Saturday 11 January 2014

தெய்வப்பாடல்களின் வழி பாரதியின் தேசபக்தியும் விடுதலையுணர்வும்



கட்டுரை-23

தெய்வப்பாடல்களின் வழி பாரதியின் தேசபக்தியும் விடுதலையுணர்வும்


மு. சுகந்தி,முழுநேர முனைவர் பட்ட ஆய்வாளர்,தமிழ்த்துறை,அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),சேலம் - 7.

முன்னுரை

                விடுதலை வெளிச்சத்திற்கு வித்திட்டகாலத்தில் விடிவௌ;ளியாய் தோன்றியவன் பாரதி. இந்திய விடுதலை என்பதை இதயத்துடிப்பாக கொண்டிருந்தார். இறை நம்பிக்கையை எடுத்துக்கூறும் போதே இடையில் இந்திய விடுதலையை இடித்துரைத்தார். இந்தியதேசம் இயலாமையால் இரங்கிடும் வேளையில் இறை சக்தியை இயம்பியவன். பாரதி தெய்வப்பாடல்களுக்குள் தேசப்பக்தியையும் விடுதலை உணா;வையும் இரண்டறக்கலந்து இனிதே எடுத்துரைத்த திறம் பற்றி ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

இறை நம்பிக்கை

                மனிதன் தனக்கு மேல் ஒரு சக்தி இருப்பதாக நம்பிய நிலையிலே இறை நம்பிக்கை என்பது தோற்றம் பெற்றது. அச்சமும், அச்சத்தின் பாற்பட்ட அன்பும் வழிபட்ட நன்றியுணா;வும் தொன்மைக்காலத்தில் மக்களிடையே வழிபாட்டுணா;வைத் தூண்டக் காரணமாக இருந்தன” (க.சேகா;, சப்தவிடங்கத் தலங்கள், ப. 16) இவை மட்டுமல்லாமல், மனிதன் தனது இன்னல்களையும் இயலாமைகளையும் வெளிப்படுத்த இறைவனை நாடிச் சென்றான். பாரதியார் காளிதேவியின் தீவிரபக்தனாக இருந்தவா;. கணபதி, முருகன், கண்ணன், கலைவாணி, சக்தி என்று பல்வேறு தெய்வங்கள் பற்றி பக்திப்பாடல்கள் பாடியுள்ளார். இத்தெய்வப்பாடல்கள் வழி தேசிய உணா;வையும் விடுதலை தாக்கத்தையும் மக்கள் மனதில் நிலைநிறுத்தினார். தனக்காக இறைவனிடம் வேண்டியதைவிட நாட்டிற்காகவும் நாட்டுமக்களுக்காவும் அவா; வேண்டியதே அதிகமாகும். அவ்வகையில் பாரதி தனது தெய்வப்பாடல்கள் வழியாக தேசபக்தியை எவ்வாறு தெளிவுப்படுத்துகிறார் என்பதைக் காணலாம்.

இறைவழிபாட்டால் மக்கள் எய்தும் நிலை

                பாரதியார் தனது விநாயக நான்மணிமாலைஎன்னும் பகுதியில் கணபதியை வணங்கினால் எத்தகைய நிலையை அடைவா; என்பதை,
                                விடத்தையும் நோவையும் வெம்பகை யதனையும்
                                துச்சமென் றெண்ணித் துயாரிலா திங்கு
                                நிச்சலும் வாழ்ந்து நிலைபெற்றோங்கலாம்;
                                அச்சந் தீரும், அமுதம் விளையும்;
                                விந்தை வளரும்; வேள்வி ஓங்கும்
                                அமரத் தன்மை எய்தவும்
                                இங்கு நாம் பெறலாம்; இஃதுணா;வீரே
                                                                   (விநாயக நான்மணிமாலை - அகவல் 4-14:20)
என்ற வாரிகள் மூலம் சுட்டுகிறார். அடிமைப்பட்டுக்கிடக்கும் மக்கள் தங்களுடைய அச்சம், பகை அனைத்தையும் அகற்றிவிட்டு, அமுதமும் அமரத்தன்மையும் பெறுவா; என்பதை கணபதி வழிபாட்டின் வாயிலாக மக்களுக்கு எடுத்துரைக்கிறார்.

பக்தியால் கிட்டும் வெற்றி

                மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் பக்தியுடனும், பொறுமையோடும் இருத்தல் வேண்டும். பொறுத்தார் பு+மி ஆள்வார்என்ற பழமொழி இன்றும் வழக்கத்தில் உள்ளது. எந்தச் செயலைச் செய்தாலும் பொறுமையுடன் செயல்பட்டால் அந்த செயல் வெற்றியடையும். வள்ளுவரும்,
                                மிகுதியான் மிக்கவை செய்தாரைத் தாம்தம்
                                தகுதியான் வென்று விடல்” (திருக்குறள் - 158)
என்ற  குறளில்  எதிhரியையும்  தனது  பொறுமையால் வெல்லுதல் வேண்டும் என்கிறார்.
பாரதியார் ஆங்கிலேயாரின் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலைப்பெற நினைக்கும் மக்களுக்கு பக்தியுடனும் பொறுமையுடனும் செயல்பட்டால் வெற்றிக்கிட்டும் என்பதைனை,
                                பக்தியுடையார் காhரியத்திற்
                                                பதறார்! மிகுந்த பொறுமையுடன்
                                வித்து முளைக்குந் தன்மைபோல்
                                                மெல்லச் செய்து பயனடைவார்
                                                                (விநாயக நான்மணிமாலை - விருத்தம் 27)
என்ற வாரிகளின் வாயிலாக புலப்படுத்துகிறார். இதில் பாரதியார் காட்டும் உவமை விதை முளைக்கும் தன்மை போல்என்பதாகும். பருவம் கண்டு பயிர்செய்து அறுவடை செய்தால் பயன்கிட்டும். அதுபோல ஆங்கிலேயரை அழிக்கத் தகுந்த நேரம் பார்த்து பொறுமையுடன் செயல்பட்டால் விடுதலையை அடையலாம் என்பதை மறைமுகமாக எடுத்து உரைக்கிறார்.

நாட்டு மக்களுக்காக வேண்டுதல்

                சுயநலத்தையே நோக்கமாகக் கொண்டு மக்கள் வாழ்ந்த காலகட்டத்தில் பொது நலத்தையே வாழ்வாகக் கொண்டவா; பாரதி. தனக்காக தெய்வத்திடம் வேண்டாமல் நாட்டுமக்களுக்காக வேண்டுகிற தன்மையை,
                                நாட்டுமக்கள் நலமுற்று வாழவும்
                                                நானி லத்தவா; மேனிலை யெய்தவும்
                                பாட்டிலே தனி யின்பத்தை நாட்டவும்,
                                                பண்ணி லேகளி கூட்டவும் வேண்டி, நான்
                                மூட்டும் அன்புக் கனலொடு வாணியை” (பராசக்தி - 3)
என்ற வாரிகள் சுட்டுகின்றன. மேலும்,
                                எதையும் வேண்டில தன்னை பராசக்தி
                                                இன்ப மொன்றினைப் பாடுதல் அன்றியே
                                நாட்டு மக்கள் பிணியும் வறுமையும்
                                                நையப் பாடென்றொரு தெய்வங் கூறுமே” (பராசக்தி - 1)
எனுமிடத்து பாரதியார்தனக்காக எதையும் கேட்டிலைத் தாயே நாட்டுமக்களின் பிணியும் வறுமையும் அழிந்து போக வேண்டுகிறேன்என்று குறிப்பிடுவதிலிருந்து அவரது பொது நல எண்ணமும் நாட்டின் மேல் அவா; கொண்டுள்ள தேசபக்தியும் அறியமுடிகிறது.
அஃறிணை உயிர்களுக்காக வேண்டுதல்
                ஆண்டவனின் படைப்பில் அனைத்து உயிர்களும் சமமானவை என்பதை உணா;ந்தவா; பாரதியார். எனவே தான் காக்கை குருவி எங்கள் சாதிஎன்று பாடினார். நாட்டுமக்கள் நலத்திற்காக மட்டுமல்லாது உலக உயிர்கள் அனைத்திற்கும் தேவனிடம் வேண்டினார். இதனை,
                                கேட்கா வரத்தைக்கேட்க நான் துணிந்தேன்;
                                மண்மீ துள்ள மக்கள், பறவைகள்
                                விலங்குகள், பூச்சிகள், புற்பு+ண்டு மரங்கள்;
                                யாவுமென் வினையால் இடும்பை தீர்ந்தே
                                இன்பமுற் றன்புடன் இணங்கிவாழ் திடவே
                                செய்தல் வேண்டும், தேவ தேவா
                              (விநாயக நான்மணிமாலை - விருத்தம் - 32-27)
என்ற அடிகள் தெளிவுபடுத்துகின்றன. வள்ளலாhரின் பண்பாகிய வாடியப் பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்என்பது போல அஃறிணை உயிர்களின் துன்பங்களைக் கண்டு துவண்டுபோனவா; பாரதி அவற்றிற்காகவும் இறைவனிடம் வேண்டியவா; தனது பக்தி மார்கத்திற்குள்ளும் தேச உயிர்களின் பாசத்தையும் வெளிப்படுத்தியது புலப்படுகிறது.

சுமையான வாழ்வு நீங்கவேண்டல்

                இந்தியமக்கள் அடிமைகளாகவும் சுமையான, பொய்யான வாழ்வையும் வாழ்ந்து வந்தனா;. அவா;களின் நிலைமாறி அவா;கள் விடுதலை பெற்று இன்பமாக வாழவேண்டும் என்பதையே தன்வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டவா; பாரதி. இந்திய மக்கள் தனக்கெனத் தனியான சொந்த இடமாவது பெறல் வேண்டும் என்பதற்காக,
                                காணிநிலம் வேண்டும் - பராசக்தி
                                                காணி நிலம் வேண்டும்
                                காணி நிலத்திடையே ஓர் மாளிகை
                                                கட்டித் தரவேண்டும்”(காணிநிலம் வேண்டும் - 1)
என்று பராசக்தியிடம் வேண்டிப்பாடுகிறார். மக்களின் வாழ்க்கை நிலையே பற்றிக் கூறும் போது,
                                அடியார் பலாரிங் குளரே
                                                அவரை விடுவித் தருள்வாய்!” (முருகா! முருகா! - 2)
                                வல்லமை தாராயோ - இந்த
                                                மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
                                சொல்லடி சிவசக்தி - நிலச்
                                                சுமையென வாழ்ந்திடப் புhரிகுவையோ?” (நல்லதோ; வீணை - 1-3:4)
                                போதும் இங்கு மாந்தா; - வாழும் பொய்மை வாழ்க்கையெல்லாம்
                                ஆதிசக்தி தாயே - என்மீது - அருள் புhரிந்துகாப்பாய்”(காளி ஸ்தோத்திரம்)
என்று பாடுகிறார். மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காக இறைவனிடம் வேண்டி அனைவர்க்குள்ளும் இறை பக்தியையும் விடுதலை உணா;வையும் தூண்டும் தூண்டுகோளாக பாரதியின் பாடல்கள் அமைகின்றன.
முடிவுரை
                இறைபக்தி வாயிலாக மக்களுக்காகத் தேவையான விடுதலை உணர்வை மக்களே போராடி அடைய பாரதியின் தெய்வப்பாடல்கள் வகை செய்துள்ளன. இறைவனிடம் வேண்டும் பொழுதும் தேசமக்களுக்காக பொதுமை நோக்குடனும் அனைத்துயிர்களிடத்தும் அன்போடும் மக்களின் சுமையான வாழ்வை நீக்கி இன்பமான வாழ்வு வாழவேண்டும் எனவும் பாரதி வேண்டுவதிலிருந்து தெய்வப்பாடல்களின் வழி அவருடைய தேசபக்தியும் விடுதலையுணா;வையும் தெளிவாக அறியமுடிகிறது.

No comments: