Thursday, 17 April 2014

பி.ஏ. தமிழ் – மூன்றாம் பருவம் -முதன்மைப்பாடம்,



அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),
சேலம் - 636 007.

II  பி.ஏ. தமிழ் - பாடத்திட்ட விளக்கம்
மூன்றாம் பருவம் - (2013 - 2014 கல்வியாண்டு முதல்)
முதன்மைப்பாடம் : தாள் 5 : இலக்கணம் 3
13UTL 05   Core - V
யாப்பருங்கலக்காரிகை

பாட நோக்கம் :
1.யாப்பிலக்கணம் கற்பித்தல்
2.பா வகைகளை அறிதல்
3.பா இனங்களை அறிதல்

மாணவர் பெறும் திறன்:
    1.அசை,சீர்,தளை,தொடைகளை அறிகிறான்.
    2.பா வகைகள், பாவினங்களை அறிகிறான்.

உள்ளடக்கம்

அலகு 1    :     உறுப்பியல்    -    எழுத்து, அசை, சீர்
அலகு 2    :     உறுப்பியல்    -    தளை, அடி,தொடை
அலகு 3    :     செய்யுளியல்    -    வெண்பா, ஆசிரியப்பா
அலகு     4    :     செய்யுளியல்    -    கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பா
அலகு 5    :     ஒழிபியல்

திட்டக்கட்டுரைகள் :
1.    செய்யுள் உறுப்புகள்
2.    பா வகைகள்
3.    பாவினங்கள்
4.    தளை வகைகள்

குழுச்செயல்பாடு :
1.    ஒரு செய்யுட் பகுதியைக் கொடுத்து அதில் உள்ள தளைகளை கண்டறிதல்
2.    வெண்பா முதலான எளிய பாடல்களை இயற்றச் செய்தல்

பாட நூல் :
1.    மே.வி.வேணுகோபால் (பதி.)    - யாப்பருங்கலக்காரிகை,
                             கழக வெளியீடு,
                              சென்னை.
பார்வை நூல்கள்:
1.    தண்டபாணி தேசிகர்,        - அறுவகை இலக்கணம்,
2.    புலவர் குழந்தை            - யாப்பதிகாரம்,
   தமிழ்மண் பதிப்பகம், சென்னை.

3.    டாக்டர் கு.முத்துராசன்(பதி)    - எளிய முறையில் யாப்பிலக்கணக்காரிகை,
   பாரி நிலையம்,
   சென்னை.
4.    கி.வா.ஜகந்நாதன்,            - நீங்களும் கவி பாடலாம்,
    மணிவாசகர் பதிப்பகம்,
    சென்னை.
5.    வசந்தா                  - யாப்பிலக்கண வினா விடை,
    பாரி நிலையம்,
    சென்னை.
இணைய முகவரிகள்:
1.   

3.      www.noolagam.com
4.      www.tamilpeper.net
5.      www.sangatham.com
-------------------------------------------------------------

பி.ஏ. தமிழ் - பாடத்திட்ட விளக்கம்
மூன்றாம் பருவம் - (2013 - 2014 கல்வியாண்டு முதல்)
முதன்மைப்பாடம் : தாள் 6 
சமயப்பாடல்களும் சிற்றிலக்கியங்களும் 13UTL 06 Core - VI
 
பாட நோக்கம் :
1.பல்வேறு சமயம் சார்ந்த பாடல்களை அறிதல்
2. இலக்கிய வளம், கற்பனைத் திறன் ஆகியனவற்றை அறிதல்
3. நீர்த்துப்போன பக்தி உணர்வை மீட்டெடுக்க முயற்சித்தல்
மாணவர் பெறும் திறன்:
    1. பல்வேறு சமயம் சார்ந்தக் கோட்பாடுகளை அறிகிறான்.
    2. தமிழ் இலக்கியத்தில் காணப்படும் இலக்கிய வளத்தினை அறிந்துகொள்வதோடு
                தமிழ்ச் சமூகத்தின்மீது பற்றும் மதிப்பும் பெருகுகிறது.

உள்ளடக்கம்
அலகு 1 :    
    1.திருஞான சம்பந்தர்            - திருநீற்றுப்பதிகம் (10 பாடல்கள்)
    2.மாணிக்கவாசகர்            - திருவெம்பாவை (20 பாடல்கள்)
    3.திருநாவுக்கரசர்            - கூற்றாயினவாறு (10 பாடல்கள்)

அலகு 2 :    
    1.பொய்கையாழ்வார்            - முதல் திருவந்தாதி ( 10 பாடல்கள்)
    2.பெரியாழ்வார்            - திருப்பல்லாண்டு (12 பாடல்கள்)
    3.திருப்பாணாழ்வார்            - அமலனாதிபிரான் (10 பாடல்கள்)

அலகு 3 :    
    1.திருமூலர்                - திருமந்திரம்
                           1) அறம் செய்வான் திறன் (10 பாடல்கள்)
                           2) அன்புடைமை (10 பாடல்கள்)
    2.வள்ளலார்                -  மரணமிலாப் பெருவாழ்வு
    ( முதல்15 பாடல்கள் )
    3.குணங்குடி மஸ்தான் சாகிபு        - எக்காலக்கண்ணி (17 கண்ணிகள்)

அலகு     4 :    
    1.முத்தொள்ளாயிரம்            - சேரன்    :  11 - 20 (10 பாடல்கள்)
   சோழன்    :  20 - 29 (10 பாடல்கள்)
                           பாண்டியன்     :  41 - 50 (10 பாடல்கள்)
    2.சிவப்பிரகாச சுவாமிகள்        - நெஞ்சுவிடு தூது.
    3. கலிங்கத்துப் பரணி            - காடு பாடியது
அலகு 5 :
    1.முக்கூடற்பள்ளு            - பண்ணைக்காரன் முதல் - ஏர்க்கால்கள்
                             வரை (54 - 74)
    2.மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்    - வருகைப்பருவம்
    3.குற்றாலக்குறவஞ்சி            - குறத்தி நாட்டுவளம் கூறுதல் (9பாடல்கள்)
திட்டக்கட்டுரைகள்:
1.    நாயன்மார்களின் பக்தி
2.    சிற்றிலக்கியத்தோற்றம்,வளர்ச்சி
3.    ஆழ்வார்களின் பக்தி
குழுச்செயல்பாடு :   
1.    நாயன்மார் வரலாற்றைக் கூறுதல்
2.    நாயன்மார் வாழ்ந்த ஊர்களுக்குச் செல்லுதல்
3.    பாடல் பெற்ற தலங்களைக் காணுதல்
பாட நூல்கள் :
1.    திருக்குற்றாலக்குறவஞ்சி, பாரிநிலையம், பிராட்வே, சென்னை - 108.
2.    பன்னிரு திருமுறைகள், வர்த்தமானன் பதிப்பகம், தி. நகர், சென்னை - 17.
3.    மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், முல்லை நிலையம், தி. நகர், சென்னை - 17.
4.    குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள், கழக வெளியீடு, சென்னை.
5.    திருவருட்பா, சாரதா பதிப்பகம், திருவல்லிக்கேணி, சென்னை - 5.
6.    முக்கூடற்பள்ளு, பாரிநிலையம், சென்னை.
7.    முத்தொள்ளாயிரம், முல்லை நிலையம், தி. நகர், சென்னை - 17.
8.    திருவாசகம், திருமகள் நிலையம், சென்னை.
9.    நாலாயிர திவ்யப்பிரபந்தம், ஆழ்வார்கள் ஆய்வுமையம், தி.நகர், சென்னை - 17.
10.    நெஞ்சுவிடுதூது, திருவாடுதுறை ஆதின வெளியீடு திருவாடுதுறை.
பார்வை நூல்கள்:
1.    டி.பி.சித்தலிங்கம்,  சைவ சமயத் தோற்றமும் வளர்ச்சியும், கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலம் வெளியீடு, தஞ்சாவூர்.
2.    சுவீரா ஜெயஸ்வால், வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும், சூஊக்ஷழ, சென்னை.
3.    வீ.அழகிரிசாமி    ,  தமிழக வரலாற்றில் சமயப்பூசல்,    காந்தி மீடியா சென்டர், காந்தி அருங்காட்சியகம், மதுரை. - 2
4.    இரா. மாதவன், தமிழில் தூது இலக்கியம், அன்னம் வெளியீடு, சிவகங்கை.
5.    திரு.வி.க., சைவ சமயசாரம், தமிழ்மண் பதிப்பகம், தியாகராய நகர், சென்னை.
6.    ந.சி. கந்தையா, தமிழர் சமயம் எது, தமிழ்மண் பதிப்பகம், சென்னை.
7.   மு. பொன்னுசாமி, தமிழ் நீதிஇலக்கிய வரலாறு,    தமிழ்ச் சிற்றிலக்கிய வரலாறு, பாரி
      நிலையம்,    சென்னை.
8. மயிலை.சீனிவேங்கடசாமி, சமணமும் பௌத்தமும், பௌத்தமும் தமிழும்,    கிறிஸ்துவமும் தமிழும், பாரிநிலையம், சென்னை.
இணைய முகவரிகள்:
1.  
1.        www.tamilheritage.org
2.       www.thehistoryofsrivaishnavam. weebly.com
3.       www.sivasiva.dk
4.      www.shaivam.org
www.tamilaaivu.com
-----------------------------------------------------------------------------

 பி.ஏ. தமிழ் - பாடத்திட்ட விளக்கம்
மூன்றாம் பருவம் - (2013 - 2014 கல்வியாண்டு முதல்)
சார்புப்பாடம் III : தாள் 3 
தமிழ் இலக்கிய இலக்கண வரலாறு - ஐ

13ATL 03
Allied Course - III


பாடநோக்கம் :
1.    மாணவர்கள் பொது அறிவினை அறிந்து கொள்கின்றனர்.
2.    அரசு பொதுத்தேர்வுகளில் வேலை வாய்ப்பு பெற வாய்ப்பாக உள்ளது.
மாணவர் பெறும் திறன் :
1.    மாணவர் தமிழ் இலக்கிய இலக்கண வரலாற்று அறிவைப்பெறுகின்றனர்.
2.    போட்டித்தேர்வுகளுக்குத் தயாராகின்றனர்.

உள்ளடக்கம்
அலகு 1 :    
    சங்க காலம் - முச்சங்கங்கள் - சங்கம் பற்றிய இலக்கிய சான்றுகள் -கல்வெட்டுச் சான்றுகள் - எட்டுத்தொகை - பத்துப்பாட்டு - சங்க காலம்.

அலகு 2 :    
    சங்க மருவிய காலம் - பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் - இரட்டைக் காப்பியங்கள் - திருமந்திரம்.

அலகு 3 :    
    பல்லவர் காலம் : சமயக்குரவர்கள் நால்வர் - பன்னிரு ஆழ்வார்கள் - முதலாழ்வார்கள் - ஆண்டாள் - பௌத்தர்கள் - சமணர்கள்.

அலகு     4 :    
    பல்லவர் காலம் : பெருங்கதை - முத்தொள்ளாயிரம் - பாரத வெண்பா - பல்லவர் கால சிற்றிலக்கியங்கள் - உரைநடை நூல்கள் - சமணர் இயற்றிய காப்பியங்கள் - பிற நூல்கள்.

அலகு 5 :    
    அகத்தியம் - இறையனார் களவியலுரை - தொல்காப்பியம் - திணைக்கோட்பாடுகள் - புறப்பொருள் வெண்பாமாலை - சங்க காலம் முதல் பல்லவர் காலம் வரையிலான இலக்கணங்கள் - நிகண்டுகள்.

திட்டக்கட்டுரைகள்:
1.    தமிழ் இலக்கிய வரலாறு
2.    தமிழ் இலக்கண வரலாறு

குழுச் செயல்பாடு :
1.    வினாடி - வினா வைத்தல்
2.    கலந்துரையாடல்

பாடநூல் :
    சி. பாலசுப்பிரமணியன்            தமிழ் இலக்கிய வரலாறு,
                        நறுமலர் பதிப்பகம்,
                        சென்னை - 29.               
பார்வை நூல்கள்:
    1. மு. வரதராசன்            தமிழ் இலக்கிய வரலாறு,
                        சாகித்திய அகாதெமி,
                        புதுதில்லி.
    2. மது. ச. விமலானந்தம்        தமிழ் இலக்கிய வரலாறு,
                        நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,
                        சென்னை.
    3. மு. அருணாச்சலம்            தமிழ் இலக்கிய வரலாறு,
                        அருண் பதிப்பகம்,
                        திருச்சி - 1.
    4. சோம. இளவரசு            தமிழ் இலக்கண வரலாறு,
                        மணிவாசகர் பதிப்பகம்,
                        சென்னை - 108.
இணைய முகவரிகள்:
1.   

2.       www.maduraiprojict.org
3.       www.noolagam.com
 ------------------------------------------------------
 பி.ஏ. தமிழ் - பாடத்திட்ட விளக்கம்
மூன்றாம் பருவம் - (2013 - 2014 கல்வியாண்டு முதல்)
13UNME1
General Knowledge and Current Affirs - I

Non Major Elective Course - I


பாட நோக்கம் : 
1.    மாணவர்களுக்குப் பொது அறிவைப் போதித்தல்
2.    மாணவர்களின் பல்துறை அறிவை வளர்த்தல்

மாணவர் பெறும் திறன்:
1.    மாணவர்கள் போட்டித்தேர்வில் கலந்து கொள்ளும் திறன் பெறுகின்றனர்
2.    மாணவர்கள் தம் பாடம் தவிர்த்த பிற பாடங்களிலும் ஆற்றல் பெறுகின்றனர்   

அலகு 1 :     இந்திய விடுதலைப்போராட்டம்
    இந்திய விடுதலைப்போராட்டம் - போராட்டங்களும் விளைவுகளும் - காந்தியுகம் - சத்யாகிரகம் - அஹிம்சை - ஒத்துழையாமை இயக்கம் - சைமன் கமிசன் - சட்ட மறுப்பு இயக்கம் - இர்வின் ஒப்பந்தம் - இரண்டாம் வட்ட மேசை மாநாடு - மூன்றாம் வட்டமேசை மாநாடு - கிரிப்ஸ் கமிசன் - வெள்ளையனே வெளியேறு இயக்கம் - இந்திய தேசிய இராணுவம் (ஐசூஹ) - இந்திய விடுதலை.

அலகு 2 :     இந்திய அரசியலமைப்பும் - தமிழ் இலக்கியமும்
    இந்திய அரசியலமைப்பு சட்டம் - முகவுரை - அடிப்படை உரிமைகள் - வழிகாட்டு நெறிமுறைகள் - அடிப்படை உரிமைகளுக்கும் வழிகாட்டு நெறிமுறைகளுக்குமுள்ள வேற்றுமைகள் - அடிப்படை கடமைகள் - தமிழ் இலக்கிய வகைகள் - இலக்கிய நூல்கள் - 20ம் நூற்றாண்டு தமிழறிஞர்களும் கவிஞர்களும்.

அலகு 3 :     அரசு உறுப்புகள்
    குடியரசு தலைவர் - தேர்தல் முறை - அதிகாரமும் கடமையும் - குடியரசு தலைவர் - துணை குடியரசு தலைவர் - தேர்தல் முறை - அமைச்சரவை - மாநில அவை - உச்சநீதி மன்றம் - ஆளுநர் -முதலமைச்சர் - மாநில அமைச்சரவை - சட்டப்பேரவை - சட்ட மேலவை.

அலகு     4 :      இந்திய புவியியல்
    இயற்கையமைப்பு - இமயமலை - கங்கைச்சமவெளி - தக்கணா பீடபூமி - கடற்கரைச்சமவெளி - தக்காண மலைத்தொடர் - தேசிய முக்கிய நதிகள் - அரபிக் கடலில் கலக்கும் நதிகள் - சிந்து, நர்மதா, தபதி - வங்காள விரிகுடாவில் கலக்கும் நதிகள் - கங்கை - யமுனா - மகாநதி - பிரம்மபுத்ரா - கோதாவரி - காவேரி - மண்வளம் - வண்டல் மண் - கரிசல் மண் - செம்மண் - பாலைவனம்.

அலகு 5 :     அடிப்படை அறிவியல்
    நியூட்டன் இயக்கவிதி - ஓம் விதி - மின்காந்த அலை குறித்த பாரடேவிதி - அணுவமைப்பு - கதிர்வீச்சின் பயன் - தாவர குடும்பம் - பாக்டீரியா - வைரஸ் - பாசி - பூஞ்சை - விலங்கு குடும்பம் - புரோட்டோசோவா - மெட்டாசோவா - சத்து உணவு வகைகள் - வரையறை - வகைப்பாடு - மாவுச்சத்து - புரதம் - கொழுப்பு - வைட்டமின் - பாறை வகைகள் - எரிமலை - படிகப்பாறைகள் - உலோகப்பாறைகள்.

திட்டக்கட்டுரைகள்:
1.    நடப்பு அரசியல் செய்திகள்
2.    நடப்பு அறிவியல் செய்திகள்
3.    இந்தியக் கல்வி முறை

குழுச் செயல்பாடு :
1.    தமிழகசட்ட மன்றத்தின் மாதிரி அமைப்பை நடத்துதல்
2.    பாராளுமன்ற மாதிரிக் கூட்டத்தை நடத்துதல்
3.    அறிவியல் செய்திகளைச்சேகரித்தல்

பார்வை நூல்கள்:
    1. மனோரமா 2009, 2010, மலையாள மனோரமா தமிழ் வெளியீடுகள்.
    2. சுரா பொதுஅறிவு நூல்கள், சுரா பதிப்பகம், சென்னை.
    3. சக்தி பொதுஅறிவு நூல்கள், சக்தி பப்ளிசிங்ஹவுஸ், சென்னை.

இணைய முகவரிகள்:
1.   
  1. www.gktoday.in
  2. www.gkduniya.com
  3. www.worldgeneralkowledge.com 
  4. --------------------------------------------------------


மூன்றாம் பருவம் - (2013 - 2014 கல்வியாண்டு முதல்)
(Skill Based Elective-1)அடித்தளத்திறன் விருப்பப்பாடம் - 1
சுற்றுலாவியல்
13SBE1

பாட நோக்கம் :
1 . சுற்றுலாவியலின் அடிப்படைக் கூறுகளையும் வளமிகு சுற்றுலா மையங்களையும்
   அறிதல்
    2. சுற்றுலா மையங்களை நேரில் கண்டு களிபேருவகை எய்துதல்
    3. உலகத்தின் உன்னத நிலையில் உள்ள ஒரு தொழிற்கல்வி சுற்றுலாவியல்
               என்பதை உணர்தல்
    4. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பரந்த பண்பாட்டுப் பாங்கினை அடைதல்.

மாணவர் பெறும் திறன்:
1 . சுற்றுலாவியலின் அடிப்படைக் கூறுகளையும் வளமிகு சுற்றுலா மையங்களையும்
   அறிதல்
    2. சுற்றுலா மையங்களை நேரில் கண்டு களிபேருவகை எய்துதல்
    3. உலகத்தின் உன்னத நிலையில் உள்ள ஒரு தொழிற்கல்வி சுற்றுலாவியல்
               என்பதை உணர்தல்
    4. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற பரந்த பண்பாட்டுப் பாங்கினை அடைதல்.
உள்ளடக்கம்
அலகு-1 :     சுற்றுலா ஓர் அறிமுகம்
    சுற்றுலா விளக்கம் - சுற்றுலா பயணி - வகைகள் - சுற்றுலாவைத் தூண்டும் காரணிகள் - சுற்றுலாத் துறையில் உள்ள தடைகள் - சுற்றுலாவுக்குரிய அடிப்படைக் கூறுகள் - உலக நாடுகள், இந்தியாவில் சுற்றுலா வளர்ச்சி - சமயப்பயணம் - மறுமலர்ச்சிக்காலம் - நீண்ட பயணங்கள் - தொழிற்புரட்சியும் சுற்றுலா வளர்ச்சியும் - இக்காலச் சுற்றுலா வளர்ச்சி - இரண்டாம் உலகப்போருக்குப் பின் - பயண முகவர்கள்.
அலகு-2 :     சுற்றுலா வளர்ச்சி
    உலகச்சுற்றுலா - சுற்றுலா வளர்ச்சி - இந்தியாவின் நிலப்பகுப்பு - கட்டடக்கலை - இசைக்கருவிகள் - உலகப்புகழ் பெற்ற நினைவுச்சின்னங்கள் - சுற்றுலாச் செய்தித் தொடர்பு அலுவலகங்கள் - சுற்றுலா அலுவலகங்களின் பணிகள் - சுற்றுலாத் துறையை மேம்படுத்துதல் - இந்தியாவின் பண்பாட்டுச் சுற்றுலாத் தளங்கள் - முக்கியமான சுற்றுலாத்தலங்கள்.
அலகு-3 :     சுற்றுலா - சமூக, பொருளாதாரம்
    சுற்றுலா வளர்ச்சிக் கழகம் - மாவட்டச் சுற்றுலா மையங்கள் - பல்கலைக்கழகங்கள் - நூலகங்கள் - கடற்கரைகள் - மலைகளும் கோடைக்குடியிருப்புகளும் - வன விலங்குகள் - முதமலை - களக்காடு வனவிலங்கு உய்விடம் - புலிகள் சரணாலயம் - பறவைகள் சரணாலயம் - விடுதிகள் - பன்னாட்டுப் பயணிகள் - சுற்றுலாவின் சமூகப் பொருளாதார   விளைவுகள்- பொருளியல்   விளைவு - உள்நாட்டு   விளைவு - தீமைகள் -
மணிலாத் தீர்மாணங்கள்.

அலகு-4 :     சுற்றுலாத் திட்டங்கள்
    சுற்றுலாப் பயணிகள் திட்டமிடல் - இன்பப் பொழுதுபோக்குப் பயணிகள் - வணிகப் பயணம் - சுற்றுலாவை மேம்படுத்துதல் - ஒருங்கிணைந்த திட்டம் - முன்னேறும் நாடுகளில் சுற்றுலா - மாநில அரசின் ஒத்துழைப்பு - காலம் - சுற்றுப்புறச் சூழல் - உலகச் சுற்றுலாக் கழகத்தின் சுற்றுப்புறச் சூழ்நிலை - நால்வகைத் திட்டங்கள் - மேம்பாட்டுத்திட்டத்தில் சந்தை ஆராய்ச்சியின் பங்கு - மேம்பாட்டிற்கான அமைப்பு முறைகள் - விளம்பரம் - சுற்றுலா விடுதிகள் -  விடுதிகளின் வரலாறு - விடுதிகளின் வகைகள் - இந்தியாவின் சிறப்பான விடுதிகள்.
அலகு- 5 :     சுற்றுலாவும் வணிகமும்
    சுற்றுலாக் கழகங்கள் - சுற்றுலா முகவர்கள் - போக்குவரத்தின் வகைகள் - பன்னாட்டு வானூர்தி நிறுவனம் - சுற்றுலாவின் வணிகச் சந்தைகள் - சுற்றுலாவின் வழிகாட்டிகள் - தமிழ் இலக்கியத்தின் பயண நூல்கள் - கல்வி, தொழில் நுட்பம் தொடர்பான பயணங்கள் - பயண இலக்கிய வகைகள் - ஆற்றுப்பபடையும் பயண நூல்களும்.

திட்டக்கட்டுரைகள்:
    1.சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள்
    2.சேலம் மாவட்ட வழிபாட்டுத் தலங்கள்
    3. சேலம் மாவட்டத்தைச்சுற்றியுள்ள மலைவாசல் தலங்கள்
குழுச் செயல்பாடு :
    1.குழுக்களை வரையறுத்து ஆலயங்களைக் கண்டு வருதல்
    2.அருங்காட்சியகத்திற்குச் சென்று வருதல்
பாடநூல் :
    முனைவர் ச.ஈசுவரன்    -     சுற்றுலாவியல்,
                    பாவை பப்ளிகேஷன்ஸ்,
                    142, ஜானி சான்கான் சாலை,
                    இராயப்பேட்டை,
                    சென்னை - 14
பார்வை நூல்கள்:
    1. வெ.கிருட்டிணசாமி        - சுற்றுலா வளர்ச்சி,
                        மணிவாசகர் பதிப்பகம்,
                        13/7,சிங்கர் தெரு, பாரிமுனை,
                        சென்னை - 600 108
    2. நெ.து.சுந்தரவடிவேலு    - அங்கும் இங்கும்
    3. ரா.பி.சேதுப்பிள்ளை        - ஊரும் பேரும்

இணைய முகவரிகள்
1. www.tourism.gov.in
            2. www.keralatourism.org
            3. tamilnadutourism.org
            4. www.ttdconline.com





-

No comments: