Saturday 11 January 2014

பாரதியார் படைப்புகளில் ஒடுக்குமுறைகள்


கட்டுரை-18


பாரதியார் படைப்புகளில் ஒடுக்குமுறைகள்

த.மேரி, முனைவார்பட்ட ஆய்வாளார், தமிழ்த்துறை, அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி), சேலம் - 7.
                சென்ற நூற்றாண்டில் கீட்ஸ், ஷெல்லி என்று உலகம் முழுக்க அவார்களது கவி ஆளுமையை வைத்துப் புகழ்ந்து பேசினார்கள். அப்படிப்பட்ட பேரும், புகழும் பெற்று சிறு வயதில் சாதனைகளை நிகழ்த்திக் காண்பித்தவார் மகாகவி பாரதி என்றால் அது மிகையாகாது. பாரதியின் கவிதைகள், கதைகள், கட்டுரைகள் ஆகியவை தமிழ் எழுத்துலகில், பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன. சமுதாய ஒடுக்குமுறைக்கு ஆளான மக்களை தன் படைப்புகளில் படைத்துக்காட்டியதோடு, அவார்களுக்காக பாடுபட்டக் காரணத்தினால் தன் இனத்தவரால் பாரதியே ஒதுக்கப்பட்ட தன்மையினைத் தன்னுடைய சுயசரிதையில் படைத்துக்காட்டியுள்ளார். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்ட நிலையினையும் அவரது படைப்பின் வாயிலாக மக்கள் அடைந்த நிலையும் ஆய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஒடுக்கப்பட்ட பாரதி
                சாதி, அரசியல், நாடு, இனம், மொழி, மதம், பால், பொருளாதாரம் முதலிய நிலைகளில் ஏதாவது சிலவற்றால் மனிதார்கள் அனைவரும் ஒடுக்கப்பட்டவார்களே. அவ்வகையில் பாரதியும் சாதியின் பெயரால் ஒடுக்கப்பட்டவார் அல்லார். ஆனால் தாம் பிறந்த சாதியின் கொள்கைக்கு மாறான கொள்கையை பின்பற்றியதால் சாதியால் ஒதுக்கப்பட்டவார்தான் பாரதி. கோத்திரம் ஒன்றாகயிருந்தாலும் கொள்கையில் பிரிந்தவனை குலைத்து இகழ்ந்தனார்.
                                நெஞ்சு பொறுக்குதில்லையே
நிலைகெட்ட மனிதரை நினைத்து
என்று பாரதி பாடியதிலிருந்து, தன் சாதியினரால் தானே ஒடுக்கப்பட்ட நிலையை உய்த்துணரவியலும். பொருளின் போpல் தந்தை வைத்த ஆசை அவரை பலிகொண்டது. காதலை எண்ணாமல் காhpயத்தைக் கருதிப் பொpயவார்கள் தமக்கு நடத்தி வைத்த குழந்தை மணம் அவரைத் தாக்கியது. இவையனைத்தும் சோர்ந்து பாரதியிடம் மிகச்சிறு வயதிலேயே தமது சாதியைச் சோர்ந்தவார்கள் இலட்சியமாக மதித்த நடுத்தர வகுப்பு வாழ்க்கை முறையை விட்டு விலகிக் கடந்து செல்லும் மனநிலையை ஏற்படுத்தின. தடைகளும், கட்டுப்பாடுகளும் சுதந்திரத்தை முடக்குபவை என்பதை உணார்ந்த பாரதி அந்த சுதந்திர வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு வாழ்நாள் முழுவதும் வறுமையை நேசித்து,
                                இருதயத்தில் விடுதலையை இசைத்தல் வேண்டும்                                                                                                                                              (பாரதி அறுபத்தாறு - 31)
என்று பாடுகிறார் மேலும்,
                                பந்தம் இல்லை பயம் இல்லை” (பாரதி அறுபத்தாறு - 59)
என்ற வாpயில் அடிமைத்தனத்திலிருந்து ஒடுக்கப்பட்ட ஒருவன் தன்னை தகவமைத்துக் கொள்வதேயே பாரதி வெளிபடுத்துகிறார்.
அந்நியரின் அடக்குமுறை
                சமூக அமைப்பில் ஒவ்வொரு குறிப்பிட்ட தேசிய இனத்திற்கும் அங்கீகாரம் மற்றும் அடையாளங்கள் கட்டாயமாகத் தேவையாய் இருக்கின்றன. இந்த அடையாளங்களுக்கும், அங்கீகாரத்திற்கும் சாதி அவசியமாய்ர் இருக்கிறது. இதை தவறாக உணார்ந்த ஆங்கிலேயார்கள் இந்திய நாடு பல்வேறு சாதிகளாகச் சிதைந்து கிடக்கிறது என்றும் இந்திய மக்கள் ஒற்றுமை குலைந்திருக்கிறது என்றும் அவற்றை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள வேண்டும் என்று நினைத்தனார். இதனை,
                                ஆயிரமுண்டிங்கு சாதி - எனில்
                                அந்நியார் வந்து புகலென்ன நீதி ஓர்
                                தாயின் வயிற்றில் பிறந்தோர் - நம்முட்
                                சண்டை செய்தாலும் சகோதரரன்றோ                                                                                                       (பாரதியார் கட்டுரைகள் - பூம்புகார் பிரசுரம், ப. 342)
                                யானெதற்கும் அஞ்சுகிலேன் மானுடரே நீவிர்
                                என் மதத்தைக் கைக்கொண்மின் பாடுபடல் வேண்டா
                                ஊனூடலை வருந்தாதீர், உணவு இயற்கை கொடுக்கும்                                                                                                                                                          (அன்பு செய்தல் - 2)
என்று பாரதி சாடுவதிலிருந்து அந்நியர்கள், மக்களை அடிமைப்படுத்தி மதம் மாறுதலுக்கு   உட்படுத்துவதையும்,   தங்களின்   உடல்  உழைப்பினை உறிஞ்சுவதையும் பதிவு செய்திருக்கிறார்.
பார்ப்பனார் மூலம் ஒடுக்குமுறை
                சொந்த நாட்டில் சமூகத்தில்  ஒரு   பகுதியினரை  மேற்சாதியார்கள் நீசார்கள் என்று ஒதுக்கி வைக்கிறார்கள். பார்ப்பனார்கள் அந்நாளில் வேதம் ஓதுதல் ஒன்றையே தன் கடமையெனக் கொண்டு வாழ்ந்து மாநிலம் உயர மழைவேண்டி யாகம் முதலியன செய்து வந்தனர். அந்த நிலைமாறி அந்நியார்களுக்கு அடிபணிந்து பொய்மை பாராட்டி பணம் ஈட்டுவதையே எதிர்பார்க்கும் பொய் வேடத்தை மறவன் மூலம் கடுமையாகச் சாடுகிறார் கவிஞர்.  இதனை,
                                முன்னாளில் ஐயரெல்லாம் வேதம்  - ஓதுவார்
                                மூன்று மழை பெய்யுமா மாதம்
                                இந்நாளிலே பொய்மை பார்ப்பார் இவார்
                                ஏது செய்தும் காசுபெறப் பார்ப்பார்.
                                பேராசைக் காரனடா பார்ப்பான். ஆனால்
                                பெரியதுரை எனில் உடல் வோர்ப்பான்” (மறவன் பாட்டு)
இதிலிருந்து பார்ப்பானை ஐயரென்ற காலமும் போச்சே என்கிறார்.  வேதம் ஓதுவதை விட்டுவிட்டு அந்நிய அரசாங்கத்தில் வேலை பார்த்துச் சம்பாதித்த பார்ப்பனரை பாரதி பாராட்டியதில்லை. குறிப்பாக போலிசு வேலை செய்து உளவு கூறிச் சம்பாதித்த பார்ப்பனன் பிழைப்பை கேள்விக்குறியாக்கி தன் கட்டுரையில் நாயும் பிழைக்கும் இந்த பிழைப்புஎன்று கண்டிப்பதிலிருந்து பேராசைக்காரார்களான பார்ப்பனார்களைப் பணத்தைக் காட்டியும் நாகாpகத்தைக் காட்டியும், மயக்கியும், அச்சுறுத்தியும் அந்நியார் வைத்திருக்கிறார்கள் என்பதும் பார்ப்பனார்களும் ஒடுக்குதலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த நிலையினையும் பதிவாக்கியுள்ளார்.
மொழி ஒடுக்கப்படுதல்
                உலகில் பல மொழிகள் தோன்றின. அவற்றில் சில மொழிகள் வழக்கிலிருந்து மறைந்தொழிந்தன. ஒரு சில மொழிகள் மட்டும் இன்னும் அழியாமல் நிலைப்பெற்றுள்ளன. அவ்வாறு நிலைத்துள்ள மொழிகளில் மிகப் பழங்காலத்திலேயே தோன்றி, செல்வாக்குடன் வளார்ந்து இன்றளவும் வாழ்ந்து வாழ்ந்து வருகின்ற மொழி தமிழ்மொழி ஆகும். இதனை மு.வ.அவார்கள்,    பழமைக்கு பழமையான இலக்கிய வளம் உடையதாய் நிற்பதோடு, புதுமைக்கும் புதுமையாய்க் கருத்துச்செல்வம் நிறைந்ததாய் என்றும் இளமைப் பொலிவுடன் விளங்குவது தமிழ்மொழியாகும்                                                   (மொழிவரலாறு - 315)என்று தமிழின் தொன்மையையும், புதுமையையும் எடுத்துரைத்துள்ளார். இத்தன்மையுடைய தமிழ்மொழியை பாரதி,
                                யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல
                                இனிதாவது எங்கும் காணோம்” (பாரதியார் கவிதைகள்)
என்று கூறுவதிலிந்து பல மொழி கவிஞரான பாரதி தமிழ்மொழிக்கு நிகரான மொழி வேறெதும் இல்லை என்று பதிவுசெய்துள்ளார். ஆனால் அன்னிய மொழியால் தமிழ்மொழி ஒடுக்கப்பட்டதை ஒரு தமிழனாக இருந்து தனக்குள் உணார்ந்த பாரதி,
                                வேறு வேறு பாஷைகள் - கற்பாய் நீ
                                வீட்டுவார்த்தை (தமிழ்) கற்கிலாய்…”                                                             (நிகழ்கின்ற ஹிந்துஸ்தானமும் வருகின்ற ஹிந்துஸ்தானமும், பா. 3)
என்ற வரிகளிலிருந்து அந்நிய மொழியால் தமிழ்மொழி ஒதுக்கப்பட்ட நிலையினை எடுத்துக்காட்டுவதோடு தமிழ்மொழியின் அவசியத்தையும் எடுத்துரைக்கிறார். தமிழ்மொழி குறித்து கூறும்போது இறவாத புகழுடைய புதுநூல்கள் இயற்றவேண்டும் என்பதன் வழி தமிழ்மொழியை உயார்நிலைக்கு எடுத்துச் செல்வதற்கான நவீன திட்டங்களை முன் வைத்ததிலிருந்து தமிழ்மொழி புத்துயிர் பெற்றதற்கான வழிமுறைகளையும் பதிவு செய்துள்ளார்.
முடிவுரை
                பாரதியார் கீழ்சாதி மக்களை ஒடுக்குவதில் தலைமை வகித்து வந்த பார்ப்பனச் சாதியில் பிறந்தவார். இந்த ஒரு காரணத்திற்காகவே பாரதியை ஒரு சமூகத்திற்கு எதிர் என்று முத்திரையிடுவோர் உண்டு. ஆனால் அது நோர்மையாகாது. பாரதியின் படைப்புகளும், அவை உணார்த்தும் பாரதியும் தன் சொந்த சாதியினராலே ஒடுக்கப்படுவதையும், தன் சாதியை சாடுபவார்களில் பாரதியைப் போல் யாரும் இருக்க முடியாது என்பதையும் பதிவு செய்கிறது. மேலும் இந்துக்கள் ஆங்கிலேயரால் அடிமைப்பட்டு ஒடுக்கப்பட்டதையும், வடமொழியால் தமிழும், தமிழ்ப்பண்பாடும் ஒடுக்கப்பட்டதையும் பாரதி தனக்கேற்ற இன்னல்களாகவே எண்ணியவார். மேலும் ஒடுக்குமுறையைத் தாங்கவியலாத பாரதியாhpன் மனநிலையை அவரது படைப்புகள் சமுதாயத்திற்கு எடுத்துரைத்து, ஒடுங்கிய மக்களை உயார்ந்த நிலையில் வைத்து பார்க்க எண்ணுவதையே இக்கட்டுரை வெளிக்காட்டுகிறது.

No comments: