Friday 1 November 2013

தமிழின் சிறப்பு



புலம்பெயர்ந்தாள் தமிழ்த்தாய்

          
கவிஞர் புகாரி
http://nganesan.blogspot.in/2007/12/blog-post_31.html
புலம்பெயர்ந்தாள் புலம்பெயர்ந்தாள்
              
புலம்பெயர்ந்தாள் தமிழ்த்தாய் !
இளமையோடும் புதுமையோடும்
              
தலைநிமிர்ந்தாள் தமிழ்த்தாய்!

ஓசைகளாய் இருந்தவள்தான்
              
ஓலைகளில் பெயர்ந்தாள்!
ஓலைகளாய்ப் பெயர்ந்ததனால்
              
சங்ககாலம் கொண்டாள்!
மேலும் வாசிக்க...

ஓலைகளில் வாழ்ந்தவள்தான்
              
தாள்களுக்குள் பெயர்ந்தாள்!
தாள்களுக்குள் பெயர்ந்ததனால்
              
தரணியெங்கும் நிறைந்தாள்!

காகிதத்தில் கனிந்தவள்தான்
              
கணினிக்குள் பெயர்ந்தாள்!
கணினிக்குள் பெயர்ந்ததனால்
              
அண்டவெளி வென்றாள்!

அழிந்திடுவாள் என்றோரின்
              
நரம்பறுத்து நின்றாள்!
இணையமென்ற மேடைதனில்
              
மின்னடனம் கண்டாள்!

அயல்மொழியைக் கலந்தோரை
              
வெட்கியோட வைத்தாள்!
அழகுதமிழ் அமுதத்தமிழ்
              
ஆட்சிமீண்டும் பெற்றாள்!


பாரதம் - மகாபாரதம்; பாரதம் = பா ரதம் - கவிதை எனும் தேர் (சந்தவசந்தம் கவிதைக்குழு). வாரணம் = ஆனைமுகன். புலம்பெயர்ந்தாள் தமிழ்த்தாய்
          
கவிஞர் புகாரி

No comments: