பள்ளு இலக்கியமும் பின்நவீனத் தத்துவமும்
முனைவர் ரெ.மல்லிகா (எ) அரங்கமல்லிகா,
இணைப்பேராசிரியர்,
எத்திராஜ் மகளிர் கல்லூரி (தன்னாட்சி),
சென்னை-8.
வேந்தன்மேய தீம்புனல் உலகம் என்று தொல்காப்பியத்தில் கூறும் தீம்புனல் உலகத்தை மருதநிலம் என்று கூறுகின்றனர். மருதநில மக்கள் மள்ளர் எனவும் பள்ளர் எனவும் அழைக்கப்படுகின்றனர். நிலத்தைப் பண்படுத்தி, நீர் தேக்கி, பயிர் வளர்த்து உழவுத் தொழில் செய்து வருபவர்கள் மள்ளர்கள் என்பதைத் தமிழ் இலக்கியத்தில்
மருதநிலம் சார்ந்த மக்களின் பண்பாட்டிலிருந்தும் சங்க இலக்கியத்திலிருந்தும் அறிந்து கொள்ள முடிகின்றன. அதன் தொடர்ச்சியாக பள்ளர்களின்
வாழ்க்கையை விரிவாகப் பள்ளு இலக்கியம் பேசுகிறது. பள்ளு இலக்கியத்தின்
கட்டமைப்பைப் பின்நவீனத்துவக் கோட்பாடு சார்ந்து மறுகட்டமைப்புச் செய்ய வேண்டிய கால அவசியம் குறித்து இக்கட்டுரை விரிவாகப் பேசுகிறது.
ஏர்மங்கலம் தொடங்கி, நாற்றுநடுதல், அறுவடை