Thursday, 5 November 2015

நன்னூல் -எழுத்து 4



71.விகுதி பற்றிய சூத்திரத்தில் அன்விகுதி இரண்டு முறை வருவது ஏன்?
அன்என்னும் விகுதி (i) ஆண்பால் படர்க்கை வினைமுற்று விகுதிகள் (ii) தன்மை ஒருமை வினை விகுதிகள் ஆகிய இரண்டு இடங்களில்  வெவ்வேறு பொருளை உணர்த்தி வருகிறது. எனவே சூத்திரத்தில் இவற்றை வேறுபடுத்த 2 முறை வந்தது.
72.து, டு, று எவ்வெவ் வினைகளுக்கு வினையாகும்?
து, டு, று என்னும் விகுதிகள் இரண்டு வினைகளுக்கு வரும். அவை,i)    ஒன்றன்பால் படர்கை வினை விகுதிகள்                                                                               ii)  தன்மை ஒருமை வினை விகுதிகள். ஆகிய இரு வினைகளில் வரும்.
73.பெயர் இடைநிலை காணும் முறை யாது?
பெயரிலுள்ள பகுதியையும், விகுதியையும் பிரித்து இடையில் நின்றதை வினையாலனையும் பெயர்  அல்லாத பெயர்களுக்கு இடைநிலை என்று சொல்லுவர். (உ.ம்) அறிஞன்-அறி+ஞ்+அன் (ஞ்-இடைநிலை)
இன்இடைநிலை எவ்வெவ்வாறு வரும்?
இடைநிலை
பகுதிக்கும், விகுதிக்கும் இடையில் புணர்வது இடைநிலை எனப்படும்.
த், ட், ற், இன் ஆகிய இடைநிலைகள் இறந்த கால இடைநிலை ஆகும்.
இன்இடைநிலை கடை குறைந்து வரும் (எ.கா) எஞ்சியது
இன்இடைநிலை முதல் குறைந்து வரும் (எ.கா) போனது.
74. நடவான், படித்தான் பகுபத உறுப்பு காண்க?
நடவான்=நட+வ்+ஆன்
நட  பகுதி
வ் - எதிர்கால இடைநிலை
ஆன் -  ஆண்பால் படர்க்கை வினை விகுதி
படித்தான்= படி+த்+த்+ஆன்
படி பகுதி
த் - சந்தி
த் - இறந்தகால இடைநிலை
ஆன் - ஆண்பால் படர்க்கை வினை விகுதி
75. தமிழிலும், சமஸ்கிருதத்திலும் காணப்படும் பொது எழுத்துக்கள் யாவை?
உயிர் எழுத்துக்கள் பத்தும் மெய்யெழுத்து பதினைந்து ஆகிய இருபத்தைந்து எழுத்துக்களும் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் காணப்படும்.பொது எழுத்துக்கள். (, , , , , , , , , , , , , , , , , , , , , , , , , , ள) ஆகியவை.

76. ‘குஎன்னும் சொல் புணரும் வகை யாது?
வேற்றுமைப் புணர்ச்சியான குஎன்னும் உருபு ஆனது மறைந்தோ அல்து விரிந்தோ புணரும்.
(உ.ம்) கொற்றன் மகன் + (கு) = கொற்றனுக்கு மகன்
77. உடம்படு மெய் என்றால் என்ன?
நிலைமொழி ஈற்றிலும் வருமொழி முதலிலும்  உயிரெழுத்துக்கள் இருப்பின் இவை புணரும் புணர்ச்சிக்கு உயிர்முன் உயிர் புணர்ச்சி எனப் பெயர். பொதுவாக உயிரும் உயிரும் இணைவது இல்லை. உடன்படாத இவற்றை உடன்படுத்தியதால் அம்மெய்களுக்கு உடன்படுமெய் எனப் பெயர். இம் மெய் அவ்வுயிர்களுக்கு உடம்பாக இருந்து பொருள் தருவதால் இச்சேர்க்கையை உடம்படுமெய் என்கிறோம். உடம்படு மெய்களாக யகரமும், வகரமும் தோன்றும்.
78. தொழிற்பெயர் விகுதிகள் யாவை?
தல், அல், அம், , கை, வை, கு, பு, , தி, சி, உள், காடு, பாடு, அரவு, ஆனை, மை, து, என்னும் பத்தொன்பதும் பிறவும் ஆகும்.
(உ.ம்.) எடுத்தல், காணல், நடவாமை, வாராணை
10. பெயர் விகுதிகள் யாவை?
அன், , மார், தை, மான் ஆகியவை பெயர் விகுதிகள் ஆகும்.
(உ.ம்) அன்-முருகன்
இ-பொன்னி
மார்-தேவிமார்
தை-தந்தை
மான்-கோமான்
உறங்கினான், நடக்கின்றான் பகுபத உறுப்புகள் யாவை?
உறங்கினான் உற+க்(ங்)+இன்+ஆன்
உற-பகுதி
க்-சந்தி
ங்-ஆனது விகாரம்
இன்-இறந்தகால இடைநிலை
ஆன்-ஆன்பால் படர்க்கை வினைவிகுதி
நடக்கின்றான் நட+க்+கின்று+ஆன்
நட-பகுதி
க்-சந்தி
கின்று-நிகழ்கால இடைநிலை
ஆன்-ஆண்பால் படர்கை வினை விகுதி

79தமிழில் திரிந்த சில சமஸ்கிருத எழுத்து எழுதுக?

1)ரிஷிபம்
2)ஷங்கரா
3)விஷம்
4)காவ்யம்
5)பக்கஜம்
6)ஸ்தூலம்
7)தேசம்
8)மாலா
9)ஹோமம்
10)ஹரண்
11)மருக
12)பத்மம்

80. அ+அணி, அ+இடை எவ்வாறு புணரும்?
அ+அணி = அவ்வணி.
, , உ என்னும் சுட்டின் முன் உயிரும் யகரமும் வர வகரம்தோன்றும்.
அ+இடை = ஆயிடை
செய்யுளில் சுட்டு நீண்டு யகரம்தோன்றியது.


நன்னூல் -எழுத்ததிகாரம் வினாவிடையில்
81. மீ என்ற சொல் எவ்வாறு புணரும்?
மீ என்னும் சொல்லின் முன் வல்லினம் வரின் வல்லினமும் மிகும் மெல்லினம் மிகும்.
i)மீ+கூற்று= மீக்கூற்று  வல்லினம் மிகுந்தது
ii)மீ+தோல்= மீந்தோல்  மெல்லினம் மிகுந்தது
82.மலையாட்டி பெயர் இடைநிலைக் காண்?
மலையாட்டி = மலையாள்+த்+இ, த் - இடைநிலை
83. தொகைநிலைத் தொடர் மூன்று கூறுக?
வினைத்தொகை, அன்மொழித்தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித் தொகை இவை ஐந்தும் தொகைநிலைத் தொகை ஆகும்.
(உ.ம்) கொல்யானை, கருங்குவளை, மதிமுகம்
84. சுரையாழ அம்மி மிதப்ப எத்தொடருக்கு உ.ம்?
சுரையாழ அம்மி மிதப்ப தழா தொடருக்கு உதாரணம் ஆகும்.
85. குறுக்கல் விகாரம் என்றால் என்ன?
நெடில் எழுத்துக்களை குறிலெழுத்துக்களாக பயன்படுத்துவது குறுக்கல் விகாரம் எனப்படும்.
(உ.ம்) தீயேன்-தியேன், தீயேன் என்னும் சொல் தியேன் எனக் குறுகி நின்றது.
86. மரப்பெயர்கள் எவ்வாறு புணரும்?
உயிரை இறுதியாக உடைய சில மரப்பெயர்களின் முன் வேற்றுமைப் புணர்ச்சியில் வருமொழியில் வல்லினம் வந்தால் பொது விதிப்படி வல்லினம் மிகாமல் மெல்லினம் மிகும்.
உ.ம்) விள+காய்  விளங்காய்
மா+பழம் - மாம்பழம்
87. வினாசுட்டின் முன் நாற்கணம் புணரும் முறை பற்றி எழுதுக?
(i) ‘என்னும் வினா முன் அ, , உ என்னும் மூன்று சுட்டெழுத்துக்களின் முன்னும் உயிரும் யகரமும் வரின் வகரமெய் தோன்றும்.
(ii) யகரம் அல்லாத மெய்கள் வரின் அவ்வாறு வந்த மெய்கள் மிகும்.
(iii) செய்யுளில் சுட்டெழுத்து நீண்ட விடத்து யகரம் தோன்றும்.
(உ.ம்) (i) எ+அணி = எவ்வணி (வினா முன் உயிரும் யகரமும் வரவ கரம் தோன்றியது)
எ+யானை = எவ்யானை
(ii) எ+குதிரை=எக்குதிரை (வினாவின் முன்னும் சுட்டின் முன்னும் பிற மெய்கண் வர அவ்வந்த மெய் தோன்றின)
எ+சிங்கம் = எச்சிங்கம்
(iii) அ+இடை = ஆயிடை (செய்யுளில் சுட்டு நீண்டு யகரம் தோன்றியது)
88. உயிர்வரின் உக்குறள் மெய்விட்டோடும் விளக்குக?
குற்றியலுகரத்தின் முன் வருமொழி முதலில் உயிர் வந்தால் குற்றியலுகரம், தான் ஏறிய மெய்யை விட்டுக் கெடும்.
(உ.ம்) நாகு+அரிது = நாகரிது
89. பலசில சொற்கள் புணரும் முறை யாது?
பலசில என்னும் சொற்கள் தமக்கு முன்னே தாம் வருமாயின் i) இயல்பாதலும் ii) மிகுதலும் iii) நிலைமொழி இறுதி அகரம் கெட லகம் றகரமாக திரியும் iஎ) அகரம் நிற்றலும் நீங்கலும் உளவாம்.
(உ.ம்)
(i) பல+பல=பலபல   சில+சில=சிலசில (வல்லினம் இயல்பாயிற்று)
(ii) பல+பல=பலப்பல  சில+சில=சிலச்சில (வல்லினம் மிகுந்தது)
(iii) பல+பல=பற்பல   சில+சில=சிற்சில (அகரம் கெட லகரம் றகரமாயிற்று)
(iஎ) பலகலை=பல்கலை (அகரம் நிற்றலும் நீக்கலும் வளவாம்)
90. புளி என்ற சொல் எவ்வாறு புணரும்?

புளி என்னும் சொல் புளிய மரம், புளியம் பழம், புளி சுவை ஆகிய மூன்று பொருளை தரும். இவற்றுள் சுவையை உணர்த்தும் புளி என்னும் சொல்லுக்கு முன் வல்லினம் மிகுதலே அன்றி அதற்கினமான மெல்லினமும் மிகும்.
(உ.ம்) புளி+கறி=புளிங்கறி
புளி+சோறு=புளிஞ்சோறு
புளி+தயிர்=புளிந்தயிர்
91. சோறு+வளம் எவ்வாறு புணரும்?
, ற வரும் குற்றியலுகரங்கள் வருமொழி எதுவரினும் வந்தமெய் மிகும்.
சோறு+வளம்= சோற்றுவளம்
92. ஒன்று+ஆயிரம் எவ்வாறு புணரும்?
ஒன்று+ஆயிரம்= ஓராயிரம்.இறுதியில் நின்ற உயிர்மெய் கெட்டு நின்ற ஒன்று என்னும் எண்ணிக்கை னகரம், ரகர மெய்யாகித் திரியும்.
93. ‘நான்குபுணர்ச்சி விதி கூறு?
இறுதி உயிர்மெய் குகெட்டு விடும் னகர மெய்யானது. றகரமாகவும், லகரமாகவும் மாறும்.
(உ.ம்)நான்கு+அடி=நாலடிநான்கு+பத்து=நாற்பது
94. ஒன்று முதல் எட்டு நிலைமொழியாக பத்து வருமொழி வரிண் புணரும் முறை யாது?
ஒன்று முதல் எட்டு வரை உள்ள எண்களின் முன்வரும் பத்து என்னும் எண்ணின் நடுவில் நின்ற i) தகரமெய் கெடுதலும், ii) தகரம் கெட்ட இடத்தில் ஆய்தம் தோன்றலும் எனும் இரு விதிகளையும் பத்து என்பது பொருந்தும் என்று சொல்லுவர்.
ஒன்று+பத்து =ஒருபது    ஒருபஃது
இரண்டு+பத்து = இருபது    இருபஃது
மூன்று+பத்து = முப்பது   முப்பஃது
நான்கு+பத்து = நாற்பது  நாற்பஃது
ஐந்து+பத்து = ஐம்பது   ஐம்பஃது
ஆறு+பத்து = அறுபது  அறுபஃது
ஏழு+பத்து = எழுபது    எழுபஃது
எட்டு+பத்து = எண்பது  எண்பஃது
95. வண்டுகால், வட்டுக்கால்  எது சரி?

வண்டுகால், வட்டுக்கால் இரண்டுமே சரி. வண்டுகால் என்பதில் வின் இனமெய் மிகும். வட்டுக்கால் என்பதில் வின் மெய் மிகும். எனவே இரண்டும் சரி.
96. பண்டு+காலம் எவ்வாறு புணரும்?
பண்டு+காலம் = பண்டைக்காலம்.ஐகாரச்சாரியை இறுதியில் பெற்று வருகின்ற குற்றியலுகரச் சொற்களும் வருவன மென்றொடர்க் குற்றியலுகரங்கள் ஆகும்.
97. மேற்கு+திசை எவ்வாறு புணரும்?
மேற்கு+திசை = மேல்திசை
உயிர்மெய் கெட, றகரம் லகரமாய்த் திரிந்தது.
98. தெரிநிலை வினைப்பெயரெச்ச விகுதிகள் எத்தனை சில கூறு?
, , ய், பு, , , என, , இன், ஆல், கால், ஏல், எனின், ஆயின், ஏனும், கு, இய, இயர், வான், பான், பாக்கு, கடை, வழி, இடத்து உம், மல், மை, மே என்னும் இருபத்தெட்டு தெரிநிலை வினைப்பெயரெச்ச விகுதிகள் உள்ளன.
99. மூன்று, ஆறு, ஏழு எவ்வகையில் ஒற்றுமையுடையன?
மூன்று, ஆறு, ஏழு ஆகியவை அனைத்தும் முதல் குறையும் பெற்று வருகிறது. மூன்று+கண்=முக்கண்
100. ஐந்து+எடை எவ்வாறு புணரும்?

ஐந்து+எடை= ஐந் எடை (உயிர்மெய் கெட்டது)
ஐந்எடை = ஐ+எடை (ஒற்று கெட்டது)
= ஐ+ய்+எடை
=ஐயெடை (உடம்படுமெய் வந்தது)

No comments: