புறநானூற்று வழி மானுடநேயம்
முனைவர் மா.நடராசன், தமிழ்த்துறைத்தலைவர் (ஓய்வு),
சி.பி.எம். கல்லூரி,
கோவை.
இலக்கியம் ஏன்
படைக்கப்படுகிறது? இலக்கியத்தில் என்ன இருக்க வேண்டும்? என்பதைப் புரிந்து கொண்டால் இலக்கியத்தின் இலக்கு என்ன என்பதையும்
இலக்கியத்தின் பயன்பாடுகளையும் புரிந்து கொள்ள இயலும். படைப்பாளியின்
""""உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின்
வாக்கினிலே ஒளி உண்டாகும்.
வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப் பெருக்கும்
கவிப் பெருக்கும்
மேவு மாயின்
பள்ளத்தில் வீழ்ந்திருக்கும்
குருடரெல்லாம்
விழிபெற்றுப் பதவி கொள்வர்""
அப்படி என்றால் ஏழைகளாகிய மானுடர்கள்
குருடர்களாக இருக்கக்கூடாது. அப்படி யாரராவது ஆதிக்கச் சக்தியாகிய பிற மனிதர்களால்
நேயமில்லாமல், நேசிக்கப்படாமல் பள்ளத்தில்
வீழ்த்தப்படும் மனிதர்களுக்காகப் போராடுவது இலக்கியம். இலக்கியம் அத்தகைய
போராட்டத்தை முன் எடுத்துச் சொல்ல வேண்டும்.
தமிழின் சங்க
இலக்கியத்தின் புற இலக்கியங்களில் வன்மை,
வண்மை, போர், ஆண்மைசார்ந்த ‘வெளிப்பாட்டுக் குணங்கள்’, வருத்தம்,
கோபம் போன்றவை
இழையாகும். அவற்றின் எதிர்த்திசை, மறுபக்கம் அதாவது உள்பக்கம் ஒருவித
நெகிழ்ச்சி, அன்பு,
கருணை, இரக்கம் போன்ற குணங்கள் இழையோடும். அதனால் தான் திருவள்ளுவர்,
""""அறத்திற்கே அன்பு சார்புஎன்ப அறியார் மறத்திற்கும் அஃதே துணை""
என்று இலக்கணம் கூறுகிறார்.
புறநானூறு மூலம் தமிழ்நாட்டின், அரசர்களின் வரலாறு,
பண்பாடு, சமூக அமைப்பு, சமூகவாழ்க்கை, பண்பாடு போன்ற பல கூறுகளைப் புரிந்து கொள்ள முடியும். பண்பெனப் படுவது
பாடறிந்து ஒழுகுதல் என்பது கலித்தொகை. அதுதான் மானுட நேயத்தின் அடையாளம் எனப்
புரிந்து கொள்ள வேண்டும்.
புறநானூறு
மட்டுமல்ல சங்க இலக்கியம் அனைத்தும் திணை இலக்கியம். ஒவ்வொரு பாடலுக்கும் திணை
வகுக்கப்பட்டுள்ளது. திணையின் உள் கூறுதான் துறை. பாடாண் திணை என்பது
(உதாரணத்திற்காக) பாடப்படுகின்ற அரசன் மற்றும் ஆண்மகனுடைய வீரம், கொடை, தண்ணளி,
புகழ்
ஆகியவற்றினைப் பற்றிக் கூறுவது.