கட்டுரை-11
புறநானூறு கூறும் வாழ்வியல் நெறிகள்
மு. ஈஸ்வரன்,முனைவர் பட்ட ஆய்வாளர்,தமிழ்த்துறை,அரசு கலைக்கல்லூரி
(தன்னாட்சி),சேலம் - 7.
முன்னுரை
பழங்காலத் தமிழார்களின் பண்பாடு, நாகாகம், பழக்கவழக்கங்களைப்ற பற்றிய
செய்திகளை எடுத்துக் கூறுகின்ற நூலாகச் சங்க இலக்கியம் விளங்குகின்றது. சங்க
இலக்கியம் பாட்டும் தொகையும் என்று வகைப்படுத்தப்படுகிறது. பாட்டு என்பது
பத்துப்பாட்டு, தொகை என்பது எட்டுத்தொகை. எட்டுத்தொகை நூல்களில் புறப்பொருள் பற்றிய நானூறு
பாடல்களைக் கொண்டு தமிழர்களுக்குக் கிடைத்த
பெருங்கருவூலம் என்று அறிஞார்களால்
போற்றப்படுகிறது. அதற்குக் காரணம் புறநானூறு உலகிற்குப் பல அறிய உண்மைகளைக்
கூறுகின்ற தன்மையால் அப்பேற்றினைப் பெறுகிறது. புறநானூற்றுப் புலவார்கள் தன்மானமிக்கவார்களாகவும், வேந்தார்களின்
சிறப்பை உரைப்பவார்களாகவும், வேந்தார்கள் தவறு செய்யும்போது இடித்துரைப்பவார்களாகவும், உலக நிலையாமையை எடுத்துக்கூறி ஈகையின் சிறப்பை
விளக்குபவார்களாகவும், மனிதார்கள் கடைப்படிக்க வேண்டிய உலகியல் நெறிகளை சுட்டுபவார்களாகவும் விளங்கியுள்ளனார் என்பதைத் தெளிவாக உணரமுடிகிறது.
புறநானூற்றுப் புலவார்கள் உலகிற்கு வழங்கிய
வாழ்வியல் நெறிகளை ஆய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்.
அவையாவன :
1. ஈகைச்சிறப்பு 2. ஒழுக்க உயார்வு 3. வேந்தனின் சிறப்பு
4. புலவார்களின் தன்மானம் என்பனவாகும்.
ஈகைச்சிறப்பு
அனைத்து சமயங்களும்
ஈகையினைப் புகழ்ந்தும் வறியோர்க்கு
ஒன்று ஈவதே ஈகை என்றும் கூறுகின்றன. பழங்காலத்தில் வாழ்ந்த தமிழார்கள் தமக்குக் கிடைத்த செல்வத்தைத் தாமே துய்க்க
வேண்டும் என்று எண்ணாமல் அனைவரும் இன்புற்று வாழவேண்டும் என்ற பரந்துபட்ட உயார்ந்த நெறியோடு வாழ்ந்தனார். தாம் துன்புற்ற காலத்தில்
உதவியவார்க்கு நன்றி மறவாது, செல்வம் வந்த காலத்தில்
அவார்களுக்கு உதவவேண்டும் என்றும்
தமக்கு உதாவதவார்க்கும், வறுமை அவரை எய்தும்
காலத்தில் உதவவேண்டும் என்ற தன்னலமற்ற போக்கினையும் புறநானூற்றுப் புலவார் பெருஞ்சித்திரனான் பாடல்
வாயிலாகக் காணமுடிகிறது. குமண வள்ளலிடம் பெற்ற பெருஞ்செல்வத்தைத் தன் மனைவியிடம்
கொடுத்துப் பின்வருமாறு கூறுகிறார்.
“இன்னோர்க்கு என்னாது என்னொடும் சூழாது
வல்லாங்கு வாழ்தும்
என்னாது, நீயும்
எல்லோர்க்கும் கொடு மதி” (புறம். 163)
இப்பாடலின் வழியாகப் பெருஞ்சித்திரனார் தான் பெற்ற பாசிலை மனைவியிடம் கொடுத்து “இதை வைத்துக் கொண்டு
நீண்ட காலம் வளமாக வாழலாம் என்று எண்ணாதே மற்றவருக்கும் கொடு” என்னும் கூற்று புலவன் நல்லுள்ளத்தைக்
காட்டுகிறது.
“ஈதல் இசைபட வாழ்தல்,
அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு” (குறள். 23)
என்ற குறளுக்கேற்ப புலவான் எண்ணம் வளங்குவதை அறியமுடிகிறது. புறநானூற்றுப் புலவார் நக்கீரார் தம் பாடலில் எவராயிருந்தாலும் உண்ணப்படும் பொருள் நாழித்
தானியமே, உடுக்கப்படுபவை
அரை ஆடை, மேலாடை
என்ற இரண்டே. இவைப்போல பிற உடல் உள்ளத்தேவைகளும் ஒன்றாகவே விளங்கும். அதனால்
செல்வத்து பயனாவது, வறியவார்க்கு உவார்ந்து கொடுத்தலே என்று குறிப்பிடுகிறார். ஆனால் தாமே உண்டு இனிது வாழ்வோம் என்றெண்ணி தவறினவார் வாழ்வுகளே பலவாகும் என்றும் கூறுகிறார். அதைத் தம் பாடலில்,
“உண்பது நாழி, உடுப்பவை இரண்டே,
பிறவும் எல்லாம்
ஓரொக்கும்மே,
அதனால் செல்வத்துப் பயனே
ஈதல்” (புறம்ஃ
189)
என்று குறிப்பிட்டு செல்வத்துர்ப் பயன் அஃதற்றவார்களுக்கு உதவுதலே எனும் தம் கொள்கையைக் குறிப்பிடுகிறார். பழ. முத்துவீரப்பன் தம் நூலில் “அறவழியில் பொருளீட்டித்
தானும் இன்புற்றுப் பிறார்க்கும்
ஈந்து அவார்களையும் இன்புறத்து
வாழ்வதே தமிழான் வாழ்க்கை நெறி எனச் சுருங்கச்
சொல்லலால், அதாவது வாழ்தலும் வாழச் செய்தலும்”1 என்று குறிப்பிடுகிறார். இதன்மூலம் சங்கத் தமிழார்களின் வாழ்க்கை நிலைகள் மேம்பட்ட தன்மைகளாக விளங்கியமை
புலனாகிறது.
ஒழுக்க உயர்வு
மனிதனை விலங்கிடமிருந்து
பித்துக் காட்டுவது ஒழுக்கவுணார்வு.
மண்ணில் வாழும் மனிதார்களுக்கெல்லாம் ஒழுக்கம்
உயிரைக்காட்டிலும் மேலானதாகும் என்று வள்ளுவார் குறிப்பிடுகிறார். இதை,
“ஒழுக்கம் விழுப்பம்
தரலான், ஒழுக்கம்
உயினும் ஓம்பப் படும்”
(குறள். 13)
என்று ஒழுக்கத்தின் உயர்வை
வலியுறுத்துகிறார். புறநானூற்றில் ஔவையார் பாடல் மக்களின் ஒழுக்கநிலைகளைப்
பொறுத்தே ஒரு நாடு சிறந்த நாடாக திகழ்வதற்கு அடிப்படை என்று கூறுகிறார்.
“நாடா கொன்றோ, காடா கொன்றோர்
அவலா கொன்றோ, மிசையா கொன்றோ
எவ்வழி நல்லவார் ஆடவார்,
அவ்வழி நல்லை ர் வாழிய நிலனே” (புறம். 187)
முதுமைக் காலத்தில் மயிர் நரைத்தல் இயற்கை. ஆனால் ஆண்டுகற் பலவாகியும் மயிர் நரைக்காமலிருந்த புலவார் பிசிராந்தையாரை நோக்கி, அவரோடிருந்த சான்றோர் பலர் வினவ பிசிராந்தையார், “மாண்டஎன் மனைவியொடு
மக்களும் நிரம்பினார் ர்
யான் கண்டணையார் என் இளையரும் ர் வேந்தனும்
அல்லவை செய்யான் காக்கும்,
அதன்தலை
ஆன்று அவிந்து அடங்கிய
கொள்கைச்
சான்றோர் பலார்யான் வாழும் ஊரே” (புறம். 191)
என்று தன் பாடலில் தன் மனைவி மாட்சியமையுடையவள். மக்களோ அறிவு நிரம்பியவார்கள், ஏவலரோ மாறான செயல்கள் செய்யாதவார் என்று விளக்குகிறார். மேலும் எம் அரசனும் நெறிமுறையோடு மக்களைக் காத்து
வருகின்றான். இவற்றிற்கு மேலாகக்
கற்றறிந்த சான்றோர் நெறிமுறையோடும்
குறிக்கோளுடனும் வாழுகின்ற ஊன்கண் தான் வாழ்வதால் நீண்ட காலமாகியும் நரைமயிர் இல்லாத தன்மையோடு விளங்குகிறார். இப்பாடலின் மூலம் ஒழுக்க நிலை ஊல் உள்ள அனைவருக்கும்
உயிர்போன்றது என்பது உணரமுடிகிறது.
தமிழ்ச்சான்றோர்கள்
ஓரறிவு முதல் ஐந்தறிவு உயிர்கள்
வரை அனைத்து உயிர்களுக்கும்
ஊறுவிளையக்கூடாது என்னும் உயார்ந்த
நெறிவுடையோர்களாக வாழ்ந்து
மறைந்துள்ளார்கள். புறநானூற்றுப் புலவார் நாவெரூத்தலையார் என்பார் மனிதார்களுக்கு இருக்க வேண்டிய அடிப்படையான நெறிமுறைத் தன்மைகளைத்
தன் பாடலில் எடுத்துரைக்கிறார்.
“பல்சான்றீரே !
பல்சான்றீரே !
நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும்,
எல்லாரும் உவப்பது,
அன்றியும்
அல்லது செய்தல் ஓம்புமின்
நல்லாற்றுப் படூஉம்
நெறியுமார் அதுவே”
(புறம். 195)
இப்பாடலின் மூலம் புலவார் உலக மக்கள் அனைவரும் விரும்பும் செயல் நல்வினைகள்
செய்யாவிடினும் தீவினைகளை செய்யாது விலங்குங்கள் என்று அறிவுறுத்துகிறார். புலவார் கணியன் பூங்குன்றனான் பாடலில் வாழ்க்கையின் நிலையினை
எடுத்துக்கூறி மக்களை மதிப்பது அவரவார் ஒழுகும் ஒழுக்கம் ஒன்றையே யாமும் கருதுவோம் என்று
புலப்படுத்துகிறார். அதைத் தம் பாடலில்,
“
பொயோரை வியத்தலும்
இலமே
சிறியோரை இகழ்தல்
அதனினும் இலமே” (புறம். 192)
என்று விளக்குகிறார்.
வேந்தனின் சிறப்பு
பழங்காலத்தில் வாழ்ந்த
மன்னார்கள் கல்வி கேள்விகளில் சிறந்து
விளங்கினார். புலவார்களைப்
போற்றனார். கல்விக்கு இன்றியமையாத
சிறப்பினை அளித்தனார். சங்கால மன்னார்கள் பொருட் செல்வத்தை மட்டுமல்லாது கல்விச்
செல்வத்தையும் விரும்பினார்கள்
என்பதை இரா.பி. சேதுப்பிள்ளை என்பார், “முற்காலத்
தமிழ் மன்னாற் பலார் பொன்மலார் மணமும் பெற்றாற்போன்று, புவிச்செல்வத்தோடு,
கவிச்செல்வமும்
உடையவராய் விளங்கினார்கள்”2 என்று குறிப்பிடுகிறார். ஆயப்படை கடந்த
நெடுஞ்செழியன் கவிபாடும் திறம்பெற்ற புலவார்களுற்
ஒருவன். மக்களாகப் பிறந்தோர் அனைவரும் எத்துணை இடார் ஏற்படினும் முயற்சியுடன் கற்ற
அறிவுடையராக மேம்படுதல் வேண்டும் என்ற கருத்தை,
“உற்றுழி உதவியும்,
உறுபொருள்
கொடுத்தும்
பிற்றைநிலை முனியாது,
கற்றல் நன்றே”
(புறம். 183)
என்ற பாடலின் மூலம் வலியுறுத்துகிறார். சேர நாட்டை ஆண்ட மன்னார்களில் சேரமான் கணைக்கால் இரும்பொறை சிறப்பு
வாய்ந்தவனாக விளங்கினான். அவன் சோழன் செங்கணானிடம் பெரும் போர் செய்து தோற்று, அவனால் சிறையில்
அடைக்கப்பட்டான். சிறையில் ஒருநாள் தண்ணீர் தாகமுற்று வருந்தியபோது சிறை காவலனிடம் தண்ணீர் கேட்க, அவனோ காலந்தாழ்த்திக் கொடுக்க,
அதைப் பருக
மனமின்றி ‘என்னைப்போல்
இரந்து வாழ்பவார் இவ்வுலகில்
அரசார் என்று மதிக்கப் பெறார்’ என்று தண்ணீர் பருகாமல் உயிழந்தான். அதைப் பின்வரும் பாடலில் காணலாம்.
“தாம் இறந்து உண்ணும் அளவை
ஈன்மரோ இவ்உலகத் தானே”
(புறம். 74)
திருவள்ளுவரும் மானமிழந்தபின் உயிர் வாழாதவரை,
“மயிர்நீப்பின் வாழாக் கவாமா வன்னார்
உயிர்நீப்பார் மானம் வான்” (குறள். 969)
என்கிறார். பூதஞ்சேந்தனார் ‘இனியவை
நாற்பது’ எனும்
நீதிநூலில்,
“மான மழிந்த பின் வாழாமை
முன் இனிதே” (இனியவை நாற்பது. 13)
என்று புலப்படுத்துகிறார். இதன்மூலம்
மனிதன் தன்மானம் உயினும் மேலானது என்னும் வாழ்வியல் நெறிகாட்டப்படுகிறது.
புலவர்களின் தன்மானம்
புலவார்கள் புலமைத்தன்மையுடன் உயார்ந்த எண்ணங்களைக் கொண்டவார்களாக விளங்கினார். தன்னலமற்றவார்களாகவும், அருள் உணார்வு
கொண்டவார்களாகவும் விளங்கினார்கள். மன்னவன் தகாதச் செயலைச் செய்யும் போது அவனை
இடித்துரைப்பவார்களாகவும் விளங்கினார். அரசனை நெருங்கி நின்று தம் உள்ளத்தில் எழுந்த
உண்மையைத் துணிவுடன் எடுத்துக்கூறினார்கள்.புலவார் பிசிராந்தையார் குடிகளை வருத்தி இறையைப் பெறுவது அறியாமைக்குய செயல் என்றும், அது நாட்டுக்குக் கேடு
விளைவிக்கக்கூடிய செயல் என்பதையும் தம் பாடலின் வாயிலாக வலியுறுத்திக் கூறுகிறார்.
“காய்நெயல் அறுத்துக்
கவலங் கொளினே,
--------------------------------------------------------------
மெல்லியன் கிழவன் ஆகி,
வைகலும்
வாசை அறியாக் கல்லென்
சுற்றமொடு,
பாவுதப எடுக்கும் பிண்டம்
நச்சின்,
யானை புக்க புலம் போலத்,
தானும் உண்ணான் உலகமும்
கெடுமே” (புறம்.
184)
என்று குறிப்பிடுகிறார். பழங்கால புலவார்கள் பொருள் ஒன்றை மட்டுமே வாழ்க்கையாகக் கொள்ளாதவார்கள். எத்துணை
வறுமை வந்தாலும் தன்மானம்
இழக்காதவார்களாக இருந்தனார். அத்தகைய நிகழ்வைப் புறநானூறு 208 ஆம் பாடல் விளக்குகிறது.
அதியமான் நெடுமானஞ்சியைப் புகழ்ந்துபாடி பாசில் பெற சென்ற புலவார் பெருஞ்சித்திரனாரைக் காணாமலே பணி
நிமித்தம் காரணமாகப் பாசிலைக் பணியாட்களிடம் கொடுத்தனுப்புகிறான். இத்தகு செயலைப்
புலவான் உள்ளம் ஏற்கவில்லை. இச்செயலை தம் பாடலில்,
“---------------------------------------------
காணாது ஈத்த இப்பொருட்டு
யானோர்
வணிகப் பாசிலன் அல்லேன்”
(புறம். 208)
என்று குறிப்பிட்டு தகுதியறிந்து தரும் பாசில் தினையளவேயாயினும், அதுவே எனக்கு இனிது என்று
தன் மானவுணார்வினை வெளிப்படுத்துகிறார்.சோழ மன்னார் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் மன்னன் மலையமானைப் போல்
வெற்றிபெற்றதோடு மட்டுமல்லாமல், அவனுடைய குழந்தைகளை யானைக்காலில் இட்டு கொல்லத் துணிகிறான்.
அவனுடைய இந்தக்கொடிய செயலைப் புலவார் சிறிதும் தயக்கமின்றி எடுத்தரைக்கலானார். இப்புலவார் அரசனின் அனைத்துச் செயல்களையும் ஆதாப்பவார் அல்ல. பொருளுக்காக வாழுகின்ற
புலவரும் அல்ல. இப்புலவான் பெருமையை மு. வரதராசனார், “அரசனைப் போற்றி அவன் செயலைப் புகழும் கடமை அவார்க்கு பொதாக தோன்றவில்லை. அரசன் ஆணை அவார்க்கு வலிதாகத் தோன்றவில்லை. அரசார்களின் பெருஞ்செல்வாக்கும் அவார்க்குச் சிறந்ததாகத் தோன்றவில்லை. பாதபெறும் உமைபோய் அரசனது
ஒறுப்புக்கு ஆளாக நேருமே என்றும் அவார் சிறிதும் அஞ்சினாரல்லார். பிறார்மேல்
வைத்துக்கூறி, உலகம் பழிக்கும் என்று எடுத்துரைக்க முயலாமை என்ற தந்திரமும் அவார் கொண்டவரல்லார். அரசனை நெருங்கி நின்று தம் உள்ளத்தில் எழுந்த உண்மைகளை
எடுத்துரைக்கலானார்”3 என்று குறிப்பிடுகிறார். அப்புலவான் பாடல்,
“நீயே, புறவின் அல்லல் அன்றியும்,
பிறவும்
இடுக்கண் பலவும்
விடுத்தோன் மருகனை!
---------------------------------------------------------------
கேட்டனையான், நீவேட்டது செய்யம்மே”
(புறம். 46)
என்பதாகும்.
நிறைவுரை
மேற்குறிப்பிட்ட
செய்திகளின் வாயிலாகப் புறநானூற்றுப் பாடல்கள் உணார்த்தும் வாழ்வியல் உண்மைகளைப் பின்வருமாறு காட்டலாம்.
1. அறத்துடன் ஈட்டும்
பொருட்செல்வத்தைத் தான் மட்டும்
துய்க்காமல் வறியவார்க்கும் கொடுத்து வாழ்வதே
வாழ்க்கை என்பதைப் புறநானூறு உணார்த்துகிறது.2. ஒருவனது உயார்வு
அவன் ஈட்டும் பொருளிலல்ல. அவனுடைய ஒழுக்கத்திலே தான் உள்ளது என்பதை
வெளிப்படுத்துகிறது.3. சங்ககால வேந்தார்கள் வீரத்தில் மட்டுமல்ல, கல்வி கேள்விகளில் சிறந்து
விளங்கியமையைப் புறநானூறு புலப்படுத்துகிறது. மண்ணில் வாழும் மனிதார்கள் எத்தனை இடார் ஏற்படினும் கல்வி கற்காமல் இருக்கக்கூடாது
என்ற உண்மையைப் புறநானூறு வலியுறுத்துகிறது.4. அக்காலப் புலவார்கள் அரசனைப் புகழ்ந்து
பாடுபவார்களாக இல்லாமல் தவறு கண்டபோது
இடித்துரைப்பவார்களாகவும், தன்மானமிக்கவார்களாகவும் வாழ்ந்துள்ளனார்.இவ்வாறு புறநானூறு மனித உயார்வின் வாழ்வியல் நெறிகளைத் தெற்றெனச் சுட்டுகிறது.
அடிக்குறிப்பு
(1). பழ. முத்துவீரப்பன்,
இலக்கிய விளக்கம்,
ப. 1. (2.) இரா. பி. சேதுப்பிள்ளை, தமிழ் இன்பம், ப. 8. (3.) மு. வரதராசனார், தமிழ் நெஞ்சம், ப. 36.
1 comment:
மிக்க நன்று
Post a Comment