மூன்றாம் பருவம்
அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),சேலம் - 636 007. எம்.ஏ., தமிழ் – பாடத்திட்ட விளக்கம்
(2013 – 2014 கல்வியாண்டு முதல்)
தாள் : 9 தொல்காப்பியம் - பொருளதிகாரம் (செய்யுளியல் நீங்கலாக)
(இளம்பூரணர் உரை)
13PTL 09
Core - IX
பாடநோக்கம் :
1. தொல்காப்பியரின் பொருளியல் கோட்பாடுகளை அறிதல்
2. தொல்காப்பியரின் கவிதையியலைக் கற்றல்
3. பழந்தமிழரின் வாழ்வியலை அறிதல்
மாணவர் பெறும் திறன் :
1. அகம், பொருள் என்ற பொருளியல் பாகுபாட்டை அறிகிறார்கள்
2. செய்யுள் இயற்றும் திறன் பெறுகிறார்கள்
3. தொல்காப்பியரின் அணியியலை அறிகிறார்கள்
உள்ளடக்கம்
அலகு : 1 அகத்திணையியல்
அலகு : 2 புறத்திணையியல்
அலகு : 3 களவியல், கற்பியல்
அலகு : 4 பொருளியல், மெய்ப்பாட்டியல்
அலகு : 5 உவமவியல், மரபியல்
இளம்பூரணர் உரைத்திறன்
திட்டக்கட்டுரைகள்
1. தொல்காப்பியம் திணைக்கோட்பாடுகள்
2. எண்வகை மெய்ப்பாடுகள்
3. தொல்காப்பியம் - அணியிலக்கணச் செய்திகள்
குழுச்செயல்பாடு
1. அகத்திணை – அன்பின் ஐந்திணைக் கருப்பொருள்களைக் கண்டறிந்து சேகரித்தல்.
2. சங்க இலக்கியங்களில் திணைமயக்கப் பாடல்களைத் தொகுத்துத் திணை வரையறை செய்தல்
பாடநூல்கள் :
இளம்பூரணர் (உரை) தொல்காப்பியம் - பொருளதிகாரம்,
சைவ சித்தாந்த நூற்பதிப்பு கழக வெளியீடு,
சென்னை.
பார்வை நூல்கள் :
1. சங்க இலக்கியத்தில் பாடாண்திணை, 1975, நா.செயராமன், மீனாட்சி புத்தக நிலையம், மதுரை.
2. சங்க இலக்கியத்தில் புறப்பொருள், 1986, கு.வெ.பாலசுப்பிரமணியன், மீரா பதிப்பகம், புதுக்கோட்டை.
3. தமிழ்க்காதல், 1962, வ.சுப.மாணிக்கம், பாரி நிலையம், சென்னை.
4. """"திணைக்கோட்பாட்டின் சமூக அடிப்படைகள்"" பண்டைத் தமிழ்ச்சமூகம், வரலாற்றுப் புரிதலை நோக்கி, 2003, கார்த்திகேசு சிவத்தம்பி, மக்கள் வெளியீடு, சென்னை.
5. தொல்காப்பிய இலக்கியக் கோட்பாடுகள்,(கருத்தரங்கக் கட்டுரைகள்), 1988.
6. ஜான் லாசரஸ், கு.பகவதி (பதிப்பாசிரியர்கள்), உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
7. தொல்காப்பியம், கவிதையியல், 1999, ச.அகத்தியலிங்கம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
8. தமிழிலக்கியத்தில் அகப்பொருள் மரபுகள் ஒரு வரலாற்றுப்பார்வை, த. வசந்தன், சென்னைப்பல்கலைக்கழகம், சென்னை, 1990.
9. தொல்காப்பியரின் பொருளிலக்கணக்கோட்பாடுகள், மு. ஹம்ஸா, ராபியா பதிப்பகம், சென்னை, 2007.
10. பகுப்பாய்வு நெறியில் சங்க இலக்கியம், இலா. குளோரியா சுந்தாமதி, உலகத்தமிழ்க் கல்வி இயக்கம், சென்னை, 1987.
இணைய முகவரிகள்:
1.
------------------------------------------------------------------------------------------------------
13PTL 10
Core - X
அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),
சேலம் - 636 007.
எம்.ஏ., தமிழ் – பாடத்திட்ட விளக்கம்
மூன்றாம் பருவம் - (2013 – 2014 கல்வியாண்டு முதல்)
தாள் : 10 அற இலக்கியங்கள்
பாட நோக்கம் :
1. அற இலக்கியங்கள் குறித்த தெளிவான கருத்துகளைப் பயிற்றுவித்தல்
2. பழந்தமிழரது சமுதாய வாழ்வில் அறக்கருத்துகள் வலியுறுத்தப்பட வேண்டிய
சூழலின் பின்னணியை விளக்குதல்
3. காலந்தோறும் அறக்கருத்துகளைத் தாங்கிய இலக்கியங்கள் தமிழில் தோன்றிய
பின்புலத்தை அறிதல்
மாணவர் பெறும் திறன்:
1. பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள் குறித்த வகை தொகை அறிதல்
2. சொற்களஞ்சியப் பெருக்கம் கொள்ளல்
3. பாடலின் மொழி அமைப்பு , யாப்பமைப்பு அறிதல்
4. சமுதாய வரலாறு அறிதல்
உள்ளடக்கம்
அலகு : 1
திருக்குறள் - மூன்று அதிகாரங்கள்
1. அவையறிதல்
2. சிற்றினம்சேராமை
3. அறன் வலியுறுத்தல்
பழமொழி நானூறு - முப்பது பாடல்கள் (1 – 30)
அலகு : 2
நாலடியார் - இரண்டு அதிகாரங்கள்
1. ஈகை
2.கல்வி
நான்மணிக்கடிகை - 11 – 20 (பத்துப்பாடல்கள்)
ஆசாரக்கோவை - 71 – 80 (பத்துப்பாடல்கள்)
அலகு : 3
சிறுபஞ்சமூலம் - 1 – 10 (பத்துப்பாடல்கள்)
இன்னா நாற்பது - 31 – 40 (பத்துப்பாடல்கள்)
இனியவை நாற்பது - 1 – 10 (பத்துப்பாடல்கள்)
அலகு : 4
திரிகடுகம் - 1 – 10 (பத்துப்பாடல்கள் )
ஏலாதி - 1 – 10 (பத்துப்பாடல்கள்)
முதுமொழி காஞ்சி - மூன்று பத்துகள்
1. சிறந்த பத்து
2. அறிவுப்பத்து
3. பழியாப்பத்து
அலகு : 5
பிற்கால நீதி நூல்கள் - 1.ஆத்திச்சூடி
2.கொன்றைவேந்தன்
3.மூதுரை
4.பாரதி ஆத்திச் சூடி
5.பாரதிதாசன் ஆத்திச் சூடி
திட்டக்கட்டுரைகள் :
1. அற இலக்கியங்களின் தோற்றமும் வகைமையும்
2. அற இலக்கியங்கள் உரைக்கும் இல்லற நெறி
3. அற இலக்கியங்களில் உவமை
4. அற இலக்கிய யாப்பும் பொருளும்
5. அற இலக்கியத் தோற்றப்பின்னணி
குழுச்செயல்பாடு:
1. மாணவர்கள் குழுவாகப்பிரிந்து தனித்தனி அற இலக்கியங்கள் கூறும் அறக்கருத்துகளை எடுத்துரைத்தல்
2. பொருள் மையம் கொண்ட அடிகளை எடுத்துக்காட்டி அவற்றை மனனம் செய்து உரைத்தல்
3. அற இலக்கியப் பின்னணித் தகவல்களைத் திரட்டி பொருத்திக் கூறல்.
பார்வை நூல்கள் :
1. புன்னைவனநாதன்.ம.சி. (உரை) பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்,
மூலமும் உரையும்,
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,
சென்னை.
2. தி.க. பாலசுந்தரம் (உரை) பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள்,
மூலமும் உரையும்,
சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,
சென்னை.
3. ....................... நீதிக்களஞ்சியம்,
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், அம்பத்தூர்,
சென்னை.
4. ....................... அற இலக்கியக்களஞ்சியம்,
தமிழ்க்கோப்பியம், சென்னை.
இணைய முகவரி:
1.Madurai
Project
2.Tamil virtual university
------------------------------------------------------------------------------------------------
13PTL
11
Core - XI
அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),
சேலம் - 636 007.
எம்.ஏ. தமிழ் – பாடத்திட்ட விளக்கம்
மூன்றாம் பருவம் - (2013 – 2014 கல்வியாண்டு முதல்)
முதன்மைப்பாடம் : தாள் 11
ஆய்வு நெறிமுறைகள்
பாட நோக்கம் :
1.ஆராய்ச்சி நெறிமுறைகளைக் கற்பித்தல்
2.களப்பணிக்கான திறன்களைக் கற்பித்தல்
மாணவர் பெறும் திறன்:
1.ஆராய்ச்சி மனப்பான்மை பெறுகின்றனர்
2.மொழிப்பிழைகளைக் களைந்து கொள்வர்
3.மொழியாக்கச் செம்மை பெறுவர்
உள்ளடக்கம்
அலகு 1 : ஆய்வும் தலைப்பும்
ஆய்வு சொற்பொருள் விளக்கம் - அறிவியல் முறை ஆய்வு – ஆய்வாளரின் பண்புகள் – இலக்கிய ஆய்வில் அறிவியல் நெறியின் தேவையும் பயன்பாடும் - வகையும் தொகையும் - ஆய்வுத்தலைப்பைத் தேர்ந்தெடுத்தல் – தலைப்புகளின் வகைகள் – ஆய்வுக்களம் - சிக்கலை மையமிட்ட தலைப்புகளைத் தேர்ந்தெடுக்க உதவும் செய்திகள் – ஆய்வுத்தலைப்பு குறித்து யங் அம்மையார் கூறும் செய்திகள்.
அலகு 2 : ஆய்வு நெறியும் உத்தியும்
ஆய்வு நெறித்திட்டம் - தகவல் வாயில்கள் – வகைகள் – துணை நூற்பட்டியல் உருவாக்குதல் – குறிப்பட்டை – ஆய்வின் தன்மையும் நோக்கமும் - சமூகப் பண்பாடுத் தொடர்பு – ஆய்வின் நில எல்லை – ஆய்வின் கால எல்லை – ஆய்வு எல்லை ( ஆய்வுப் பரப்பு) – தரவுகளைத்தேர்ந்தெடுக்கும் அடிப்படைகள் – தரவுகளைத் திரட்டப் பயன்படும் உத்திகள் – உற்றுநோக்கல் – பேட்டி – வினா நிரலும் பட்டியலும் - நிகழாய்வு.
அலகு 3 : கருதுகோளும் ஆய்வு வகைகளும்
கருதுகோளின் இலக்கணம் - கருதுகோளை உருவாக்கும் வாயில்கள் – நல்ல கருதுகோளின் இலக்கணம் - கருதுகோளை உருவாக்கும் விதம் - கருதுகோளைச் சோதித்துப்பார்க்கும் முறை – பிரித்தெடுக்கும் முறை – வகைகள் – வரலாற்றுத் தரவுகளும் இலக்கிய ஆய்வும் - சமூக ஆய்வும் வரலாறும் - இலக்கிய ஆய்வும் வரலாறும் - வரலாற்று முறையின் இன்றியமையாமை – வரலாற்றுத் தரவுகளின் வாயில்கள் – ஆவணங்களைப் பயன்படுத்தும் முறை – வரலாற்று ஆய்வின் வரையறைகள் – வரலாற்றுத் தரவின் ஒத்த தன்மை.
அலகு 4 : உற்று நோக்கலும் வினா நிரலும்
உற்று நோக்கல் – அதன் பயன்கள் – கருதுகோளும் உற்று நோக்கலும் – வகைகள்
– கள உற்றுநோக்கல் ஆய்வுகளை அமைத்தல் – தன்னை உற்று நோக்கல் – உற்று நோக்கலின் இன்றியமையாமை – உற்று நோக்கலில் உள்ள இடர்பாடுகள் – வினாநிரலும் பட்டியலும் - வினா நிரலின் வகைகள் – பட்டியலின் வகைகள் – வினா நிரல் பட்டியல் உருவாக்கும் முறை – அமைப்பு – உள்ளடக்கம் - மொழிநடை – வினாக்களின் வகைகள் – இயல்புகள் – அதில் உள்ள இடர்பாடுகள்.
அலகு 5 : பேட்டி மற்றும் துணைநூற்பட்டியல்
பேட்டி – வகைகள் – பேட்டி நிகழ்த்துவதில் சில உத்திகள் – அதன் பயன் - பேட்டி காண்பதில் உள்ள இடர்பாடுகள் – தமிழியல் ஆராய்ச்சியின் தோற்றம் - பின்னிணைப்பு – வினா நிரல் – பட்டியல் – நிறைவு செய்யப்பட்ட வினா நிரல் – பேட்டி – துணை நூற்பட்டியல் – கலைச்சொல் பட்டியல் – ஆசிரியர் பெயர் அகராதி.
திட்டக்கட்டுரைகள்:
1.ஆராய்ச்சி வளர்ச்சியும் வரலாறும்
2.ஆராய்ச்சி நெறிமுறைகள்
3.ஆய்வேடு அமைப்பு
4.ஆய்வாளர் திறன்கள்
5.ஆய்வுப் பொருள் சார்ந்த பயிற்சிக்கட்டுரை
குழுச் செயல்பாடு :
அவரவர் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் – ஒருவர் பெற்ற தரவுகள் மற்றவருக்கு உதவுமாறு பகிர்தல் – ஒப்பிடுதல்.
பாடநூல் :
டாக்டர் முத்துச் சண்முகன், - இலக்கிய ஆராய்ச்சி நெறிமுறைகள்,
டாக்டர் சு.வேங்கடராமன் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்(பி) லிட்.
அம்பத்தூர், சென்னை – 600 098
பார்வை நூல்கள்:
1. ஆ. சதாசிவம் ஆராய்ச்சிக்கட்டுரை எழுதும் முறை,
யாழ்ப்பாணம், ஆரிய திராவிட பாஷாபி
விருத்திச் சங்கம்.
2. ச.வே. சுப்பிரமணியன் (பதி) ஆராய்ச்சி நெறிமுறைகள்,
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
3. பொன்னுசாமி ஆராய்ச்சி முறையியல் ஓர் அறிமுகம்,
கலா பதிப்பகம், கோயம்புத்தூர்.
4. தே. லூர்து நாட்டார் வழக்காற்றியல் – களஆய்வு,
பாரிவேள் பதிப்பகம், பாளையங்கோட்டை.
5. ஈ.சா. விசுவநாதன் ஆய்வு நெறிமுறைகள்,
கிரியா பதிப்பகம், சென்னை.
இணைய முகவரிகள்:
1www.visumbu.wordpress.com
2.http://vjpremalatha.blogspot.in/
3.www.techtamil.com
4.
ksrcastamildepartment.blogspot.com
5.
tamilwriters.net
7.
duraiarasan.blogspot.com
8.
www.santhan.com
--------------------------------------------------------------------------------------
13PTL12
Core - XII
அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),
சேலம் - 636 007.
எம்.ஏ. தமிழ் – பாடத்திட்ட விளக்கம்
மூன்றாம் பருவம் - (2013 – 2014 கல்வியாண்டு முதல்)
முதன்மைப்பாடம் : தாள் 12
இணையத்தமிழ்
பாட நோக்கம் :
1. கணினி பயன்பாடு மற்றும் இணையப் பயன்பாட்டினை மாணவர்களுக்கு அறிமுகம் செய்தல்.
மாணவர் பெறும் திறன்:
இணையம் மூலமாக மாணவர்கள் இலக்கண இலக்கியத் தரவுகளைத் திரட்டிப் பயன்பெறுதல்.
உள்ளடக்கம்
அலகு 1 : கணினி வரலாறு
கணினி தலைமுறைகள் – பாகங்கள் – வன்பொருள் – மென்பொருள் – கணினி மொழிகள் பயன்கள் விண்டோஸ் - எம்.எஸ். ஆபீஸ் - வேர்ட் - பவர் பாயிண்ட் - எக்ஸெல் – தமிழில் எம்.எஸ். ஆபிஸ் - ஷார்ட்கட் கீஸ்.
அலகு 2 : இணைய வரலாறு
இணையம் விளக்கம் - வளர்ச்சி தமிழ் எழுத்துரு வளர்ச்சி – கணினியில் இணையத்தமிழ் – மாநாடுகள் – கருத்தரங்குகள் – இணைய இணைப்பு பெறும் முறை – இணைய இணைப்பு வழங்கும் நிறுவனங்கள் – இமெயில்.
அலகு 3 : இணையத்தமிழ்
எழுத்துரு வடிவங்கள் – மின் நூலகங்கள் – பல்கலைக்கழகம் - அகராதிகள் – தரவுத்தளங்கள் – இணையத்தளங்கள் – சமூக வலைத்தளங்கள் – பேஸ்புக் - டிவிட்டர் - லிங்டன் - விக்கிப்பீடியா – இயந்திர மொழிபெயர்ப்பு.
அலகு 4 : இணைய இலக்கிய தளங்கள்
இணைய இதழ்கள் – உள்ளடக்கம் - வகைப்பாடு – நிறைகுறை – வணிக நிலை – படைப்புகள் – வலைப்பூக்கள் – இலக்கியம் - ஆன்மீகம் - அறிவியல் – வலைப்பூ திரட்டிகள் – பங்கேற்கும் முறை.
அலகு 5 : கணினி அச்சுக்கோப்பு
கணினி அச்சுக்கோப்புக்கு உதவும் பேஜ்மேக்கர் - கோரல்டிரா, அடோப்டோட்டோ ஷாப் - பேஜ்மேக்கரை கையாளும் முறை – ஒன்பது மெனுபார் பற்றிய அறிமுகம் - புத்தக வடிவமைப்பு – பக்க அளவு வடிவமைப்பு.
திட்டக்கட்டுரைகள்:
1. கணினி வரலாறு
2. இணையம் தோற்றம், வளர்ச்சி
3. சமூக வலைத்தளங்கள் – பயன்பாடு
குழுச் செயல்பாடு :
சமூக வலைத்தளங்களில் மாணவர்கள் இணைந்து செயல்படுதல்.
பாடநூல் :
1. இணையமும் தமிழும் துரைமணிகண்டன்,
நன்நிலம் பதிப்பகம்,
சென்னை.
2. இணையத்தில் தமிழ் சிற்றிதழ்கள் தேனி. மு. சுப்ரமணி,
மணிவாசகர் பதிப்பகம்,
சென்னை.
3. டிடிபி ஆண்டோபீட்டர்,
வளர்தமிழ் பதிப்பகம்,
சென்னை.
பார்வை நூல்கள்:
1. துரைமணிகண்டன் இணையத்தில் தமிழ்த்தரவுத் தளங்கள்,
கௌதம் பதிப்பகம், பாடி, சென்னை – 50.
2. துரைமணிகண்டன் தமிழ்க்கணினி இணையப்பயன்பாடுகள்,
கமலினி பதிப்பகம், தஞ்சாவூர்.
94862 65886.
3. துரைமணிகண்டன் இணையத்தில் தமிழ் வலைப்பூக்கள்,
கௌதம் பதிப்பகம், பாடி, சென்னை – 50.
90422 76544.
4. வே. தமையந்திரன் இன்டர்நெட் ஒரு நவீன பந்தம்,
பூங்கொடி பதிப்பகம், சென்னை.
5. ராம்குமார் இண்டர்நெட்,
மணிவாசகர் பதிப்பகம், சென்னை.
இணைய முகவரிகள்
www.techtamil.com
- www.computertamil.eu
- www.karpom.com
- www.bloggernanban,com
- www.htmltags.com
- -------------------------------------
13GENST
Non Major
Elective Course -II
அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),
சேலம் - 636 007.
எம்.ஏ., தமிழ் – பாடத்திட்ட விளக்கம்
மூன்றாம் பருவம் - (2013 – 2014 கல்வியாண்டு முதல்)
General
Studies for Competitive Examinations
ghl neh¡f« :
பாட நோக்கம் :
மாணவர்களுக்குப் போட்டித் தேர்வுகளுக்குத் தேவையான பயிற்சியளித்தல்
மாணவர் பெறும் திறன்:
பொது அறிவு – நடப்பியல் குறித்த அறிவைப் பெறுதல்
உள்ளடக்கம்
அலகு 1 : இந்தியக் கொள்கை வரையறை
இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் சிறப்பியல்புகள் – அடிப்படை உரிமைகள் – மாநிலக் கொள்கைகளும் வழிகாட்டு நெறிமுறைகளும் - குடியரசுத் தலைவர் - பாராளுமன்றம் - நீதித்துறை – மத்திய மாநில உறவுகள் – மாநில அரசு – உள்ளாட்சி நிர்வாகம்.
அலகு 2 : புதிய இந்தியக் கொள்கை
இந்திய தேசிய எழுச்சி – இந்திய தேசிய காங்கிரஸ் - மிதவாதிகள் – தீவிரவாதிகள் – போராட்டக்காரர்கள் – காந்தீய இயக்கங்கள் – இந்திய பிரிவினை – இந்திய மாநிலங்களின் ஒருங்கிணைவு.
அலகு 3 : பொருளாதாரமும் புவியமைப்பும்
ஐந்தாண்டுத் திட்டங்களும் வளர்ச்சிகளும் - தேசிய வருமானம் - விலைவாசி, பணவீக்கம் - தாராளமயமாக்கல் – தனியார் மயமாக்கல் – அயல்நாட்டு வாணிகள் – பணம் மற்றும் வங்கிகள் – இந்தியாவின் இயற்கையமைப்பு – பருவ காலங்கள் – விவசாயம் -தொழில்.
அலகு 4 : பன்னாட்டு அரசியல்
இந்திய அயல்நாட்டுக்கொள்கை – அயல்நாட்டுக்கொள்கை – அமெரிக்கா – இரஷ்யா – சீனா – ஐக்கிய நாடுகள் – தீவிரவாதம் - தெற்காசிய நாடுகளின் கூட்டமைப்பு – உலகப்பொருளாதார மையம்.
அலகு 5 : அறிவியலும் தொழில்நுட்பமும்
உயிர்தொழில் நுட்பவியல் – நானோ தொழில்நுட்பம் - செய்தி, மக்கள் தொடர் தொழில்நுட்பம் - விண்வெளி ஆய்வு – கடலாய்வு அறிவியல் – புவியடுக்கு அறிவியல் – இராணுவ பாதுகாப்பு அறிவியல் – இயற்கை சீற்றப்பாதுகாப்பு நிர்வாகம்.
திட்டக்கட்டுரைகள்:
1,அடிப்படை உரிமைகள் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளுக்கான வேறுபாடுகளைக்குறித்து எழுதுக.
2,இந்திய இயற்கையமைப்பு குறித்து கட்டுரை வரைக.
3. இந்திய பொருளாதார ஐந்தாண்டுத் திட்டங்கள் குறித்து கட்டுரை வரைக.
4. இந்திய வெளியுறவுக் கொள்கையின் சிறப்பு குறித்து எழுதுக.
5. இயற்கைச் சீற்றம் பாதுகாப்பு குறித்து எழுதுக.
குழுச் செயல்பாடு :
1. மாதிரி பாராளுமன்றம் அமைத்தல்.
2. விடுதலைப் போராட்டத் தலைவர்களின் படங்களைச் சேகரித்தல்.
3. அறிவியல் கண்டுபிடிப்புகள் தொடர்பாக படங்களைச் சேகரித்தல்.
பார்வை நூல்கள்:
1.
Fadia - “Politics & Government of
India”
2. “International Relations” –
Bookhieve Publications
3. Dult and Sundaram – “Indian
Econaomy”
4. Bipan Chandra – “Freedom Struggle
in India”
5. “Science & Technology” –
Spectrum Publications
6. Standaral National Newspapers
7. Compatitive Examinations
Magazines
இணைய முகவரிகள்:
-------------------------------------
நான்காம் பருவம்
அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),சேலம் - 636 007.எம்.ஏ., தமிழ் – பாடத்திட்ட விளக்கம்
நான்காம் பருவம் - (2013 – 2014 கல்வியாண்டு முதல்)
நான்காம் பருவம் - (2013 – 2014 கல்வியாண்டு முதல்)
தாள் : 13 சங்க இலக்கியங்கள்
13PTL 13Core - XIII
பாட நோக்கம் :
1.பழந்தமிழ் இலக்கியங்கள் குறித்த தெளிவான பயிற்சி அளித்தல்
2.பழந்தமிழரது இலக்கியக் கொள்கைகளை உணர்த்தல்
3.மக்கள் வாழ்வியல் நெறிகளைப் பயிற்றுவித்தல்
4.பழந்தமிழரது பல்துறை அறிவாற்றலை அறிதல்
மாணவர் பெறும் திறன்:
1.பழந்தமிழ் இலக்கியங்களை வாசிக்கும் திறன்பெறுகின்றனர்
2.பழந்தமிழ்ச் சொற்கள் மற்றும் பொருள் அறிவர்
3.அக, புற இலக்கியக் கூறுகளைப் பகுத்தறிவர்
உள்ளடக்கம்
அலகு : 1
குறுந்தொகை - 41 (காதர் உழையர்) முதல்
50 (ஐயவி அன்ன) முடிய 10 பாடல்கள்
நற்றிணை - 51 (யாங்குச் செய்வம்) முதல்
60 (மலை கண்டன்ன ) முடிய 10 பாடல்கள்
அகநானூறு - 41 (வைகு புலர் விடிய ) முதல்
45 (வாடல் உழுங்சில் ) முடிய 5 பாடல்கள்
அலகு : 2
கலித்தொகை - 2, 44 (பாலைத்திணை)
67( குறிஞ்சித்திணை)
107( மருதத் திணை)
119 ( நெய்தல் திணை)
பரிபாடல் - செவ்வேள் – 14 (கார்மலி)
திருமால் – 13 (மணிவரை)
மதுரை (முழுவதும்)
வையை 16 (கரையே)
அலகு : 3
புறநானூறு - பிசிராந்தையார், ஆவூர் மூலங்கிழார் பாடல்கள்
பதிற்றுப்பத்து - பரணர் பாடிய ஐந்தாம் பத்து
அலகு : 4
பத்துப்பாட்டு - பெரும்பாணாற்றுப்படை முழுவதும்
அலகு : 5
பத்துப்பாட்டு - குறிஞ்சிப்பாட்டு
திட்டக்கட்டுரைகள் :
1.சங்க இலக்கியங்களில் தமிழர் வாழ்வியல் 2.அகத்திணைக் கூறுகள்
3.புறத்திணைக்கூறுகள் 4.எட்டுத்தொகை நூல்கள் 5.பத்துப்பாட்டில் திணையும் துறையும்
குழுச்செயல்பாடு:
1.பாடப்பகுதியில் உள்ள பாடல் ஒன்றின் கூறுபாடுகளை மாணவர் பிரித்துத் தனித்தனியே நயம் சுட்டல்
2.புலவர்களின் இலக்கிய நடையைத் திறனாய்தல்
பார்வை நூல்கள் :
1. சாமி சிதம்பரனார் - பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும்,
பூம்புகார் பதிப்பகம்,
சென்னை – 1.
2. தமிழண்ணல் - பரிசில் வாழ்க்கை, பாரி நிலையம், சென்னை – 1.
3. வீ.சி.சசிவல்லி - பழந்தமிழர் தொழில்கள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை – 113.
4. கு.சிவபிசகாசம் - புறநானூற்றில் வாழ்வியல் விழுமியங்கள்,
திருக்குறள் பதிப்பகம்,
சென்னை – 78.
5. ரா.பி.சேதுப்பிள்ளை - தமிழர் வீரம், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை – 14.
6. ஆ.தட்சிணாமூர்த்தி - சங்க இலக்கியம் உணர்த்தும் மனித உணர்வுகள்,
மங்கையர்க்கரசி பதிப்பகம், தஞ்சாவூர் - 7.
7. கு. வே.பாலசுப்ரமணியம் - சங்க இலக்கியத்தில் புறப்பொருள்,
மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம் - 1.
8. வே.முத்துலட்சுமி - பண்டைத்தமிழ் இலக்கியங்களில் அறநெறிகள்,
அனிதா பதிப்பகம், திருச்சிராப்பள்ளி – 2.9. வ.சுப.மாணிக்கம் - தமிழ்க்காதல், முல்லை நிலையம், சென்னை.
1.பழந்தமிழ் இலக்கியங்கள் குறித்த தெளிவான பயிற்சி அளித்தல்
2.பழந்தமிழரது இலக்கியக் கொள்கைகளை உணர்த்தல்
3.மக்கள் வாழ்வியல் நெறிகளைப் பயிற்றுவித்தல்
4.பழந்தமிழரது பல்துறை அறிவாற்றலை அறிதல்
மாணவர் பெறும் திறன்:
1.பழந்தமிழ் இலக்கியங்களை வாசிக்கும் திறன்பெறுகின்றனர்
2.பழந்தமிழ்ச் சொற்கள் மற்றும் பொருள் அறிவர்
3.அக, புற இலக்கியக் கூறுகளைப் பகுத்தறிவர்
உள்ளடக்கம்
அலகு : 1
குறுந்தொகை - 41 (காதர் உழையர்) முதல்
50 (ஐயவி அன்ன) முடிய 10 பாடல்கள்
நற்றிணை - 51 (யாங்குச் செய்வம்) முதல்
60 (மலை கண்டன்ன ) முடிய 10 பாடல்கள்
அகநானூறு - 41 (வைகு புலர் விடிய ) முதல்
45 (வாடல் உழுங்சில் ) முடிய 5 பாடல்கள்
அலகு : 2
கலித்தொகை - 2, 44 (பாலைத்திணை)
67( குறிஞ்சித்திணை)
107( மருதத் திணை)
119 ( நெய்தல் திணை)
பரிபாடல் - செவ்வேள் – 14 (கார்மலி)
திருமால் – 13 (மணிவரை)
மதுரை (முழுவதும்)
வையை 16 (கரையே)
அலகு : 3
புறநானூறு - பிசிராந்தையார், ஆவூர் மூலங்கிழார் பாடல்கள்
பதிற்றுப்பத்து - பரணர் பாடிய ஐந்தாம் பத்து
அலகு : 4
பத்துப்பாட்டு - பெரும்பாணாற்றுப்படை முழுவதும்
அலகு : 5
பத்துப்பாட்டு - குறிஞ்சிப்பாட்டு
திட்டக்கட்டுரைகள் :
1.சங்க இலக்கியங்களில் தமிழர் வாழ்வியல் 2.அகத்திணைக் கூறுகள்
3.புறத்திணைக்கூறுகள் 4.எட்டுத்தொகை நூல்கள் 5.பத்துப்பாட்டில் திணையும் துறையும்
குழுச்செயல்பாடு:
1.பாடப்பகுதியில் உள்ள பாடல் ஒன்றின் கூறுபாடுகளை மாணவர் பிரித்துத் தனித்தனியே நயம் சுட்டல்
2.புலவர்களின் இலக்கிய நடையைத் திறனாய்தல்
பார்வை நூல்கள் :
1. சாமி சிதம்பரனார் - பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும்,
பூம்புகார் பதிப்பகம்,
சென்னை – 1.
2. தமிழண்ணல் - பரிசில் வாழ்க்கை, பாரி நிலையம், சென்னை – 1.
3. வீ.சி.சசிவல்லி - பழந்தமிழர் தொழில்கள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை – 113.
4. கு.சிவபிசகாசம் - புறநானூற்றில் வாழ்வியல் விழுமியங்கள்,
திருக்குறள் பதிப்பகம்,
சென்னை – 78.
5. ரா.பி.சேதுப்பிள்ளை - தமிழர் வீரம், பழனியப்பா பிரதர்ஸ், சென்னை – 14.
6. ஆ.தட்சிணாமூர்த்தி - சங்க இலக்கியம் உணர்த்தும் மனித உணர்வுகள்,
மங்கையர்க்கரசி பதிப்பகம், தஞ்சாவூர் - 7.
7. கு. வே.பாலசுப்ரமணியம் - சங்க இலக்கியத்தில் புறப்பொருள்,
மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம் - 1.
8. வே.முத்துலட்சுமி - பண்டைத்தமிழ் இலக்கியங்களில் அறநெறிகள்,
அனிதா பதிப்பகம், திருச்சிராப்பள்ளி – 2.9. வ.சுப.மாணிக்கம் - தமிழ்க்காதல், முல்லை நிலையம், சென்னை.
1. http://visumbu.wordpress.com/
2.Tamil virtual university
-----------------------------------------------------------------------------------------------------
13PTL 14
Core - XIV
அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),சேலம் - 636 007.எம்.ஏ., தமிழ் – பாடத்திட்ட விளக்கம்
மூன்றாம் பருவம் - (2013 – 2014 கல்வியாண்டு முதல்)
தாள் : 14 தமிழர் கலைகள்
பாட நோக்கம் :
1. தமிழக வரலாற்றில் காலந்தோறும் கலைகள் வளர்ந்த வரலாற்றை அறிதல்
மாணவர் பெறும் திறன்:
1. தமிழரின் பண்பாட்டியல் கூறுகளை அறிதல்
2. கலைகள் வழி வாழ்க்கையைச் செம்யைhக்கிக் கொள்வர்
உள்ளடக்கம்
அலகு : 1 கட்டடக்கலை
கட்டடக்கலை – கட்டடக்கலையின் தோற்றமும் வளர்ச்சியும் - சங்ககாலம் - பல்லவர் காலம் - சோழர் காலம் - நாயக்கர் காலம் - மரக்கட்டடங்கள் – செங்கற் கட்டடங்கள் – பாறைக்கோயில்கள் – கற்றளிகள் – மாடக்கோயில்கள் – கோயிலின் வகைகள் – ஆலக்கோயில் – இளங்கோயில் – கரக்கோயில் – ஞாழற்கோயில் – கொகுடிக்கோயில் – மணிக்கோயில்.
அலகு : 2 சிற்பக்கலை
சிற்பக்கலை – காலந்தோறும் சிற்பக்கலை – சங்ககாலம் - பல்லவர் காலம் - சோழர் காலம் - சிற்ப வகைகள் – சுதைச் சிற்பம் - சுடுமண் சிற்பம் - மரச் சிற்பம் - தேர்ச்சிற்பம் - நவபாஷாணக் கலவைச் சிற்பம் - கடு சர்க்கரை யோகச் சிற்பம் - மாக்கல் சிற்பம் - மணிச்சிற்பம் - சலவைக்கல் சிற்பம் - தந்தச் சிற்பம் - உலோகச் சிற்பம் - சமண, பௌத்தச் சிற்பங்கள்.
அலகு : 3 ஓவியக்கலை
ஓவியக்கலை – ஓவியக்கலையின் பழமை- சுவர் ஓவியம் - சங்ககால ஓவியம் - பல்லவர், சோழர் கால ஓவியங்கள் – பாண்டியர் கால ஓவியங்கள் – நாயக்கர் கால ஓவியங்கள் – சித்தன்ன வாசல் ஓவியம் - கயிலாசநாதர் ஓவியம் - பனைமலை ஓவியம் - தஞ்சைக் கோயில் ஓவியம் - பிற ஓவியங்கள்.
அலகு : 4 இசைக்கலை
இசைக்கலை – கவின் கலைகளில் இசைக்கலை – சங்க இலக்கியங்களில் இசை – பக்தி இலக்கியங்களில் இசை – காப்பிய இலக்கியங்களில் இசை – இசை நூல்கள் – இசைக்கலை சாசனம் - கீர்த்தனைகள் – இசையாசிரியர்கள் – தமிழிசை மும்மூர்த்திகள் – அந்நியர் ஆட்சியில் இசைக்கலை – தமிழிசையின் மறு மலர்ச்சி – சமணரும் இசைக்கலையும்
அலகு : 5 நாடகக்கலை
நாடகக்கலை – தமிழ் நாடகத்தின் தோற்றமும் வளர்ச்சியும் - சங்ச காலம் -
பல்லவர் காலம் - சோழர் காலம் - நாயக்கர் காலம் - பிற்காலம் - நாடக வகைகள் – வரலாற்று நாடகம் - சமூக சீர்திருத்த நாடகம் - எள்ளல் நாடகம் - பொழுதுபோக்கு நாடகம் - கவிதை நாடகம் - ஓரங்க நாடகம் - மொழிபெயர்ப்பு நாடகம் - தழுவல் நாடகம் - வானொலி நாடகம் - தொலைக்காட்சி நாடகம் - நாடக மறுமலர்ச்சி – பம்மல் சம்பந்த முதலியார் - சங்கரதாசர் - டி.கே.எஸ். சகோதர்கள் – நவாப் இராஜமாணிக்கம் - தியாகி விசுவநாததாஸ் - இன்றைய நாடக நிலை.
திட்டக்கட்டுரைகள் :
1. தமிழரின் கட்டடக்கலையின் தோற்றம் வளர்ச்சி
2. தமிழரின் ஓவியக்கலை வரலாறு
3. தமிழரின் இசைக்கலை வளர்ச்சி
4. தமிழரின் சிற்பக்கலை வரலாறு
5. தமிழரின் நாடகக்கலையின் தோற்றமும் வளர்ச்சியும்
குழு செயல்பாடு :
1. பல்வேறு கலைகளின் புகைப்படங்களைச் சேரித்தல்.
2. கோயில்களுக்குச் சென்று பார்த்து சிற்பக்கலை பற்றி அறிதல்
3. சிறிய நாடகங்களை நிகழ்த்துதல்
பார்வை நூல்கள் :
1. தமிழர் வளர்த்த அழகுக் கலைகள் – மயிலை சீனிவேங்கடசாமி,
மணிவாசகர் பதிப்பகம், 8/7 சிங்கர் தெரு, பாரிமுனை,
திருவல்லிக்கேணி, சென்னை – 600 005.
2. பழந்தமிழர் கட்டடக் கலையும் நகரமைப்பு - நா. பார்த்தசாரதி,
தமிழ்ப்புத்தகாலயம், 58-தெளிசிங்கப்பெருமாள் கோயில் தெரு, திருவல்லிக்கேணி, சென்னை – 600 005.
3. தமிழ்ப்பண்பாட்டு வரலாறு - செ. வைத்தியலிங்கன்,
அண்ணாமலைப் பல்கலைக் கழகவெளியீடு,
வைகறைப் பதிப்பகம், திண்டுக்கல் – 624 004.
4. வெங்கடசாமிநாதன் - தமிழகக்கலைகளின் இன்றைய
முகங்கள், இருவாட்சி பதிப்பகம், சென்னை.
5. அரவக்கோன் - இந்திய மண்ணில் ஓவிய
நிகழ்வுகள், இருவாட்சி பதிப்பகம், சென்னை.
இணைய முகவரி
www.
Wikipiedia. com
www. noolaham.org
------------------------------------------------------------------------------------------------
13PTLM2
Major Based
Elective Course - II
அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),சேலம் - 636 007.ஐஐ எம்.ஏ., தமிழ் – பாடத்திட்ட விளக்கம்
நான்காம் பருவம் - (2013 – 2014 கல்வியாண்டு முதல்)
தாள் : 2 மொழிபெயர்ப்பு இலக்கியங்கள்
பாட நோக்கம் :1. பிற மொழி இலக்கியங்களை அறிமுகம் செய்தல்
2. பிறமொழி இலக்கியங்களை ஒப்பிடுதல்
3. பிற மொழி இலக்கியங்களில் காணலாகும் சமுதாயச் சிக்கல்களைக் கற்பித்தல்
மாணவர் பெறும் திறன்:
1. பிற மொழி இலக்கிய அறிவு பெறுதல்
2. படைப்பாற்றல் திறன் பெறுதல்
3. தேசிய ஒருமைப்பாட்டுணர்வைப் பெறுதல்
4. பிற மொழி இலக்கிய அறிவு பெறுதல்
உள்ளடக்கம்
அலகு : 1 : கவிதை
அ) வங்காளக் கவிதை - தாகூரின் தமிழ்க்கீதாஞ்சலி (முதல் 50 கவிதைகள்)
https://jayabarathan.wordpress.com/category/%E0%AE%95%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B2%E0%AE%BF/
ஆ) சமஸ்கிருதக் கவிதை - சுபாஷிதம் (பத்ருஹரி) (நீதிசதகம் மட்டும்)
அலகு : 2 : சிறுகதை
அ) ஒரிய மொழிக்கதை - ஏழு கார்ட்டூன்களும் ஒரு வண்ண ஓவியமும்
(ரிஷிகேஷ் பாண்டா)
ஆ) தெலுங்கு மொழிக்கதை - எண்டமூரியின் சிறந்த சிறுகதைகள் (எண்டமூரி)
அலகு : 3 : நாவல்
அ) மராத்தி நாவல் - இரு துருவங்கள் (வி.ஸ.காண்டேகர்)
https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BF._%E0%AE%9A._%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D
ஆ) பஞ்சாபி நாவல் - பொழுது புலர்ந்தது (நிரஞ்சன் தஸ்நீம்)
அலகு : 4 : நாடகம்
அ) மலையாள நாடகம் - கூட்டுப்பண்ணை (இடசேரி கோவிந்தநாயர்)
ஆ) கன்னட நாடகம் - நாகமண்டலம் (கிரீஷ் கர்னார்ட்)
அலகு : 5 : கட்டுரை
அ) இந்தி மொழிக் கட்டுரை - வால்காவிலிருந்து கங்கை வரை
(இராகுல சங்கிருத்தியாயன்)
http://www.yarl.com/forum3/topic/111369-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF/
திட்டக்கட்டுரைகள் :
1. உருதுக் கவிதைகள்
2. வங்காள மொழி இலக்கியங்கள்
3. வடமொழி நாடகங்கள்
4. ஆங்கில நாவல்கள்
5. இரஷ்யச் சிறுகதைகள்
குழுச்செயல்பாடு:
1. மாணவர்கள் குழுவாகப்பிரிந்து பிறமொழி இலக்கியச் சிக்கல்களைப் பரிமாறிக்கொள்ளுதல்
2. பிறமொழிப் படைப்பாளர் குறித்த செய்திகளைத் திரட்டுதல்
பாடநூல்கள்:
1. சி.ஜெயபாரதன் (மொ.பெ.) - தாகூரின் தமிழ்க்கீதாஞ்சலி,
தாரிணி பதிப்பகம், அடையார், சென்னை – 20
2. மதுமிதா (மொ.பெ.) - பத்ருஹரி – நீதி சதகம்,
சந்தியா பதிப்பகம், அசோக் நகர், சென்னை – 83
3. தமிழ் நாடன் (மொ.பெ.) - ஏழு கார்ட்டூன்களும் ஒரு வண்ண ஓவியமும்,
( ரிஷிகேஷ் பாண்டா) சாகித்ய அகாடமி, புது தில்லி.
4. கௌரி கிருபானந்தன் - பெஸ்ட் ஆப் எண்டமூரி சிறுகதைகள்,
(மொ.பெ.) அல்லயன்ஸ் பதிப்பகம், சென்னை.
5. கா. ஸ்ரீ.ஸ்ரீ. (மொ.பெ.) - இரு துருவங்கள்(வி.ஸ.காண்டேகர்)
அல்லயன்ஸ் பதிப்பகம், சென்னை.
6. மா.இராமலிங்கம் (மொ.பெ.)- பொழுது புலர்ந்தது
(நிரஞ்சன் தஸ்நீம்), சாகித்ய அகாடமி, புது தில்லி.
7. சௌரிராஜன் (மொ.பெ.) - கூட்டுப்பண்ணை (இடசேரி கோவிந்த நாயர்),
சாகித்ய அகாடமி, புது தில்லி.
8. கிரீஷ் கர்னாட் - நாகமண்டலம்,கண. முத்தையா (மொ.பெ) உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை.
9. இராகுல சாங்கிருத்தியாயன்- வால்காவிலிருந்து கங்கை வரை,
தமிழ்ப்புத்தகாலயம், சென்னை.
பார்வை நூல்கள் :
1. க.பூரணச்சந்திரன் - நவீன மொழிபெயர்ப்புக் கொள்கைகள்,
அகரம் பதிப்பகம், தஞ்சாவூர்.
2. பெ.செல்வக்குமார் - மொழிபெயர்ப்பியல்,
பார்க்கர் பதிப்பகம், இராயப்பேட்டை, சென்னை.
3. கா.பட்டாபிராமன் - மொழிபெயர்ப்புக்கலைகள்,
வசந்த செல்வி பதிப்பகம், தருமபுரி – 636 702
4. ஜான் டி.மர்பி - நீயும் ஏன் சாதிக்கக்கூடாது,
நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை.
5. சேது மணியன் - மொழிபெயர்ப்பியல் கோட்பாடுகளும் உத்திகளும்,
பாரி நிலையம், சென்னை.
6.. கா. பட்டாபிராமன் - மொழிப்பயன்பாடு, பாரிநிலையம், சென்னை.
7. கா. பட்டாபிராமன் - மொழிபெயர்ப்புக்கலை, பாரி நிலையம், சென்னை.
8. இரா.மருதநாயகம் - மொழிபெயர்ப்பு நெறிமுறைகள்,
அபிநயா பதிப்பகம், திருவழுந்தூர்,
மயிலாடுதுறை – 609 001
10. ஸ்ரீ சந்திரன் - ஆட்சித்தமிழும் மொழி பெயர்ப்பும்,
பாரி நிலையம், பிராட்வே,
சென்னை - 108
இணைய முகவரி:
1.Madurai
Project
2.Tamil virtual university
---------------------------------------------------------------------------------------பர்த்ருஹரி நீதிசதகம்
சமஸ்கிருத்தில்
நூறு சுலோகங்களைக் கொண்ட பல சதகங்கள்
காணப்படுகின்றன.
அவற்றில் தர்மத்தை கூறும் சதகத்திற்கு நீதி சதகம் என்றும், காமத்தைக் கூறும் சதகத்திற்கு சிருங்கார சதகம் என்றும்
மோஷத்தைக் கூறும் சதகத்திற்கு வைராக்கியசதகம்
என்றும் வழங்கப்பட்டன.
கி.பி. 6 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த பர்த்ருஹரி நீதிசதகம், சிருங்காரசதகம், வைராக்கியசதகம் மூன்றினையும் எழுதியுள்ளார். 9- ஆம் நூற்றாண்டில் பல்லடர் பல்லடச் சதகமும், 11- ஆம் நூறாறண்டில் க்ஷேமந்தர், 15 –ஆம் நூற்றாண்டில்
தனதராஜகவி, 17 –ஆம் நூற்றாண்டில் ஜகந்நாதபண்டிதர் போன்றோரால் பல சதகங்கள் இயற்றப்பட்டன. சு என்றால் நல்ல என்று, பாஷிதம் என்றால் மொழி, வாக்கு என்றும் பொருள். ஆகையால் தமிழில் இதனை
நல்வாக்கு என்று சொல்லலாம்.
பர்த்ருஹரியின் நன்மொழிகள் – 1
ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், இன்னா நாற்பது
இனியவை நாற்பது, திருக்குறள் என்று தமிழில் ஏராளமாக நீதி நூல்கள் இருப்பது
போல சம்ஸ்க்ருதத்திலும் சிந்தனையைத் தூண்டும் நூல்கள் பல உண்டு.
அவற்றில் இளம்பருவத்தில் கல்வி கற்க துவங்கும் போது நீதி போதனையாக
சிலவற்றை சொல்லித் தருவார்கள். இவை சுபாஷிதம் அல்லது நன்மொழிகள் எனப்படும்.
நமது பாரதீய கல்வியில் வாழ்க்கையை அர்த்தப் படுத்திக் கொள்ள நான்கு வித
இலக்குகள் (புருஷார்த்தங்கள்) வைத்தனர். அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்பவையே அவை. தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்று வடமொழியில் இவை அழைக்கப் படுகின்றன. இவற்றை ஒவ்வொருவரும் தன வாழ்வில் கடந்து வந்தே
தீரவேண்டும்.
இவற்றில் நல்ல
விதமாக கடமையாற்றி வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்கிக் கொள்வதற்கு முன்னோர் அடைந்த அனுபவங்களை தெரிந்து கொள்வது அவசியம். அந்த வகையில் திருவள்ளுவர் எவ்வாறு தமிழில் திருக்குறளை
அறத்துப்பால், பொருட் பால், இன்பத்துப் பால் என்று அமைத்தாரோ அதே போல வடமொழியில்
பர்த்ருஹரி நீதி சதகம் (நீதி போதனை), ஸ்ருங்கார சதகம்
(இன்பத்துப் பாலைப் போன்றது), வைராக்ய சதகம் (துறவறம்) என்று மூன்று
விதமாக பிரித்து அமைத்துள்ளார். சுபாஷித த்ரிசதி
அல்லது சதகத்ரயம் என்று அழைக்கப் படும் இந்த முன்னூறு ஸ்லோகங்கள் படிப்பதற்கு சுலபமான சம்ஸ்க்ருதத்தில் அமைக்கப் பட்டுள்ளன. இவற்றில் சில ஸ்லோகங்களை இளம் மாணவர்களுக்கு சொல்லிக்
கொடுப்பது பழைய கால கல்வி முறை. இதன் மூலம் நீதி போதனையும், மொழியறிவும் பெற உதவும் என்பதே குறிக்கோள். ஆம்ராஸ்²ச ஸிக்தா: பிதரஸ்²ச த்ருʼப்தா (आम्राश्च सिक्ताः
पितरश्च तृप्ता) என்றொரு வழக்கு உண்டு. நீத்தார் கடன் செலுத்த நீர்
விடும்போது அதை மாமரத்தின் அடியில் இட்டார்களாம். நீத்தார் கடன்
செலுத்தியது போலவும் ஆயிற்று, மாமரத்துக்கு நீர்
பாய்ச்சியது போலவும் ஆயிற்று என்று ஒரே செயலில் இரு நன்மைகள்.
பர்த்ருஹரி யார்?
பர்த்ருஹரி நமது
சரித்திரத்தில் ஒரு அரசராகவும், கவிஞராகவும், துறவியாகவும் காணப்படுகிறார். இவர் உஜ்ஜயினியை தலைநகராகக்
கொண்டு அரசாண்ட சக்கரவர்த்தி விக்கிரமாதித்தியனின் மூத்த சகோதரர்.
உண்மையில் இவரே அரசனாக முதலில் இருந்தார். அப்போது இவருடைய ராணி
பிங்கலை என்பவளிடம் பேரன்பு கொண்டு அவளுடனேயே
எப்போதும் பொழுதை செலவிட்டு வந்தார். இந்நிலையில் இவருக்கு அபூர்வமான பழம் ஒன்று கிடைக்க அதைத் தன் ஆசை மனைவியிடம் கொடுத்தார். அவளுக்கோ அரண்மனையில் குதிரை லாயத்தில் இருந்த
ஒருவனிடம் ஆசை. அவள் அவனிடம் கொடுக்க, அவனுக்கு ஒரு
வேசியிடம் இச்சை. அவன் பழத்தை அவளிடம் கொடுத்து
விடுகிறான். அந்த வேசி பழத்தை அரசனுக்கே அற்பணிக்கிறாள். இறுதியில் உலகியலில் வெறுப்புற்று பர்த்ருஹரி
மகாராஜன் தன் பதவியை துறந்து, தம்பிக்கு
முடிசூட்டி விட்டு துறவியாகி விடுகிறார். இந்நிலையில் தன் கல்வி அறிவு அனுபவங்களை திரட்டி சில நூல்கள் இயற்றுகிறார். இவற்றில் ஒன்று தான் இந்த சதக த்ரயம் எனப்படும் சுபாஷிதங்கள்.
ன்மொழியறிஞர் மு.கு.
ஜகந்நாத ராஜா, திருக்குறளுடன் 'பர்த்ருஹரியின் சுபாஷித'த்தை ஒப்பிட்டு, திருக்குறளைப் போன்றே அறம், பொருள், இன்பம் என்னும் முப்பாலுரைக்கும் சிறந்த நூலென்றும், திருக்குறளைப் போன்றே ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்துப் பத்து சுலோகங்கள் கொண்டுள்ளமை வியத்தகு
ஒற்றுமை என்றும் நவின்றுள்ளமை(9) அவர்தம் நடுநிலைப்பட்ட உயரறிவுநிலையை வெளிப்படுத்துகிறது. இம் மொழியாக்கத்தில் முதற்பகுதியாகிய நீதி சதகத்தில் 'மங்கலம்' முன்வைப்பாக, 'மூர்க்கர் இயல்பு' முதல் 'வினைப்பயன்' ஈறாக அதிகாரங்கள் பத்தும்; இரண்டாம் பகுதியாகிய சிருங்கார சதகத்தில் 'பெண்ணின் கீர்த்தி' முதல் 'பனி மழைக் காலம்' ஈறாக அதிகாரங்கள் பத்தும்; வைராக்கிய சதகத்தில் 'ஆசையைப் பழித்தல்' முதல் 'பற்றறுத்தல்' ஈறாக அதிகாரங்கள் பத்தும் பொதியப்பெற்றுள்ளன
பர்த்ருஹரி நீதி சதகம்
• அரசன் கெட்ட ஆலோசனையால் வீழ்கிறான்.
• ஸன்யாஸி விஷயங்களில் பற்றுதல் அடைந்தால்
வீழ்ச்சியடைகிறான்.
• வாலனையால்(குறையை மறைத்து கொண்டாடுவதால்)
புத்ரன் கெடுகிறான்.
• பிராம்மணன் வேதாத்யயனம் செய்யாததால்
நசிவடைகிறான்.
• நல்ல குலம் கெட்ட பிள்ளையால் கெடுதல்
அடையும்.
• நற்குணமானது துஷ்ட ஸஹவாசத்தால் கெட்டுப்
போய்விடுகிறது.
• கள்குடிப்பதால் வெட்கம்போகிறது.
• பரஸ்பர அன்பு தேசாந்திர வாஸத்தினால் குறைந்து
விடுகிறது.
• ஸம்பத்தானது நீதிமுறை தவறியகார்யத்தாலும், பணமானது சக்திக்கு மீறிய செலவாலும்
கவனக்குறைவாலும் இழக்கப்படுகிறது.
_பர்த்ருஹரி நீதி சதகம் -33
துன்பம் தரும் ஏழு விஷயங்கள் !
1.பகல் வேளையில் சந்திரன் ஒளி இழந்து இருப்பதைப் பார்த்தால் மனதிற்குத் துக்கம் ஏற்படுகிறது.2.இதே போல இளமை அழகு இழந்த மனைவியும், 3.தாமரைப் பூக்கள் இல்லாத தடாகமும் 4.அழகிய ரூபமுள்ளவன் படிப்பறிவே இல்லாமல் இருப்பதும் 5.பணக்காரனாக இருந்த போதிலும் மேலும் பணம் சம்பாதிப்பதிலேயே குறியாக இருப்பதும் 6.நல்ல மனிதர்கள் எப்போதும் கஷ்டமான வாழ்க்கையையே நடத்த நேரிடுவதும் 7.அயோக்கியர்களோ அரசன் வீட்டில் செல்வாக்குப் பெற்று நல்ல காரியங்களைக் கெடுப்பதும் ஆகிய இந்த ஏழும் என் மனதிற்குத் துன்பத்தைத் தருகிறது என்கிறார் கவிஞர்.
திருக்குறளைப் போல சுபாஷிதத்திற்கும் பல மொழிபெயர்ப்புகள் வந்துள்ளன. திருக்குறளுக்கு உலகப் பொதுமறை எனப் பல பெயர்கள் இருப்பது போல சுபாஷிதத்திற்கும் சுபாஷிதத்ரிசதி, சுபாஷித் சதகத்ரயம் போன்ற பல
பெயர்களுண்டு.
சுபாஷிதத்தை தமிழில் முழுவதும் மொழிபெயர்த்துள்ளவர் திருமதி மஞ்சு ரெங்கநாதராசா
என்பவராவார். "..மூல நூலில் உள்ள எழில், கருத்துச் செறிவு, சொல்லாடல் திறன், கம்பீரம், ஒயில் ஆகியவற்றை மொழிபெயர்ப்பில் முழுமையாகக் கொண்டுவர என்னால் முடியவில்லை என்பதை உணர்கிறேன். எனது அறியாமையினால் இந்தத் தமிழாக்கத்தில் குறைகளும், தவறுகளும் இருக்கலாம்.
[தமிழாக்குவதற்கான]
ஆறு வருட உழைப்பிற்குப் பின்பும் பர்த்ருஹரியின் எழுத்தாளுமைக்கருகில் இது
தவிர்க்க முடியாததாகியிருப்பது தவிர்க்க இயலா உண்மை என்கிறார்.
பிறப்பில் உயர்வு தாழ்வு
""மனிதனின் தோற்றப்
பொலிவு, பிறந்த குலம், ஒழுக்கம், கல்வி, ஊக்கத்துடன் செய்த தொண்டு இவைகளினால் பயனில்லை. முன்செய்த வினையாலும்
அதிர்ஷ்டத்தினாலும் முற்பிறவியில் செய்த தவத்தின் பயனாலும் மனிதனுக்குப் பலன் அமைகிறது"" (நீதி-97) அடுத்தபிறவிக்காக இப்பிறவியில் நன்மை செய்யவேண்டும் என்கிறார் பர்த்ருஹரி. இப்பிறவியில் பிறந்த குலத்தினாலோ,கல்வியினாலோ பெருமை கொள்வதால் பயனில்லை என்கிறார்.
எப்படியாயினும் மனிதன் எப்போதும் அறவழிப்பட்ட செயல்களையே செய்ய
வேண்டுமென்றும், அதனால்தான் பெருமையும் பலனும் கிட்டும் என்கின்றன
மன மாசு
""ஆசையை துறத்தல், பொறுமையைப் பெறுதல் கர்வத்தை விடுதல், தீச்செயல் வெறுத்தல், உண்மையே பேசுதல், நல்லோர் வழி செல்லுதல்,
கற்றோருக்கு தொண்டு செய்தல், பெரியோரை மதித்தல், பகைவரிடம் அனுசரித்து நடத்தல், தன் பணிவைக் காட்டுதல், புகழை எச்சரிக்கையுடன் காத்தல், துன்பமடைந்தவரிடம் இரக்கம்
காட்டுதல் இவை உயர்ந்த மனிதர்களின் சிறந்த அடையாளங்கள்"" (நீதி.
49) என்கிறார் பர்த்ருஹரி. வள்ளுவரது அறத்துப்பால் கூறும் அறங்களே இவை.
பர்த்ருஹரியும்
மன மாசுக்களாக அழுக்காறு, வெகுளி, இன்னாச் சொல் போன்றவற்றைக் குறிப்பிடுகின்றhர். மனிதன் பிறந்ததிலிருந்து இறக்கும் வரை அவன் மனம் புலன்
வழிச் செல்வதனால் அவன் மனத்தில் மாசுக்கள் படிகின்றன. அவற்றால் அவன் அறவாழ்வினின்று விலகுகிறான்.
மனிதனை ஒழுக்க
நெறிக்கு உட்படுத்திட வேண்டுமாயின்,
அதற்குரிய வழிகளைக் காட்டிட வேண்டும். வள்ளுவரின்
அறத்துப்பாலும், பர்த்ருஹரியின்
நீதி சதகமும் ஒவ்வொரு அதிகாரத்திலும் மன மாசை நீக்குவது குறித்த அறநெறிகளையே
தொடர்ந்து இலக்கிய நயத்தோடு தத்தம்
வழிகளில் கூறிச் செல்கின்றன.
மன மாசு நீக்கும் வழிகளைக் பர்த்ருஹரி,
‘மூர்க்கர் இயல்பு முதல் வினைப்பயன் வரை 10 அதிகாரங்களில் இதைக் கூறுகின்றார்.
கல்வி
""அறிஞர்களின் நிறைந்த சபையில் மூடர்களுக்கு இந்த மௌனம் சிறந்த அணிகலனாய்
அமைகிறது"" (நீதி 6)
""நான் எப்பொழுது ஞானக் குருடனாய் குறை அறிவுடனிருந்தேனோ அப்பொழுது என்மனம்
எல்லாம் அறிந்தவனென மதம் பிடித்த யானை போல் மமதையுடன் இருந்தது எப்பொழுது
அறிஞர்களின் சேர்க்கையில் சிறிது சிறிதாக உண்மையை அறிந்தேனோ அப்பொழுது நான் மூடன்
என உணர்ந்தேன்""(நீதி 7) என்கிறார் பர்த்ருஹரி.
மூர்க்கர் இயல்பு குறித்த பகுதியில் ‘சகலத்திற்கும் தகுந்த மருந்து சாத்திரங்களில் உண்டு. மூர்க்கத்தைப்
போக்குவதற்கு மருந்தில்லை’ (நீதி 10)
வைராக்கிய சதகத்தின் 5வது பாடல், பொருளுக்காக செல்வரை நாடி அவர்களைப் புகழ்ந்து தன்மானம் இழந்து நிற்கும் கற்ற்றிந்த
புலவர்களின் நிலையைப் பற்றிப் பேசுகிறது.
.""தாமரை இலை நீர்த்துளி போல் நிலையின்றி தத்தளிக்கும் வாழ்க்கையினை வாழ
வேகமிழந்து என்னதான் செய்யவில்லை-செல்வத்தினால் மமதை கொண்ட
செல்வந்தர்களின் எதிரே வெட்கம் விடுத்து தன்னைப் பற்றியே பேசி தன்மானம் இழக்கும்
பெரும்பாவம் செய்தோம்"" என்று பர்த்ருஹரி குறிப்பிடுகிறார்.
விலங்கொடு மக்கள் அனையர் இலங்கு நூல்
""கல்வியற்றவர் விலங்குக்கு ஒப்பானவர்"" (நீதி 16)
என்கிறார் பர்த்ருஹரி.
வள்ளுவருர் ‘கேடுஇல்
விழுச்செல்வம் கல்வி’
(40.10) என்கிறார்.
கல்வியே மிகப்பெரிய செல்வம் என்கிறார்
பர்த்ருஹரியும்
(நீதி.16)
கல்வியே நண்பன், உறவினன், கடவுள் என மேலும் அடுக்கிச் செல்கிறார்.
உடைத்து (13.6) என எழுபிறப்பிலும் பணிவு காப்பாக விளங்கும் என்கிறார்.
""பணிவே சிறந்த அணிகலன்.
பொறுமையே சிறந்த கவசம்""
என்கிறார். (நீதி 17) பர்த்ருஹரி.
கற்றறிந்த சான்றோர்களின் சேர்க்கையால்
பாபம் அழியும்.
சித்தம் தெளிவடையும்,
புகழ் பரவும், மனம் உன்னதமடையும் என்கிறார்
பர்த்ருஹரி.
(நீதி-19) இவ்வாறு கல்வி
குறித்தும் கல்லாமை குறித்தும் பேதையர் என்கிறார்
.
அரசநீதி
வள்ளுவர்,
‘இழப்பாரை இல்லா ஏமரா மன்னன் கெடுப்பார்
இலானும் கெடும்’ என்கிறார்.
‘மதியில்லா மந்திரியால்
மன்னன் கெடுவான்’ என்கிறார் பத்ரு (நீதி.33)
மன்னர்க்குரிய கடமையாக,
அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய்
நின்றது மன்னவன் கோல் (55.3)
ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து
யார்மாட்டும்
தேர்ந்து செய்வதே முறை (55.1)
”ஆணையிட்டுப் பணி முடித்தல், பரிபாலித்தல், மதிப்புடன் வாழ்தல், அந்தணரை அரவணைத்தல், பொருளுதவி செய்தல், நிறைவுடன் இன்புறுதல் நண்பர்களை பாதுகாத்தல் என்னும் ஆறு கடமைகளையும் மன்னர்
கடமைகளாக பர்த்ருஹரி வலியறுத்துகிறார். (நீதி.39)
பர்த்ருஹரி அரசனது பெருமை சேர்ப்பவை
பற்றிக் குறிப்பிடுமிடத்து, ""அதிகாரத்திற்கு அணிகலன் நல்ல தன்மையுடன் இருத்தல்"" (நீதி-80)
""போர்க்களத்திலும், எதிரிகள் கூட்டத்தின் நடுவிலும் . . . .முன்பு செய்த நற்செயலே
அவனைக் காக்கிறது (நீதி.9)"" என்கிறார்.
பர்த்ருஹரிஆசைக் கோட்பாடு
.
தீராத அவாவை நீத்து ஒழுகினால் அந்நீத்த
நிலையே மாற்றமில்லாத அமைதி வாழ்வைத் தரும் என்பது வள்ளுவரின் கருத்தாகும். பர்த்ருஹரியும், வள்ளுவரின்
கருத்தோடு ஒத்துப் போகிறார்.
பர்த்ருஹரியின் துறவு
பர்த்ருஹரியும் வள்ளுவரும் இக்கருத்தில்
ஒன்றுபடுகிறார்கள்.
""தனித்து ஆசைகளற்று அமைதியாக கைகளையே பிச்சைப் பாத்திரமாய்க் கொண்டு திசைகளையே உடையாய்க் கொண்டு சிவனே! எப்போது முன் செய்த
வினைகளை முற்றிலும் ஒழிக்கும் தகுதியைப் பெறுவேன்"" (வை.89) என்று கேட்கிறார் பர்த்ருஹரி.
""கைகளை பிச்சைப் பாத்திரமாக ஏந்திப் புனித பிச்சை உணவை ஏற்று திருப்தி அடைந்து
ஓரிடத்தில் அமர்ந்து பிரபஞ்சத்தை துரும்பாய்ப் பார்த்து உடலை விட்டுச் செல்லும்
முன்பே பரமானந்த அனுபவம் பெற்ற யோகிகளுக்கு சிவபிரசாதமான மோட்ச வழி சுலபமாய்க்
கிடைக்கும்""
(வை.90)
என்கிறார் பர்த்ருஹரி.
இந்நிலையை அடைந்தவரை யாரும், எதுவும் செய்து விட முடியாது. ""இவன் சண்டாளனா பிராமனனா சூத்திரனா
தபஸ்வியா யோகியா இதுபோல் மக்கள் இழிவாகப் பேசுவதைக் கேட்டு யோகிகள் கோபமும்
அடைவதில்லை.
சந்தோஷமும் அடைவதில்லை.
தங்கள் பாதையில் செல்கின்றனர்.
(வைராக்கிய.96)
என்கிறார் பர்த்ருஹரி. வள்ளுவர் இந்நிலையை ‘பேரா இயற்கை’ என்கிறார்.
13PR
அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),
சேலம் - 636 007.
எம்.ஏ., தமிழ் – பாடத்திட்ட விளக்கம்
நான்காம் பருவம் - (2013 – 2014 கல்வியாண்டு முதல்)
Project
Dissertation
and viva-voce
-------------------------------------------------------
No comments:
Post a Comment