கலம்பம் - சொற்பொருள்
: முனைவர் ப. தாமரைக்கண்ணன்
இணைப் பேராசிரியர் தமிழ்த்துஇறை
மாநிலக் கல்லூரி சென்னை-600 005.
கலம்+அகம் எனப் பகுத்துக் கலம் என்பது 12 என்றும் பகம் என்று பாதியாகிய
ஆறு (6) என்றும் இரண்டும் கூட்டினால் 18 உறுப்புகள் என்றும் ஆக 18 உறுப்புகளைக்
கொண்டது கலம்பகம் எனப் பொருள் உரைப்பர். அஃது ஆய்வுக்குரியது.
கலம்பகம் என்பதனை இக்காலத்தில் நாம் கூறும் ‘கதம்பம்’ என்ற
சொல்லினோடு பொருத்திப் பொருள் கொள்ளலாம். கலம்பகம் என்பதற்குக் ‘கலவை’ எனப்
பொருள் சொல்லலாம். ‘பல்பூ மிடைத்த வடலைக் கண்ணி’ என்று பெரும்பாணாற்றுப் படையும் ‘களிவண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த அலங்கலத்
தொடையல்’ என்று தொண்டரடிப் பொடியாழ்வாரும் (திருப்பள்ளி-5)
கூறும் நிலையில் பல்பூமாலையாகப் பல்வகைப் பாக்களால் ஆகியது கலம்பகம்.
கலப்பு+அகம் = கலப்பகம் என்பது மெலித்தல் விகாரமாய்க் கலம்பகம்
என்றாயிற்று.