பண்பாட்டு நோக்கில் பாதாதி கேசம், கேசாதி பாதம் ஆகிய சிற்றிலக்கியங்களின் வளர்ச்சி
முனைவர் மு.பழனியப்பன்
இணைப்பேராசிரியர்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
தேவகோட்டை
பதிற்றுப் பத்து, பொருநர் ஆற்றுப்படை,
சிறுபாணாற்றுப்படை போன்ற சங்க இலக்கியப் பனுவல்களில் பாடினி,
விறலி பாத்திரம் மிக முக்கியமான பாத்திரமாக இடம்பெற்றிருக்கும்.
இப்பாத்திரம் கேசம் முதல் பாதம் வரை வருணனை செய்யப்பட்டுள்ள திறம் படிப்பவர்
மனதில் விறலி பற்றிய அழகான சித்திரத்தை படியச்செய்யும். இவ்வருணனை
பிற்காலத்தில் ஒரு சிற்றிலக்கிய வகையாகத் தோற்றம் பெற்றது. சங்க
இலக்கியத்தின் அடிப்படையில் தமிழ் இலக்கிய வகைமையில் தோற்றம் பெற்ற சிற்றிலக்கியமாக
கேசாதிபாதம், பாதாதிகேசம் ஆகியற்றைக் குறிப்பிடலாம்..