அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),
சேலம் - 636 007.
III பி.ஏ. தமிழ் – பாடத்திட்ட விளக்கம்
ஐந்தாம் பருவம் - (2013 – 2014 கல்வியாண்டு முதல்)
முதன்மைப்பாடம் : தாள் 10
திறனாய்வுக்கலை
13UTL 10
Core - X
பாட நோக்கம் :
திறனாய்வு வரலாறு, திறனாய்வு கற்பதினால் பெறும் பயன், திறனாய்வு வகைகளை அறியச்செய்தல், இலக்கியத்தைத் திறனாய்வு செய்யும் வழிமுறைகளை அறியச்செய்தல்.
மாணவர் பெறும் திறன்:
மாணவர் திறனாய்வு பண்புகளை, பல்வேறு திறனாய்வு வகைகளை அறிவர், திறனாய்வினை பாடல்களில் பொருத்தி பார்க்கும் திறன்பெறுவர். நடுநிலைமை, ஆராயும் திறன், கவனித்துப்படித்தல் போன்ற திறன்களைப் பெறுவர்.
உள்ளடக்கம்
அலகு 1 : திறனாய்வும் திறனாய்வு உத்திகளும்
திறனாய்வாளனும் திறனாய்வும் - திறனாய்வு வகைகள் – விளக்கமுறைத் திறனாய்வு – ஒப்பீட்டுத்திறனாய்வு – மதிப்பீட்டுமுறைத் திறனாய்வு – ரசனைமுறை (அ) அழகியல் திறனாய்வு – பாராட்டுமுறைத் திறனாய்வு – முடிபுமுறைத்திறனாய்வு – விதிமுறைத் திறனாய்வு – செலுத்து நிலை (அ) படைப்பு வழித்திறனாய்வு – பகுப்புமுறைத் திறனாய்வு.
அலகு 2 : திறனாய்வு அணுகுமுறைகள்
அறிவியல் வழி அணுகுமுறை – சமுதாயவியல் திறனாய்வு – அடிப்படைகள் – சமுதாயப் பின்புலம் - சமுதாய மதிப்புகள் – வரையறை – வரலாற்றியல் திறனாய்வு – உளவியல் அணுகுமுறை – மொழியியல் அணுகுமுறை.
அலகு 3 : திறனாய்வு வகைகள்
உருவவியல் திறனாய்வு – அமைப்பியல் – உருவவியலும், அமைப்பியலும் - அமைப்பியலின் உருவாக்கம் - பிராப் விளக்கம் - பின்னை அமைப்பியல் – பனுவலின் வீச்சுகள் – கட்டவிழ்ப்பு – நவீனத்துவம் - பின் நவீனத்துவம்.
அலகு 4 : திறனாய்வு கொள்கைகள்
அறநெறி அணுகுமுறை – மார்க்சியத் திறனாய்வு – இயக்கவியல் – உருவமும் உள்ளடக்கமும் - தீர்வும் கலைப்பண்பும் - பிரதிபலிப்புக் கொள்கை – தொல் படிமவியல் அணுகுமுறை – இலக்கியவகை நிலையியல்.
அலகு 5 : நவீனத் திறனாய்வு கொள்கைகள்
திறனாய்வும் தத்துவ நெறியும் - தலித்தியமும் திறனாய்வும் - பெண்ணியத் திறனாய்வு – தமிழில் திறனாய்வு ஒரு வரலாறு.
திட்டக்கட்டுரைகள்:
1. பாராட்டுமுறைத் திறனாய்வு முதல் செலுத்துமுறை திறனாய்வு வரை உள்ள திறனாய்வு வகைகளை ஒப்படைப்புகளாக எழுதிவரச்செய்தல்.
2. திறனாய்வு வரையறைகளை, நிறைகுறைகளை எழுதச்செய்தல்.
குழுச் செயல்பாடு :
1. திறனாய்வு இலக்கியங்களை நூலகத்தில் தேடிப்பார்க்கச் செய்தல்
2. குழுக்களிடம் ஒவ்வொரு திறனாய்விற்கும் உரிய பொருத்தமான நூல்களை நூலகத்தில் கண்டறியச் செய்தல்
பாடநூல் :
1. தி.சு. நடராசன் - திறனாய்வுக்கலை,
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,
41 –பி சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்,
சென்னை – 600 098.
பார்வை நூல்கள்:
1. சு. பாலசந்திரன் - இலக்கியத்திறனாய்வு,
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்,
41 –பி சிட்கோ இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்,
சென்னை – 600 098.
2. க.பஞ்சாங்கம் - இலக்கியக்கொள்கையும், திறனாய்வுக்கோட்பாடும்
அன்னம் வெளியீடு,
சிவகங்கை.
இணைய முகவரிகள்:
1.
http
: //thoguppukal.com
www.sagotharan.wordpress.com--------------------------------------------------------------------------------------------------------------
அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),சேலம் - 636 007.
IIIபி.ஏ. தமிழ் – பாடத்திட்ட விளக்கம்
ஐந்தாம் பருவம் பருவம் - (2013 – 2014 கல்வியாண்டு முதல்)
முதன்மைப்பாடம் : தாள் 11
13UTL 11
Core - XI
சங்க இலக்கியம் - அகம்பாட நோக்கம் :
சங்க இலக்கியங்களை பதம்பிரித்து படித்தல், அகஇலக்கியங்கள் காட்டும் மனித வாழ்விற்குரிய அறன்களை அறியச்செய்தல்.
மாணவர் பெறும் திறன்:
சமுதாய வாழ்வில் அறன், குடும்ப வாழ்வியல் அறன்களை உணர்ந்து கொள்ளுதல், உள்ளுறை, இறைச்சி, அணி, வரலாற்றுச் செய்திகளை அறிவர்.
உள்ளடக்கம்
அலகு 1 : குறிஞ்சித்திணைப்பாடல்கள் (நற்றிணை)
1. தலைவன் கூற்று - கழைபடு . . . (95)
2. தலைவி கூற்றி - நின்ற சொல்லர் . . . ( )
3. தோழி கூற்று - ஆளில் பெண்டிர் . . . (353)
4. பாங்கன் கூற்று - நயனும் நாண்பும் . . . ( 160)
5. பரத்தை கூற்று - எம் நயந்து உறைவி . . . (176)
அலகு 2 : நெய்தல் திணைப்பாடல்கள் (அகநானூறு)
1. தலைவி கூற்று - கானலும் கழறாது . . . ( 170 )
2. தலைவி கூற்று - நகைநனி . . . (180)
3. தலைவன் கூற்று - அம்மவாழி . . . (130 )
4. தலைவன் கூற்று - உவர்விளை உப்பு . . . (390 )
5. தோழி கூற்று - பெருநீர் அழுவத்து . . . ( 20)
6. தோழி கூற்று - நெடுங்கயிறு வலந்த . . . (30 )
அலகு 3 : மருதத்திணைப்பாடல்கள்
(அ. ஐங்குறுநூறு)
1.தலைவி கூற்று - இம்மை உலகத்து . . . (66)
2. தலைவன் கூற்று - உழுந்து தலை . . . (86)
3. தோழி கூற்று - பொய்கை நீர்நாய் . . . ( 386)
4. காதற்பரத்தை - செல்லல் மகிழ்ந்த . . . ( )
5. பரத்தை கூற்று - நாண்கோள் . . . ( 216 )
ஆ.குறுந்தொகை
1.தலைவன் கூற்று -எவ்வி இழந்த . . . ( 19 )
2. தலைவி கூற்று - அள்ளூர் நன்முல்லை . . . (202 )
3. தோழிக்கூற்று - வாரலெஞ்சேரி . . . ( 258)
4. காதற்பரத்தை - கழனி மாசத்து . . . ( 8 )
5. இற்பரத்தை - அரிற்பவர்ப் பிரம்பின் . . . ( 364 )
அலகு 4 : முல்லைத்திணைப்பாடல்கள்
கலித்தொகை - முல்லைக்கலி ( 1 – 10 ) பாடல்கள்
அலகு 5 : பாலைத்திணைப்பாடல்
பத்துப்பாட்டு - பட்டினப்பாலை (முழுவதும்)
திட்டக்கட்டுரைகள்:
1. இல்லறக்கடமையாக விருந்தோம்பலைக் கூறும் பாடல்கள் எழுதச் செய்தல்
2. இல்லறத்தை நல்லறமாக்கும் நற்பண்புகள் கணவன் - மனைவி இருவருக்கும் தேவை என்பதை வலியுத்தும் பாடல்களின் கருத்தை எழுதச் செய்தல்
3. தோழியின் பங்கு, இனிய இல்லறம் மேம்பட உழைக்கும் உயரிய பண்பு இவற்றை எழுதச்செய்தல்
குழுச் செயல்பாடு :
ஒரு குறிப்பிட்ட பாடலை ஒரு குழு மாணவர்கள் பொருளடிப்படையிலும், சமூக அடிப்படையிலும், இலக்கிய நய அடிப்படையிலும் ஆராய்ந்து கருத்தைக் கூறுதல்
பாடநூல் :
1. கு.வெ.பாலசுப்ரமணியன், - சங்க இலக்கியம்,
Ncbh, சென்னை.
பார்வை நூல்கள்:
1. ச.வே.சுப்பிரமணியன், - சங்க இலக்கியம்,
மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
2. ந.சஞ்சீவி - சங்க இலக்கிய அட்டவணைகள்,
தமிழ்மண் பதிப்பகம், தி.நகர், சென்னை.
3. கா.அப்பாதுரையார் - சங்ககாலப் புலவர்கள்,
தமிழ்மண் பதிப்பகம், தி.நகர், சென்னை.
4. எம். நாராயண வேலுப்பிள்ளை - சங்க இலக்கியம் சொல்லோவியங்கள்,
திருமகள் நிலையம் , தி.நகர், சென்னை – 17
5. வ.சுப. மாணிக்கம் - தமிழ்க்காதல்- மணிவாசகர் பதிப்பகம்,
சென்னை.
இணைய முகவரிகள்:
1.
www.
tamilvu.org
2.
www.
sangampoemsinenglish.wordpress.com
-----------------------------------------------------------------------------------------------------
அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),
சேலம் - 636 007.
III பி.ஏ. தமிழ் – பாடத்திட்ட விளக்கம்
ஐந்தாம் பருவம் பருவம் - (2013 – 2014 கல்வியாண்டு முதல்)
Major Based
Elective Course - I1 3MBE1
பாட நோக்கம் :
1.திராவிட மொழிகள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவை என்பதைக் கற்பித்தல்
2.திராவிட மொழிகளுக்கெல்லாம் தாய்த்தமிழே என்பதை விளக்குதல்
3.திராவிட மொழிகள் ஆரிய மொழிகளினின்றும் வேறானவை என்பதை
எடுத்துரைத்தல்.
மாணவர் பெறும் திறன்:
1.மொழியியல் பற்றிய அறிவு மேம்படுகிறது.
2.மொழிக்குடும்பங்கள் பற்றிய தெளிவு பிறக்கிறது.
3.மொழிகளுக்கிடையிலான உறவு உணரப்படுகிறது.
உள்ளடக்கம்
அலகு – 1 :
மொழி மொழியியலும் - மொழியியலும் மரபு இலக்கணங்களும் - வரலாற்றுக்கு முற்பட்ட மொழிநிலை ஆய்வு – ஒப்பியல் ஆய்வு முறை- திராவிட மொழிக்குடும்ப ஒப்பாய்வின் வரலாறு – டாக்டர்.கால்டுவெல் –திராவிட மொழிப்பிரிவுகளும் உட்பிரிவுகளும் - தென்திராவிட மொழிகளும் உட்பிரிவுகளும் - நடுத்திராவிட மொழிகள் – வட திராவிட மொழிகள்.
அலகு - 2
ஒலியும் பிறப்பும் – உயிரொலிகளின் இயைபும் திரிபும் - ஒலி மாற்றங்கள்
அலகு – 3
மெய்யொலிகளின் இயைபும் திரிபும் - மெய்யொலி மாற்றங்கள் – உருபன்களும் சொல்லாக்கமும் - பெயர்ச்சொற்கள் – திணை, பால், எண் உணர்த்தும் முறை – வேற்றுமைகள்.
அலகு – 4
மூவிடப்பெயர்கள் – எண்ணுப்பெயர்கள் – வினைச் சொற்களின் அமைப்பும் சிறப்பும் - வினை வகைகள் – வினைச்சொற்கள் – காலம் காட்டும் முறைகள்.
அலகு – 5
எச்சங்களும் முற்றுகளும் - வினையடியாகப் பிறக்கும் பெயர்கள் – வினைப் பொருட்கள் – திராவிட மொழிகளின் தொடரமைப்பு.
திட்டக்கட்டுரைகள்:
1. தமிழ் மொழி வரலாறு
2. உயிரொலிகளின் பிறப்பு
3. மெய்யொலிகளின் பிறப்பு
4. மூவிடப் பெயர்கள்
குழுச் செயல்பாடு :
1. ஒரு தமிழ்ச் சொல்லுக்கு நிகரான பிற திராவிட மொழிச் சொற்களைச் சேகரித்தல்
2. பிற திராவிட மொழி நாவல், சிறுகதை, கவிதைகளை வாசித்தல்
பாடநூல் :
டாக்டர் ஜான் சாமுவேல் - திராவிட மொழிகளின் ஒப்பாய்வு (ஓர் அறிமுகம்), முல்லை நிலையம்,
9-பாரதிநகர் முதல்தெரு,
தி.நகர், சென்னை – 600 017.
பார்வை நூல்கள்:
1. கால்டுவெல் - திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்,
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,
சென்னை – 18.
2. மு.வரதராசன் - மொழிநூல்,
பாரி நிலையம்,
சென்னை.
3. தெ.பொ.மீ. - தமிழ்மொழி வரலாறு,
சூஊக்ஷழ, சென்னை.
4. கூ.ஞ.ஆநநயேமளாi - ழளைவடிசல டிக கூயஅடை டுயபேரயபந,
ஹnயேஅயடயi ருniஎநசளவைல,
ஊhனையஅயெசயஅ.
5. தங்கமணியன் - திராவிட மொழிகளின் ஒப்பீட்டாய்வு,
பாரி நிலையம், சென்னை.
இணைய முகவரிகள்:
------------------------------------------------------------------------------------------------
அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),
சேலம் - 636 007.
III பி.ஏ. தமிழ் – பாடத்திட்ட விளக்கம்
ஐந்தாம் பருவம் பருவம் - (2013 – 2014 கல்வியாண்டு முதல்)
Skill Based
Elective Course - III
சித்த மருத்துவம்13SBE3
பாட நோக்கம் :
சித்தமருத்துவம் முழுமையான மருத்துவம். மிகுந்த பயன்பாடுள்ள மருத்துகளை உடையது. தமிழர் நாகரிகத்தில் ஓர் அங்கமான மருத்துவக்கலையை மாணவர்களுக்குக் கற்பித்தல்
மாணவர் பெறும் திறன்:
சித்த மருத்துவத்தில் உணவே மருந்து என்ற கொள்கையை அறிகிறான். உணவின் நன்மை, தீமை, உண்ணும் முறை ஆகியனவற்றை அறிவர்
உள்ளடக்கம்
அலகு 1 : தமிழ் மருத்துவ வரலாறு பண்டையத் தமிழகத்தில் மருந்து – மருத்துவ வகைகள் – இசை, போர்க்களம், அறுவை, ஒட்டு, அழகு, சாவா, குழந்தை மருத்துவம் உள்ளிட்டவை – விலங்கு, தாவர மருத்துவம் - மருந்துப் பெயரால் அமைந்த சங்க நூல்கள் – புலவர்கள் – பாடல்கள் – தமிழ் மருத்துவ நெறி - உணவே மருந்து – மருத்துவத்தில் நான்கு பகுதிகள்.
அலகு 2 : தமிழ் மருத்துவக் கோட்பாடு
நானிலமும் நோய்களும் - மருத்துவக்கோட்பாடுகளில் உயிரியற்கொள்கை – பஞ்சபூதக் கொள்கை – அந்தணர் நெறி - ஆறு ஆதாரங்கள் – சோழர்கால மருத்துவம் - தமிழ் மருத்துவமும் பிற மருத்துவமும் - ஆயுள்வேதமும் தமிழ் மருத்துவமும் - தமிழ் மருத்துவத்தின் சிறப்பு – சுதந்திர இந்தியாவில் சித்த மருத்துவம் - தமிழ் நாட்டில் சித்த மருத்துவம் - சித்த மருத்துவம் தமிழ் மருத்துவமே.
அலகு 3 : தமிழில் மருத்துவ நூல்கள்
தமிழ் இலக்கியத்தில மருத்துவ இலக்கியம் - சித்தர்கள் – சித்தர் இலக்கியம் - மருத்துவ நூலாசிரியர் - மருத்துவர் மரபு – மருத்துவச் சுவடிகள் – தமிழ் மருத்துவத்தின் நிலை மாற்றம் - மருத்துவ நூல்கள் - சித்த மருத்துவ மற்றும் கால்நடை மருத்துவ நூல்கள் – பாவகையால் – நோயின் பெயரால் அமைந்தவை – மனநோய் நூல் வர்ம நூல்கள் – பரிபூரண நூல்கள்.
அலகு 4 : தமிழ் மருத்துவம்
சித்த மருத்துவக் கோட்பாடு – பஞ்சபூதம் - உலகமும் பஞ்சபூதமும் - பஞ்சபூதமும் - பஞ்சபூதங்களும் உடல் உறுப்பும் - பஞ்சபூதமும் நாடியும் - மருந்துப் பொருள் – பஞ்சபூத சித்தி – சித்த மருத்துவம் மருத்துவமே – சித்த மருத்துவத்தின் இயல்புகள் 16 – சித்த மருத்துவ ஒழுக்கம் - மருத்துவனுக்குரிய குணம் - நோய்த்தேர்வு முறை – நாடி – வாயுக்கள் – உயிர்த்தாதுக்கள்.
அலகு 5 : மருத்துவ நூல்கள் கூறும் நோய்கள்
நோய் – நோய்க்காரணங்கள் – நோய்களின் எண்ணிக்கை – கண்நோய் – காசநோய் – தலைநோய் – அம்மைநோய் – வர்மநோய் – நிலமும் நோயும் - உணவும் நோயும் - உலோகம் - நீர் - ஆடை – நோயின் வாயில்கள் – நோய் வகைகள் - மூலிகைகள் – மருந்தியல் – புடம் - பத்தியம் - கற்பம் - வர்மம் - காலமும் மருந்தும் - அறுவைச்சிகிச்சை.
திட்டக்கட்டுரைகள்:
1.சித்த மருத்துவ வரலாறு
2. சித்த மருத்துவம் தமிழ் மருத்துவமே
3. சித்த மருத்துவ முறைகள்
குழுச் செயல்பாடு :
1.மூலிகைகளைச் சேகரித்தல்
2. சித்த மருத்துவரை நேரில் சந்தித்தல்
பாடநூல் :
1. இரா.வாசுதேவன் - தமிழில் மருத்துவ இலக்கியங்கள்,
பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக்குளம், மேற்கு வீதி, மயிலாப்பூர்,
சென்னை – 4.
பார்வை நூல்கள்:
1. நாராயணசாமி - சித்தர் தத்துவம், தமிழ்ப்புத்தகாலயம், சென்னை.
2. இளமதி சானகிராமன் - சித்தர்களும் சமூகப்பார்வையும், குறிஞ்சிப் பதிப்பகம், புதுச்சேரி.
3. சாமி சிதம்பரனார் - சித்தர் கண்ட விஞ்ஞானம், மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம்.
இணைய முகவரிகள்:
1.
www.
thamizhkkuil.net
3.
malajps.blogspot.in
4.
mukttp.blogspot.in
5.
mooligaivazham-
kuppusamy.blogspot.com
----------------------------------------------------------------------------------------------------------
13 UENST
அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),சேலம் - 636 007.
III பி.ஏ. தமிழ் – பாடத்திட்ட விளக்கம்
ஐந்தாம் பருவம் - (2013 – 2014 கல்வியாண்டு முதல்)
(Skill Bassed Elective – IV) தாள் : 4
நூலகவியல்
பாட நோக்கம் :
நூலகத்தோற்றம், வரலாறு, பயன், நூலகவிதிகள், நூலகத்தைப் பயன்படுத்தும் முறை பற்றி அறியச்செய்தல்.
மாணவர் பெறும் திறன்:
நூலாசிரியர், தலைப்பு, பொருண்மை, வகை போன்ற ஏதாவது ஒன்றைக் கொண்டு நூலகத்தில் நூலைத் தேடும் திறனைப்பெறுதல்.
உள்ளடக்கம் அலகு 1 : நூலக அமைப்பும் வகைகளும்
நூல் என்பதன் பொருள் – நூலின் பெருமை – நூலின் தரங்கள் – நூலின் வகைகள் – நூலகம் - நூலக இடஅமைப்பு – நூலகக் கட்டடப்புற அமைப்பு – நூலகக்கட்டட அக அமைப்பு – நூல் தெரிந்தெடுத்தலில் கவனிக்க வேண்டிய முறைகள் – அடிப்படை விதிகள் – நூலகம் என்ற நிறுவனம் - நூலகத்தின் சமூகப்பயன் - நூலக வகைகள் – நூலக நிர்வாகத்தின் முக்கியத்துவம் - பல்வேறு பிரிவுகளை நிர்ணயிக்கும் காரணிகள் – பிரிவுகளின் அன்றாடப்பணிகள் – தொழில் நுட்பப்பிரிவு – காலமுறை இதழ்கள் பிரிவு.
அலகு 2 : நூலக குறிக்கோளும் விதிகளும்
குறிக்கோள் – பகுப்பு வரிசை ஒழுங்குமுறையின் முதல் நிலை – இரண்டாம் நிலை - மூன்றாம் நிலை – சங்கிலி வரிசைத் தொகுதி – விதிகள் – குறியீடுகளின் வகையும் தன்மையும் - குறியீடுகளின் பங்கு – குறியீடுகளின் வகைகள் – குறியீடுகளின் தன்மைகள் – நினைவாற்றல் பேணும் கலை – நினைவூட்டுக் குறியீடுகளின் பகுப்பு முறைப்பயன் - பகுப்பு முறை அட்டவணை நினைவூட்டுக் குறியீடுகள் பயன்படும்விதம் - தொடர்முறை நினைவூட்டுக் குறியீடுகள் – கோலன் பகுப்புமுறை – சொற்குறிப்பு – பெரும் பிரிவுகள் – தலைப்பு – விதி – பொது எண்களும் முறையும் - டூயிதசாம்ச பகுப்புமுறை – டுவியின் முறை – வங்கிகளில் புள்ளிவிவரம் - டெசிமல் பகுப்பு எண்கள் செய்முறைகள் – நூல் பதிப்பு விதிமுறைகள்.
அலகு 3 : நூற்பட்டியலும் ஆவணங்களும்
நூற்பட்டியின் நோக்கம் - வகைகள் – பகுப்பு வாரி நூற்பட்டி – நூற்பட்டி விதிமுறைகள் - கிளாசிபைடு கேட்லாக் கோடு – நூற்பட்டியின் பதிவு அட்டை – பதிவு எழுதும் முறை – காலமுறை இதழுக்கு நூற்பட்டி எழுதும்முறை – பிரத்தியோகப் பெயர்ச்சுட்டுப் பதிவு – கூடுதல் பொருள் பெயர்ச்சுட்டு பதிவு – பொதுவான பொருள் பெயர்ச்சுட்டுப் பதிவு – கட்டாயமில்லாத பொருள் பெயர்ச்சுட்டுப் பதிவுகள் – சாதாரண பொருள் பெயர்ச்சுட்டுப்பதிவுகள் – நூலகப்பணிகளின் பல்வேறு பிரிவுகள் – பட்டியிடுதல் – பதிவு செய்யும் முறை – நூல் விநியோகப்பிரிவு – புதுப்பித்தல் – விரைவு குறிப்புதவி பணி – ஆவணங்கள் பிரிவு – தகவல் தேர்ந்தறிவுப்புப் பணி – நோக்கீட்டுப்பணி – அதன் தன்மைகள் – நோக்கீட்டுப்பணியின் இயக்கங்கள் – வகைகள் – உடனடி செய்தி தரும் பணி – தொடர் செய்தி தரும் பணி.
அலகு 4 : நூல் வகைகளும் வரவு செலவு அறிக்கைகளும்
நோக்கீட்டு நூல்கள் விளக்கம் - வகைகள் – அகராதி – கலைக்களஞ்சியம் - வாழ்க்கை வரலாற்று நூல்கள் – ஆண்டுகள் – புவியியல் நூல்கள் – கையேடுகள் மற்றும் பணிநூல்கள் – நூற்றொகை – நெறி காட்டிகள் – நூல் தொலைந்து போவதற்கான காரணங்கள் – நூலகர் பொறுப்பு – நூல் இருப்பு சரிபார்த்தல் – அட்டைகள் மூலம் சரிபார்த்தல் – நன்மைகளும் தீமைகளும் - நூலகத்தின் நிதி – வரவு செலவு – வரவு செலவு திட்டத்தில் கவனிக்க வேண்டிய முறைகள் – ஆண்டு அறிக்கை.
அலகு 5 : இணைய நூலகம்
நூலக செயல்பாட்டில் மொழிபெயர்ப்பு – மொழிபெயர்ப்பின் பங்கு – பகுப்பாய்வு – இந்திய தேசிய அறிவியல் ஆவணமையம் - செயல்பாடுகள் – தேசிய மொழிபெயர்ப்பு – பாதுகாப்பு அறிவியல் ஆவணமையம் - நூலகம் வளரும் வலையமைப்பு – மொழிகளைக் கற்றுதரும் தளங்கள் – சந்தேகங்களுக்குள் நிகழும் மொழிபெயர்ப்புப்பணி – அரங்கநாதன் சங்கேதம் - மெல்வில் டூயி தசாம்ச சங்கேதம் - நூலக இணையதளம் - வலைப்பின்னல் – நேரடித் தகவல் தொடர்பு – வளரும் நூலக வலைப்பின்னல் – நூலக தகவல் தொடர்பு வலைப்பின்னல் நிலையம் - நூலகத்தில் மின்னணு அஞ்சலின் பங்கு – மின்னணு அஞ்சலின் நன்மைகள் – டிஜிட்டல் நூலகத்தின் அடிப்படைகள் – டிஜிட்டல் நூலக வளர்ச்சி.
திட்டக்கட்டுரைகள்:
1. நூலக வரலாறு, தசம வகைப்பாடு
2. நூலகவியலின் ஐந்துவிதிகள்
3. இணைய நூலகங்கள் பற்றிய ஒப்படைப்புகள் கொடுக்கப்படலாம்.
குழுச் செயல்பாடு :
நூலகங்களுக்குச் சென்று அங்குள்ள விதிமுறைகளையும், ஆவணப்படுத்தப்படும் முறைகளையும் நூல்களுக்கு எண்ணிடும் முறையையும் அறிந்து வரச்செய்தல்.
பாடநூல் :
1. மு. ராமச்சந்திரன் நூலகவியல்,
தாமரைப் பப்ளிகேசன்ஸ் (பி) லிட்,
42-க்ஷ சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட்,
அம்பத்தூர், சென்னை – 600 098.
ஞா : 26251968
பார்வை நூல்கள்:
1. தில்லைநாயகம் நூலகக்கதை,
வள்ளுவர் பண்ணை, சென்னை.
2. தில்லைநாயகம் நூலகப்பணி,
வள்ளுவர் பண்ணை, சென்னை.
3. இ. பாக்கியநாதன் நூலகவியல்,
காந்தளகம், சென்னை.
4. தில்லைநாயகம் நூலக உணர்வு,
வள்ளுவர் பண்ணை, சென்னை.
5. தில்லைநாயகம் இந்திய நூலக இயக்கம்,
வள்ளுவர் பண்ணை, சென்னை.
இணைய முகவரிகள்:
1.
No comments:
Post a Comment