Friday, 4 July 2014

பி.ஏ. தமிழ் ஆறாம் பருவம்,





13UTL 12 Core - XII

அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),
சேலம் - 636 007 III பி.ஏ. தமிழ் – பாடத்திட்ட விளக்கம்
பி.ஏ. தமிழ் - (2013 – 2014 கல்வியாண்டு முதல்)
முதன்மைப்பாடம் : தாள் 12 ஆறாம் பருவம்
                                            சங்க இலக்கியம் - புறம்

பாட நோக்கம் : 
    1.சங்க இலக்கியப் புறப்பாடல் மரபுகளைக் கற்பித்தல்.
    2.புறத்திணைகளுக்கு இலக்கியமான பாடல்களை அறியச் செய்தல்.
    3.புறத்திணைகள், புறத்துறைகள் பாடல்களில் அமைந்த பாங்கைத் தருதல்.
மாணவர் பெறும் திறன்:    
    1.புறப்பாடல்களின் தன்மையை அறிகிறான்.
    2.புறத்திணைகள்,புறத்துறைகள் பாடல்களில் உள்ள பாங்கை அறிகிறான்.
அலகு 1 :    
புறநானூறு – பாடல்கள் 91-223
அலகு 2 :    
    பதிற்றுப்பத்து - மூன்றாம் பத்து
அலகு 3 :    
    பரிபாடல் – திருமால்    – இரண்டாம் பாடல் &
   மூன்றாம் பாடல்
              செவ்வேள் – எட்டாம் பாடல் &
   ஒன்பதாம் பாடல்
அலகு     4 :    
    பத்துப்பாட்டு –  பொருநராற்றுப்படை
அலகு 5 :    
    மதுரைக்காஞ்சி – அடிகள் 238 – 544
திட்டக்கட்டுரைகள்:
    1.புறத்திணைகள்    2.புறத்துறைகள்    3.சங்க கால அரசியல் நெறிகள்
குழுச் செயல்பாடு :
    1.பாடப்பகுதியில் உள்ள புறத்துறைகளைத் தொகுத்தல்
    2.பாடப்பகுதியில் உள்ள போர் வகைகளை வகைப்படுத்துதல்
            பார்வை நூல்கள்:
1.    தமிழண்ணல்            - பரிசில் வாழ்க்கை,    பாரி நிலையம்,    சென்னை – 1.
2.    சாமி சிதம்பரனார்            - பத்துப்பாட்டும் பண்டைத்தமிழரும்,
    பூம்புகார் பதிப்பகம்,
3.    வீ.சி.சசிவல்லி            - பண்டைத்தமிழர் தொழில்கள்,
    உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்,    சென்னை – 113.
4.    கு.சிவபிரகாசம்            - புறநானூற்றில் வாழ்வியல் விழுமியங்கள்,
    திருக்குறள் பதிப்பகம்,    சென்னை – 78.
5.    கு.வெ.பாலசுப்பிரமணியம்        - சங்க இலக்கியத்தில் புறப்பொருள்,
    மெய்யப்பன் பதிப்பகம்,     சிதம்பரம் - 1.
இணைய முகவரிகள்:
  

          1. www.garudatamil.com
            2. www.sangatamil.com
            3. puram400.org
            4. www.semmozhitamil.com

-----------------------------------------------------------------------------------------------------                       



13UTL 13
Core - XIII

அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),சேலம் - 636 007.
பி.ஏ. தமிழ் – பாடத்திட்ட விளக்கம்
ஆறாம் பருவம் - (2013 – 2014 கல்வியாண்டு முதல்)
முதன்மைப்பாடம் : தாள் 13        தமிழின் செம்மொழிப்பண்புகள்
பாட நோக்கம் : 
    1.உயர்தனிச் செம்மொழியின் பண்புகளைமாணவர் மனத்தில் பதியவைத்தல்
    2.செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் செயலை அறியச் செய்தல்
    3.தாய்மொழியின் பழமை, சிறப்பு,விழுமியங்கள் ஆகியனவற்றைக் கற்பித்தல்
    4.செவ்வியல் இலக்கியங்களை அறியச் செய்தல்
மாணவர் பெறும் திறன்:
    1.உலகச் செம்மொழிகளை அறிகிறான்.
    2.இந்தியச் செம்மொழிகளை அறிந்து கொள்கிறான்.
    3.தமிழக அரசு செம்மொழிக்கு ஆற்றிவரும் அரும் பங்கை அறிகிறான்.
    4.தமிழ்ச் செம்மொழி இலக்கியங்களை அறிந்துகொள்கிறான்.
உள்ளடக்கம்
அலகு 1 :     மொழித்தோற்றமும் மொழிக்குடும்பங்களும்   
மொழி – நாகரிக உயிர்நாடி – மொழித்தோற்றக்கொள்கைகள் – மொழியும் சமூகமும் - மொழியின் கட்டமைப்பு – மொழி வகைகள் – பேச்சு மொழியும் எழுத்து மொழியும் - கிளை மொழிகள் – தமிழில் கிளை மொழிகள் – இந்தியாவில் மொழிக்குடும்பங்கள் – உலக மொழிக்குடும்பங்கள்.
அலகு 2 :     உலகச்செம்மொழிகள்   
உலக மொழி வரலாறு – செவ்வியல் மொழியில் அறிஞர்களின் கூற்றுகள் – செம்மொழியின் தகுதிகள் – செம்மொழியின் இலக்கணமும் தொகுப்பும் - செம்மொழி இலக்கியங்கள் – வகைகள் – புராணங்களும் வகைகளும் - உலகச் செம்மொழிகளின் தொகையாக்கம் - வகைகள்.
அலகு 3 :     செம்மொழி இலக்கியப்பாடுபொருள்   
உலகச் செம்மொழி இலக்கியப் பாடுபொருள் – விழுமியங்கள் – துன்பியல் – இன்பியல் பாடுபொருள் – அதிகாரம் - காவியம் - காப்பியம் - கதைபொதிந்த பாடல்  - பாடுபொருள் – வடமொழி இலக்கியங்களின் பாடுபொருள் – மனிதப் பிறப்பின் வாழ்வியல் கூறுகள்.  

அலகு     4 :     செம்மொழித்தமிழின் நிலை   
செம்மொழித் தமிழ் வரலாறு – தொன்மையும் சிறப்பும் - தமிழ்ச் செவ்விலக்கியங்கள்
– செவ்வியல் – விளக்கமும் வரையறைகளும் - தமிழ்ச் செம்மெமாழியின் பண்புகள்- தமிழ் அறிஞர்களின் கருத்துகள் – வாழும் வளர் தமிழ் – தமிழக அரசின் செம்மொழி அறிக்கை – பல்கலைக்கழகங்களின் பாங்கு – செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் பங்கு. 
அலகு 5 :     ஒப்பீட்டு நோக்கில் தமிழ்ச்செம்மொழி   
ஒப்பீட்டு நோக்கில் செம்மொழியின் பொதுப்பண்புகள் – தமிழ் மற்றும் வடமொழிப் புராணங்கள் ஒப்பீடு – வடமொழி மற்றும் தமிழ்க்காப்பியங்களின் ஒப்பீடு – வடமொழி நாடகமும் தமிழ் நாடகமும் - தமிழ் வீரயுகப்பாடல்களின் தன்மையும் பண்பும் - தமிழ் அறநெறிப்பாடல்களின் தன்மை.
திட்டக்கட்டுரைகள்:
    1.மொழியும் சமூகமும்
    2.செம்மொழியின் தகுதிகள்
    3.தமிழ்ச்செம்மொழியின் பண்புகள்
குழுச் செயல்பாடு :
    1.செம்மொழி ஆய்வரங்கங்களில் பங்கு கொள்ளச் செய்தல்
    2.இலக்கிய ஆய்வுரைகள் நிகழ்த்துதல்
    3.மொழிச் செம்மையைப் பேணும் கலந்துரையாடல்கள் நிகழ்த்துதல்
பாடநூல் :
    முனைவர் பாக்கியமேரி    - தமிழ்ச் செம்மொழி    வரலாறு,
                       மாநிலக் கல்லூரி, சென்னை- 5          

பார்வை நூல்கள்:
    1. முனைவர் பாக்கியமேரி    - தமிழின் செம்மொழிப்பண்புகள்
    2. ஜி.ஜான் சாமுவேல்        - திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்
    3. ஞா.தேரநேயப் பாவாணர்    - பண்டைத் தமிழர் நாகரிகமும் பண்பாடும்
    4. மணவை முஸ்தபா        - மொழிநூற்கொள்கையும் தமிழ்மொழி அமைப்பும்,
                       கௌரா ஏஜென்சீஸ், சென்னை.

இணைய முகவரிகள்:

1.        www.semmozhitamil.com
2.       www.cict.in
3.       www.chemmozhi.net
     
--------------------------------------------------------------------------------------------------------                  
           

அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),
சேலம் - 636 007.
13UTL 14
Core - XIV
  பி.ஏ. தமிழ் – பாடத்திட்ட விளக்கம்
ஆறாம் பருவம் - (2013 – 2014 கல்வியாண்டு முதல்)
முதன்மைப்பாடம் : தாள் 14
                         காப்பியங்கள்

பாட நோக்கம் :
    1.காப்பிய இலக்கியங்களைக் கற்பித்தல்
    2.தமிழ்க்காப்பிய அறங்களைக் கற்பித்தல்

மாணவர் பெறும் திறன்:
    1.தமிழ்க்காப்பியங்கள் பற்றிய அறிவைப் பெறுகின்றனர்.
    2.தமிழ்க் காப்பியங்கள் உணர்த்தும் அறங்களை அறிகின்றனர்.
    3.இலக்கிய நயத்தைத் தெரிந்துகொள்கின்றனர்.

உள்ளடக்கம்

அலகு 1 :     பொதுமக்கள் காப்பியம்   
    சிலப்பதிகாரம்            -அ) வஞ்சின மாலை
                       ஆ) அழற்படுகாதை

அலகு 2 :     பௌத்த, சமணக் காப்பியங்கள்
    1.மணிமேகலை        - சிறைக்கோட்டத்தை அறக்கோட்டமாக்கிய காதை
    2.சீவக சிந்தாமணி        - நாமகள் இலம்பகம்
   
அலகு 3 :     சைவ, வைணவகக் காப்பியங்கள்
    1.கம்பராமாயணம்        - கங்கைப் படலம்
    2.பெரியபுராணம்        - அப்பூதியடிகள் நாயனார் புராணம்
   
அலகு     4 :     சிறு காப்பியங்கள்
    1.சூளாமணி            - கல்யாணச்சருக்கம்
    2.நீலகேசி            - பூதவாதச்சருக்கம்
   
அலகு 5 :     கிறித்தவ இசுலாமியக் காப்பியங்கள்
    1.தேம்பாவணி            - குழவிகள் வதைப்படலம்
    2.சீறாப்புராணம்        - நபி பட்டம் பெற்ற படலம்
   
திட்டக்கட்டுரைகள்:
1.தமிழ்க்காப்பியத்தின் தோற்றம்
2.காப்பியக் கட்டமைப்பு
3.தமிழ்க்காப்பியங்களும் அறநெறிகளும்

குழுச் செயல்பாடு :
1. ஏதேனும் ஒரு காப்பியக் காட்சியை நடித்தல்
2. காப்பியங்கள் பற்றிய சங்கப் பாடல்களைத் தொகுத்தல்

பார்வை நூல்கள்:
    1. அ.அ.ஞானசுந்தரத்தரசு    - கம்பனும் உளவியலும்,
                    கவிக்குயில் அச்சகம்,
                    சென்னை – 600 098.               
    2. சீ.வசந்தா            - காப்பியங்களில் பழங்கதைகளும் நம்பிக்கைகளும்,
                       ஸ்ரீ வித்யா பதிப்பகம்,
                        சென்னை.
3.அ.ச.ஞானசம்பந்தன்        - காவிய காலம்,
4. சு. துரைசாமிப்பிள்ளை    - சூளாமணி உரை, கழகவெளியீடு,சென்னை – 1.
5. ஏ. சக்கரவர்த்தி (ப.ஆ)    - நீலகேசி, சாது அச்சகக்கூடம்,
                   இராயப்பேட்டை, சென்னை.

இணைய முகவரிகள்:

1.       http : //thoguppukal.com
2.      www.tamilvu.org
4.      kappiyakalanjiyam.blogspot.com
5.      Munaivarmani.heritage.com
6.      Indian.heritage.org
7.      skavithaikal.blogspot.com
8.      arunkumarnevergiveup.blogspot.com
-------------------------------------------------------------------------------------------------


13UTL 15
Core - XV

அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),
சேலம் - 636 007.
 பி.ஏ. தமிழ் – பாடத்திட்ட விளக்கம்
ஆறாம் பருவம் - (2013 – 2014 கல்வியாண்டு முதல்)
முதன்மைப்பாடம் : தாள் 15
                                அறவிலக்கியம்
பாட நோக்கம் :
    1.தமிழில் உள்ள அறஇலக்கியங்களைக் கற்பித்தல்
    2. நீதி நூல்கள் சுட்டும் அறங்களைக் கற்பித்தல்
மாணவர் பெறும் திறன்:
    1.தமிழ் அற இலக்கியங்கள் பற்றிய அறிவைப் பெறுகின்றனர்.
    2.நீதி இலக்கியங்கள்  உணர்த்தும் அறங்களை அறிகின்றனர்.
    3. சமண, பௌத்த சமயம் சார்ந்த அறக்கோட்பாடுகளை அறிகின்றனர்

உள்ளடக்ககம்
அலகு 1 :    
    1.திருக்குறள்            -அ) கல்வி (அறத்துப்பால்) 
                       ஆ) நாடு (பொருட்பால்)
                       இ) குறிப்பறிதல் (இன்பத்துப்பால்)
    2.நாலடியார்            - அ) தருமத்தின் சிறப்பு
                       ஆ) விடாமுயற்சி
                        இ) பொது மகளிர்
அலகு 2 :
    1.பழமொழி நானூறு        -அ) ஒழுக்கம் 
                      ஆ) இன்னா செய்யாமை
    2.ஆசாரக்கோவை        -  21 – 40 (20 பாடல்கள்)
    3.இன்னா நாற்பது        -  1 – 20 ( 20 பாடல்கள்)
   
அலகு 3 :
    1.ஏலாதி            - 21 – 40 (20 பாடல்கள்)
    2.திரிகடுகம்            - 21 – 40 (20 பாடல்கள்)
    3.சிறுபஞ்சமூலம்        - 61 – 80 ( 20 பாடல்கள்)
   
அலகு     4 :
    1.ஔவையார்            - நல்வழி
    2.உலகநாதர்            - உலக நீதி

அலகு 5 :
    1.சிவப்பிரகாச சுவாமிகள்    - வெற்றி வேற்கை
    2.வேதநாயம்பிள்ளை        - அ) குடிகளின் இயல்பு
                        ஆ) ஞானாசிரியன் பெருமை
                        இ) பொய்க்குருவின் தன்மை
திட்டக்கட்டுரைகள்:
1. தமிழ் நீதி இலக்கியங்களின் தோற்றம்
2. இன்னாத நாற்பதுகள்
3. வேதநாயகம் பிள்ளையின் அறக்கருத்துகள்
குழுச் செயல்பாடு :
1. சமண அறங்களைத் தொகுத்தல்
2. பௌத்த அறங்களைத் தொகுத்தல்

பார்வை நூல்கள்:
    1. வ.சுப. மாணிக்கம்        - நீதி நூல்கள்,
                   தமிழ் நிலையம்,
                    சென்னை – 600 017.               
    2. செந்துறை முத்து        - தமிழர் வாழ்வியல்,
                       நாதன் பதிப்பகம்,
                        சென்னை- 35
3.ந.சுப்புரெட்டியார்        - தமிழ் இலக்கியங்களில் நீதி-அறம்-முறைமை ,
                    ஐந்திணைப்பதிப்பகம்,
                    சென்னை – 5.
4.இரா.இளங்குமரனார்        - கீழ் நாற்பது மூலமும் உரையும்,
                   தமிழ்மண் பதிப்பகம், சென்னை.
5.புலவர் குழந்தை        - நீதிக்களஞ்சியம் உரை,
                   தமிழ்மண் பதிப்பகம், சென்னை.
6.தி.இராசகோபால்        - நீதிநூல் மாலை,
                   ஐந்திணைப்பதிப்பகம்
7.முல்லை பி.எல்.முத்தையா    - திருக்குறள் கூறும் இன்பவாழ்க்கை,
                    ஐந்திணைப்பதிப்பகம்,
                    279, பாரதிசாலை – மாடியில்,
                    திருவல்லிக்கேணி,
                   சென்னை – 600 005.
இணைய முகவரிகள்:

1.      http : //thoguppukal.com
2.      www.tamilvu.org
---------------------------------------------------------------------------------------------




13MBE2
Major Based Elective Core - II

அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),சேலம் - 636 007.
பி.ஏ. தமிழ் – பாடத்திட்ட விளக்கம்
ஆறாம் பருவம் - (2013 – 2014 கல்வியாண்டு முதல்)

Major Based Elective Core - II

                              நாட்டுப்புறவியல்

பாட நோக்கம் : 
    நாட்டுப்புற மக்களின் வாழ்வையும் வாழ்வுக் கூறுகளையும் படம்பிடித்துக் காட்டுவதே ஆகும். ஏட்டில் வராத எழுத்தில் காணமுடியாத, ஆனால் உள்ளத்தில் ஊறிக்கிடக்கும் எண்ணங்களையும் நம்பிக்கைகளையும் பழக்கவழக்கங்களையும் கற்பித்தல்.

மாணவர் பெறும் திறன்:
    நாட்டுப்புற இலக்கியங்கள், கலைகள், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், வழிபாட்டு முறைகள் ஆகியனவற்றை அறிகிறான்.   

உள்ளடக்கம்
அலகு 1 :      நாட்டுப்புறவியல்  - வகைப்பாடு
நாட்டுப்புறவியல் – நாட்டுப்புறவியலின் வகைப்பாடு- நாட்டுப்புறப்பாடல்கள் – நாட்டுப்புறப்பாடல் வகைப்பாடு – தாலாட்டுப்பாடல் – குழந்தைப்பாடல் – எண்ணுப்பயிற்சிப்பாடல் – காதல் பாடல்கள்  - தொழில் பாடல்கள் – கொண்டாட்டப்பாடல்கள் – வழிபாட்டுப் பாடல்கள்- ஒப்பாரிப்பாடல்கள்.

அலகு 2 :      நாட்டுப்புறக்கதைகள்
    நாட்டுப்புறக்கதைகள் – நாட்டுப்புறக்கதைகளின் வகைப்பாடு – கதைகளின் நோக்கம் - அமைப்பியல் – நாட்டுப்புறக்கதைப்பாடல்கள் – தமிழ்க் கதைப்பாடலின் மரபும் தன்மையும் - கதைப்பாடலின் அமைப்பு – கதைப்பாடல் காட்டும் நம்பிக்கை, பழக்கவழக்கங்கள் – அடிக்கருத்துகள்.

அலகு 3 :     நாட்டுப்புற பழமொழிகள்   
    பழமொழிகள் – பழமொழியும் தமிழ் இலக்கியங்களும் - தமிழ்ப் பழமொழிகளின் தொகுப்பு – பழமொழி வகைப்பாடு – பழமொழியும் விடுகதையும் - பழமொழியின் தன்மை – பழமொழியின் அமைப்பு – பழமொழியின் கருப்பொருள் – பழமொழியால் அறியலாகும் செய்திகள்.

அலகு     4 :     நாட்டுப்புற விடுகதைகள்   
    விடுகதைகள் – விடுகதைகளின் வகைகள் – விடுகதைச் சூழல் – விடுகதைக் கருப்பொருள் – விடுகதையின் நடை -  விடுகதையால் அறியலாகும் செய்திகள் – தனிநிலை விடுகதை அமைப்பு – கூட்டு நிலை விடுகதை அமைப்பு – இணை நிலை விடுகதை அமைப்பு .
அலகு 5 :     நாட்டுப்புறக் கலைகள்   
    நாட்டுப்புறக்கலை – கைவினைப் பொருட்கள் – நாட்டுப்புறக்கலைகளின் வகைப்பாடு  - சிலம்பாட்டம் - காவடியாட்டம் - கரகாட்டம் - மயிலாட்டம் - கும்மியாட்டம் -  ஒயிலாட்டம் - கோலாட்டம் - பொய்க்கால் குதிரையாட்டம் - தேவராட்டம் - கணியான் ஆட்டம் - வில்லுப்பாட்டு – கூத்து – நாட்டுப்புறக் கைவினைப் பொருள்கள்- சிற்ப வேலை.

திட்டக்கட்டுரைகள்:
1.    நாட்டுப்புறப்பாடல்கள்
2.    நாட்டுப்புறக் கலைகள்
3.    நாட்டுப்புற நம்பிக்கைகள்

குழுச் செயல்பாடு :
1.    நாட்டுப்புறப் பழமொழிகளைச் சேகரித்தல்
2.    விடுகதைகளைத் தொகுத்தல்
3.    கதைகளைத் தொகுத்தல்

பாடநூல் :
    சு.சக்திவேல்            - நாட்டுப்புறவியல்,
                       மணிவாசகர் பதிப்பகம்,
                       சிதம்பரம்.

பார்வை நூல்கள்:
    1.ச.அகத்தியலிங்கம்        - நாட்டுப்புறவியல்,
                       அண்ணாமலைநகர்,
                       சிதம்பரம்.
    2.ஆறு.இராமநாதன்        - நாட்டுப்புறக்கதைகள்,
                       கழக வெளியீடு,
                       சென்னை.
    3.சு.சண்முகசுந்தரம்         - நாட்டுப்புற இயல்,
                       மணிவாசகர் பதிப்பகம்,
                       சென்னை.
            4.செ.அன்னகாமு        - ஏட்டில் எழுதாக் கவிதைகள்,
   சென்னை.
                   
இணைய முகவரிகள்:

1.        www.ulakaththamizh.org
3.       www.ilakkiyam.com
4.      tamilnabargal.com
 ---------------------------------------------------------------------
 
   
                                   
   
13MBE3
Major Elective - III

அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),
சேலம் - 636 007.
 பி.ஏ. தமிழ் – பாடத்திட்ட விளக்கம்
ஆறாம் பருவம் - (2013 – 2014 கல்வியாண்டு முதல்)
முதன்மை விருப்பப்பாடம் : தாள் 3

                                    தகவல் தொடர்பியல்
பாட நோக்கம் : 
    தகவல் தொடர்பின் பரிணாம வளர்ச்சி, தகவல் தொடர்பு தொழிற்நுட்பம் போன்றவற்றை அறிதல்.

மாணவர் பெறும் திறன்:    
    தகவல் பரிமாற்றம் ஒரு வளர்ந்து வரும் துறை. அறிவியல் கண்டுபிடிப்புகளின் வளர்ச்சிக்கு அடிப்படையான இத்துறையைப் பற்றி மாணவர் அறிவது காலத்தின் தேவை.

உள்ளடக்கம்

அலகு 1 :     கொள்கைகளும் கோட்பாடுகளும்
    தகவல் – விளக்கம் -தகவல் தொடர்பின் அடிப்படைகள் – விளைவுகள் சாதனங்களின் பணிகள் – நேருக்கு நேர் - முறைத்தகவல் தொடர்புகள் – தடைகள் – தகவலைச் சொல்பவரும் பெறுபவரும் - தகவலை ஏற்பவரின் தகுதிகள் – பொது மக்கள் கருத்து – புதிய கருத்துப் பரவுதல் – கருத்தாக்கத் தலைவர்கள் – உருவப்படிவங்கள் (ஆடினநடள).

அலகு 2 :     தகவல் தொடர்பு சாதனங்கள்
    அச்சுவழி – இந்தியமொழி இதழ்கள் – இதழியல் சட்டங்கள் – செய்தி நிறுவனங்கள் – நாளிதழ் உருவாகுதல் – பத்திரிகை நெறிமுறையும் அவதூறுச் செய்திகளும் - சார்புத் தன்மையும் எதிர்ப்புத் தன்மையும் - தப்பும் தவறும் - புதுச்சொல்லாக்கம் - விளங்காமொழி – இன்றைய தமிழ் நாளிதழ்கள்.

அலகு 3 :     வானொலி, தொலைக்காட்சி
    தோற்றமும் வளர்ச்சியும் - பன்னாட்டு ஒலிபரப்பு – செய்தி ஒலிபரப்பு – கல்வி ஒலிபரப்பு - கிராம ஒலிபரப்பு – பேச்சுரைகள் – வானொலியும் தன்னாட்சியும் - வானொலி : குன்று. தொலைக்காட்சியின் தோற்றமும் வளர்ச்சியும் - சைட் (ளுஐகூநு) – கல்வி ஒளிபரப்பு (நுகூஏ) – செய்தி ஒளிபரப்பு – தொலைக்காட்சிப்படங்கள் – தொடர்கள் (ளுநசயைடள) – விளம்பரங்கள் – தொலைக்காட்சியும் பிற தகவலியல் சாதனங்கள் வீடியோ – தகவல் ஒளிப்படங்கள் (ஏனைநடி கூநளவ) – வானொலி தொலைக்காட்சி வளர்ப்பாதை.


அலகு     4 :      திரைப்படம்
    உலக அளவில் திரைப்படத் தோற்றமும் வளர்ச்சியும் - இந்திய அளவில் திரைப்படத் தோற்றமும்   வளர்ச்சியும்   குழந்தையர் படங்கள் – செய்திப்படங்கள் – தணிக்கைத்  துறை – தேசியப்படச்சுருள் காப்பகம் - தேசிய திரைப்பட மேம்பாட்டு நிறுவனம் - விருதுகள் – திரைப்பட விழாக்கள்.

அலகு 5 :     விளம்பரம்
    விளம்பரவாயில்கள் – விளம்பர மூலங்கள் – விளம்பர வகைகள் – வடிவமைப்புக் கூறுகள் – திட்டமிடுதல் – உருவாக்குதல் – விளம்பர உத்தியும் விற்பனையும் - சிறந்த வடிவமைப்பின் சில இலக்கணங்கள் – சில விதிமுறைகள் – நிறைகளும் குறைகளும்.

திட்டக்கட்டுரைகள்:
1.    தகவல் பரிமாற்றம் ஆதிகாலத்தில் எவ்வாறு இருந்ததென அறிதல் மற்றும் இதழ்களின் வளர்ச்சி பற்றி எழுதச் செய்தல்.
2.    இன்றைய மின்னனு ஊடகங்களில் தகவல் தொடர்பிற்கு ஏற்றவை பற்றி எழுதச் செய்தல்.

குழுச் செயல்பாடு :
ஆதிகாலத்திலிருந்து இன்றைய நிலை வரையிலான தகவல் தொடர்பின் வளர்ச்சி பற்றி விவாதிக்கச் செய்தல் மற்றும் தொலைதொடர்பு கருவிகளின் சிறப்பு பற்றி விவாதித்தல்.

பாடநூல் :
    முனைவர் கி. இராசா        - மக்கள் தகவல் தொடர்பியல்,
                        பாவை பப்ளிகேஷன்ஸ்,
                        142, ஜான் ஜான்கான் சாலை,
                        இராயப்பேட்டை, சென்னை – 600 014.
                       
பார்வை நூல்கள்:
1.    க.அபிராமி         - கணினி ஓர் அறிமுகம்,
                       தமிழ்ப்புத்தகாலயம்,
                       சென்னை- 17.
    2.   வே.தமையந்திரன்        - இன்டர்நெட்,
                       பூங்கொடி பதிப்பகம்,
                       சென்னை – 4.
3.    துரை.மணிகண்டன்    - இணையத்தில் தமிழ்த்தரவுத்தளங்கள்,
   கௌதம் பதிப்பகம், சென்னை – 50.

இணைய முகவரிகள்:

1.      www.dinakaran.com
2.      www.dinamalar.com
3.      ta.wikipedia.
--------------------------------------------------------------------------------------------


13SBE5

அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),
சேலம் - 636 007.
 பி.ஏ. தமிழ் – பாடத்திட்ட விளக்கம்
ஆறாம் பருவம் - (2013 – 2014 கல்வியாண்டு முதல்)
அடித்தளத்திறன் விருப்பப்பாடம் - ஏ : தாள் 5
                               கணினி – ஓர் அறிமுகம்

பாட நோக்கம் :
    1.கணினி வரலாற்றைக் கற்பித்தல்
    2.கணினிச் செயல்பாடுகளை அறியச் செய்தல்
    3.கணினிப் பயன்பாடுகளை அறியச் செய்தல்
    4.கணினி மொழிகளைக் கற்பித்தல்
மாணவர் பெறும் திறன்:
    1.கணினியை இயக்கும் திறன் பெறுகிறான்
    2.கணினித் தமிழ் குறித்து அறிகிறான்
    3.இணையப் பயன்பாட்டை அறிகிறான்

உள்ளடக்கம்
அலகு 1 :     கணினி அடிப்படை
    கணினியின் அடிப்படை – கணினி முன்னுரை – கணினியின் சிறப்பியல்புகள் – கணினியின் வரலாறு – கணினி வகைபாடு – கணினியின் செயல்முறைக் கோட்பாடு – கணினியின் செயல்முறைக் கோட்பாடு – கணினியின் நச்சு நிரல்கள்  மற்றும் பாதுகாப்பு முறைகள்.
அலகு 2 :     கணினி செயல்பாடுகள்
    கணினியின் செயல்பாகங்கள் – முன்னுரை – கணினியின் செயல்பாகுங்கள் – மையச் செயலகம் - கணித ஏரணச் செயலகம் - சேமிப்பு சாதனங்கள் – கணினியின் அடிப்படை பாகங்கள் – கணினியை இயக்கும் முறை – உள்ளீட்டகம் - வெளியீட்டகம் - வன்பொருள் மற்றும் மென்பொருள் – கணினி செயல்படும் முறை.
அலகு 3 :     கணினி பயன்பாடுகள்
    எம்.எஸ். சொல் செயலி – முன்னுரை – சொல் செயலி கோப்புப் பட்டியல் – ஒழுங்குபடுத்தும் பட்டியல் – பார்வையிடும் பட்டியல் – செருகும் பட்டியல் – பொருந்தும் பட்டியல் – கருவிப்பட்டியல் – அட்டவணைப்பட்டியல் – எம்.எஸ். பப்ளிசர் - எம்.எஸ்.எக்ஸ்செல் – முன்னுரை – செய்முறை தாள் உருவாக்குதல் – தரவுகளின் வகைகள் – வடிவமைப்பு செயல்முறை – கோப்புப்பட்டியல் – சீரமைக்கும் பட்டியல் – பார்வை பட்டியல் – செருகும் பட்டியல் – வடிவமைக்கும் பட்டியல் – கருவிப்பட்டியல் – கட்டளைத் தரவு பட்டியல் – எம்.எஸ். எக்செல் புள்ளியியல் பயன்பாடுகள்.
அலகு     4 :      சாளரம் பயன்பாடுகள்
    சாளரங்கள் – முன்னுரை – சாளரத்தின் வரலாறு – பயனாளியுடன் தொடர்பு – சாளரத்தின் பகுதிகள் – சாளரத்தின் அளவை மாற்றியமைத்தல் – சாளரத்தின் உரையாடல் பெட்டிகள் – சாளரத்தின் உதவி மற்றும் ஆதரவு தளம் - நிகழ்நிலை உதவி பெறுதல் – சாளரத்தின் எக்ஸ்பி.யை தனிப் பயனாக்குதல் – சாளரத்தின் பயன்பாடுகள் – சாளரத்தின் கூடுதல் பயன்பாடுகளை இயக்குதல் – பல பயன்பாடுகளில் பணியாற்றுதல் – எம்.எஸ். பவர் பாயிண்ட் - முன்னுரை – கோப்புப்பட்டியல் – பார்வைப்பட்டியல் – செருகும் பட்டியல் – உரைப்பெட்டி – வடிவமைக்கும் பட்டியல் – கருவிப்பட்டியல் – நழுவக்காட்சி.
அலகு 5 :     இணையம்
    இணையம் - முன்னுரை – இணையத்தின் தன்மைகள் – இணைய தளத்தின் வகைகள் – இணைய வர்த்தகம் - இணைய இணைப்பு பெறுதல் – இணைப்பான் - இணைக்கும் வழிமுறைகள் – வணிக ஆன்லைன் சேவையின் சிறப்பு தகவல்கள் – மின்வெளி சந்தாதாரர் கோப்பு (னுளுஊ) இணைப்பு – இணையதள பயன்பாடுகள் – உள்சுற்று இணையதளம் - உலக வலை விரிதளம்.

திட்டக்கட்டுரைகள்:
    1.கணினியின் செயல்முறைக் கோட்பாடு
    2.கணினிப் பயன்பாடுகள்
    3.சாளரப் பயன்பாடுகள்
    4.இணைய வகைகள் மற்றும் பயன்பாடுகள்
குழுச் செயல்பாடு :
    1.கணினி வழி மாணவர்களின் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளுதல்
    2.பவர்பாய்ண்ட் முறையில் பாடப்பகுதியை விளக்கச் செய்தல்
    3.குறிப்பிட்ட தகவலை இணையத்தின் வழி தேடிக்கொணர்தல்
பாடநூல் :
1.    த. சம்பத்குமார்        - கல்வியில் கணினி, (முதல் 7 பாடங்கள் மட்டும்),
   பாவை பப்ளிகேஷன்ஸ்,
   142, ஜானி ஜான்கான் சாலை,
   இராயப்பேட்டை, சென்னை – 600 014.
  போன்: 28482441, 28482973.
  
பார்வை நூல்கள்:
1.    1.  மு.சீனிவாசன்        கணிப்பொறி ஆரம்பப் பயிற்சிப் புத்தகம்,
கிங்ஸ் அகாடமி,
பிளட் ஜி 2 ஆம் தளம்,
சென்னை – 32.
2.    கே.புவனேஸ்வரி        எம்.எஸ்.வேர்ட் 2000 அறிமுகம்,
19,கண்ணதாசன் பதிப்பகம்,
தி.நகர், சென்னை – 17.
3.    கே.புவனேஸ்வரி        வேர்ட் 2002 ஆபீஸ் எக்ஸ்பிரஸ்,
19,கண்ணதாசன் பதிப்பகம்,
தி.நகர், சென்னை – 17.
4.    மா.ஆண்டோ பீட்டர்    டி.டி.பி. பற்றிய கையேடு,
ஆயிரம் விளக்கு, சென்னை – 6.
5.    துரை.மணிகண்டன்    இணையமும் தமிழும்,
நல்நிலம் பதிப்பகம்,  தி.நகர், சென்னை. 
இணைய முகவரிகள்:

1.        www.karpom.com
2.       www.infitt.org
3.       www.tamilwikipedia.org
4.      www.pathivukal.com
5.       www.thiratti.com
.
-----------------------------------------------------------------------------------------------------




13 SBE6
Skill Based Elective Course - VI

அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),
சேலம் - 636 007.
 பி.ஏ., தமிழ் – பாடத்திட்ட விளக்கம்
ஆறாம் பருவம் - (2013 – 2014 கல்வியாண்டு முதல்)
தாள் : 6 தமிழகக் கலைகளும் கல்வெட்டுகளும்
பாடநோக்கம் :
1.    பழந்தமிழகக் கலைகளைக் கற்பித்தல்
2.    கல்வெட்டுகளில் கிடைக்கும் கலைகள் பற்றிய செய்திகளை அறிதல்
மாணவர் பெறும் திறன் :
1.    தமிழகக் கலைகளின் தொன்மை, நுண்மை ஆகியனவற்றை அறிகிறான்.
2.    தமிழகக் கலைகள் பற்றிய வரலாறு, வளர்ச்சிகளை அறிகிறான்.
உள்ளடக்கம்
அலகு : 1     கலைகள் வரலாறும் வகைகளும்       
கலைகள் விளக்கம் - கலையின் படைப்புகள் – 64 கலைகள் – கலைஞன் இலக்கணம் - கட்டடக்கலை – சங்ககாலக் கட்டடக்கலை -  இடைக்காலக் கட்டடக்கலை – சோழர்காலக் கட்டடக்கலை – பிற்காலக் கட்டடக்கலை – ஓவியக்கலை – சங்ககால ஓவியக்கலை – சித்தன்ன வாசல் ஓவிங்கள் – தஞ்சை ஓவியங்கள்  - பிற்கால ஓவியங்கள் – இக்கால ஓவியக்கலை – சிற்பக்கலை – சங்ககாலச் சிற்பக்கலை – பல்லவர்காலச் சிற்பக்கலை – சோழர்காலச் சிற்பக்கலை – நாயக்கர் காலச் சிற்பக்கலை – ஆங்கிலேயர் காலச் சிற்பக்கலை.
அலகு : 2     வார்ப்புக்கலை, இசை,நாடகக்கலைகள்       
வார்ப்புக்கலை – சங்ககால வார்ப்புக்கலை – பல்லவர்கால வார்ப்புக்கலை – சோழர்கால வார்ப்புக்கலை –பிற்கால வார்ப்புக்கலை – இசையின் சிறப்பு – சங்ககால இசைக்கலை – பல்லவர்கால இசைக்கலை – சோழர்கால இசைக்கலை – பிற்கால இசைக்கலை – பிற நாட்டு இசைகள் – நாடகமும் படக்காட்சியும் - வானொலியில் தமிழிசை – நடனக்கலை – கூத்தின் தோற்றம் - சங்ககாலத்தில் கூத்துக்கலை – பல்லவர்காலத்தில் கூத்துக்கலை – சோழர்காலத்தில் கூத்துக்கலை – பிற்காலக் கூத்துக்கலை – சங்ககாலத்தில் நாடகக்கலை- சோழர்காலத்தில் நாடகக்கலை – இருபதாம் நூற்றாண்டில் நாடகக்கலை.

அலகு : 3     மருத்துவம், இலக்கியம்,தத்துவம்       
மருத்துவக்கலை – சங்ககாலத்தில் மருத்துவக்கலை – பல்லவர்காலத்தில் மருத்துவக்கலை -  சோழர் கால மருத்துவக்கலை – அயல்நாட்டார் மருத்துவ முறைகள் – மாதர் மருத்துவம் - சித்த மருத்தவமும் - சமய உணர்ச்சி – சங்ககாலச் சமயக்கலை – வடநாட்டுச் சமயக்கலை – சைவ வைணவ நெறிகள் – மடங்கள் – பிற்காலத்தில் சமயக்கலை – பௌத்தம் - சமணம் - தத்துவக்கலை – சமணம் - பௌத்தம் - புத்தர் உரைத்த அறம் - நான்கு தியானங்கள் – அத்வைதம் - வசிட்டாத்துவைதம் - துவைதம் - சைவ சித்தாந்தம் - இலக்கியக்கலை – செய்யுள்- இலக்கியத் தோற்றம் - தொகை நூல்கள் – அகப்பொருள் நூல்கள்.
அலகு : 4     கல்வெட்டுகள் கூறும் அரசியல்       
அரசியல் வரலாறு – கல்வெட்டுப்பணியகம் - இந்திய எழுத்துக்கள் – கல்வெட்டுக்களின் தோற்றம் - அசோகர் கல்வெட்டு – பிராமி எழுத்துக்கல்வெட்டு – செப்புப் பட்டயங்கள் – கல்வெட்டுக்கள் – பல்லவர்கால அரசியல் வரலாறு – பிற்காலப்பல்லவர் அரசியல் வரலாறு – இலங்கைப்போர் - சாளுக்கியர் பட்டயங்கள் – பல்லவர் பட்டயங்கள் – வெருவள நல்லூர் போர் - பல்லவர் சாளுக்கியர் போர் - பல்லவர் இரட்டர் உறவு -  தெள்ளாற்றுப் போர் - பாகூர்ப்பட்டயம் - சோழர் வரலாறு – மெய்க்கீர்த்தி  பிற்கால அரசியல் வரலாறு – பாண்டிய நாட்டி சேரன் ஆட்சி – சேதுபதிகள்  - முஸ்லிம் ஆட்சி – கல்வெட்டுக்களும் சமய வரலாறும் - பிராமி – பட்டயங்கள் – தளிப்பரிவாரம் - மக்கள் பெற்றிருந்த நாயன்மார் பெயர்கள்
அலகு : 5     சமயம் வளர்த்த கலைகள்   
பாண்டியர் காலம் - பிற்காலச் சோழர் காலம் - சமயப்பணிகள் – அரசாமா தேவியரும் சமயப்பணிகள் – திருக்கோவில் வளர்ச்சி – கோவில் விழாக்கள் – திருமுறைகள் – மடங்கள் – சைவப் பெயர்கள் – சமயப்பற்று – சமணம் - பௌத்தம் - கல்வெட்டுக்களும் சமுதாய வரலாறும் - நாடும் நடப்பும் - கல்விநிலை – பல்லவர்காலம் - பொதுக்கல்வி – மடங்கள் – சோழர்காலம் - பிற்காலம் - கல்வெட்டுகளும் தமிழ்க் கல்வியும் - வழக்கு வீழ்ந்த நூல்களும் புலவர்களும் - தமிழ் நூற் செய்திகளும் கல்வெட்டுகளும் - சிற்பக்கலை – ஓவியக்கலை – இசைக்கலையும் நடனக்கலையும்.
திட்டக்கட்டுரைகள் :
1.    கோயிற் கலை
2.    சிற்பக்கலை
3.    நாட்டியக்கலை
குழுச்செயல்பாடு :
1.    கலைகளை நிகழ்த்திக்காட்டுதல்
2.    கல்வெட்டுகளைத் தேடுதல்
3.    கோயில்களில் உள்ள தமிழர் தம் கலைகளை அறிதல்

பாடநூல்கள் :
1.    மா.இராசமாணிக்கனார் - தமிழ்க்கலைகளும் கல்வெட்டுகளும்,
             பாவை பப்ளிகேஷன்ஸ்,
                         142,ஜானி ஜானகான் சாலை,
                         இராயப்பேட்டை சென்னை – 14.
பார்வை நூல்கள் :
1.    மயிலை சீனி வேங்கட சாமி – நுண்கலைகள்,                    பாவை பப்ளிகேஷன்ஸ்,                        142,ஜானி ஜானகான் சாலை,          இராயப்பேட்டை சென்னை – 14.
2.  மயிலை சீனி வேங்கட சாமி – தமிழர் வளர்த்த அழகுக்கலைகள்,                    பாவை பப்ளிகேஷன்ஸ்,                        142,ஜானி ஜான்கான் சாலை,                             இராயப்பேட்டை சென்னை – 14.
இணைய முகவரிகள் :

1.        www.poetry.com
2.       www.history.com
3.       www.tamiled.co.uk
-------------------------------------------------------------------------------------

No comments: