உளவியல்- விளக்கம்
உளவியல் என்பது சைகி (ஞளுலுஊழநு) , லபகஸ் (டுடீழுடீளு) என்னும் இரு கிரேக்க வார்த்தைகள் கலந்து உருவாகிய சொல்லாகும். ‘சைகி’ என்பது ஆன்மா(உள்ளம்) என்பதையும் ‘லாகஸ்’ என்பது அதனை பற்றி ஆராய்தல் அல்லது படித்தல் என்பகையும் குறித்து , முடிவாக உளவியல் என்பது ‘ஆன்மாவைப்பற்றி ஆராய்வது ’ என்பதைக் குறுத்தது.
உளவியல் என்பதற்கு வில்லியம் மக்டூகல் ,""""மனிதனின் நடத்தை, நடத்தையின் காரணங்கள், நிபந்தனைகள் ஆகியவற்றைப் பற்றிப் படிப்பதாகும்.1 என்கிறார். மேலும் உளவியல் என்ற துறையைக் குறிக்கும் ‘யீளலஉhடிடடிபல’ என்ற சொல் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, இம்மை, மறுமை பற்றி சொல்லப்படுவனவெல்லாம் உண்மை
என்பதை ஏற்றுக் கொள்ளும் துறையாகவே அது கருதப்பட்டது""2 என்கின்றனர்.

குழந்தை உளவியல்
உளவியல் என்பது 24 வகைகளாக பகுக்கப்பட்டுள்ளது. அவற்றுள் குழந்தை உளவியல் இன்றியமையாதப் பங்கு வகுக்கிறது. குழந்தை உளவியல் என்பது குழந்தைகளின் வளர்சிசி, முன்னேற்றம், குழந்தைகளின் அகப்பண்புகள் , புறப்பண்புகள் இவற்றைத் தீர்மானிக்கும் காரணிகளான மரபி மற்றும் சூழல் ஆகியவற்றை விரிவாக விளக்கும்ம பாடப் பிரிவாகும். இவ்வகை உளவியல்,
i) குழந்தை வளர்ச்சி
ii) அதன் முன்னேற்றம்
iii) குழந்கைகளின் திறன்
ஏன்கிற வகையில் பிரிக்கப்பட்டுள்ளது.
i) குழந்தை வளர்ச்சி
ii) அதன் முன்னேற்றம்
iii) குழந்கைகளின் திறன்
ஏன்கிற வகையில் பிரிக்கப்பட்டுள்ளது.
1.குழந்தை வளர்ச்சி
குழந்தை வளர்சிசி என்பதில் அதன் உடல் வளர்ச்சியும் அடங்கும். குழந்தையிம் வளர்ச்சி நிலை உளவியல் நோக்கில் ‘மறுபிறப்பு’ என்ற சொல்லால் குறிக்கப்படுகிறது. பிறந்த குழந்தை நாளடைவில் வளர்ச்சி பெறுவதை இச்சொல் குறிக்கிறது. """"தசை உறுப்பிகளுக்கும் பேச்சு உறுப்புகளுக்கும் மனத்துணிபு இடும் ஆக்ஞைக்கு ஒத்து இயங்கும் ஒரு சக்தி இருக்கிறது. இந்தச் சக்தியையே நாம் உபயோகிக்கும் """"மறுபிறப்பு"" என்றச் சொல் குறிக்கிறது ""3 என்பது அறிஞர் கருத்து. இவ்வளர்ச்சிக்கு பெற்றோத்களே முன்னோடியாகவும் குழந்தைகளின் ஒழுக்கத்திற்கு விதையாகவும் திகழ்கிறார்கள்.
i) பெற்றோரே முன்னோடி
குழந்தையின் வளர்ச்சிநிலையை மு.வ. அல்லி, அழகன் ஆகிய குழந்தைகள் வழி விளக்குகிறார். இந்நிலையில் ஒன்று பிறரை பார்த்துக் கற்றுக் கொள்ளுதல் அல்லது போலச் செய்தல் ஆகும். பெற்றோர்களே இதற்கு மு உதாரணமாக விளங்குகிறார்கள். இதனை மு.வ. சிறு நிகழ்ச்சியின் மூலம் விளக்குகிறார். ஒரு முறை அல்லியின் மாமா, அல்லியிடம் விளையாட்டுக் கடிகாரம் ஒன்றைக் கொடுத்துச் சென்றார். அதனைக் கண்டு அழகன் அடம் பிடிக்கவே, அவள் தாய் அல்லி ஏமாற்றம் அடைவதையும் பொருட்படுத்தாமல் அதனை அழகனிடம் பறித்துக் கொடுத்தாள். ஆல்லி கடிகாரத்தைத் கொடுத்த மாட்டேன் என்றுக்கூறக் காரணம் அகனை பாதுகாப்பாக வைப்பதற்கே ஆகும். தன் தாய் நகைகளை பூட்டி சாவியைப் பாதுகாப்பதைப் பார்த்த அல்லி தன் கடிகாரத்தையும் பாதுகாக்க எண்ணுகிறாள். அதனாலேயே, மு.வ. """"அப்பாவையும் அம்மாவையும் பார்த்துக் கற்றுக் கொண்ட கல்வி, அல்லியின் மூளையில் இயற்கையாகவேப் பதிந்திருக்கிறது. அப்பாவைப் போல் தானும் நல்லப் பொருட்களைச் சேர்த்து வைக்க வேண்டுமென்ற ஆசை அவள் அறியாமல் வேர் கொண்டுள்ளது ""4 என அவள் மனநிலையை உரைக்கிறார்.
ii) ஒழுக்கத்தின் விதை
அல்லியின் தாய், அல்லி, அழகன் ஆகிய தன் இரு குழந்தைகளையும் கடிகார சம்பவத்தில் ஒரே போல நடத்தியிருக்க வேண்டும். இருவரையும் ஒருவர் போல் கருதினால், குழந்தைகற் ஓர் ஒழுங்கு நிலைக்கு வருவர் என்பதை, """" பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் அனைவரையும் சரிசமமாக நடத்தவேண்டும். குழந்தைகள் அனைவவையும் பாலபட்சமின்றி நியாயமாக நடத்தும் பெற்றோர்களால்தான் தங்களுடைய குழந்தைகளுக்கு ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கமுடியும் ""5 என்ற உளவியலாளர் வரிகள் மூலம் உணரலாம்.
2.முன்னேற்றம்
குழந்தைகள் ஐந்து ஆண்டுகளுக்குள் மூளையின் வளர்ச்சியின் வேகம் அதிகம். அவ்வயதுக்குள் குழந்தைகள் நன்கு சிந்திக்கும் திறனைப் பெற்று வளரவளர அத்திறனைத் தன் சுற்றுற்சூழல், தன்னைச் சார்ந்கோர் ஆகியோரிடமிருந்து பெற்றுக்கொள்கின்றனர். நிபுணர்கள் கணக்கின்படி, """"குழந்தைக்கு 4 வயதாக இருக்கும் போதே குழந்தை தன் ஐணூவில் 50சதவிகிதத்தை அடைந்து விடுகிறது. 8வயதில் 80சதவிகிதத்தையும் 13 வயதில் 92 சதவிகிதத்தையும் அடைந்து விடுகிறது. 17-19 வயதில் ஏறக்குறைய முழுமையான திறமைகள் வெளியாகிவிடுகின்றன அல்லது வெளியாக ஆரம்பித்துவிடுகின்றன ""6 என உரைக்கின்றனர். இம்முன்னேற்ற நிலையை மு.வ. ஒரு குறு நிகழ்ச்சி மூலம் விளக்குகிறார்.
ஒருநாள் அல்லியின் தாய் தண்ணீர் குவளையை வாய் வைத்து குடித்ததால் அது எச்சில் என்று அல்லியைக் கண்டித்தாள். மற்றொரு நாள் பொரிவிளங்காய் உருண்டைச்செய்வதற்காக வைத்திருந்த வேர்க்கடலையை அல்லியின் மாமன் மகன் வாயில் எடுத்து வைத்தான். ஆதனை அல்லி தடுத்தாள். ஆல்லியிம் தாய் அவன் சிறுகுழந்தை என்றுக் கூறி அல்லியைக் கண்டித்தாள். அதற்கு அல்லி, """"நான் குவளையை வாயில் வைத்தபடி தண்ணீர் குடித்தால் எச்சில் என்கின்றாயே, இவ்வளவு பெரிய பையந் வாயில் கடித்து உரிக்கிறானே, இதில் திண்பண்டம் செய்தார் எச்சிர் ஆகாதா? ""7 என உரைக்கிறாள். இப்படிபட்ட சில காரணங்களால் குழந்தைகளின் மூளை வளர்ச்சியின் முன்னேற்றத்தை, மு.வ. தனது உளவியல் அறிவின் மூலம் உணர்ந்து இதனை எழுதியுள்ளார். ஆதலால்தான், இம்முன்னேற்றம் குறித்து, """"குழந்தையாக இருக்கும்போது முதல் நான்கு ஐந்து ஆண்டுகளுக்குள் மூளை வளர்கிற வேகம் மிகுதி என்றும் அதன் பிறது வாழ்நாள் எல்லாம் வளரும் வளர்ச்சியும் அதற்கு ஈடாகாது ""8 என்கிறார்.

3.குழந்தைகளின் திறன்
குழந்தைகளின் திறனை, i. அகப்பண்பு ii. புறப்பண்பு ஆகிய இரு கண்ணோட்டங்களில் உளவியல் நோக்குகிறது.
குழந்தைகள் பெரும்பாலும் தான் செய்வதயே சரி என எண்ணும் அகப்பண்புக் கொண்டவர்கள். அதற்கு காரணம் அக்குழந்தை வளரும் சூழலே ஆகும். அழகனுக்கு ஒருமுறை அவனின் தாய் மோரில் தண்ணீர் கலந்துக் கொடுத்தாள். அழகன், தண்ணீரை மோரில் கலந்ததைப் பார்த்ததால் அதனை மறுத்து, வேறு மோர் கொடு என்று பிடிவாதம் செய்தான். இதற்கு காரணம் அக்குழந்தை மோரை ஒரு தனிப்பொருள் என கருதியதே ஆகும். இச்செயலுக்குக் குழந்தையை அடித்தல் என்பது தவறானச் செயலாகும். அதற்கு அக்குழந்தையின் மனதில் அவ்வெண்ணத்தை மாற்ற முயலாமல், அக்குழந்தையிடம் பெற்றோர்கள் தோற்றுவிடுதலே சிறந்த தீர்வாகும். இதனால் அக்குழந்தைக்கு வெற்றிபெற்ற மனநிலை ஏற்படும். குழந்தையும மன அழுத்தமின்றி மகிழ்ச்சியான மனநிலையுடன் இருக்கும். வளரவளர தன் தவநை உணரும் என மு.வ. உணர்த்துகிறார்.
இம்மாதிரியான அகப்பண்பே, புறப்பண்பாக வெளிப்படுத்துகிறது. குழந்தைகளிடம் பெற்றோர்களும் மற்றோர்களும் """"அதை எடு. இதை உடு"" என வேலைக்காரர்களுக்கு ஆணையிடுவதுபோல் வேலை வைத்தால் குழந்தைகளும் தம் மனத்தில் இவ்வெண்ணத்தைப் பதித்து, பிறரிடம் புறத்திலும் இதனைச் செயல்படுத்தும். பிறரைப் பார்த்து மேற்சொன்ன செயலைக் கற்ற குழந்தை, """"அம்மா! குடிக்கத் தண்ணீர் கொண்டு வா"" """"அக்கா! காலுக்குச் செருப்புப்போடு"" என்று எல்லோருக்கும் வேலை வைக்கத் தொடங்குகின்றன. மற்றவர்களை வேலை வாங்குவது இயற்கை என்று எண்ணுகின்றன. அவரவர்களின் கடமையை அவரவர்களே செய்ய வேண்டும் என்ற கடமையுணர்ச்சி இல்லாமல் போகிறது.""9 என்பதை மு.வ. வலியுறுத்துகிறார்.

முடிவுரை
ஊளவியல் என்பது மனம் சார்ந்தது. இதில் ஒன்றான குழந்தை உளவியல் வழி குழந்தைகளின் மனபோக்கு எவ்வாறு அமைந்துள்ளது என்பதை மு.வ. தம் கட்டுரை நூல்
வழி விளக்கியுள்ளார்.
சிறு சிறு நிகழ்வுகள் மூலமாகக் கூட குழந்தைகளின் அக, புறப் பண்புகள் வளர்ச்சியடைகின்றன என்பதும் விளக்கப்பட்டுள்ளது.
சுhன்றெண் விளக்கம்
1. முனைவர் அ.மீனாட்சி சுந்தரம், கல்வி உளவியல், ப. 3.
2. ழுடைநெசவ சுலடந, கூhந உடிnஉநயீவ டிக அiனே யீளலஉhடிடடிபல, யீ. 30.
3. மாரியோ எம்.மாண்டிசோரி, மாண்டிசோரி பேசுகிறேன் (சென்ஐ வானொலியில் ஆற்றிய சொற்பொழிவுகள்), ப. 16.
4. டாக்டர் மு.வ., குழந்தை, ப. 3.
5. பி.எஸ்.ஆர். ராவ், குழந்தை வளர்க்கும் கலை, ப.25.
6. ஜே.ஜே.துரைராஜ், விஞ்ஞான ரீதியான மாணவனை உருவாக்குவது எப்படி?, ப.8
7. டாக்டர் மு.வ., குழந்தை, ப.13.
8. மேலது, ப.42.
9. மேலது, ப. 60.

No comments:
Post a Comment