Sunday, 31 January 2016

சங்க இலக்கிய இலக்கணங்களின் வழி அந்தாதி சிற்றிலக்கியம்



பேரா.கை.சங்கர் அரசு கலைக்கல்லூரி சென்னை
சங்க இலக்கிய இலக்கணங்களின் வழி அந்தாதி சிற்றிலக்கியம்
}  விருந்து
விருந்தே தானும்
புதுவது கிளந்த யாப்பின் மேற்றே
}  பாட்டியல் நூல்கள்
(.வீ. ஜெயராமன்)
Ø  பன்னிரு பாட்டியல்
}  வெண்பா பாட்டியல்
}  நவநீதப் பாட்டியல்
}  பிரபந்தப் பாட்டியல்
}  இலக்கண விளக்கப் பாட்டியல்
}  தொன்னூல் விளக்கம்
}  முத்து வீரியம்
}  பிரபந்த தீபிகை
}  சுவாமிநாதம
}  பாட்டியல் நூல்கள்
(.வீ. ஜெயராமன்)

பன்னிரு பாட்டியல் நூல் காட்டும் பாட்டியல் நூல்கள்
}  தாத்தத்திரேயப் பாட்டியல்
}  வாருணப் பாட்டியல்
}  மாமூலர் பாட்டியல்
}  பண்டாரப் பாட்டியல்
}  96 பிரபந்தத்தில் அந்தாதி இல்லை
}  சதுரகராதி கூறும் பாட்டியல் வகையில் (96 பிரபந்தங்களில் ) அந்தாதி இலக்கியம் இல்லை
       அந்தாதி
       ஆண்டுநிலை
       இரட்டை மணிமாலை
முதலிய 39 பாட்டியல் வகைகள் பிற நூல்களில் காணப்படுகின்றன.
நூற்றந்தாதி எனக் கூறுகிறது. அதில் அந்தாதி வகையை அடக்கலாம்.
அந்தாதி இலக்கணம்
பன்னிரு பாட்டியல்
                                வெண்பா கலித்துறை வேண்டிய பொருளில்
                                பண்பாய் உரைப்பது அந்தாதித் தொகையே
பிரபந்த திரட்டு
                                ………… கலியே மன்னிய
                                வெள்ளை நூறு அந்தாதித்து வருவது
                                தனித்தனி அந்தாதி

சிதம்பர பாட்டியல்
                                வெள்ளை நூறு கலித்துறை நூறாதல்
                                நன்கு உறில் அந்தாதி
சுவாமிநாதம்
                                ஆர்ந்த வெள்ளை கலித்துறையே விருத்தமும் தான்தனியே
                                அந்தாத்தித்திடில் அப்பேர் அந்தாதி
அந்தாதி விளக்கம்
.வே.சா
}                                   அது (அந்தாதி) முதற் செய்யுளின் ஈற்றடியிலுள்ள இறுதி சீர் முதலியவற்றை அடுத்த செய்யுளின் ஆதியாகக் கொண்டு மண்டலித்து வருவது. அது வெண்பாக்களாளேனும், விருத்தங்களாளேனும், கட்டளைக் கலித்துறைகளாளேனும் நூறு செய்யுட்களால் இயற்றப்படும்.
}  கலம்பகம் முதலியனவும் அந்தாதியாகச் செய்யப்படுமேனும், அந்தாதியாக வருதலொன்றையே சிறப்பிலக்கணமாகக் கொண்டமையால் அஃது அப்பெயர் பெற்றது. மனப்பாடஞ் செய்வதர்கு அனுகூலமாக இருத்தற்கும் அப்பிரபந்தம் ஏற்பட்டிருக்கலாமென்று தோற்றுகிறது.
}  அந்தாதி விளக்கம்
.வீ. ஜெயராமன்
}  வெண்பா அல்லது கலித்துறை செய்யுட்கள் நூறு           அந்தாதித் தொடையில் பாடப் பெறுவது அந்தாதி  இலக்கிய வகையின் பொது இலக்கணம் ஆகும்.
}   கலம்பகம், மும்மணிக் கோவை, அட்டமங்கலம்,            இரட்டை மணி மாலை, இணைமணி மாலை, நவமணி மாலை, நான்மணி மாலை, பல்சந்த மாலை, பன்மணி    மாலை, மும்மணி மாலை, ஒருபா ஒருபஃது, இருபா இருபஃது, அலங்கார பஞ்சகம் ஆகியவை அந்தாதி வகையில் அமைய வேண்டும் எனப் பாட்டியல் நூல்கள் கூறுகின்றன
}  அந்தாதித்து வருதல் வேண்டும் என்ற நெறி பல இலக்கிய வகைகளில் இலக்கண வகைகளில் வற்புறுத்தப்பட்டது.
}  அந்தாதி விளக்கம்
வெண்பா பாட்டியல் உரை (இரா. கண்ணன்)
}  ஒரே வகையான வெண்பா நூறுபாடல்களைப் பெற்றுவரின் வெண்பா அந்தாதி எனப் பெறும். கலித்துறை என்னும் யாப்பும் மேற்சொன்னவாறு நூறு பாடல்களைப் பெற்றுவந்தால் அதற்குக் கலித்துறையந்தாதி எனப் பெயர் வைக்க.
}  கட்டளைக் கலித்துறை
}  நெடிலடியாய் அமையும்
}  முச்சீர் நான்கும் வெண்டளை பொருந்திவரும்
}  கடைச்சீர் கருவிளங்காய், கூவிளங்காய் சீர்களில் ஒன்றாக வரும்
}  நேர் அசையில் தொடங்கின் 16 எழுத்தும், நிரையசையில் தொடங்கின் 17 எழுத்தும் வரும்.
}  அந்தாதியின் தோற்றம்
.வீ. ஜெயராமன்
}                  அந்தாதி என்னும் சிற்றிலக்கிய வகையின் தோற்ற காலம் கி.பி. 4ஆம் நூற்றாண்டின் இறுதி கி.பி. 5ஆம் நூற்றாண்டு. தமிழில் முதன்முதலாக எழுந்த அந்தாதி இலக்கியம் அற்புதத் திருவந்தாதி இந்நூலைப் பாடியவர் காரைக்காலம்மையார். அற்புதம் சிவஞானம். ஏறத்தாழ 250 அந்தாதி இலக்கியங்கள் இன்று தமிழில் வழங்குகின்றன.
}  சங்க இலக்கியங்களில் அந்தாதி

}  ஐங்குறுநூற்றின் 18ம் பத்து பதிற்றுப்பத்தின் நான்காம் பத்தின் பாடல்கள், நற்றிணை 95ம் பாடலின் 7-9  வரிகள், பட்டினப்பாலை 126-127 129-130 ஆகிய அடிகள் சிறுபாணாற்றுப்படை 14-28 அடிகள் சிலப்பதிகாரத்தில் கானல்வரியில்  சில பாடல்வரிகள் ஆகியன அந்தாதி இலக்கியங்கள் பெற்று விளங்குகின்றன.
}  அந்தாதி நூல்கள் சில
மகாகவி மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் அந்தாதிப் படைப்புகள்.
பதிற்றுபந்தந்தாதி
       தண்டபாணி பதிற்றுப்பத்தந்தாதி
       திருஞான சம்பந்த மூர்த்தி நாயனார் பதிற்றுப்பத்தந்தாதி
       திருவூறைப் பதிற்றுப்பத்தந்தாதி
       பழசைப் பதிற்றுப்பத்தந்தாதி
       பாலைவனப் பதிற்றுப்பத்தந்தாதி
       பூவாளூர்ப் பதிற்றுப்பத்தந்தாதி
}  அந்தாதி நூல்கள் சில
மகாகவி மீனாட்சி சுந்தரம்பிள்ளையின் அந்தாதிப் படைப்புகள்.
திரிபந்தாதி
       குடந்தை திரிபந்தாதி
       திருப்பைஞ்ஞீலித் திரிபந்தாதி
       திருவானைக்கா திரிபந்தாதி
       திருவிடை மருதூர் திரிபந்தாதி
யமக அந்தாதி
        திருச்சிராமலை யமக அந்தாதி
       திருவாவடுதுறை யமக அந்தாதி
       தில்லை யமக அந்தாதி
வெண்பா அந்தாதி
       எறும்பீச்சரம் வெண்பா அந்தாதி
                 
}  அந்தாதி நூல்கள் சில
சைவ சமய அந்தாதி இலக்கியங்கள்
       அற்புதத் திருவந்தாதி
       பொன்வண்ணத்தந்தாதி
       கைலைபாதி காளத்திப் பாதி அந்தாதி
       சிவபெருமான் திருவந்தாதி
       திருவேகமுடையார் திருவந்தாதி
       திருத்தொண்டர் திருவந்தாதி
       ஆளுடைய பிள்ளை திருவந்தாதி
வைணவம்
       முதலாம் திருவந்தாதி
       இரண்டாம் திருவந்தாதி
       மூன்றாம் திருவந்தாதி
       நான்முகன் திருவந்தாதி
       பெரிய திருவந்தாதி
       இராமாநுச நூற்றந்தாதி
       அந்தாதி நூல்கள் சில
சமணம்
       திருநூற்றந்தாதி அவிரோதியார்
கிறித்தவம்
       அருள்திரை அந்தாதி, கோட்டூர் அந்தாதி
இஸ்லாம் அந்தாதி
       காரை அந்தாதி
       சொர்க்கத்து அந்தாதி
       ஞான அந்தாதி
       திருக்கோடியாற்றுப் பதிற்றுப்பத்தந்தாதி
       திருநாகை நிரோட்டக யமக அந்தாதி
       திருபகுதாது அந்தாதி
       திருமக்கா திரிபந்தாதி
       திருமதீனத்து அந்தாதி
       திருமதீனத்துப் பதிற்றுப்பத்தந்தாதி
       திருமதீனத்து யமகவந்தாதி
       திருமதீனத்து வெண்பாவந்தாதி
       நாகை அந்தாதி
       பதாயிரு பதிற்றுப்பத்தந்தாதி
       மதீனத்து அந்தாதி ஜவ்வாது புலவர்
       முகைதீன் அப்துல்காதர் ஆண்டவர்பேரில் பதிற்றுப்பத்தந்தாதி
       அந்தாதி நூல்கள் சில
பிற
       திருக்கருணை வெண்பா அந்தாதி – 1927
       திருக்கருவைப் பதிற்றுப்பத்தந்தாதி – 1926
       மறைசையந்தாதி – 1930
       பழமலையந்தாதி
       சிதம்பரேசர் பதிற்றுப்பத்தந்தாதிசிவஞான முனிவர்
       திருச்சிற்றம்பல வெண்பாவந்தாதி சி. தியாகராஜ செட்டியாரவர்கள்
       திருமயிலைத் திரிபந்தாதிமாயூரம் இராமையர்
அந்தாதி நூல்கள் அதிகமாக இருக்கக் காரணம்
.வே.சா.
}  பழைய காலத்தில் தமிழ்ப்பள்ளிக்கூடங்களில் பிரபந்த வகைகளும் இன்றியமையாத பாடங்களாகக் கற்பிக்கப்பட்டன.
}  தமிழ்ச்செய்யுள் இயற்றும் பழக்கத்தை மேற்கொண்டவர்கள் ஆரம்பத்தில் இத்தகைய பிரபந்தங்களையே இயற்றுவது வழக்கம்
}  தமிழ் பயிலும் மாணாக்கர்களுடைய ஆற்றலை அளப்பதற்கு இப்பயிற்சி ஒரு சாதனமாக இருந்தது. தம்முடைய மாணாக்கர்களைக் குறித்துப் பேசுகையில் இவன் இத்துணை எழுத்துக்களைத் திரித்துப் பாடுவான் என்று என் இளமைக்காலத்தில் சில முதிய கவிஞர்கள் கூறுவதைக் கேட்டிருக்கிறேன்.
                 
அந்தாதி வகைகள்
}  திரிபு , யமக அந்தாதிகள்
திரிபு
}  ஒவ்வோரடியின் முதலெழுத்தொழிந்த எழுத்துகள் சிலவும் ஒத்துப் பொருள் வேறுபட்டு வருவது திரிபாகும். திரிபு, திருகலென்றும் வழங்கும். (.வே.சா)
}  திரிபைத் திருகலென்றும் கூறுவர். திரிபும் யமகமும் ஒரே அந்தாதியில் கலந்து வருவதுமுண்டு. இவ்வகை நூல்கள் சொற்றொடர் நிலைச் செய்யுளின்பாற்படும்
திரிபு யமகம்
}  நான்கடிகளிலும் முதலில் முதலெழுத்தைப் பொழிந்த ஏனைய எழுத்துக்கள் பல ஒன்றிவரின் அது திரிபந்தாதியாகும். அம்முதலெழுத்தும் ஒன்றிவரின் யமக அந்தாதியாகும், இங்ஙனம் வரும் யமகம் சொல்லணியினுள் இடையிட்டு வந்த ஆதிமடக்கின்பாற்படும்
}  பதிற்று அந்தாதிகள்
பதிற்றுப்பத்தந்தாதி
       பத்துப் பத்துப் பாட்டுக்கு ஓர் யாப்பாகப் பத்துவகை செய்யுட்களால் இயற்றப்படுவதாகிய ஒருவகை அந்தாதி பதிற்றுப்பத்தந்தாதி யென்று வழங்கும்
பதிற்றந்தாதி
       பத்து வெண்பா, பத்துக் கலித்துறையும் பொருளுறப் பாடுவதாகும்
நூற்றந்தாதி
       நூறு வெண்பா, நூறு கலித்துறை அந்தாதித் தொடையால் பாடப்படுவதாகும்
}  ஒலியந்தாதி
ஒலியந்தாதி இரா. கண்ணன்
                ஈட்டிய ஈரெண் கலை வண்ணம் செய்யுள்
                கூட்டிய நீடுஒலி அந்தாதி
}  அடிக்குப் பதினாறு கலை எனக் கொண்டு வண்ணச் செய்யுள்கள் முப்பது பொருந்திவர அந்தாதித் தொடையொடு நீள்வது அந்தாதி
தெளிவுரை
}  ஓர் அடியில் பதினாறு கலைகள் என நான்கடிகளுக்கு மொத்தம் அறுபத்து நான்கு கலைகளைப் பெற்றுவரும் ஓசை நயமுடைய வண்ணச் செய்யுள்கள் முப்பது வருமாறு அந்தாதித் தொடையமைய பாடப் பெறுவது ஒலியந்தாதி.
வண்ணச் செய்யுள்
}  ஓசைநயமுடைய செய்யுள். இதனை வண்ணகம், வண்ணம், ஒலி எனப் பலவாறு வழங்குவது மரபாகும்.
}  ஒலியந்தாதி
கலை
}  செய்யுளில் அலகிடும்போது நேரசை, நிரையசை என அசை பிரிக்குமாறு செய்யுள் ஓசையை அலகிடப் பயன்படும் வாய்ப்பாட்டினைச் சந்தக் குழிப்புகள் என்பர். அவை;
                                                தத்த தத்தா
                                                தாத்த தாத்தா
                                                தந்த தந்தா
                                                தாந்த தாந்தா
                                                தன தனா
                                                தான தானா
                                                தன்ன தன்னா
                                                தய்ய தய்யா
}  எட்டு நெட்டெழுத்தொடு முடியும் சொற்கள் சேர்த்து மொத்தம் பதினாறு.
}  ஒலியந்தாதி
துள்ளல்
}  இச்சந்தக் குழிப்புகளில் இரண்டோ, பலவோ சேர்ந்து வருவது ஒரு துள்ளல் என்பர்
                                                தன தான  தனதன தான
குழிப்பு
}  துள்ளல்கள் மூன்று சேர்ந்து வருவது ஒரு குழிப்பு
                                                தனதான தனதான தனதான
கலை
}  ஒரு குழிப்பும் ஒரு சிறு தொங்கல் துள்ளலும் சேர்ந்து வருவது கலை எனப்படும்.
தொங்கல் துள்ளல்
}  துள்ளலில் வரும் சந்தக் குழிப்புகளில் ஓசை வேறுபாடுடைய சந்தக் குழிப்புகளைப் பெற்று வருவது
                                                தனதான தனதான தனதான தத்ததய்ய
}  ஆக ஒரு குழிப்பும் ஒரு தொங்கல் துள்ளல் சேர்ந்து வருவதாகிய கலை ஓரடிக்குப் பதினாறும் நாலடிகளுக்கும் சேர்த்து அறுபத்து நான்கு கலைகளைப் பெற்று வருவது வண்ணச் செய்யுள் அல்லது வண்ண விருத்தம் எனப்படும்
வரலாறு
}  திருமயிலை அந்தாதி
}  ஸ்ரீ மீடாட்சி சுந்தரம்பிள்ளையவர்கள் தமது இளம்பிராயட்தில் பல ஐயங்களைத் தீர்க்கும்பொருட்டு த் திருவாவடுதுறை ஆதீனத்தில் 14ஆம் பட்டத்தில் எழுந்தருளியிருந்த ஸ்ரீ வேளூர் சுப்பிரமணிய தேசிகரவர்களைத் தரிசிக்கப்போகும் வழியில் பட்டீச்சுரத்தில் தங்கிய காலத்து அவ்வூரார், பசுபதி பண்டாரமென்னும் ஒரு தமிழ் வித்துவானைக் கொண்டு பரீசிட்சித்தபொழுது, அவர் இந்நூலிலுள்ள நன்கொடிச்சிக்கை”(58) என்னும் செய்யுளைக் கூரிப் பொருள் வினாவினார். பிள்ளையவர்கள் இந்நூலை அதுவரையில் பாராமலிருந்தும் உடனே அச்செய்யுளின் பொருளைத் துறையுடன் விரைவில் நன்கு விளக்கவே, அதைக் கேட்டவர்கள் பலரும் அவர்களுடைய கல்விப் பெருமையை அறிந்து பாராட்டுவராயினார். அதன்பிறகுதான் அவர்கள் பெருமை கும்பகோணம் முதலிய இடங்களில் பரவியது.
வரலாறு
}  திருமயிலை அந்தாதி
}  யாழ்ப்பாணத்து நல்லூர் ஸ்ரீ ஆறுமுக நாவலவர்கள் சிதம்பரத்திலிருக்கும் பொழுது, பிள்ளையவர்களுடைய மாணாக்கர்களில் ஒருவராலே தேவிக்கோட்டை வந்தொண்டச் செட்டியா ரென்பவர் அவர்கலீடம் இருந்த சுவடியைக் காட்டினார். நாவலரவர்கள் அதைப் பிரித்துப் பார்க்கையில், ’வலவருமைக்கு’ (30) என்னும் செய்யுள் அகப்பட்டது. அதைப் படித்துப் பார்த்து நடையின் நயம் முதலியவற்றை உணர்ந்து மகிழ்ந்து இன்புற்றுஇந்நூலை அச்சிட்டால் தமிழ்ப்படிப்பவர்களுக்கு நல்ல பலனை அளிக்கும்என்றார்களாம்
}  இந்த இரண்டு செய்திகளும் இந்நூலை நான் தேடுவதற்கும் படித்தற்கும் காரணமாயின.
}  வரலாறு
}  கூழை அந்தாதி
                என்னுடைய தமிழாசிரியராகிய மகாவித்துவான் ஸ்ரீமீனாட்சிசுந்தரம்பிள்ளையவர்கள் இலக்கிய பாடஞ் சொல்லி வருகையில் ஒருமுறை இந்நூலிலுள்ள
இளந்தென் றலைவட வானல மென்னு மிகன்மதன்கா
களந்தென் றலையமன் காணென வேங்குங் கடலகடு
பிளந்தென் றலைவந் தழிப்பதெந் நாளெனும் பேதையிவ்வா
றளந்தென் றலைவி லெழுத்தெனும் கூழை யரும்பொருளே

என்ற செய்யுளை ஒன்றற்கு வேற்கோளாகச் சொல்லி, இது கூழையென்னும் ஒரு தலத்துக்குரிய அந்தாதியிலுள்ளதென்றும், அந்நூல் கிடைக்கவில்லையென்றும் எங்களுக்குச் சொன்னதன்றி இதன் சொல்நயம் பொருள் நயங்களை மிகவும் பாராட்டினார்கள்அளந்தென் தலையில் எழுத்தெனும்  பகுதி மிகவுஅம் அருமையாக அமைட்ன்ஹு இச்செய்யுளின் சுவையை அதிகரிக்கச் செய்கின்றதென்றும் சொன்னார்கள். அக்காலத்தில் கூழையென்பது என்ன தலமென்ரு தெரியவில்லை. அப்பால் வருபவர்களிடம் இந்தநூல் கிடைக்குமாவென்று விசாரித்தும் வந்தார்கள். கிடைத்திலது
}  வரலாறு
}  கூழை அந்தாதி
               
               

No comments: