Sunday, 17 June 2018

2017-2018 பி.ஏ. தமிழ் அடித்தளப்படிப்பு மூன்றாம் பருவம்Unit-2

சேக்கிழார் அருளிய திருத்தொண்டர் புராணம்
என்ற பெரிய புராணம் /இரண்டாம் காண்டம்
சருக்கம்


சாக்கிய நாயனார் புராணம் (3636 - 3653)
திருச்சிற்றம்பலம்
3636
அறு சமயத் தலைவராய் நின்றவருக்கு அன்பராய்
மறு சமயச் சாக்கியர்தம் வடிவினால் வரும் தொண்டர்
உறுதிவரச் சிவலிங்கம் கண்டு உவந்து கல் எறிந்து
மறுவில் சரண் பெற்ற திறம் அறிந்தபடி வழுத்துவாம்

2017-2018 பி.ஏ. தமிழ் அடித்தளப்படிப்பு மூன்றாம் பருவம்3விமலையார் இலம்பகம்
1
முருகு கொப்புளிக்கும் கண்ணி
முறி மிடை படலை மாலைக்
குருதி கொப்புளிக்கும் வேலான்
கூந்தல் மா இவர்ந்து செல்ல
உருவ வெம் சிலையினாற்குத் தம்பி
இஃது உரைக்கும் ஒண் பொன்
பருகு பைங் கழலினாருள்
பதுமுகன் கேட்க என்றே

2017-2018 பி.ஏ. தமிழ் அடித்தளப்படிப்பு மூன்றாம் பருவம்2.மணிமேகலை
தமிழ்க் காப்பியங்களின் தலைப்புக்களே பல சிந்தனை உணர்வுகளை எழுப்புகின்றன. சிலப்பதிகாரம் கண்ணகி, பாண்டிமாதேவி ஆகிய இருவரின் சிலம்பை மையமாகக் கொண்டு அமைகின்றது. சீவக சிந்தாமணி  காப்பியத் தலைவன் சீவகன் பெயரைத் தாங்கி நிற்கிறது. சூளாமணி  அணிகலன் பெயரைக் கொண்டு அமைகின்றது. மேலை நாட்டுக் காப்பியங்களும், வடமொழிக் காப்பியங்களும் ஆண் பாத்திரங்களையே முதன்மைப்படுத்தி அமையத் தமிழில்தான் பெண் பாத்திரங்களை முதன்மைப்படுத்திப் பல காவியங்கள் எழுந்துள்ளன. அவ்வகையில் குறிப்பிடத்தக்க ஒரு காப்பியப் படைப்பே மணிமேகலை.

2017-2018 பி.ஏ. தமிழ் அடித்தளப்படிப்பு மூன்றாம் பருவம்அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி) சேலம் -7
தமிழ்த்துறை 2017-2018
பி.ஏ. தமிழ் அடித்தளப்படிப்பு மூன்றாம் பருவம்

அலகு -1
சிலப்பதிகாரம் சிலம்பு- அதிகாரம் என்ற இரு சொற்களால் ஆனது. சிலம்பு காரணமாக விளைந்த கதை ஆனதால் சிலப்பதிகாரம் ஆயிற்று. இந்நூல் தமிழில் எழுதப்பட்ட ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்று.இந்நூல் 'பாட்டிடையிட்ட தொடர்நிலைச் செய்யுள்' எனவும் வழங்கப்படுகிறது. இக்காப்பியத்தில் இயல், இசை, நாடகம் என்னும் மூன்றனையும் காணலாம். கி. பி. இரண்டாம் நூற்றாண்டில் எழுதப்பட்டது என்பர். ஏனைய நூல்கள் அரசனையோ தெய்வங்களையோ பாட்டுடைத் தலைவனாகக் கொண்டிருக்க சிலப்பதிகாரம் கோவலன் என்ற குடிமகனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டதால் இதனை 'குடிமக்கள் காப்பியம்' என்றும் கூறுவர். இன்பியலும் துன்பியலும் கலந்து எழுதப்பட்ட இந்நூலை இயற்றியவர் இளங்கோ அடிகள் என்பவராவார். இவர் புகழ் பெற்ற சேரமன்னன் செங்குட்டுவனுடைய தம்பி எனக் கருதப்படுகின்றது.1.வழக்குரை காதை
[கோப்பெருந்தேவி தீக்கனாப் பல கண்டு அவற்றை அரியணை மீதிருந்த தன் கணவனிடம் கூறிக்கொண்டிருந்தாள். அப்பொழுது பெருஞ் சீற்றத்துடன் வாயிலை யடைந்த கண்ணகி தன் வரவை வாயில் காப்போனால் அரசனுக்கு அறிவித்துச் சென்று முன்னின்று, அவன் கேட்பத் தன் ஊர், பெயர் முதலியவற்றையும், தன் கணவனை அவன் ஆராயாது கொன்ற கொடுங்கோன்மையையும் அஞ்சாது இடித்துரையால் எடுத்தியம்பி, தன் கணவன் கள்வனல்ல னென்று தெரிவித்தற்பொருட்டுத், தன் சிலம்பினுள் உள்ள பரல் மாணிக்கம் என்றாள் ; அரசன் தன் தேவி சிலம்பின் பரல் முத் தென்று கூறி, கோவலனிடமிருந்து கொண்ட சிலம்பை வருவித்து வைக்க, கண்ணகி அதனை உடைத்தாள் ; உடைக்க, அதிலுள்ள மாணிக்கப் பரல் அரசன்முன் தெறித்தது ; அது கண்ட நெடுஞ் செழியன் நடுநடுங்கி, 'இழிந்த பொற்கொல்லன் சொற் கேட்ட கொடுங்கோன்மையையுடைய யானோ அரசன்! யானே கள்வன் ; தென்புலம் காவல் என் முதற் பிழைத்தது ; இன்றே கெடுக என் ஆயுள்' எனக் கூறித் துயருற்று மயங்கித் தான் அமர்ந்த அரசு கட்டிலில் வீழ்ந்து துஞ்சினான் ; அது கண்ட அரசன் மனைவி கணவனை இழத்தலாகிய கொடுந் துன்பத்தை எண்ணி வருந்தி, அவன் இணையடிகளைத் தொழுது தானும் விழ்ந்தனள்.]

Sunday, 11 February 2018

தமிழ்த்துறை நிகழ்வுகள் 2017 -2018தமிழ்த்துறை நிகழ்வுகள் 2017 -2018துறை நிகழ்வுகள் 2017 -2018
5.7.2017  இளங்கலை முதலாண்டு மாணவர்களுக்கான அறிமுக கூட்டம் நடைபெற்றது. முன்னாள் குடியரசு தலைவர் அப்துல்கலாம் அவர்களின் படம் திறந்து வைக்கப்பட்டது.

 7.08.2017 & 8.08.2017  தன்னாட்சி பாடத்திட்டத்திற்கான வல்லுநர் குழு கூட்டம் நடைபெற்றது. துறைப் பேராசிரியர்கள் புறப்பாடத்திட்ட வல்லுநர்கள்துனைவர் ஆறுமுகம், முனைவர் உலகு சுப்ரமணியம், வா.மு.சே. ஆண்டவர், முனைவர் வீரமணி, முனைவர் ஆர்.கண்ணன்,முனைவர் க.கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் இளங்கலை,முதுகலை மற்றும் ஆய்வியல் நிறைஞர் பாடங்களுக்கான பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டன.
12.10.2017  சேலம் மாவட்ட ஆட்சித் தலைவரின் தலைமையில், தமிழ்த்துறையில் பசுமை புரட்சி, இயற்கை உணவு, சுகாதார பொருட்காட்சி, 40க்கும் மேற்பட்ட கடைகளுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இக்கடைகளில் இயற்கை சார்ந்த முசுமுசுக்கை சூப்,முருங்கைப்பூ சூப், தூதுவளைசூப்,கொள்ளுநரிப் பயிறு சூப்,மணத்தக்காளிபூசூப்,  ஆவாரம்பூசூப்,பொன்னாங்கன்னி சூப்,  நெருஞ்சிமுள்சூப்,  வாழைத்தண்டு பூ சூப்  என அரிய பல மூலிகை சூப் வகைகள் விற்கனை செய்யப்பட்டன. நவதானிய சுண்டல், சிறுதானிய உருண்டைகள், தேனில் ஊறிய நெல்லிக்கனி, உளுந்துகஞ்சி, திணைபாயாசம், இனிப்புஅவல், அதிரசம்,மூலிகை ஊறுகாய் வகைகள் ,வாழைப்பழம்,இளநீர், நுங்கு, இயற்கை அழகு சாதனப் பொருட்கள், பருத்திப் புடவைகள், புத்தகக் கடைகள் என பல கடைகள் அமைக்கப்பட்டன. மாணவர்கள் சுயதொழில் செய்வதற்கான அடித்தள மேம்பாட்டுத்திறன் பெற்றனர்.
 

14.10.017  ஒருநாள் கணினித் தமிழ் பயிலரங்கு “இலக்கியத்தில் பெருந்தரவு பகுப்பாய்வு” (Big Data Mining in Literature) என்னும் தலைப்பில் முனைவர். சு.சந்திரசேகரன் –ஸ்ரீரங்கநாதர் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி, கோவை அவர்கள் தலைமையில் சிறப்பாக நடை பெற்றது.
8.12.2017 அன்று விக்கிப்பீடியாவில் பங்கேற்பது தொடர்பான பயிற்சியினை மாணவர்கள் பெற்றனர்.
18.12.2017  மாணவர்களின் தனித்திறனை மேம்படுத்தும் வகையில் கலைநிகழ்ச்சிகளுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன. தனிநடனம், குழு நடனம், பாட்டு, பலகுரலில் பேசுதல், நாடகம், சிலம்பாட்டம், கரகாட்டம், கராத்தே என பல திறமைகளை மாணவர்கள் வெளிப்படுத்தினர்.
3.1.2017  தமிழ்மன்ற விழா நடைபெற்றது. “மறக்கப்பட்ட தமிழகத் தலைவர்களும் அவர்களின் தமிழ்ப்பணிகளும்“  என்ற தலைப்பில் பேச்சாளர் அனிதா கு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சொற்பொழிவாற்றினார். போட்டியில் வென்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
14.7.2017 – சித்த மருத்துவம் என்ற பாடத்திட்டத்திற்கு வடிவம் கொடுக்கும் வகையில் மூலிகைப்பண்ணை அமைப்பட்டது.
18.8.2017-  100 கன்றுகள் வனத்துறைமூலம் பெறப்பட்டு, துறைத்தலைவரின் முன்னிலையில் ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து வளாகத்தைப் பசுமையாக்கும் வகையில் மரம்நடும் விழா நடத்தினர்.
      7.9.2017 ஆயுதபூசை, சரஸ்வதி பூசையின் பொருட்டு மாணவர்களுக்குக் கோலம் இடுதல், பூ கட்டுதல், மருதாணி வைத்தல் முதலான போட்டிகள் நடத்தப்பட்டது. கோலப்போட்டியில் மாணவர்களே வென்றனர்.
28.9.2017  துறையினை அழகுபடுத்தும் பொருட்டு அனைத்துப் பேராசிரியர்களும் இணைந்து ஒருமித்த கருத்துடன் ஒரே மாதிரியான மேசை விரிப்பு, பெயர் பலகை போன்றவற்றை   அமைத்தனர்.
10.1.2018  இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு என்பதை நிரூபிக்கும்  வகையில் இந்து, இசுலாம், கிருத்துவ மாணவர்கள் இணைந்து நடத்திய, சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
19.1.2018  துறை நிகழ்வுகளைப் புகைப்படங்கள் வழி காட்சிப்படுத்துதல் தொடர்பான பணிகளைத் துறை பேராசிரியர்கள் மேற்கொண்டனர்.
25.1.2018   தேசியதர மதிப்பீட்டுக்குழு தொடர்பான உள் மதிப்பீட்டு பணிகளைப் புறமதிப்பீட்டாளர்கள் பார்வையிட்டனர்.
2.2.18 அன்று இசை வகுப்பு நடைபெற்றது. ஆசிரியர்களும் மாணவர்களும் திருப்புகழ் பாடல்களைச் சந்தத்துடன் பாடக் கற்றனர்.
4.2.2018  கம்பன் கழகத்தில் நடைபெற்ற கம்பன் சொற்பொழிவில் முனைவர் பட்ட மாணவர்கள் து.ராணி, க. கவின்பிரியா, கலைக்கேசவன், கார்த்திகா போன்றோர் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றி பாராட்டைப் பெற்றனர்.
2.2.2018 -  துறைத்தலைவரின் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.2017 -2018 கல்வியாண்டு - தமிழ்த்துறை –பொதுவாய்மொழித்தேர்வு மற்றும்  கணினி பயிலரங்கு

கீழ்க்கண்ட தலைப்புகளில்  வாய்மொழித்தேர்வுகள் நடைபெற்றன.

1. 23.6.2017 - இலட்சுமி புதினங்களில் வாழ்வியல் கூறுகள்
2. 28.6.2017  வாசந்தி புதினங்களில் கதைக்கருவும் சமுதாய கருத்தியல் வளமும்
3. 05.07.2017  எட்டுத்தொகையில் அகமும் அகவெளியும்
4. 6.7.2017  வரலாற்று நோக்கில் பக்தி இலக்கியங்கள்
5. 10.7.2017  பதிணென் கீழ்க்கணக்கில் அறிவியல்
6. 11.7.2017  ஓமலூர் வட்ட தாலாட்டுப் பாடல்களில் வாழ்வியல் கூறுகள்
7. 1.9.2017  சேலம் மாவட்ட வன்னியர் குல மக்களின் சடங்கு முறைகள்
8. 4.9.2017  பன்முக நோக்கில் சு.போசுவின் படைப்புகள்
9. 8.12.2017  சிலப்பதிகாரத்தில் காப்பிய மரபுகள்
10. 11.12.2017  - புதிய தலைமுறை இதழ்களில் சமுதாய விழிப்புணர்வுச் சிந்தனைகள்
11.1 4.12.2017  தமிழ்ச்சிறுகதைகளில் குழந்தை சித்திரிப்பு