Thursday 24 October 2013

மாதிரி வினாத்தாள் பகுதி-1 - முதல் பருவம்




பி.ஏ.,பி.எஸ்.ஸி.,பி.காம்.,பி.பி.ஏ., மாணவர்களுக்குரியது
முதல்ஆண்டு தமிழ் - பகுதி-1 -  முதல் பருவம் -  தாள்-1
மாதிரி வினாத்தாள்

3மணிநேரம்                    மொத்தம்    75 மதிப்பெண்கள்
பகுதி-அ   சிறுவினா
அனைத்திற்கும் விடை தருக. - ஒவ்வொரு வினாவிற்கும்  2 மதிப்பெண்கள்
1.மனித வாழ்வில் துயரம் நிறையும்போதெல்லாம் என் வயிறு நிறைகிறது-இடம் சுட்டுக.
2.கல்லின் ஆன்மா களங்கப்படுவது உங்கள் தலைவர் பலருக்குச் சிலையாகும் போதுதான்-இடம் சுட்டுக
3.உழைப்பும் உறதியும் உள்ளவ்வன் எவனும் மொழியில் பழியை ஏற்றுவதில்லை-இடம் சுட்டுக.
4.மண்ணின் குழம்பு எடுத்து கவிதை மணம் பரப்பும் சந்தனமாய்க் கண்ணின் முன் காட்டிவிட்டால் கவிதை மணம் வீசிடுமா?- -இடம் சுட்டுக.
5.ஜெயகாந்தன் பற்றி குறிப்பிடுக.
6.திலகவதியின் படைப்புகள் யாவை?
7.தமிழ்ச்சிறுகதை முன்னோடி யார்?
8.‘ஹைக்கூ எந்த ஆண்டு தமிழிற்கு அறிமுகமானது?
9.கலைச்சொற்கள் என்றால் என்ன?
10.எழுத்துப்பிழை நீக்கு.
அ. எளி வழையாணாழும் தணி வளை.
ஆ.பழகப் பலகப் பாழும் புலிக்கும்.
குறுவினா  பகுதி-ஆ 
அல்லது முறையில் ஐந்து வினாக்கள்.  ஒவ்வொரு வினாவிற்கும் ஐந்து மதிப்பெண்கள்.
11.தேசப்பிதாவை நோக்கி கவிஞர் கூறுவன யாவை?(அல்லது)பாரிமகளிர் நிலையை அகதிகள் நிலையோடு கவிஞர் எவ்வாறு ஒப்பிடுகிறார்?
12.சேவகனிடம் பாரதி பட்ட துன்பம் யாவை? (அல்லது)தொழிலாளர்களின் விண்ணப்பங்கள் யாவை?
13.மரம் கதை கூறும் உத்தி உள்ள கதையொன்றின் வழி, பெண்களின் நிலை பற்றிக்கூறுக(அல்லது)உழைப்பாளர்களின் நிலையை உழைப்பு சிறுகதை வழி விளக்குக.
14.தற்கால சிறுகதை படைப்பாளர்கள் பற்றி நீ அறிந்ததை எழுது.(அல்லது)பாரதி புதுக்கவிதையின் தந்தை - இக்கருத்தை ஒட்டிய உன் கருத்தை எழுதுக.
15.பொருள் வேறுபாடு தருக.
 அரை-அறை                        வலம்-வளம்
 கலம்-களம்                      அலி-அளி-அழி
பெருவினா பகுதி-இ
எவையேனும் மூன்று வினாக்கள் மட்டும் எழுதுக
ஒவ்வொரு வினாவிற்கும் 10 மதிப்பெண்கள்
16.அறுவடைக்காலம் என்ற கவிதை வழி நின்று கிராமப் பெண்களின் நிலையைக் குறித்து கட்டுரை வரைக.
17.மலேசியாவில் தமிழின் நிலை குறித்தக் கவிஞர் பொன் முடியின் கருத்தைக் கூறுக.
18.காளிங்கராணன் கொடை சிறுகதை உணர்த்தும் நீதியாது?
19.பாவேந்தரின் சமூக சீர்திருத்தச் சிந்தனகள் பற்றி எழுதுக.
20.‘வானமே எல்லை‘ என்ற தலைப்பில் கவிதை (அல்லது) சிறுகதை எழுதுக.

No comments: