தமிழ் இலக்கியங்களில் அறிவியல்
பெ.சுமதி > முனைவா;பட்ட ஆய்வாளா; (பகுதிநேரம்) >
தமிழ்த்துறை >அரசு கலைக்கல்லூhp (தன்னாட்சி) >சேலம் - 7.
முன்னுரை
எல்லாப்
பொருளும் இதன்பால் உள்ள தமிழ்மொழி முன்னைப் பழமைக்கும் பழமையானது; பின்னைப் புதுமைக்கும் புதுமையானது.
தமிழ் இலக்கியமும் அறிவியலும் நெருங்கிய
தொடர;படையவை. இலக்கியம் சிந்திக்கத் தூண்டுகிறது. அறிவியல் சிந்தனைகளின் உண்;மைகளைக் கண்டறிந்து நடைமுறைப்படுத்துகிறது.
பழந்தமிழரின் இலக்கியங்கள் அணு தொடங்கி அண்டம் வரை பாடுகின்றன > அனுபவத்தோடு அறிவியலையும்
கலந்து சிந்திக்கத் தூண்டுகின்றன.
அணுவைத்துளைத்து
ஏழ்கடலைப் புகட்டி
குறுகத்
தரித்த குறள்
எனத் திருக்குறளின் பெருமையை ஔவையார; புகழ்ந்துள்ளார;. கண்ணுக்குப் புலப்படாத அணுவைப்பிளக்க
முடியும் என்ற ஔவையார; வாக்கு இன்று சாத்தியமாகியுள்ளது. அன்றைய
தமிழரின் அறிவியல் வெளிப்பாட்டைப் பரிபாடலில் காணலாம். மேகமானது கடலில் உள்ள
நீரை முகந்துகொண்டு வந்து ஊழி முடிவின்கண் மூழ்கடிக்க முயன்றது போல மழை பெய்தது என்ற
கூற்று இதை மெய்ப்பிக்கிறது.
அறம்
உரைப்பதிலே தமிழ் இலக்கியங்களுக்கு நிகர; தமிழ் இலக்கியங்களே. ஆயின் அந்த அறத்தின் பின் >
இன்று அறிவியலாளர;கள் உரைக்கும் அறிவியல் உண்மைகள் அடங்கியுள்ளன. தமிழர;கள் மாபெரும் அறிஞர;கள் > அறிவியலாளர;கள் > மனநலம் > உடல்நலம் > உண்ணும் உணவு > உணவின் அளவு > உறக்கம் போன்ற அனைத்தையும்
பழந்தமிழ் இலக்கியம் உரைக்கின்றது.
வைகறைத்
துயிலெழு (ஆத்திச்சூடி பா.எண்: 106)
நோய்க்கு
இடங்கொடேல் ( மேலது > பா.எண்: 75 )
உண்டி
சுருங்குதல் பெண்டிற்கு அழகு
(கொன்றை வேந்தன் > பா.எண்: 5)
உயிரியலுக்குத் தேவையான உணவுப்பொருளைத்
தொல்காப்பியர; கருப்பொருள் என்கிறார;. ஒவ்வொரு திணையிலும் ஒவ்வொரு வகையான உணவுமுறையினைக்
கையாண்டுள்ளனர;. இதனை அறிவியல்முறைப்படி ஆய்ந்தால் >
புவியியல் >
பொருளாதாரம் >
சமயம் > வழக்கங்கள்
ஆகிய நிலையில் அமைந்துள்ளது புலனாகும்.
அப்பம் இட்டு அஃகுல்லியியென
செப்பிய
எல்லாம் சிற்றுண்டி ( பிங். 1109)
எனப் பிங்கலந்;தை நிகண்டு சிற்றுண்டி செய்து
உண்டதை உரைக்கிறது.
பழந்தமிழ் நாட்டில் நூல் நூற்றலும்
ஆடை நெய்தலும் மிக மிக முக்கியத் தொழிலாக நடைபெற்று வந்தது. பாம்பின் மேல்தோல் போன்றும் மூங்கிலின் உட்புறத்தே உள்ள மெல்லிய தோல் போன்றும்
மிக நுண்மையானதாகவும் பு+ வேலைப்பாட்டுடனும்
உள்ள ஆடைகள் நெய்யப்பெற்றதைப் புறநானூறு விளக்குகிறது. இதனை >
பாம்புரி யன்ன வடிவின காம்பின்
கழைபடு
சொலியின் இழையணி வாரா (புறம். 383)
என்ற
பாடலால் அறியலாம்.
அறிவியல் தொழில் நுட்பத்திற்கு அடிப்படையாக
விளங்குவது கணிதம். பழந்தமிழ் நூல்களில் காணப்படும் கணி > கணியன் > கீழ்க்கணக்கு > மேல்கணக்கு முதலான இலக்கியச்
சொற்களே பழந்தமிழரின் கணித அறிவின் பதிவுகளாகும்.
பரந்துபட்ட பாடுபொருள் கொண்ட தொல்காப்பியத்தின்
எண்ணுப்பெயர;கள் > எண்ணுக்குறிப்பெயர;கள் > எண்ணியற்பெயர;கள் > எண்ணுத்திணை விரவுப்பெயர;கள் > எண்ணிடைச் சொற்கள். அளவைப்பெயர;கள் ஆகியவை தொல்காப்பியரின் அறிவியல் சிந்தனைக்குச்சான்றாகும்.
உண்பது நாழி உடுப்பது இரண்டே ( புறம். 189 )
கோடானு
கோடி கொடுப்பினும் தன்னுடையநா
கோடாமை
கோடிபெறும்;. (விவேக சிந்தாமணி)
பல்;லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பலகோடி
நூறாயிரம்
(நாலாயிர திவ்விய பிரபந்தம் - பொpயாழ்வார; திருமொழி)
இவை எண்ணிக்கை உணர;த்தும் மேலும் சில சான்றுகளாகும்.
வினாக்கேட்பதும் விடை அளிப்பதுமே
தொல்காப்பியரின் அறிவியல் சிந்தனைக்குச் சான்று. அறுவகை வினா > எண்வகை விடை அமைப்பை >
செப்பும் வினாவும் வழாஅல் ஓம்பல் ( தொல். சொல். 496 )
வினாவும் செப்பே வினா எதிர; வரினே ( தொல். சொல். 497 )
என்று தொல்காப்பியர; விளக்கியுள்ளார;.
இன்றைய அறிவியலாளர;கள் கூறும் > அதிர;வெண் ஸ்ரீ அதிர;வு ஃ காலம் என்ற கணக்கு முறையை அன்றே சீவகசிந்தாமணி ஆராய்ந்து கூறியுள்ளது.
நீண்டகாலம் நீரிலே ஊரிய மரத்திலும் > நீரின்றி வற்றிய மரத்திலும்
செய்த வீணையில் இசை எழுப்ப இயலாது. சிறந்த தட்ப வெப்பத்தில் நன்கு வளர;ந்த மரத்தில் செய்யப்படும்
வீணையே இன்னிசை எழுப்ப வல்லது. மரத்தின் ஈரத்தன்மைக்கு ஏற்ப அதில் மோதும் ஒலி அலைகளின்
அதிர;வெண் மாற்றமடைகிறது. இந்த அதிர;வெண் பாடகரின் குரலோடு சமச்சீராக அமையுமானால் குரல்வளம் நன்றாக அமைகிறது. அதிர;வெண் மாறினால் குரல்வளம் நன்றாக
அமைவதில்லை என்பது திருத்தக்கத்தேவரின் அறிவியல் சிந்தனை ஆகும்.
சிலப்பதிகார அரங்கேற்று காதையில் மாதவி ஆடிய நடன அரங்கத்தின் நீளம் > அகலம் > உயரம் ஆகியவற்றை முறையே எட்டுக்கோல் > ஏழுகோல் > ஒருகோல் எனக் கூறியுள்ளமை இளங்கோவடிகளை அறிவியல் ஆராய்ச்சியாளரென நிறுவுகின்றது.
காலத்தைக்
கணிப்பதில் தமிழர;கள் மிகவும் சிறப்புற்றிருந்தனர;. இன்றைய அறிவியல் சாதனங்களின் துணையில்லாமலே பன்னிரு மாதங்களை ஆறு பெரும்பொழுதுகளாகவும்
ஒரு நாளை ஆறு சிறு பொழுதுகளாகவும் பகுத்துள்ளனர;.
கண் இமை நொடி என அவ்வே மாத்திரை
( தொல். எழுத்து. 7)
என்றார; தொல்காப்பியர;.
போரில் வெட்டுண்ட உடலைச் சரிசெய்த நிலையைப் பதிற்றுப்பத்து (42: 2-6) பாடல் விளக்குவது போல பெரியபுராணம் கண் அறுவை சிகிச்சைப் பற்றி விளக்குகிறது.
இதற்கினி
என்கண் அம்பால் இழந்தபின் எந்தையர;கண்
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
முதற்சரமடுத்து
வாங்கி முதல்வர;தங் கண்ணில் அப்ப
(பெரிய
புராணம்-2)
என்று பார;வையற்றோர;க்கு அறுவை சிகிச்சையால் பிறரது கண் பொருத்தப்படும் மருத்துவ
அறிவை அன்றே சேக்கிழார; நிகழ்த்தியுள்ளார;.
உலகமானது நிலம் > நீர; > தீ > வளி > விசும்பு என்னும் பஞ்ச பு+தத்தால் உருப்பெற்றுள்ளது.இவ்வண்டப்பரப்பையும் அதன்மீது அமைந்துள்ள கோள்களையும் தமிழ் இலக்கியங்கள் விரிவாகப் பேசுகின்றன.
அண்டப்
பகுதியின் உண்டைப்பிறக்கம்
-- -
- - - - - - - - - - - - - - - -
நூற்ழெற
கோடியின் மேற்பட விரிந்தன
என்ற திருவாசக
அடிகள் வானியல் பெருவெடிப்புக் கொள்கையின்படி இப்பேரண்டம் விரிவடைந்து நிற்பதை
விளக்குகிறது.
வலவன் ஏறா வான ஊர;தி ( புறம். 27)
தீம்பிழி எந்திரம் பத்தல் வருந்த (பதிற்றுப்பத்து)
அந்தக் கேணியும் எந்திரக் கிணறும் (பெருங்கதை)
ஓர; அணுவைச் சதக்கூறிட்ட கோணினும் உளனே (கம்பராமாயணம்)
நெடுங்கடலும் தன்னீர;மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின் (திருக்குறள் -17)
உடம்பார; அழியின் உயிரார; அழிவர; (திருமூலர;)
மானுடப் பிறப்பின் மாத உதிரத்து
ஈனமில் கிருமி செருவினில் பிழைக்கும் (திருவாசகம்)
போன்ற சான்றுகள் பழந்தமிழரின் விண்ணியல் > பொறியியல் > கனிமவியல் > அசைவியல் > நீரியல் > மருத்துவம் > கருவியியல் முதலிய அறிவியல் கூறுகளை நன்கு உணர;த்துகின்றன. இன்றைய அறிவியல் அறிஞர;கள் இலக்கிய அறிவுடன் அவற்றை ஆராய்ந்தால் மேலும் பல அரிய அறிவியல் கண்டுபிடிப்புகளைத் தமிழுலகம் பெற ஏதுவாகும்.
முடிவுகள்
இதன்வழி தமிழன் அறிவியல் முன்னோடி என்பது பெறப்படுகிறது.
தமிழா;களின் எல்லாவித செயலையும்
அறிவியல் பாh;வையோடு பாh;த்திருந்த தன்மையை அறியமுடிகிறது.
துணைநின்ற நூல்கள்
1.ஆறு. இராமநாதன்
(ப.ஆ), வாழும் மரபுகள், தன்னனானே
பதிப்பகம், 2001.
2.துளசி. இராமசாமி, நாட்டுப்புறத் தெய்வங்கள், விழிகள் பதிப்பகம், 2002.
3.துரைசாமிப்பிள்ளை, ஒளவை. சு. (பதிப்பும் உரையும்).
1978 (2ஆம் பதிப்பு). ஐங்குறுநூறு மூலமும்
விளக்கவுரையும், அண்ணாமலை நகர்: அண்ணாமலைப்
பல்கலைக்கழகம்.
4.
துரைசாமிப்பிள்ளை, ஒளவை. சு. (பதிப்பும் உரையும்). 1949. பதிற்றுப்பத்து மூலமும் விளக்கவுரையும், அண்ணாமலை நகர்: அண்ணாமலைப் பல்கலைக்கழகம்.
5சாமிநாதையர், உ. வே. (ப.ஆ.) 1986 (நிழற்படப் பதிப்பு).
பத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும், தஞ்சாவூர்:
தமிழ்ப் பல்கலைக்கழகம்.
6 சரவணன், ப. (பதிப்பும் உரையும்). 2008.
இளங்கோவடிகள்
இயற்றிய சிலப்பதிகாரம் மூலமும் உரையும், சென்னை: சந்தியா பதிப்பகம்.
No comments:
Post a Comment