Saturday, 11 January 2014

நாலடியாரில் அளவை முறைகள்கட்டுரை-21

நாலடியாரில் அளவை முறைகள்


து.பிரபா,        முனைவர்பட்ட ஆய்வாளர்,   தமிழ்த்துறை,     அரசு கலைக்கல்லூரி(தன்னாட்சி),    சேலம் - 7.


                உலகில் பல நாடுகள் பொருட்களின் ஏற்றுமதி, இறக்குமதிக்காகவும் வர்த்தக விரிவாக்கத்திற்காகவும் பொதுவான அளவை முறைகளைக் கடைபிடித்து வருகின்றன. ஆங்கிலேயா; உலகின் பல நாடுகளைத் தங்கள் ஆட்சியின் கீழ் வைத்திருந்ததனாலும் ஆங்கிலமொழி உலகமொழியாக உருவெடுத்ததனாலும் ஆங்கிலம் சார்ந்த அளவை முறைகளை அந்நாடுகள் பின்பற்றத் தொடங்கின. ஆனால் ஆங்கிலேயாpன் வருகைக்கு முன்னால் பழந்தமிழாpடையே தனித்துவமான அளவை முறைகள் இருந்ததனால் தான் கடல் கடந்தும் வாணிகத்தில் சிறந்து விளங்கினர்.ஒரு தனித்துவமான நாடு தனது தேவைகளையும், செயல் திட்டங்களையும் வகுத்து பகுத்து தொகுத்துக் கணக்கெடுத்து வாழ்வதுதான் பண்பாடு என்றும் அறிவின் முதிh;ச்சி என்றும் கூறுவர். தமிழா;களின் பழங்கால அளவை முறைகள் ஒரு மாபெரும் பண்பாடு, அறிவாற்றல், அறிவியல் என்பனவற்றுக்குப் பெருமை தரக்கூடிய சான்றுகளாக அமைகின்றன. அத்தகைய அளவை முறைகள் நாலடியாரில் அமைந்துள்ள முறைமையினைக் கீழ்கண்டவாறு அறியலாம்.

பழந்தமிழரின் அளவை முறைகள்
                பழந்தமிழர் அறிவியல்  பூh;வமான   அளவை   முறைகளைப் பயன்படுத்தினர்.அந்த அளவை முறைகள் 1.எண்ணல் 2.முகத்தல் 3.பெய்தல் 4.நீட்டல் 5.நிறுத்தல் 6.தெறித்தல் 7.சார்ந்தல் என ஏழு வகைப்படும்.
1. எண்ணலளவை : ஒன்று, இரண்டு என்றும் பத்து, நூறு, ஆயிரம் என்றும் ஒவ்வொன்றாகவும், தொகையாகவும் எண்ணுவது எண்ணலளவையாகும்.               2. முகத்தலளவை : பால், மோh;, எண்ணெய் முதலியவற்றை அளக்கும் முறையாகும்.   
3. பெய்தலளவை : தானியவகைகளைக் கோபுரம் கூட்டி படி, மரக்கால் என்று அளக்கும் முறையாகும்.   4. நீட்டலளவை : உயரங்களையும், எல்லைகளையும், துணிகளையும் அளக்கும் முறையாகும். இது வழியளவை, நில அளவை என இரண்டு வகைப்படும்.    5. நிறுத்தலளவை : தராசுகளைப் பயன்படுத்தி அரிசி, காய்கறி, பொன் போன்றவற்றை அளக்கும் முறையாகும். 6. தெறித்தலளவை : நொடி, நாழிகை, யாமம், பொழுது, நாள் என கால நேரத்தைக் கணக்கிடும் முறையாகும். 7. சார்ந்தலளவை : ஒலி, சுருதி, நிறம், உருவம் முதலியவற்றை வேறொரு பொருளோடு ஒப்பீடு செய்து சார்ந்த்தி அளத்தலாகும்.
நாலடியாரில் அளவை முறைகள்

நாழி

                நாழி என்ற அளக்கும் கருவியைக் கொண்டு தானியத்தை நாள்தோறும் அளவிட்டு உண்பா; என்ற செய்தி கூறப்பட்டுள்ளது. இதனை,
                                தோற்றம்சால் ஞாயிறு நாழியா வைகலும்
                                கூற்றம் அளந்துநும் நாளுண்ணும்” (நாலடியார்- 7 :1-2)
என்ற பாடலடியின் வாயிலாக அறியலாம். நாழி என்பது பெய்தலளவை முறையைச் சார்ந்ந்ததாகும்.
                                “2 வழக்கு என்பது 1ரி
                                2ரி என்பது 1 நாழி” (தமிழ்ச்சுவடிகளில் எண் கணிதம், ப.43)
என்று கூறுவர். ரி என்பது அரைப்படி என்றும், நாழியைப் படிஎன்றும் அழைப்பா;.

இம்மி

                நாள்தோறும் தன்னிடம் உள்ள பொருள்களுள் இம்மி என்னும் அளவைக் கொண்ட
ரிசியின் அளவுள்ள பொருளையேனும் அறத்தின் பொருட்டாகப் பிறருக்குத் தந்து உண்பார் என்ற செய்தி கூறப்பட்டுள்ளது. இதனை,
                                இம்மி யாpசித் துணையானும் வைகலும்
                                நும்மில் இயைவ கொடுத்துண்மின்” (நாலடியார்- 94: 2-3)
என்ற பாடலடியின் வாயிலாக அறியலாம். இம்மி என்பது எண்ணலளவை முறையைச் சார்ந்ந்ததாகும்.
                                “116,5580800 - 7 அணு ஸ்ரீ 1 மும்மி
                                12,3654400 - 11 மும்மி ஸ்ரீ 1 இம்மி” (வியக்கவைக்கும் தமிழர்அறிவியல், ப.220)
என்று இம்மிக்கு எண் வடிவங்களைக் கூறுவர்.

காதம், யோசனை

                குறுகிய தடியால் அடிக்கப்படும் முரசத்தின் ஒலியைக் காத தொலைவுவரை உள்ளவர் கேட்பா;. இடித்து முழங்கிய மேகத்தின் ஒலியை ஓh; ‘யோசனைதொலைவில் உள்ளவர் கேட்பர்என்ற செய்தி கூறப்பட்டுள்ளது. இதனை,
                                கடிப்பிடு கண்முரசம் காதத்தோh; கேட்பர்;
                                இடித்து முழங்கியதோh; யோசனையோh; கேட்பா;” (நாலடியார்-100: 1-2)
என்ற பாடலடியின் வாயிலாக அறியலாம். காதம், யோசனை என்பன நீட்டலளவை முறையைச் சார்ந்ந்தவையாகும். பண்டைத் தமிழர்உரத்துச் சத்தமாக அழைப்பதை, அதன் தூரத்தைக் கூப்பிடு தூரமாகக் கணக்கிட்டனர்.மிகக் கூடுதலான தொலைவு காதம’; எனப்படும். ஒரு யோசனைஎன்பது ஐந்து மைல் என்று அழைக்கப்படுகிறது. இதனை,
                                “2 சாண் - 1 முழம்
                                4 முழம்    - 1 பாகம் அல்லது கோல்
                                500 கோல்  - 1 கூப்பிடு
                                4  கூப்பிடு  - 1 காதம்
                                2000 பாகம்  - 1 குரோசம்
                                2 குரோசம்  - 1 யோசனை” (வியக்கவைக்கும் தமிழர்அறிவியல், ப.223)
என்று கூறிவதிலிருந்து அறியலாம். 1 குரோசம் என்பது 212 மைல் என்று கணக்கிடப்படுகிறது.

தினையளவு, பனையளவு

                ஒருவரால் செய்த நன்றி தினையளவாக இருந்தாலும் சான்றோh; அதனைப் பனையளவாக எண்ணுவர் என்றும் பனை அளவினரான சான்றோh; தம் பெருமையைத் தமக்குள் அடங்க வைத்துத் தினையளவான சிறியராகிப் பெருமை அழிந்து தீவினைப் போகும் வரை உயிh; தாங்கி வாழ்வர் என்றும் கூறப்பட்டுள்ளது.  இதனை,
                                தினைத்துணைய ராகித்தந் தேசுள் அடக்கிப்
                                பனைத்துணையார் வைகலும் பாடழிந்து வாழ்வர்” (நாலடியார் 105: 1-2)
என்ற பாடலடியின் வாயிலாக அறியலாம். தினை, பனை என்பன சிறுமை, பெருமைகட்குக் காட்டும் அளவை என்று பாpமேலழகா; கூறுகின்றாh;. மேலும் தினை என்பது மிகச் சிறிய அளவு என்றும் பனை என்பது ஒரு அனுட நாள் என்றும் தினை, பனை அளவுகளுக்குக் கழக அகராதி விளக்கம் கூறுகின்றது.

கடுகளவு

                தாழ்ந்த அறிவையுடையவர்கள் வறுமை அடைந்த காலத்திலும், மிக்க நோய் அடைந்த போதும், மறுமைக்குச் செய்யும் அற நினைவினராக இருப்பா;. அவ்விரண்டும் இல்லாத காலத்தில் சிறுகடுகு அளவேனும் மறுமைக்குரிய அறத்தைச் செய்யக் கருதமாட்டார் என்று கூறப்பட்டுள்ளது. இதனை,
                                “----------------------------------- மறுமையை
                                ஐந்தை யனைத்தானும் ஆற்றிய காலத்துச்
                                சிந்தியார் சிற்றறிவி னார்” (நாலடியார்-329:2-4)
என்ற பாடலடியின் வாயிலாக அறியலாம். கடுகளவு என்பது நீட்டலளவை முறையைச் சார்ந்ந்ததாகும்.
                                “8 மயிh;நுனி  - 1 நுண்மணல்
                                 8 நுண்மணல் - 1 சிறுகடுகு” (வியக்கவைக்கும் அறிவியல், ப.223)
என்று கடுகளவு என்பதற்கு வடிவம் கூறுவர்.

முந்திரி, காணி

                கீழ்மகன் முந்திரி அளவு பொன்னுக்கு மேல் காணியளவு பொன் மிகுமானால் தான் உலகில் வாழும் காலம் வரையும் தன்னை வானவாpன் தலைவன் இந்திரனாக எண்ணி நடந்து கொள்வான் என்று கூறப்பட்டுள்ளது. இதனை,
                                முந்திரிமேற் காணி மிகுவதேல் கீழ்தன்னை
                                இந்திரானா எண்ணி விடும்” (நாலடியார்-346:3-4)
என்ற பாடலடியின் வாயிலாக அறியலாம். முந்திரி,  காணி  என்பன   எண்ணலளவைமுறையைச் சார்ந்ந்தவையாகும். பன்னெடுங்காலமாகத் தமிழர்கையாண்டு வந்த கீழ்வாயிலக்கம் எனப்படும் சிற்றிலக்கத்தில் ஒரு முழு எண்ணை முந்நூற்றியிருபது சமபாகங்களாகப் பங்கீடு செய்து அதில் ஒரு பாகத்தை முந்திரி என்ற பெயரால் வழங்கியுள்ளதை,
                                “1 முந்திரி   - 1320
                                2 முந்திரி    - அரைக்காணி - 1160
                                2 அரைக்காணி(அ) 4முந்திரி - காணி - 180” (தமிழ்ச்சுவடிகளில் எண்கணிதம், ப.21)
என்று தமிழ்;ச்சுவடிகளில் எண்கணிதம் எனும் நூல் கூறுகிறது.

தூணி, பதக்கு

                நாட்டுப்புறத்தான்  காp  கொள்ளையும் சிவப்பு  நிறமுள்ள கொள்ளையும் வெவ்வேறாக எண்ணாது ஒரு நிகராய் தூணி, பதக்கு என்று வாங்கிக் கொண்டான் என்ற செய்தி கூறப்பட்டுள்ளது. இதனை,
                                கருங்கொள்ளும் செங்கொள்ளும் தூணிப் பதக்கென்று
                                ஒருங்கொப்பக் கொண்டானாம் ஊரன்” (நாலடியார்- 387:1-2)
என்ற பாடலடியின் வாயிலாக அறியலாம். தூணி, பதக்கு என்பவை முகத்தலளவையைச் சார்ந்ந்தவையாகும்.
                                “2ரி               - 1 நாழி
                                8 நாழி          - 1 குறுணி
                                2 குறுணி  - 1 பதக்கு
                                2 பதக்கு   - 1 தூணி”(தழிழ்ச்சுவடிகளில் எண் கணிதம், ப.43)
தூணி, பதக்கிற்கு எண் வடிவம் கூறுவர். குறுணி என்பது மரக்கால் எனப்படும். பிற்காலத்தில் மரக்கால் என்பது வல்லம் என்றழைக்கப்பட்டது.  1 வல்லம் என்பது 4 படி என்பா;. அதேபோன்று தூணி என்பது தோணி என்று மருவி பின்னா; மக்கரை என்றழைத்தனர்.மக்கரை என்பது கூடை என்றாயிற்று.

முடிவுரை

                பண்டைத்தமிழர்நாழி, இம்மி, காதம், யோசனை, தினையளவு, பனையளவு, கடுகளவு, தூணி, பதக்கு போன்ற அளவை முறைகளைப் பயன்படுத்தியுள்ளாh;. இவ்வளவை முறைகளைப் பாh;க்கும் பொழுது பழந்தமிழர்அளக்கும் முறையில் ஆழமும் விரிவும் கொண்டவர்களாய் இருந்திருக்கிறாh;கள்.
Post a Comment