Sunday, 31 January 2016

‘‘செவ்வியல் இலக்கியங்களில் சிற்றிலக்கிய படிநிலை வளர்ச்சி’’



முனைவர் மு.முருகேசன்
உதவிப்பேராசிரியர் தமிழாய்வுத்துறை
அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி ஆத்தூர்.

.‘‘செவ்வியல் இலக்கியங்களில் சிற்றிலக்கிய படிநிலை வளர்ச்சி’’

முன்னுரை
            ஒரு மொழியின் இலக்கிய மரபு தொடர்ச்சிக்கும் வகைமை வளர்ச்சிக்கும் அம்மொழியின் உருவாகும் கூர்தலற படிநிலைகள் காரணமாக உள்ளன. எந்த ஒன்றின் தோற்றமும் ஒன்றும் இல்லாத சூன்யத்தில் இருந்து உருவாவதில்லை. அதனால் புதிதாக தோன்றும் வகைமை அதற்கு முந்தைய இலக்கிய போக்குகளின் தொடர்ச்சியாகவே அமையும்.

தொல்காப்பியத்தில் கூர்தலறக் கோட்பாடு
          தொல்காப்பியம் தன்காலத்தில் இ்லக்கியங்களின் அமைப்ப பாடுபொருள் உத்தி ஆகியவற்றை சித்தரித்ததோடு பிற்காலத்தில் எத்தகைய இலக்கியங்கள் உருவாக வேண்டும் என்பதற்கான எடுகோள்களையும் வழங்கியுள்ளது.
            தொல்காப்பியர் அகத்திணையியல் புறத்திணையியல் பொருளில் செய்யுலியல் மரபியல் ஆகியவற்றில் புத்திலக்கிய தோற்றக் கூறுகளை இனம் காணமுடியும்.
            எண்வகை வணப்புகளில் ஒன்றான ‘‘விருந்து’’

‘‘விருந்தே தானும் புதுவது கிளந்த யாப்பின் மேற்றே’’
என்று புதிய இலக்கியங்கள் தோன்றுவதற்கான அடிப்படையை உருவாக்கியது. மேலும் தொல்காப்பிய செய்யுலியல் முழுவதிலும் உள்ள யாப்பியல் கூறுகள் காலந்தோறும் ஒரு இலக்கியம் எப்படி படைக்கப்பட வேண்டும் எவ்வாறு ஆராயப்பட வேண்டும் என்பதை விளக்குகிறது.
            சான்றாக
                        ‘‘முண்ணம்’’ ‘‘மாட்டு’’ ஆகிய செய்யுள் உருபுகளை குறிப்பிடலாம்.
புறத்திணையியலில் உள்ள பல நூற்பாக்கள் சிற்றிலக்கியங்களின் தோற்றத்திற்கு நேரடியாக களம் அமைத்தன எனலாம்.
                        ‘‘குழவி மருங்கினும் கிழவதாகும்’’                         (பிள்ளைத்தமிழ்)

                   ‘‘உரோடு தோற்றம் உரித்தென மொழிப’’               (உலா)

                   ‘‘காமப்பகுதி கடவுளும் வரையார்’’                        (கோவை)
                   சேரிமொழியால் செவ்விதின் கிழத்தல்
                   தேர்தல் வேண்டாது புலனெனமொழிப’’                          (பள்ளு)

                   கூத்தரும் பொருணரும் பாணரும் விரலியும்
                   ஆற்றிடை காட்சி உரலத்தோன்றி
பெற்ற பெருவளம் பெறார்க்கு அறிஉரி
சென்று பயன் எதிர சொன்ன பக்கம்’’                    (ஆற்றுப்படை)

புலவர் பாடும் மரபு
            பாடாண் திணையில் இலக்கியம் பாடப்படுவதற்கான பல மரபுகள் சுட்டிக்காட்டப்படுகின்றன.பாடாண் என்பது பாடப்படும் தகுதிப் பெற்ற ஆண்மகனது ஒழுகலாற்றை விரித்துறைப்பது என்று பொருள்படும். பாடுவதற்கு தகுதி உடையோர் மக்களும் தேவரும் ஆவர். எனவே பாடாண் திணை தேவர் பாடாண் என்றும் மக்கள் பாடாண் என்றும் அமைந்துள்ளது.

மக்கள் பாடாண்
            இதில் 21 இலக்கிய வகைமைகளை தொல்காப்பியர் சுட்டுகிறார். இவற்றில் 6 னை தவிர ஏனைய 15 யும் சிற்றிலக்கியங்களாக வளர்ச்சி அடைந்துள்ளன. இயன்மொழி வாழ்த்து கடைநிலை கண்படைநிலை வேல்விநிலை வழக்குநிலை வாயுரை வாழ்த்து செவியறியுறுவு புறநிலை வாழ்த்து கைக்கிளை துயில் எடைநிலை ஆற்றுப்படை மண்ணுமங்களம் குடைநிழல் மரபு கடைக்கூட்டு நிலை பரிசில் விடை ஆகியன சிற்றிலக்கியங்களாக வளர்ச்சி அடைந்தவை ஆகும்.

சங்க இக்கியத்தில் சிற்றிலக்கிய வளர்ச்சி கூறுகள்
            சங்க பனுவல்கள் கட்டமைத்த அகம் புறம் என்ற பாடுபொருளே சிற்றிலக்கிய உருவாக்கத்திற்கு அடிப்படையாக அமைந்தது. ஆனால் பல மரபு மாற்றங்கள் ஏற்பட்டன. சங்க பனுவககளின் களவு கற்பு ஒழுக்கப்படல்களே பிற்காலத்தில் ஒருவரால் தொடர்ச்சியாகப் படப்படும் அகப்பொருள் இலக்கிய மரபான கோவை இலக்கியத்தை உருவாக்கியது. சிற்றிலக்கியங்களின் அமைப்பு கூறான பதிகம் என்பது சங்கப்பனுவல்களில் தொடர்ச்சியாகும். ஒருபெருள் மேல் பத்து அடுக்கும் பதிக மரபு தேன்றுவதற்கு ஐங்குறுநூறும் பதிற்றுப்பத்தும்  முன்னேடிகளாக விளங்குகின்றன.

அந்தாதி அமைப்பு
            சிற்றிலக்கியங்களில் ஏறத்தால 2000 மேற்பட்ட படைப்புகள் வெளிவந்துள்ளன. சிற்றிலக்கியங்களிலேயே  அந்தாதி தான் மிகுதியாக தேன்றியுள்ளது. சங்க இலக்கியங்களில் பதிற்றுப்பத்தின் நான்காம் பத்தும் ஐங்குறுநூற்றின் தொண்டி பத்தும் அந்தாதி யாப்பில் அமைந்துள்ளன.  இவையே அந்தாதி இலக்கியத்தோற்றத்திற்கு காரணமாக அமைந்தன.

அந்தாதியில் அமைந்த பிரபந்தங்கள்
            அட்ட மங்களம் நவமணி மாலை ஒருபா ஒருபஃது இருபா இருபஃது இரட்டை மணிமாலை இணைமணி மாலை மும்மணிமாலை மும்மணிக்கோவை நான்மணிமாலை பன்மணிமாலை சதகம் ஆகிய சிற்றிலக்கிய வகைகளின் பாடுபொருள் பக்தியை அடிப்படையாக கொண்டது. இ்வற்றின் யாப்பு வடவமாக அந்தாதி இருப்பதால் அவற்றின் தோற்றத்தைச் சங்கப்பனுவல்களில் உள்ள அந்தாதி யாப்புடன் தொடர்புபடுத்தலாம்.

சதக இலக்கிய தோற்றம்
            அரசர்களையும் அவர்களின் நாடுகளையும் தனித்தனியே பாடிய சங்கமரபின் ஒருதொகு வளர்ச்சியே சதகம் ஆகும். மாணிக்கவாசகரின் திருச்சதகம் பின்நாளில் நீதி பற்றியும் நாடு பற்றியும் பாடப்படும் சதகங்களுக்கு காரணமாக அமைந்தது. தொண்டை மண்டல சதகம் கொங்கு மண்டல சதகம் பாண்டிய மண்டல சதகம் சோழ மண்டல சதகம் கார் மண்டல சதகம் ஆகியன நாட்டு வரலாறு கூறுபவை.
            குமரச சதகம் அரப்பளிஸ்வர சதகம் போன்றவை நீதி கூறுபவை. தண்டலையார் சதகம் பழமொழிகளை நிறம்ப பெற்ற நீதி நூல் ஆகும்.

மகளிரை பாட்டு
          மகளிர் உறுப்பு நலன்களை விதந்து பாடும் பாடல்கள் பல சிற்றிலக்கியங்களில் உள்ளன.  புகழ்ச்சி மாலை பெருமகிழ்ச்சி மாலை மங்கள வள்ளை தாரகை மாலை ஆகியன குறிப்பிடத்தக்க மகளிர் பாட்டுகளாகும். இவை பாதாதி கேசமாகவும் கேசாதி பாதமாகவும் பெண்களின் அனைத்து உறுப்பு நலன்களையும் பற்றி பாடுவனவாகும். நயனப்பத்து (கண்கள் ) பயோதபத்து (மார்பு) என தனித்தனி உறுப்புகளைப் பாடும் இலக்கிய வகைகளும் உள்ளன. இதற்கு கூத்தராற்றுப்படையில் வரும் விரலி வருணணை  முன்னோடி ஆகும்.

மகளிர் விளையாட்டு
மகளிரின் விளையாட்டு (ஊசல்) மகளிரின் கழல் கழிச்சி (பந்தாட்டம்) மேலும் அம்மானை குறவை ஆகியனவும் மகளிர் விளையாட்டு பாடல்களாக உள்ளன. இவற்றிற்கான தோற்றக் கூறுகளைச் சிலப்பதிகாரத்தில் கானலாம்.
           
இருபாலருக்கும் உரிய பாடல்கள்
          அங்க மாலை பிள்ளைத் தமிழ் ஆகியன இருபாலருக்கும் உரிய பாடல்களாகும். பிள்ளைத்தமிழின் முதல் 7 பருவங்கள் இருபாலருக்கும் உரியன். கலம்பகத்தின் ஒரு உருபாகிய அங்கமாலை இருபாலருக்கும் உரியது.

பள்ளி எழுச்சி
            மாணிக்கவாசகரால் தோற்றிவிக்கப்பட்ட பள்ளி எழுச்சிக்கு சங்க இலக்கிய துயில் எடைநிலை காரணமாக அமைந்தது. இதன் அடிப்படையிலேயே கடவுளுக்குப் பாடப்படும் திருப்பல்லாண்டும் தோற்றிவிக்கப்பட்டது.

தூது
          இது அகத்திலும் புறத்திலும் பாடப்படுகிறது. கலம்பகத்தில் ஒரு உருப்பாக உள்ளது. அரசனின் உறுப்புகளில்  ஒன்று. தூதின் சிற்புகளை வள்ளுவர் ஒரு ஆதிகாரத்தில் விளக்குகிறார். தூது தனி இலக்கிய வகையாகவே வளர்ந்துள்ளது. சங்க இலக்கியத்தில் பல தூது பாடல்கள் உள்ளன். குறிப்பாக ஔவ்வையார்  அதியமானுக்காக தொண்டைமானிடம் தூது செல்கிறார். ஊடல் திர்க்கும் வாயில்களாக 12 பேரும் தூது உரைக்கும் பண்பாளர்களே ஆவர்.

முடிவுரை
            சிற்றிலக்கியத்தில் செவ்வியல் கூறுகளைத் தேடுவதும் செவ்வியல் பனுவல்களில் சிற்றிலக்கியத்திற்கான படிநிலை வளர்ச்சிகளைத் தேடுவதும் நம்முடைய மரபு தொடர்ச்சியை நிலைநிறுத்துவதற்கான வழியே ஆகும். சங்க காலத்தில் அரசர்களைப் புகழ்ந்து பாடிய இலக்கிய மரபே பின்னர் தெய்வங்களைப் புகழ்ந்து பாடும் மரபாக உருமாற்றம் பெற்று பக்தி இலக்கியங்கள் வழியாக சிற்றிலக்கியமாக வளர்ச்சி அடைந்தது. சங்க இலக்கியத்தின் இயக்கு ஆற்றல்களாக இருந்த அகமும் புறமும் ஒன்றாக இணைந்து பல சிற்றிலக்கிய வகைமைகளைத் தோற்றிவித்தன. இவ்வாறு சிற்றிலக்கிய வளர்ச்சிக்கு செவ்வியல் பனுவல்களில் இருந்து பல படிநிலை வளர்ச்சிகளை இனம் கான இயலும்.






KbTiu

Jtiuf; fz;ltw;why; iwnewp> aw;ifnewp> caphpdnewp> khDlnewp vDk; ehd;F nghUz;ikfspy; rq;f yf;fpa rpw;wpyf;fpa xg;gpl;L Ma;thf f;fl;Liu mike;Js;sJ. jkpo;g; Gyth;fs; njhlh;r;rpahf jkpo; yf;fpaj;jpy; gd;Kfg; nghUz;ikr; nrhpit izj;Jk; ioj;Jk; cUthf;fpAs;sdh;. tw;iw epidj;J d;GWNthkhf


No comments: