முனைவர் ஜ.பிரேமலதா
தமிழ் இணைப்பேராசிரியர்,
அரசு கலைக் கல்லூரி, சேலம்-7
வைணவச் சிற்றிலக்கியங்களின் தொன்மைக்கூறுகள்
முன்னுரை
தொல்காப்பியர் செய்யுளியலின் செய்யுள்
உறுப்புகளுள் ஒன்றான வனப்பு பற்றிக் குறிப்பிடுகிறார். இந்த வனப்புகள் எட்டு என்று
குறிப்பிடப்படுகிறது. அம்மை,
அழகு, தொன்மை, தோல், விருந்து, இயைபு, புலன், இழைபு என்பவை.
இவற்றுள் தொன்மை என்பதற்கு,
""""தொன்மை தானே
சொல்லுங்காலை
உரையொடு புணர்ந்த யாப்பின் மேற்றே ""
(தொல்-செய்-229)