முனைவர் ஜ.பிரேமலதா
தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம்-7
சிற்றிலக்கிய ஆய்வுகள்
முன்னுரை
96
வகை சிற்றிலக்கியங்கள் உள்ளதாகப் பாட்டியல் நூல்கள் கூறுகின்றன. ஆனால், இந்த
எண்ணிக்கைக்கு மேலும் சிற்றிலக்கிய நூல்கள் உள்ளன. அப்பட்டியலையும் அவை தொடர்பாக
வந்துள்ள ஆய்வுகளையும் இனி வர வேண்டிய ஆய்வுகளையும் குறித்து இக்கட்டுரை ஆராய்கிறது.
சிற்றிலக்கிய வகைகளின்
இலக்கணத்தை பன்னிருபாட்டியல், வெண்பாப் பாட்டியல், நவநீதப் பாட்டியல், பிரபந்த மரபியல், சிதம்பரப் பாட்டியல், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், பிரபந்த தீபிகை, சுவாமிநாதம், சதுரகராதி, அபிதான சிந்தாமணி முதலியன
இயம்புகின்றன
என்று தமிழில் சிற்றிலக்கிய வரலாறு எனும் நூலை எழுதிய முனைவர் தா.ஈசுவரபிள்ளை
குறிப்பிடுகிறார். சிற்றிலக்கியங்களின்
எண்ணிக்கை 160 என்று `இலக்கிய வகையும் வடிவம்’ என்கிற நூலில்
ச.வே.சுப்பிரமணியன் குறிப்பிடுகிறார்.