Sunday, 31 January 2016

சங்க இலக்கிய இலக்கணங்கள் வழி கோவை சிற்றிலக்கியம்



சங்க இலக்கிய இலக்கணங்கள் வழி கோவை சிற்றிலக்கியம்
முனைவர் கை. சங்கர்
அரசினர் ஆடவர் கலைக் கல்லூரி(தன்னாட்சி) நந்தனம், சென்னை 35
  கோவை இலக்கணம்
  பன்னிரு பாட்டியல்
கோவை என்பது கூறுங்காலை
மேவிய களவு கற்பு எனும் கிளவி
ஐந்திணை திரியா அகப்பொருள் தழீஇ
முந்திய கலித்துறை நானூறு என்ப ………137
இலக்கண விளக்கம்
முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் முகந்து
களவு கற்பெனும் வரைவு உடைத்தாகி
நலனுறு கலித்துறை நானூறு ஆக
ஆறிரண்டு உறுப்பும் ஊறின்றி விளங்கக்
கூறுவது அகப்பொருட் கோவையாகும்……..816
  கோவை இலக்கணம்

முத்துவீரியம்
முதல்கரு உரிப்பொருள் ஒருமூன்றும்
அடைந்து கைக்கிளை அன்புடைக் காமப்
பகுதியவாங் களவொழுக்கமுங் கற்பும்
இயம்புதலே எல்லையாகக் கட்டளைக்
கலித்துறை நானூற்றால் திணைமுதலாத்
துறையீறாகச் சொல்லப்பட்டும்
ஈராறு அகப்பாட்டு உறுப்பும் இயையக்
கூறுவது அகப்பொருட் கோவையாம்; மற்றிஃது
அகவல் வெண்பா கலி அடுக்கி அவ்வண்ண
வஞ்சியினானும் வழுத்தப்படுமே
அகப்பாட்டு உறுப்புகள் 12
திணை, கைக்கோள், கூற்று ,கேட்போர், களன், காலம், முன்னம், பொருள், துறை ,பயன், மெய்ப்பாடு, எச்சம்
  கோவை பற்றி .வே.சா -1
சீகாழிக் கோவை
                காட்சி முதலிய துறைகள் முறையே கோக்கப்பட்ட நூலென்பது இம்மொழியின் பொருள்
திருவாவடுதுறைக் கோவை 1903
  ஐந்திலக்கணங்களும் பொருளின் பகுதியாகிய அகப்பொருளில க்கணத்திற்கு இலக்கியமாக அமைந்துள்ளது. குறிஞ்சித் திணை முதலிய ஐந்திற்கும் உரியனவாக முனோர்கள் விதித்த முதற் பொருள் கருப்பொருள் உரிப்பொருள்கள் முகமாகத் தலைவன் தலைவி ஒழுக்கங்களை: உலக வழக்கம் செய்யுள் வழக்கமென் னுமிரண்டிற்கும் ஒப்ப நன்கு தெரிவிப்பது; அதனால் இந்நூல் ஐந்திணைக் கோவை என்றும் பெயர்பெறும்
  கட்டளைக் கலித்துறைச் செய்யுளாற் செய்யப்பட வேண்டுமென்பதும், இன்னுஞ் சிலவும் இந்நூலுக்குரிய விதிகள்
  கோவை பற்றி உ.வே.சா  -2
   
கலைசைக் கோவை (1935)
                கோவை என்பது தமிழ்ப் பிரந்தங்களுள் அகப்பொருளுக்கு இலக்கியமாக அமைந்தது. அகப்பொருள் துறைகளை ஒரு வரலாற்று முறையில் தொடர் பெறக் கோத்து அமைத்து இயற்றப் பெற்ற நானூறின் மிக்க கலித்துறை களை யுடையது
  கோவை பற்றி உ.வே.சா - 3
கலைசைக் கோவை (1935)
                  எல்லா வகையானும் சிறந்த தலைவன் ஒருவன் அங்ஙனம் சிறந்த தலவி ஒருத்தியை ஊழின் வலியாற் கண்டு அன்புபூண்டு இன்புற்று மணந்து இல்லறம் நடத்தும் வாழ்க்கை முறையைக் கூறும் அகப்பொருள் நிகழ்ச்சித் துறைகள் பல அகத்துறைகளைத் தம்பால் கொண்ட கிளவிகளையும், அவற்றை உள்ளடக்கிய களவு, கற்பு என்னும் கைக்கோளையும் சிற்றுறுப்புகளாகவும் பேருறுப்புகளாவும் கொண்டது இவ்வகைப் பிரபந்தம்.
  கோவை பற்றி உ.வே.சா - 4
சிராமலைக் கோவை
                சங்க நூல்களிற் காணப்படும் அகப்பொருள் செய்யுட்களைப் போலன்றித் தொடர்ந்த பொருள் அமையும்படி துறைகள் கோக்கப்பெற்றமையின் இப்பெயர் பெற்றது.
யா.வி.உரை (வித்தாரக் கவி இலக்கணம்)
                வித்தாரக் கவியாவான் மும்மணிக் கோவையும் பன்மணி மாலையும் மறமும் கலிவெண்பாவும் மடலூர்ச்சியும் முதலிய நெடும்பாட்டும் கோவையும் பாசண்டமும் கூத்தும் விருத்தமும் முதலாகிய செய்யுளும் இயலிசை நாடகங்களோடு கலைநூல்களோடும் பொருத்தப் பாடும் பெருங்கவி யெனக் கொள்க.
  கோவை பற்றி உ.வே.சா - 5
  சிராமலைக் கோவை
                                கோவை யாப்பு
                கோவை நூல்கள் கட்டளைக் கலித்துறையால் இயற்றபடும் வரையறையுடைமை பற்றி அச்செய்யுளுக்குக் கோவைக் கலித்துறை யென்னும் பெயர் வழங்கலாயிற்று (வீரசோழியம் யாப்பு 17 உரை) அக்கலித்துறைகளைத் தொல்காப்பிய உரையிற் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் கொச்சகத்தின்பாற்படுத்துவர். யாப்பருங்க விருத்தியுடையார் கலிப்பாவின் இனமாக்குவர். சந்தப் பாவகையில் ஒன்றாகவும் பகுப்பர். குமரசேனாசிரியர் கோவையும், தமிழ் முத்தரையர்  கோவையும் யாப்பருங்கலக்காரிகையும் போன்ற சந்தத்தால் வருவன வற்றின் முதற்கண் நிரையசைவரின் ஓரடி பதினேழெழுத்தாம்; முதற்கண் நேரசை வரின் ஓரடி பதினாறெழுத்தாம்.
  கோவை பற்றி உ.வே.சா - 6
திருவாரூர் கோவை
                               
  பொருள்பற்றிக் கோக்கப்பெற்ற நூலைக் கோவையென்று வழங்கும் மரபு, பதினெண் கீழ்க் கணக்கினுள் ஒன்றன் பெயராகிய ஆசா ரக் கோவை யென்பதனாற் புலப்படும். தமிழ்ச் செய்யுட்களை நிரல்பட அமைத்துக் கோத்த லென்று வழங்குதல்
                                கோக்குந் தமிழ்கொத் தனைத்தும்           வாழியே…………… (தக்கயாகப் பரணி)
                என்பதனால் அறியப்படுதலின் கோவை என்னும் பெயர் நூலுக்கு ஏற்புடைய தாகிறது.
.வீ. ஜெயராமன்
தொல்காப்பிய பொருளதிகாரத்தில் அகத்திணை இயல், களவியல், கற்பியல் ஆகிய பெரும்பான்மையாகவும், பொருளி யல், உவம இயல், மெய்ப்பாட்டியல் ஆகியன சிறுபான்மையாகவும் அகப் பொருண்மை கூறுவன. இவற்றுள் காண ப்பெறும் துறைகளில் நானூற்றைக் கோவைபோல நாடகப் போக்கில் அமைத்துப் பாடப்பெற்ற நிலையில் வளர்ச்சியுற்ற இலக்கிய வகை கோவை என்பது.
 கோவை விகற்பம் பற்றி             .வே.சா -1
வருக்கக் கோவை, ஒருதுறைக் கோவை
                                மொழிக்கு முதலாகும் உயிரெழுத்துகளும் உயிர்மெய் யெழுத்துகளும் தனித்தனியே முதலில் அமைய இயற்றபடும் வருக்கக் கோவை யென்பதும், எதேனும் ஒரு துறையில் நூறு கலைத்துறைகளாலேனும் அவற்றின் மிக்க கலைத்துறைகளாலேனும் இயற்றப்படும் ஒரு துறைக் கோவை யென்பதும் கோவை விகற்பங்களாம்.
அகப்பொருள் கோவை
                                மும்மணிக் கோவை யென்பது யாப்புப்பற்றிக் கோக்கப்பெற்றதனாற் பெயர் பெற்றதுபோலப் பொருள் பற்றிக் கோக்கப் பறுதலின் இப்பிரபந்தம் கோவை யென்னும் பெயர் பெற்றது.
இது பொருள் தொடர்நிலைச் செய்யுளின் பாறபடும்.
 கோவை விகற்பம் பற்றி             .வே.சா -2
ஒருதுறைக் கோவை
இத்துறைகலில் ஒன்றையே பொருளாகக் கொண்ட நூறு கலித்துறைகளேனும், நானூறு கலித்துறகளேணும் பாடப்பெற்ற நூல்கள் சில ஒருதுறைக் கோவை யென்னும் பெயர்பெற்று வழங்கி வருகின்றன. இரகுநாத சேதுபது ஒருதுறைக் கோவை, சசிவர்ணன் கோவை, தியாகேசர் கோவை முதலியன இவ்வகையைச் சார்ந்தன. இவை முறையே நாணிக்கண் புதைத்தல், வண்டோச்சி மருங்கணைதல், வெறிவிலக்கென்னும் துறைகளையுடையன.
வருக்கக் கோவை
மொழிக்கு முதலாகும் எழுத்துகளுள் ஒவ்வொன்றையும் முதலாக உடைய ஒவ்வொரு செய்யுட்களுக்கும் ஒவ்வொரு துறையை அமைத்துக் கட்டளைக் கலித்துறையால் பாடப்படும் வருக்கக் கோவையென ஒருவகைப் பிரபந்தம் உண்டு. நெல்லை வருக்கக் கோவை, பாம்பலங்கார வருக்கக் கோவை முதலியன அவ்வகையைச் சார்ந்தவை.
.வீ. ஜெயராமன் கூறும் கோவை வகைகள்
கோவை ஆறு
அகப்பொருட் கோவை
புறக்கோவை
இரட்டை மணிக் கோவை
மும்மணிக் கோவை
நான்மணிக் கோவை
வருக்கக் கோவை
.வீ. ஜெயராமன் கூறும் கோவை வகைகள் - புறக்கோவை
புறக் கோவை
ஐம்படை விருத்தம், குடைமங்கலம், செருக்களவழி திக்குவிஜயம், பல்பொருள்வஞ்சி, புறக்கோவை, மறக்கள வஞ்சி, மறம், யானைத்தொழில், யானை வஞ்சி ஆகியன பட்டியலில் அடங்காத புறப்பொருண்மை தழுவிய இலக்கிய வகைகளின் பெயர்கள்.
.வே.சா கூறும் பழைய கோவை நூல்கள் -1
பழமலைக் கோவை
திருவாதவூரடிகளால் இயற்றப்பட்ட திருச்சிற்றம்பலக் கோவையாரும், இறையனாரகப் பொருளில் மேற்கோளாக வரும் பாண்டிக் கோவையும் பழைய கோவைகளாகும்.
.வே.சா கூறும் பழைய கோவை நூல்கள் -2
யாப்பருங்கல விருத்தி
யாப்பருங்கல விருத்தியுரையாசிரியரால் கூறப்படும் குமரசேனாசிரியர் கோவை யும், தண்டியலங்கார உரையாசிரியரால் சுட்டப்படும் தமிழ் முத்தரையர் கோவை யும், ஒட்டக்கூத்தர் இயற்றிய காங்கேயன் நாலாயிரக் கோவையும், அம்பிகாபதிக் கோவையும் பழமையுடையன வென்றே தெரிகின்றன.
.வே.சா கூறும் பழைய கோவை நூல்கள் -3
பாண்டிக் கோவை
இறையனாரகப் பொருளுரையில் மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ள பாண்டிக்கோவை மிக விரிந்த அமைப்பை யுடையதென்று தோன்றுகின்றது. மற்றக் கோவைகளெல்லாம் பெரும்பாலும் தஞ்சைவாணன் கோவையை ஒத்து அமைந்துள்ளன.
பாண்டிக் கோவையின் பல செய்யுட்கள் இறையனாரகப்பொருள், களவியற் காரிகை, யாப்பருங்கல விருத்தி, இலக்கண விளக்கம் என்பவற்றின் உரைகளில் மேற்கோளாக வந்துள்ளன
நின்றசீர் நெடுமாறனாகிய நெல்வேலி வென்ற மாறனைப் பாட்டுடைத் தலைவராகக் கொண்டதெனக் கருதப்படும் பாண்டிக் கோவையில் ஒரு துறைக்கே பல செய்யுட்கள் இருக்கின்றன. ஆதலின் அதன்கண் ஆயிரத்தின் மிக்க செய்யுட்கள் இருத்தல் வேண்டுமென்று தோன்றுகிறது.
.வே.சா கூறும் பழைய கோவை நூல்கள் - 4
கோவை நூலகள்
பழைய நூலுரைகளிலிருந்து அறியப்படும் குமர்சேனாசிரியர் கோவை, தமிழ் முத்தரையர் கோவை, காங்கேயன் நாலாயிரக் கோவை என்பனவும் இவ்வகைப் பிரபந்தங்களென்றே கருதப்படுகின்றன. அவற்றுள் காங்கேயன் நாலாயிரக் கோவை ஒவ்வொரு துறைக்கும் பப்பத்து செய்யுட்களாக அமைந்ததென்று ஊகிக்கப்படுகின்றது.
அம்பிகாபதிக் கோவை
கோவைகளில் பாட்டுடைத் தலைவன் கிளவித் தலைவன் என்னும் இருவர் இருத்தல் மரபு. பாட்டுடைத் தலைவனின்றிப் பாடப்பட்டது அம்பிகாபதிக் கோவை ஒன்றே
.வே.சா கூறும் பழைய கோவை நூல்கள் -5
திருக்கோவை
திருக்கோவை, நானூறே செய்யுட்களா லாகியது. முதற்கோவையாகிய அதி லுள்ள செய்யுட்களின் தொகையை நினைத்து கோவைகள் எல்லாவற்றிற் கும் நானூற்றுக் கோவை யென்னும் பெயர் பிரபந்தத் திரட்டு என்னும் நூலொன்றிற் சொல்லப்படுகிறது
FXC  நடராசா
திருச்சிற்றம்பலக் கோவை போன்ற முன்னைய அகப்பொருள் கோவை நூல்கள் வரைபொருட் பிரிதல் வரையான களவியற் கிளவித் தொகை பதினெட்டும் , மணஞ்சிறப்புரைத்தல் முதல் பரத்தையிற் பிரிவு வரையான கற்பியல் கிளவித் தொகை ஏழும் கொண்டு 400 கட்டளைக் கலித்துறைகளால் நடக்க நாற்கவிராச நம்பியின் அகப்பொருள் விளக்கத்தின்பின் அதனைத் தழுவி 13ம் நூற்றாண்டிலெழுந்த தஞ்சைவாணன் கோவை போன்ற பின்னைய அகப்பொருள் கோவை இலக்கியங்கள், இயற்கைப் புணர்ச்சி முதல் வரைவிடை வைத்துப் பொருள்வயிற் பிரிதல் வரையான களவியற் கிளவித்தொகை பதினேழும், வரைவு மலிதல் முதல் மீட்சி வரையான கிளவித்தொகை ஐந்தும் வரைவுக்குரிய கிளவிகள் மூன்று, இல்வாழ்க்கை முதல் பரத்தையிற் பிரிவு வரையான கற்பியல் கிளவித் தொகை ஏழுங்கொண்டு 425 கட்டளைக் கலித்துறைகளால் நடக்கும்.
கோவையில் சில மரபுகள் -1
இக்கோவை பெரும்பாலும் அரசர்மேற் பாடப்பட வேண்டுமென்றும், திணை முதலிய பன்னிரண்டு உறுப்பையும் பெற்றிருக்க வேண்டுமென்றும் இதற்குரிய பரிசு இரண்டாயிரம் பொன்னென்றும் பிரபந்தத் திரட்டென்னும் இலக்கண நூலொன்று கூறும்
கோவையில் சில மரபுகள் -2
கோவை யாப்பு
கோவை நூல்கள் கட்டளைக் கலித்துறையால் இயற்றபடும் வரையறையுடைமை பற்றி அச்செய்யுளுக்குக் கோவைக் கலித்துறை யென்னும் பெயர் வழங்கலாயிற்று (வீரசோழியம் யாப்பு 17 உரை) அக்கலித்துறைகளைத் தொல்காப்பிர்ய உரையிற் பேராசிரியரும் நச்சினார்க்கினியரும் கொச்சகத்தின்பாற்படுத்துவர். யாப்பருங்க விருத்தியுடையார் கலிப்பாவின் இனமாக்குவர். சந்தப் பாவகையில் ஒன்றாகவும் பகுப்பர்
கோவையில் சில மரபுகள் -3
கைக்கிளை
                நாற்கவிரச நம்பி நற்காமத்துக்கு முன் நிகழும் கைக்கிளை அகப்பொருட் கைக்கிளை யெனவும், காமஞ்சாலா இளமையோள் வயிற் காமுறல் முதலியனவற்றை அகப்புறக் கைக்கிளை யெனவும், பாட்டுடைத் தலைவனையே கிளவித் தலைவனாகக் கூறும் கைக்கிளையைப் புறப்பொருட் கைக்கிளையெனவும் வகுப்பர்.
கோவையில் சில மரபுகள் -4
 கிளவி மரபு மீனாட்சி சுந்தரம்பிள்ளை
திருக்கோவையாருக்குப் பின் எழுந்த கோவைகளிற் பெரும்பாலன அகப்பொருள் விளக்க இலக்கணத்தைப் பின்பற்றி யமைந்தன. இவ
ற்றில் கூறப்படும் கிளவிகள் கைக்கிளை முதல் பொருள்வயிற் பிரிவு இறுதியாக 33 ஆகும். ஒவ்வொரு கிளவியிலும் பல துறைகள் உள்ளன. சிலர் சில துறைகளை விரித்து இரண்டும் பலவும் ஆக்குவர். சிலர் பலவற்றைச் சுருக்கி ஒன்றாக்குவர். பாங்கி, நாற்றம், தோற்றம், முதலிய எழுவகையானும் ஐயுறுதலை ஒருதுறையாக்கிச் சிலர் ஒரு பாட்டிற் கூறுவதும், அதனையே விரித்து ஏழுபாட்டாற் சிலர் கூறுவதும் உண்டு போன்றன இதற்கு உதாரணமாகும். இக்கிளவிகள் முப்பத்து மூன்றனுள் தெளிவென்பதும், வரவென்பதும் ஒவ்வொரு துறையையே உடைய கிளவிகள். இயற்கைப் புணர்ச்சியின்கண் உள்ள வறிது நகை தோற்றல்என்ற துறையை கவியினது கூற்றாக அமைப்பதே பெரும்பான்மையான மரபென்று என்னுடைய ஆசிரியராகிய மகாவித்வான் மீனாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் சொல்லியிருக்கிறார்கள். அம்மரபினின்று மாறுபட்ட கோவைகளும் உண்டு.
கோவையில் சில மரபுகள் - 5
 கூற்று
                இக்கூற்றுகளில் தலைமையுடையன தலைவன், தலைவி, பாங்கி யென்னும் மூவர் கூற்றுக்களே. இவைகளே கோவையிற் பெரும்பகுதியாக அமையும். இவற்றின் தலைமையறிந்தே திருவள்ளுவர் தமது திருக்குறட் காமத்துப் பாலில் இம்மூவர் கூற்றுக்களையே அமைத்தனர்.
கோவையின் சிறப்புகள் -1
யாவையும் பாடிக் கோவை பாடு
                அகப்பொருள் பிற சிற்றிலக்கியங்களில்: கோவையில் வரும் அகத்துறைகலில் பல அந்தாதிக் கலம்பகம் முதலிய வேறுவகைப் பிரபந்தங்களின் இடையிடையே காணப்படும். கலம்பகத்தில் அமைக்கப்பட வேண்டுமென்று வரையறுக்கப்பட்ட உறுப்புகளில் பாண், இரங்கல், தூது, வண்டு, தழை யென்பன அகப்பொருட் துறைகளேயாம். இங்ஙனம் அமைந்த இடங்களில் அகத்துறைகளுக்குரிய பெயர்களிற் சில வேறாகவும் வழங்கும்.  இடையூறு கிளத்தலை நாணிக் கண்புதைத்தலெனவும்,  பாங்கி தலைமகன் அவயவத் தருமைசாற்ற லென்பதை எழுதரிதென்ன ஏந்தலை விலக்கலெனவும் வழங்குவது காண்க.
               
கோவையின் சிறப்புகள் -2
அகப்பொருளமைதியினால் இயலும் சந்த வகையைச் சார்ந்த செய்யுட்களையுடைமையினால் இசையும், கூற்றுவகையுடைமையினால்  நாடகமும் சிறப்பிக்கத்தகும் பெருமை வாய்ந்தது அத்தகுதி பற்றியே பேராசிரியர் திருக்கோவையாருக்கு உரை இயற்றினார்; சொக்கநாத நாவலரென்ற புலவர் தஞ்சைவாணன் கோவைக்கு உரை எழுதினார்
கோவை தலங்கள்
தமிழ் நாட்டிலுள்ள பெரிய சிவதளங்களிற் பெரும்பாலானவற்றிற்குக் கோவை நூல்கள் உண்டு. பழங்கோவைகளிற் பொருட்சிறப்பும் சங்க நூற் பொருளமைதியும் காணப்படும். பிற்காலத்துக் கோவகளிற் சொற்பொருளணிகளும் சாஸ்திரக் கருத்துகளும், தலவிசேடங்களும் மிகுதியாக உண்டு.  ஒரே பொருளமைய பாடவேண்டியிருத்தலின் இவ்வகை நூற்செய்யுட்களில் வேறுபாட்டு நயம் தோற்றுதற்காகச் சிலேடை, மடக்கும் தொனி முதலிய அணிகளைப் பிற்காலப் புலவர் அமைக்கத் தொடங்கினர் போலும்.
மும்மணிக் கோவை - 1
.வே.சா.
                இஃது ஆசிரியப்பா, வெண்பா, கட்டளைக் கலித்துறை என்பன முறையே அந்தாதியாக மண்டலித்துவர முப்பது செய்யுட்களால் இயற்றப்படுவது. மூன்று மணிகளாற் கோக்கப்பெற்ற கோவை போல இருத்தலின் இப்பெயர் பெற்றது. மூன்று மணிகளாவன புருடராகம், வைடூரியம், கோமேதகம் என்பனவாம்
                        மும்மணியா வகைசொன்ன புருடராகம் உறுவயிடூ
                        ரியங்கோமே தகமே யென்றாங் கோதுவர்  - திருவாலங்காட்டுப் பதிகம் 25.22
இது சொற்றொடர் நிலைச் செய்யுள் என்னும் நூல் வகையின்பாற்படும். மும்மணி மாலை யென்னும் பிரபந்தம் வேறு; இதுவேறு. இந்த வகையில் தொல்லாசிரியர்கள் இயற்றியவை பல உள்ளனவென்று தெரிகின்றது.
மும்மணிக் கோவை -2
.வே.சா.- வலிவல மும்மணிக் கோவை 1934
நவமணிகளுள் நிறங்கள் வேறுபட்ட புருடராகம், வைடூரியம், கோமேதகம் என்னும் மூவகை மணிகளாற் கோக்கப்பெற்ற கோவையைப் போலவே தம்முள் வேறுபட்ட ஆசிரியப்பா, வெண்பா, கட்டளைக் கலித்துறை என்னும் மூவகைச் செய்யுட்கள் முப்பதால் அமைக்கப்பட்டது
யா.வி. 53 உரை
இறுதி எழுத்தும் சொல்லும் இடையிட்டுத் தொடுத்த செய்யுளந்தாதி விகற்பம், உதயணன் கதையும், கலியாணன் கதையும், பன்மணிமாலையும், மும்மணிக் கோவையும் என்னும் அவற்றுள் கண்டுகொள்க
மும்மணிக் கோவை - நோக்கம்
நோக்கம்
                தொடர்ந்து பயிலும் ஆற்றல் இல்லாத இளம் பருவத்தினருக்கு உரிய பாடப் புத்தகங்களாக இவ்வகைப் பிரபந்தங்கள் பண்டைக் காலத்துத் தம்ழ்ப் பள்ளிக் கூடங்களில் பயிற்றப்பட்டன. அதனால் இவை தமிழறிவு பெற்றார்க்கும் பெற விரும்புவார்க்கும் ஒருசேர இன்பந் தருவன ஆகும்
கோவை நூல்கள் -1
அகப்பொருள் கோவை 
1.      திருக்கோவையார்                           1860 ஆறுமுக நாவலர் பதிப்பு
2.      பாண்டிக் கோவை
3.     காங்கேயன் நாலாயிரக் கோவை
4.     சீகாழிக் கோவை                               .வே. சா பதிப்ப
5.     திருவாவடுதுறைக் கோவை               1903
6.     பழமலைக் கோவை
7.     கலைசைக் கோவை                             (1935)
8.     கோவை விகற்பம்
9.     திருவாரூர்க் கோவை
10.   ஔவையார் அசதிக் கோவை
கோவை நூல்கள் -2
சைவ இலக்கியங்களில் கோவைகள்
ஆரூர் மும்மணிக் கோவை
திருவலஞ்சுழி மும்மணிக் கோவை
சிவபெருமான் திருமும்மணிக் கோவை
திருக்கழுமல மும்மணிக் கோவை
திருவிடைமருதூர் மும்மணிக் கோவை
திருமும்மணிக் கோவை
கோவை நூல்கள் - 3
வேறு சில நூல்கள்
கொழுந்து மாமலை முருகவேள் மும்மணிக் கோவை
பண்டார மும்மணிக் கோவை
இராசீபுரம் மும்மணிக் கோவை
திருநரங்கிரி மும்மணிக்கோவை
முத்தால நாயகி மும்மணிக் கோவை
கிறித்தவம்
சாலமோன் திருவருள் கோவை
விண்ணக வேந்தர் மும்மணிக் கோவை
கோவை நூல்கள் - 4
இஸ்லாம்
கொள்கை மணிக் கோவை
சம்சுத் தாசீம் கோவை
திருநாகைக் கோவை
பதானந்தக் கோவை
மணிமுத்துக் கோவை
முகம்மது இஸ்மாயில் கோவை
முகம்மது காசிம் பொன்மொழிக் கோவை
மும்மணிக் கோவை
விஜயன் அப்துல்ரகுமான் அகப்பொருள் பல்துறைக் கோவை
கோவை  இலக்கண நூல்
சிதம்பரச் செய்யுட் கோவை
இதனுள் 84 பாடல்கள் உள்ளன. வெண்பா விகற்பம். வெண்பா வினம், ஆசிரியப்பா விகற்பம், ஆசிரியப்பா வினம், கலிப்பா விகற்பம், கலிப்பா வினம், வஞ்சிப்பா, வஞ்சிப்பாவினம், மருட்பா  என்ற பிரிவுகளில் பாடிய பாடல்கள் உள்ளன.
நாணிக் கண்புதைத்தல்
பாண்டிக்கோவை
                 
நாணிக் கண்புதைத்தல்
தேந்தன் பொழிலணி சேவூர்த் திருந்தார் திறலழித்த
வேந்தன் விசாரிதன் தெவ்வரைப் போல்மெலி விக்கும் உன்றன் பூந்தடங் கண்புதைத் தாய்புதைத் தாய்க்குன் பொருவில் செங்கேழ்க்
காந்தள் விரலுமன் றோவெம்மை உள்ளங் கலக்கினவே

நற்றிணைப் பாடல்
சொல்லின் சொல்லெதிர் கொள்ளாய்; யாழநின்
திருமுகம் இறைஞ்சி நாணுதி கதுமென;
காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ?
நெடுங் கேழ் இரும்புறம் நடுங்கக் குந்திப்
புலி விளையாடிய புலவு நாறு வேழத்தின்
தலை மருப்பு ஏய்ப்ப கடைமணி சிவந்த நின்
கண்ணே கதவ? அல்ல நண்ணார்
அரண் தலை மதிலராகவும், முரசுகொண்டு
ஓம்பு அரண் கடந்த அடுபோர்ச் செழியன்
பெரும்பெயர் கூடல் அன்ன நின்
கரும்புடைத் தோளும் உடையவாள் அணங்கே

                 
தலைவியின் நிலை பற்றிக் களவியல் உரைகாரர்
காணும் காணவே தன் தன்மையள் ஆனாள். தன் தன்மை என்பது, நாண், மடம், அச்சம், பயிர்ப்பு என்னும் இவற்றோடுங் கூடி நிற்பது
தலைவன்:நின்னை யான் இப்பொழுது தெய்வம் என ஐயுறுவல், அல்லையானின் வாய் திறவாய், ஆவி சென்றாய் பெயர்ப்பது அரிதன்றோ
என்றான் தலைமகன் எனின் அல்லன்; தலைமகன் இடனாகப் பிறந்த ஆற்றாமை, அதுவும் தலைமகன் எனல் வேண்டும்.
தலைவி: கண்டார்க்குக் கெடுத்துத் தேடும் நன்கலம் எடுத்துக்கொண்டார் போன்று பெரியதோர் உவகை ஆயிற்று; ஆக, அவ்வுவகை ஒரு மூரல் முறுவல் தோன்றிற்று
தோற்ற எம்பெருமான் முன்னர்ப் பெரியதோர் நாணின்மை செய்தேன்என ஆற்றாளாயினாள். “யான் முன் நிற்பவும் ஆற்றாமையாயினான் எம்பெருமான்; எனது ஆற்றாமை கண்டவிடத்து இறந்துபடும் பிறஎன ஆற்றாமை நீங்கும்.
நீங்க, நாண் வந்து அடையும், அடையவே மறைவது காணாது
                மாதுபடு நோக்கி நன்மணித்தாள் மெல்விரலாற்
                போதுபுரை நெடுங்கண் புதைத்தாள்
நன்றி

No comments: