Thursday, 17 April 2014

அடித்தளப்படிப்பு இரண்டாம்ஆண்டு நான்காம்பருவம்

நான்காம் பருவம்

அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),
சேலம் - 636 007.
 பி.ஏ.,பி.எஸ்ஸி.,பட்டவகுப்புகளுக்குரிய நான்காம் பருவம்
 (2013 - 2014 கல்வியாண்டு முதல்)
பகுதி - 1 தமிழ் தாள் : IV
தாள் - 4 சங்க இலக்கியங்களும் நாடகமும்

13FTL 04

பாட நோக்கம் : 
    1.தமிழில் உள்ள சங்க இலக்கியங்களை அறிமுகம் செய்தல்
    2. சங்க இலக்கிய மரபுகளையும் மாண்புகளையும் கற்பித்தல்
    3. நீதி இலக்கியங்களைக் கற்பித்தல்

மாணவர் பெறும் திறன்:
    1.சங்க இலக்கியத்தின் திணை மரபுகளை அறிகிறான்.
    2. அகம், புறம் என்ற திணைப்பாகுபாடு அறிகிறான்
    3. சமண, பௌத்த நீதிகளை அறிகிறான்.
உள்ளடக்கம்
அலகு 1 :      சங்க கால இலக்கியங்கள்
1.    குறுந்தொகை         - பாடல் எண் 25, 27, 31, 57, 61
2.    அகநானூறு        - பாடல் எண் 302, 303, 304
3.    புறநானூறு            - பாடல் எண் 2, 9, 10, 30, 34
4.    பதிற்றுப்பத்து        - இரண்டாம் பத்து
    (மறம் வீங்கு பல்புகழ்,  சான்றோர் மெய்ம்மறை)
5.    முல்லைப்பாட்டு         - முழுவதும்

அலகு 2 :     சங்கம் மருவிய கால இலக்கியங்கள்
1.    குறள்            - அறம்    : புகழ் (24)
- பொருள்     : வினைத்திட்பம் (62)
- இன்பம்    : நலம் புனைந்துரைத்தல் (112)
    2. நாலடியார்            - பாடல் எண் 151 - 160
    3. பழமொழிநானூறு        - பாடல் எண் 101 - 110
    4. ஆசாரக்கோவை        - பாடல் எண் 18, 19, 20, 21, 23, 24, 25, 26, 27
    5. திரிகடுகம்            - பாடல் எண் 11 - 15
    6. நான்மணிக்கடிகை        - பாடல் எண் 11 - 15

அலகு 3 :      நாடக இலக்கியம்
    சிற்பி                - ஆதிரை
                       கோலம் வெளியீடு
                       50, அழகப்பா குடி அமைப்பு,
                        பொள்ளாச்சி- 642 001
அலகு     4 :      இலக்கிய வரலாறு
1.    தொல்காப்பியம்
2.    முச்சங்சங்கள்
3.    சங்க காலம் ஒரு பொற்காலம்
4.    பத்துப்பாட்டு
5.    எட்டுத்தொகை
6.    பதினெண்கீழ்க்கணக்கு

அலகு 5 :     மொழித்திறன்
    1.அகத்திணைகள்    - அ) குறிஞ்சி, முல்லை, மருதம் , நெய்தல், பாலை
                    (முதற்பொருள், கருப்பொருள், உரிப்பொருள்)
                   ஆ) பாடப்பகுதியில் உள்ள கூற்றுகள்
    2.புறத்திணைகள்    - அ) வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, உழிஞை, நொச்சி,
         தும்பை, வாகை, பாடாண்
    ஆ) பாடப்பகுதியில் உள்ள துறைகள்
திட்டக்கட்டுரைகள்:
    1.முச்சங்கங்கள்
    2.அகத்திணைகள்
    3.புறத்திணைகள்

குழுச் செயல்பாடு :
    1.பாடப்பகுதியில் உள்ள பாடல்களை அகத் திணைவாரியாகத் தொகுத்தல்
    2.பாடப்பகுதியில் உள்ள பாடல்களைப் புறத்திணைவாரியாகத் தொகுத்தல்

பார்வை நூல்கள்:
    1. டாக்டர் மு.வ         -  தமிழ் இலக்கிய வரலாறு,
                        சாகித்ய அகாடமி வெளியீடு,
                        புதுதில்லி.
    2. மது.ச. விமலானந்தம்    -  தமிழ் இலக்கிய வரலாறு,
    3. கா.கோ.வேங்கடராமன்- தமிழ் இலக்கிய வரலாறு,
                       கண்மணி பதிப்பகம்,
                       நாமக்கல்.
1.    சி. பாலசுப்ரமணியன் - தமிழ் இலக்கிய வரலாறு,
       பாவை பப்கேஷன்ஸ்,
       சென்னை.

இணைய முகவரிகள்:
1. 

1.        www.chennailibrary.com
3.        http://sangamtamizh.blogspot.in  

பாடங்கள்
அலகு-1    


குறுந்தொகை 25, கபிலர், குறிஞ்சித் திணை  – தலைவி தோழியிடம் சொன்னது
யாரும் இல்லை தானே கள்வன்
தான் அது பொய்ப்பின் யான் எவன் செய்கோ
தினைத் தாள் அன்ன சிறு பசுங்கால
ஒழுகு நீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டு தான் மணந்த ஞான்றே.

குறுந்தொகை 27, வெள்ளிவீதியார், பாலைத் திணை தலைவி தோழியிடம் சொன்னது
கன்றும் உண்ணாது கலத்தினும் படாது
நல் ஆன் தீம் பால் நிலத்து உக்காங்கு
எனக்கும் ஆகாது என்னைக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என் மாமைக் கவினே.
குறுந்தொகை 31, ஆதிமந்தியார், மருதத் திணைதலைவி சொன்னது
மள்ளர் குழீஇய விழவி னானும்
மகளிர் தழீஇய துணங்கை யானும்
யாண்டும் காணேன் மாண்தக் கோனை
யானும் ஓர் ஆடுகள மகளே என் கைக்
கோடு ஈர் இலங்கு வளை நெகிழ்த்த
பீடு கெழு குரிசலும் ஓர் ஆடுகள மகனே.
குறுந்தொகை 57, சிறைக்குடி ஆந்தையார், நெய்தற் திணை தலைவி தோழியிடம் சொன்னது
பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன
நீர் உறை மகன்றில் புணர்ச்சி போலப்
பிரிவு அரிதாகிய தண்டாக் காமமொடு
உடனுயிர் போகுக தில்ல கடன் அறிந்து
இருவேம் ஆகிய உலகத்து
ஒருவேம் ஆகிய புன்மை நாம் உயற்கே.
குறுந்தொகை 61, தும்பிசேர் கீரனார், மருதத் திணை தோழி பாணரிடம் சொன்னது
தச்சன் செய்த சிறு மா வையம்
ஊர்ந்து இன்புறாஅர் ஆயினும் கையின்
ஈர்த்து இன்புறூஉம் இளையோர் போல
உற்று இன்புறேஎம் ஆயினும் நல் தேர்ப்
பொய்கை ஊரன் கேண்மை
செய்து இன்புற்றனெம் செறிந்தன வளையே.
அகநானூறு 302, மதுரை அறுவை வாணிகன் இள வேட்டனார், குறிஞ்சித் திணை தோழி தலைவியிடம் சொன்னது, தலைவன் கேட்கும்படியாக
சிலம்பில் போகிய செம்முக வாழை
அலங்கல் அம் தோடு அசைவளி உறு தொறும்
பள்ளி யானைப் பரூஉப்புறம் தைவரும்
நல் வரை நாடனொடு அருவி ஆடியும்
பல் இதழ் நீலம் படு சுனைக் குற்றும்
நறு வீ வேங்கை இன வண்டு ஆர்க்கும்
வெறி கமழ் சோலை நயந்து விளையாடலும்
அரிய போலும் காதல் அம் தோழி
இருங்கல் அடுக்கத்து என் ஐயர் உழுத
கரும்பென கவினிய பெருங்குரல் ஏனல்
கிளி பட விளைந்தமை அறிந்தும் செல்க என
நம் அவண் விடுநள் போலாள் கைம்மிகச்
சில் சுணங்கு அணிந்த செறிந்து வீங்கு இள முலை
மெல்லியல் ஒலிவரும் கதுப்பொடு
பல் கால் நோக்கும் அறன் இல் யாயே.
அகநானூறு 303, ஔவையார், பாலைத் திணை தலைவி தன் நெஞ்சிடம் சொன்னது
இடை பிறர் அறிதல் அஞ்சி மறை கரந்து
பேஎய் கண்ட கனவின் பன் மாண்
நுண்ணிதின் இயைந்த காமம் வென் வேல்
மறமிகு தானைப் பசும்பூண்பொறையன்
கார் புகன்றெடுத்த சூர் புகல் நனந்தலை
மா இருங்கொல்லி உச்சித் தாஅய்த்
ததைந்து செல் அருவியின் அலர் எழப் பிரிந்தோர்
புலம் கந்தாக இரவலர் செலினே
வரை புரை களிற்றொடு நன்கலன் ஈயும்
உரை சால் வண் புகழ்ப் பாரி பறம்பின்
நிரை பறைக் குரீஇயினம் காலைப் போகி
முடங்கு புறச் செந்நெல் தரீஇயர் ஓராங்கு
இரை தேர் கொட்பின் வாகிப் பொழுது படப்
படர் கொள் மாலைப் படர்தந்தாங்கு
வருவா என்று உணர்ந்த மடங்கெழு நெஞ்சம்
ஐயந் தெளியரோ நீயே பலவுடன்
வறன் மரம் பொருந்திய சிள்வீடு உமணர்
கண நிரை மணியின் ஆர்க்கும் சுரன் இறந்து
அழிநீர் மீன் பெயர்ந்தாங்கு அவர்
வழிநடைச் சேறல் வலித்திசின் யானே.
அகநானூறு 304, இடைக்காடனார், முல்லைத் திணை தலைவன் தன் நெஞ்சிடம் சொன்னது
இரு விசும்பு இவர்ந்த கருவி மா மழை
நீர் செறி நுங்கின் கண் சிதர்ந்தவை போல்
சூர்ப் பனி பன்ன தண் வரல் ஆலியொடு
பரூஉப் பெயல் அழி துளி தலைஇ வான் நவின்று
குரூஉத் துளி பொழிந்த பெரும் புலா வைகறை
செய்து விட்டன்ன செந்நில மருங்கில்
செறித்து நிறுத்தன்ன தெள் அறல் பருகிச்
சிறு மறி தழீஇய தெறி நடை மடப் பிணை
வலந்திரி மருப்பின் அண்ணல் இரலையொடு
அலங்கு சினைக் குருந்தின் அல்கு நிழல் வதியச்
சுரும்பு இமிர்பு ஊதப் பிடவுத் தளை அவிழ
அரும் பொறி மஞ்ஞை ஆல வரி மணல்
மணி மிடை பவளம் போல அணிமிகக்
காயாஞ்செம்மல் தாஅய்ப் பலவும்
ஈயல் மூதாய் ஈர்ம் புறம் வரிப்பப்
புலன் அணி கொண்ட கார் எதிர் காலை
ஏந்து கோட்டு யானை வேந்தன் பாசறை
வினையொடு வேறு புலத்து அல்கி நன்றும்
அறவர் அல்லர் நம் அருளாதோர் என
நம் நோய் தன்வயின் அறியாள்
எம் நொந்து புலக்கும் கொல் மாஅயோளே?
புறநானூறு 2, பாடியவர்: முரஞ்சியூர் முடிநாகனார், பாடப்பட்டோன்: சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன், திணை: பாடாண், துறை: செவியறிவுறூஉ, வாழ்த்தியல்
மண் திணிந்த நிலனும்
நிலம் ஏந்திய விசும்பும்
விசும்பு தைவரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை போலப்
போற்றார்ப் பொறுத்தலும் சூழ்ச்சியது அகலமும்
வலியும் தெறலும் அளியும் உடையோய்
நின் கடல் பிறந்த ஞாயிறு பெயர்த்தும் நின்
வெண் தலைப் புணரிக் குட கடல் குளிக்கும்
யாணர் வைப்பின் நன்னாட்டுப் பொருந
வானவரம்பனை நீயோ பெரும
அலங்கு உளைப் புரவி ஐவரோடு சினைஇ
நிலந்தலைக் கொண்ட பொலம் பூந்தும்பை
ஈரைம்பதின்மரும் பொருது களத்து ஒழியப்
பெருஞ்சோற்று மிகுபதம் வரையாது கொடுத்தோய்
பாஅல் புளிப்பினும் பகல் இருளினும்
நாஅல் வேத நெறி திரியினும்
திரியாச் சுற்றமொடு முழுது சேண் விளங்கி
நடுக்கின்றி நிலியரோ அத்தை அடுக்கத்துச்
சிறுதலை நவ்விப் பெருங்கண் மாப்பிணை
அந்தி அந்தணர் அருங்கடன் இறுக்கும்
முத்தீ விளக்கில் துஞ்சும்
பொன் கோட்டு இமயமும் பொதியமும் போன்றே.
புறநானூறு 9, பாடியவர்: நெட்டிமையார், பாடப்பட்டோன்: பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி, திணை: பாடாண், துறை: இயன் மொழி
ஆவும் ஆன் இயல் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடையீரும் பேணித்
தென் புலம் வாழ்நர்க்கு அருங்கடன் இறுக்கும்
பொன் போல் புதல்வர்ப் பெறாஅதீரும்
எம் அம்பு கடி விடுதும் நும் அரண் சேர்மின் என
அறத்து ஆறு நுவலும் பூட்கை மறத்தின்
கொல்களிற்று மீமிசைக் கொடி விசும்பு நிழற்றும்
எங்கோ வாழிய குடுமி தங்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே.
புறநானூறு 10, பாடியோர்: ஊன்பொதி பசுங்குடையார், பாடப்பட்டோன்: சோழன் நெய்தலங்கானல் இளஞ்சேட் சென்னி, திணை: பாடாண், துறை: இயன் மொழி
வழிபடுவோரை வல் அறிதீயே
பிறர் பழி கூறுவோர் மொழி தேறலையே
நீ மெய் கண்ட தீமை காணின்
ஒப்ப நாடி அத்தக ஒறுத்தி
வந்து அடி பொருந்தி முந்தை நிற்பின்
தண்டமும் தணிதி நீ பண்டையிற் பெரிதே
அமிழ்து அட்டு ஆனாக் கமழ் குய் அடிசில்
வருநர்க்கு வரையா வசைஇல் வாழ்க்கை
மகளிர் மலைத்தல் அல்லது மள்ளர்
மலைத்தல் போகிய சிலைத் தார் மார்ப
செய்து இரங்கா வினைச் சேண் விளங்கும் புகழ்
நெய்தலங்கானல் நெடியோய்
எய்த வந்தனம் யாம் ஏத்துகம் பலவே.
புறநானூறு 30, பாடியவர்: உறையூர் முதுகண்ணன் சாத்தனார், பாடப்பட்டோன்: சோழன் நலங்கிள்ளி, திணை: பாடாண், துறை: இயன் மொழி
செஞ்ஞாயிற்றுச் செலவும்
அஞ்ஞாயிற்றுப் பரிப்பும்
பரிப்புச் சூழ்ந்த மண்டிலமும்
வளி திரிதரு திசையும்
வறிது நிலைஇய காயமும் என்றிவை
சென்றளந்து அறிந்தார் போல என்றும்
இனைத்து என்போரும் உளரே அனைத்தும்
அறிவு அறிவாகச் செறி வினையாகிக்
களிறு கவுள் அடுத்த எறி கல் போல
ஒளித்த துப்பினை ஆதலின் வெளிப்பட
யாங்ஙனம் பாடுவர் புலவர் கூம்பொடு
மீப் பாய் களையாது மிசைப் பரம் தோண்டாது
புகாஅர்ப் புகுந்த பெருங்கலந் தகாஅர்
இடைப் புலப் பெரு வழிச் சொரியும்
கடல் பல் தாரத்த நாடு கிழவோயே.
புறநானூறு 34, பாடியவர்: ஆலத்தூர் கிழார், பாடப்பட்டோன்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளி வளவன், திணை: பாடாண், துறை: இயன் மொழி
ஆன் முலை அறுத்த அறனிலோர்க்கும்
மாண் இழை மகளிர் கருச் சிதைத்தோர்க்கும்
குரவர்த் தப்பிய கொடுமையோர்க்கும்
வழுவாய் மருங்கின் கழுவாயும் உள என
நிலம் புடை பெயர்வதாயினும் ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல் என
அறம் பாடின்றே ஆயிழை கணவ
காலை அந்தியும் மாலை அந்தியும்
புறவுக் கருவன்ன புன்புல வரகின்
பால் பெய் புன்கம் தேனொடு மயக்கிக்
குறு முயல் கொழுஞ் சூடு கிழித்த ஒக்கலொடு
இரத்தி நீடிய அகன் தலை மன்றத்துக்
கரப்பு இல் உள்ளமொடு வேண்டு மொழி பயிற்றி
அமலைக் கொழுஞ்சோறு ஆர்ந்த பாணர்க்கு
அகலாச் செல்வம் முழுவதும் செய்தோன்
எங்கோன் வளவன் வாழ்க என்று நின்
பீடுகெழு நோன் தாள் பாடேன் ஆயின்
படுபறியலனே பல் கதிர்ச் செல்வன்
யானோ தஞ்சம் பெரும இவ்வுலகத்துச்
சான்றோர் செய்த நன்றுண்டாயின்
இமையத்து ஈண்டி இன் குரல் பயிற்றிக்
கொண்டல் மா மழை பொழிந்த
நுண் பல் துளியினும் வாழிய பலவே.
பதிற்றுப்பத்து 12, *மறம் வீங்கு பல் புகழ்*, துறை: செந்துறைப் பாடாண் பாட்டு, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணம்
வயவர் வீழ வாளரின் மயக்கி
இடங்கவர் கடும்பின் அரசு தலை பனிப்பக்
கடம்பு முதல் தடிந்த கடுஞ்சின வேந்தே
தார் அணி எருத்தின் வாரல் வள் உகிர்
அரிமான் வழங்கும் சாரல் பிறமான்
தோடு கொள் இன நிரை நெஞ்சு அதிர்ந் தாங்கு
முரசு முழங்கு நெடு நகர் அரசு துயில் ஈயாது
மாதிரம் பனிக்கும் *மறம் வீங்கு பல் புகழ்*
கேட்டற்கு இனிது நின் செல்வம் கேள்தொறும்
காண்டல் விருப்பொடு கமழும் குளவி
வாடாப் பைம் மயிர் இளைய ஆடு நடை
அண்ணல் மழ களிறு அரி ஞிமிறு ஓப்பும்
கன்று புணர் பிடிய குன்று பல நீந்தி
வந்து அவண் நிறுத்த இரும் பேர் ஒக்கல்
தொல் பசி உழந்த பழங்கண் வீழ
எஃகு போழ்ந்து அறுத்த வால் நிணக் கொழுங்குறை
மை ஊன் பெய்த வெண் நெல் வெண் சோறு
நனை அமை கள்ளின் தேறலொடு மாந்தி
நீர்ப் படு பருந்தின் இருஞ்சிறகு அன்ன
நிலத்தின் சிதாஅர் களைந்த பின்றை
நூலாக் கலிங்கம் வால்அரைக் கொளீஇ
வணர் இரும் கதுப்பின் வாங்கு அமை மென் தோள்
வசை இல் மகளிர் வயங்கு இழை அணிய
அமர்பு மெய் ஆர்த்த சுற்றமொடு
நுகர்தற்கு இனிது நின் பெரும் கலி மகிழ்வே.
பதிற்றுப்பத்து 14, *சான்றோர் மெய்ம்மறை*, துறை: செந்துறைப் பாடாண் பாட்டு, தூக்கு: செந்தூக்கு, வண்ணம்: ஒழுகு வண்ணமும் சொற்சீர் வண்ணமும்
நிலம் நீர் வளி விசும்பு என்ற நான்கின்
அளப்பு அரியையே
நாள் கோள் திங்கள் ஞாயிறு கனை அழல்
ஐந்து ஒருங்கு புணர்ந்த விளக்கத்து அனையை
போர்தலை மிகுத்த ஈரைம்பதின்மரொடு
துப்புத் துறை போகிய துணிவு உடை யாண்மை
அக்குரன் அனைய கை வண்மையையே
அமர் கடந்து மலைந்த தும்பைப் பகைவர்
போர் பீடு அழித்த செருப்புகல் முன்ப
கூற்று வெகுண்டு வரினும் ஆற்று மாற்றலையே
எழு முடி கெழீஇய திரு ஞெமர் அகலத்து
நோன் புரித் தடக்கைச் *சான்றோர் மெய்ம்மறை*
வான் உறை மகளிர் நலன் இகல் கொள்ளும்
வயங்கு இழை கரந்த வண்டு படு கதுப்பின்
ஒடுங்கு ஈர் ஓதிக் கொடுங்குழை கணவ
பல களிற்றுத் தொழுதியொடு வெல் கொடி நுடங்கும்
படை ஏர் உழவ பாடினி வேந்தே
இலங்கு மணி மிடைந்த பொலங்கலத் திகிரிக்
கடல் அக வரைப்பின் இப் பொழில் முழுது ஆண்ட நின்
முன் திணை முதல்வர் போல நின்று நீ
கெடாஅ நல்லிசை நிலைஇத்
தவா அலியரோ இவ்வுலகமோடு உடனே.
பாடியவர்          –       நப்பூதனார்
பாடப்பட்டவன்     –       தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன்
திணை             –       முல்லை 
பாவகை           –       ஆசிரியப்பா
மொத்த அடிகள்    –             103
மால் போலத் தோன்றும் மழை மேகம்
நனந்தலை உலகம் வளைஇ நேமியொடு
வலம்புரி பொறித்த மா தாங்கு தடக்கை
நீர் செல நிமிர்ந்த மாஅல் போல
பாடு இமிழ் பனிக்கடல் பருகி வலன் ஏர்பு
கோடு கொண்டு எழுந்த கொடுஞ் செலவு எழிலி (1-5)
மழைக்காலத்து மாலை நேரம்
பெரும் பெயல் பொழிந்த சிறு புன் மாலை (6)
முதுபெண்டிர் விரிச்சி கேட்டல்
அருங்கடி மூதூர் மருங்கில் போகி
யாழ் இசை இன வண்டு ஆர்ப்ப நெல்லொடு
நாழி கொண்ட நறு வீ முல்லை
அரும்பு அவிழ் அலரி தூஉய்க் கை தொழுது
பெரு முது பெண்டிர் விரிச்சி நிற்ப (7-11)
முது பெண்டிர் ஆய்மகளின் நற்சொல் கேட்டலும்
தலைவியை ஆற்றுவித்தலும்
சிறு தாம்பு தொடுத்த பசலைக் கன்றின்
உறு துயர் அலமரல் நோக்கி ஆய்மகள்
நடுங்கு சுவல் அசைத்த கையள் கைய
கொடுங்கோல் கோவலர் பின் நின்று உய்த்தர
இன்னே வருகுவர் தாயர் என்போள்
நன்னர் நன்மொழி கேட்டனம் அதனால்
நல்ல நல்லோர் வாய்ப்புள் தெவ்வர்
முனை கவர்ந்து கொண்ட திறையர் வினை முடித்து
வருதல் தலைவர் வாய்வது நீ நின்
பருவரல் எவ்வம் களை மாயோய் என
காட்டவும் காட்டவும் காணாள் கலுழ் சிறந்து
பூப்போல் உண்கண் புலம்பு முத்து உறைப்ப (12 – 23)
பாசறை அமைத்தல்
கான் யாறு தழீஇய அகல் நெடும் புறவில்
சேண் நாறு பிடவமொடு பைம் புதல் எருக்கி
வேட்டுப்புழை அருப்பம் மாட்டிக் காட்ட
இடுமுள் புரிசை ஏமுற வளைஇ
படு நீர்ப் புணரியின் பரந்த பாடி (24 -28)
பாசறையின் நாற்சந்தியில் நிற்கும் யானையின் நிலை
உவலைக் கூரை ஒழுகிய தெருவில்
கவலை முற்றம் காவல் நின்ற
தேம்படு கவுள சிறு கண் யானை
ஓங்கு நிலைக் கரும்பொடு கதிர் மிடைந்து யாத்த
வயல் விளை இன்குளகு உண்ணாது நுதல் துடைத்து
அயில் நுனை மருப்பின் தம் கையிடைக் கொண்டென
கவை முள் கருவியின் வடமொழி பயிற்றி
கல்லா இளைஞர் கவளம் கைப்ப (29 – 36)
பாசறையில் வீரர்களின் அரண்கள்
கல் தோய்த்து உடுத்த படிவப் பார்ப்பான்
முக்கோல் அசை நிலை கடுப்ப நல்போர்
ஓடா வல்வில் தூணி நாற்றி
கூடம் குத்திக் கயிறு வாங்கு இருக்கை
பூந்தலைக் குந்தம் குத்தி கிடுகு நிரைத்து
வாங்கு வில் அரணம் அரணமாக (37 -42)
பாசறையில் மன்னனுக்குத் தனி இடம்
வேறு பல் பெரும்படை நாப்பண் வேறு ஓர்
நெடுங்காழ்க் கண்டம் கோலி அகம் நேர்பு (43 – 44)
மன்னனின் இருப்பிடத்தில் விளக்கேற்றும் பெண்கள்
குறுந்தொடி முன் கை கூந்தல் அம் சிறு புறத்து
இரவு பகல் செய்யும் திண் பிடி ஒள் வாள்
விரவு வரிக் கச்சின் பூண்ட மங்கையர்
நெய் உமிழ் சுரையர் நெடுந்திரிக் கொளீஇ
கை அமை விளக்கம் நந்து தொறும் மாட்ட (45 -49)
பாசறையில் காவலாளர்
நெடு நா ஒண் மணி நிழத்திய நடுநாள்
அதிரல் பூத்த ஆடு கொடிப் படாஅர்
சிதர் வரல் அசைவளிக்கு அசைவந் தாங்கு
துகில் முடித்துப் போர்த்த தூங்கல் ஓங்கு நடைப்
பெரு மூதாளர் ஏமம் சூழ (50 -54)
நாழிகைக் கணக்கர்
பொழுதுஅளந்து அறியும் பொய்யா மாக்கள்
தொழுது காண் கையர் தோன்ற வாழ்த்தி
எறி நீர் வையகம் வெலீஇய செல்வோய் நின்
குறு நீர்க் கன்னல் இனைத்து என்று இசைப்ப (55 – 58)
மன்னன் இருப்பிடத்தில் யவனர்
மத்திகை வளைஇய மறிந்து வீங்கு செறிவுடை
மெய்ப்பை புக்க வெருவரும் தோற்றத்து
வலி புணர் யாக்கை வன் கண் யவனர்
புலித்தொடர் விட்ட புனை மாண் நல் இல்
திரு மணி விளக்கம் காட்டி………….. (59 – 63)
மன்னனின் பள்ளியறையில் மிலேச்சியர்
…………திண் ஞாண்
எழினி வாங்கிய ஈரறைப் பள்ளியுள்
உடம்பின் உரைக்கும் உரையா நாவின்
படம் புகு மிலேச்சர் உழையர் ஆக (63 -66)
பாசறையில் மன்னனின் மனநிலை
மண்டு அமர் நசையொடு கண்படை பெறாஅது
எடுத்து எறி எஃகம் பாய்தலின் புண் கூர்ந்து
பிடிக்கணம் மறந்த வேழம் வேழத்துப்
பாம்பு பதைப்பன்ன பரூஉக்கை துமிய
தேம்பாய் கண்ணி நல் வலம் திருத்தி
சோறு வாய்த்து ஒழிந்தோர் உள்ளியும் தோல் துமிபு
பைந்நுனைப் பகழி மூழ்கலின் செவி சாய்த்து
உண்ணாது உயங்கும் மாசிந் தித்தும்
ஒரு கை பள்ளி ஒற்றி ஒருகை
முடியொடு கடகம் சேர்த்தி நெடிது நினைந்து ( 67 – 76)
வெற்றிக்குப் பின் பாசறையில் மன்னன்
பகைவர் சுட்டிய படைகொள் நோன் விரல்
நகை தாழ்க் கண்ணி நல் வலம் திருத்தி
அரசு இருந்த பனிக்கும் முரசு முழங்கு பாசறை
இன் துயில் வதியுநன் …. …. …. …. …. (77 -80)
தலைவனைக் காணாது வருந்தும் தலைவியின் நிலை
………காணாள் துயர் உழந்து
நெஞ்சஆற்றுப் படுத்த நிறைதபு புலம்பொடு
நீடு நினைந்து தேற்றியும் ஓடு வளை திருத்தியும்
மையல் கொண்டும் ஒய்யென உயிர்த்தும்
ஏ உறு மஞ்ஞையின் நடுங்கி இழை நெகிழ்ந்து
பாவை விளக்கில் பரூஉச் சுடர் அழல
இடம் சிறந்து உயரிய எழு நிலை மாடத்து
முடங்கு இறைச் சொறிதரும் மாத்திரள் அருவி
இன்பல் இமிழிசை ஓர்ப்பனள் கிடந்தோள்
அஞ்செவி நிறைய ஆலின …. …. …. ….(80 – 89)
போரில் வெற்றி பெற்றுத் தலைவன் வருதல்
………………….வென்று பிறர்
வேண்டு புலம் கவர்ந்த ஈண்டு பெருந் தானையொடு
விசயம் வெல் கொடி உயரி வலன் ஏர்பு
வயிரும் வளையும்
கார்ப்பருவத்தில் முல்லை நிலம்
………………………………………….அயிர
செறி இலைக் காயா அஞ்சனம் மலர
முறி இணர்க் கொன்றை நன் பொன் கால
கோடல் குவி முகை அங்கை அவிழ
தோடு ஆர் தோன்றி குருதி பூப்ப
கானம் நந்திய செந்நிலப் பெருவழி
வானம் வாய்த்த வாங்கு கதிர் வரகின்
திரி மருப்பு இரலையொடு மடமான் உகள
எதிர் செல் வெண் மழை பொழியும் திங்களில் (92 – 100)
வந்து கொண்டிருக்கிறது அரசனின் தேர்!
முதிர் காய் வள்ளியம் காடு பிறக்கொழிய
துனை பரி துரக்கும் செலவினர்
வினை விளங்கு நெடுந்தேர் பூண்ட மாவே. (101 – 103)


அலகு -2 குறள் – அறத்துப்பால் -புகழ்
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு. #0231
உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று
ஈவார்மேல் நிற்கும் புகழ். #0232
ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால்
பொன்றாது நிற்பதொன் றில். #0233
நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு. #0234
நத்தம்போல் கேடும் உளதாகும் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது. #0235
தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று. #0236
புகழ்பட வாழாதார் தந்நோவார் தம்மை
இகழ்வாரை நோவது எவன். #0237
வசையென்ப வையத்தார்க் கெல்லாம் இசையென்னும்
எச்சம் பெறாஅ விடின். #0238
வசையிலா வண்பயன் குன்றும் இசையிலா
யாக்கை பொறுத்த நிலம். #0239
வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர். #0240
2. பொருட்பால் - வினைத்திட்பம்
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றைய எல்லாம் பிற. #0661
ஊறொரால் உற்றபின் ஒல்காமை இவ்விரண்டின்
ஆறென்பர் ஆய்ந்தவர் கோள். #0662
கடைக்கொட்கச் செய்தக்க தாண்மை இடைக்கொட்கின்
எற்றா விழுமந் தரும். #0663
சொல்லுதல் யார்க்கும் எளிய அரியவாம்
சொல்லிய வண்ணம் செயல். #0664
வீறெய்தி மாண்டார் வினைத்திட்பம் வேந்தன்கண்
ஊறெய்தி உள்ளப் படும். #0665
எண்ணிய எண்ணியாங்கு எய்து எண்ணியார்
திண்ணியர் ஆகப் பெறின். #0666
உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு
அச்சாணி அன்னார் உடைத்து. #0667
கலங்காது கண்ட வினைக்கண் துளங்காது
தூக்கங் கடிந்து செயல். #0668
துன்பம் உறவரினும் செய்க துணிவாற்றி
இன்பம் பயக்கும் வினை. #0669
எனைத்திட்பம் எய்தியக் கண்ணும் வினைத்திட்பம்
வேண்டாரை வேண்டாது உலகு. #0670
3.திருக்குறள் காமத்துப்பால் நலம்புனைந்துரைத்தல்

நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்னீரள் யாம்வீழ் பவள். #1111
மலர்காணின் மையாத்தி நெஞ்சே இவள்கண்
பலர்காணும் பூவொக்கும் என்று. #1112
முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு. #1113
காணின் குவளை கவிழ்ந்து நிலன்நோக்கும்
மாணிழை கண்ணொவ்வேம் என்று. #1114
அனிச்சப்பூக் கால்களையாள் பெய்தாள் நுகப்பிற்கு
நல்ல படாஅ பறை. #1115
மதியும் மடந்தை முகனும் அறியா
பதியின் கலங்கிய மீன். #1116
அறுவாய் நிறைந்த அவிர்மதிக்குப் போல
மறுவுண்டோ மாதர் முகத்து. #1117
மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல்
காதலை வாழி மத஧. #1118
மலரன்ன கண்ணாள் முகமொத்தி யாயின்
பலர்காணத் தோன்றல் மதி. #1119
அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம். #1120
16 மேன்மக்கள்
அம் கண் விசும்பின் அகல் நிலாப் பாரிக்கும்
திங்களும் சான்றோரும் ஒப்பர்மன்; திங்கள்
மறு ஆற்றும்; சான்றோர் அஃது ஆற்றார்; தெருமந்து
தேய்வர், ஒரு மாசு உறின். 151
இசையும் எனினும், இசையாதுஎனினும்,
வசை தீர எண்ணுவர், சான்றோர்;-விசையின்
நரிமா உளம் கிழித்த அம்பினின் தீதோ,
அரிமாப் பிழைப்ப எய்த கோல்? 152
நரம்பு எழுந்து நல்கூர்ந்தார் ஆயினும், சான்றோர்
குரம்பு எழுந்து குற்றம் கொண்டு ஏறார்; உரம் கவறா,
உள்ளம் எனும் நாரினால் கட்டி, உளவரையால்
செய்வர், செயற்பாலவை. 153
செல்வுழிக்கண் ஒருநாள் காணினும், சான்றவர்
தொல் வழிக் கேண்மையின் தோன்றப் புரிந்து யாப்பர்;-
நல் வரை நாட!-சில நாள் அடிப்படின்,
கல் வரையும் உண்டாம், நெறி. 154
புல்லா எழுத்தின் பொருள் இல் வறுங் கோட்டி,
கல்லா ஒருவன் உரைப்பவும், கண் ஓடி,
நல்லார் வருந்தியும் கேட்பரே, மற்று அவன்
பல்லாருள் நாணல் பரிந்து. 155
கடித்துக் கரும்பினைக் கண் தகர நூறி,
இடித்து, நீர் கொள்ளினும் இன் சுவைத்தே ஆகும்;-
வடுப்பட வைது இறந்தக்கண்ணும், குடிப் பிறந்தார்
கூறார், தம் வாயின் சிதைந்து. 156
கள்ளார்; கள் உண்ணார்; கடிவ கடிந்து ஒரீஇ,
எள்ளிப் பிறரை இகழ்ந்து உரையார்; தள்ளியும்,
வாயின் பொய் கூறார்;-வடு அறு காட்சியார்-
சாயின், பரிவது இலர். 157
பிறர் மறையின்கண் செவிடு ஆய், திறன் அறிந்து
ஏதிலார் இற்கண் குருடன் ஆய், தீய
புறங்கூற்றின் மூங்கை ஆய், நிற்பானேல், யாதும்
அறம் கூற வேண்டா, அவற்கு. 158
பல் நாளும் சென்றக்கால், பண்பு இலார் தம்முழை,
என்னானும் வேண்டுபஎன்று இகழ்ப; ‘என்னானும்
வேண்டினும் நன்று மற்றுஎன்று, விழுமியோர்
காண்தொறும் செய்வர், சிறப்பு. 159
உடையார் இவர்என்று, ஒருதலையாப் பற்றி,
கடையாயார் பின் சென்று வாழ்வர்; உடைய
பிலம் தலைப்பட்டது போலாதே, நல்ல
குலம் தலைப்பட்ட இடத்து? 160

பழமொழி நானூறு #101 - 110
பரிய படுமவர் பண்பு இலரேனும்
திரிய பெறுபவோ சான்றோர் விரி திரை
பார் எறியும் முந்நீர் துறைவ கடன் அன்றோ
ஊர் அறிய நட்டார்க்கு உணா
#102
எனக்கு தகவு அன்றால் என்பதே நோக்கி
தனக்கு கரி ஆவான் தானாய் தவற்றை
நினைத்து தன் கை குறைத்தான் தென்னவனும் காணார்
என செய்யார் மாணா வினை
#103
நிரம்பி நிரையத்தை கண்டு அ நிரையும்
வரம்பு இல் பெரியானும் புக்கான் இரங்கார்
கொடி ஆர மார்ப குடி கெட வந்தால்
அடி கெட மன்றிவிடல்
#104
நல்லவும் தீயவும் நாடி பிறர் உரைக்கும்
நல்ல பிறவும் உணர்வாரை கட்டுரையின்
வல்லிதின் நாடி வலிப்பதே புல்லத்தை
புல்லம் புறம் புல்லுமாறு
#105
சுடப்பட்டு உயிர் உய்ந்த சோழன் மகனும்
பிடர்த்தலை பேரானை பெற்று கடைக்கால்
செயிர் அறு செங்கோல் செலீஇயினான் இல்லை
உயிர் உடையார் எய்தா வினை
#106
வாள் திறலானை வளைத்தார்கள் அஞ்ஞான்று
வீட்டிய சென்றார் விளங்கு ஒளி காட்ட
பொரு அறு தன்மை கண்டு அஃது ஒழிந்தார் அஃதால்
உருவு திரு ஊட்டுமாறு
#107
பெற்றாலும் செல்வம் பிறர்க்கு ஈயார் தாம் துவ்வார்
கற்றாரும் பற்றி இறுகுபவால் கற்றா
வரம்பிடை பூ மேயும் வண் புனல் ஊர
மரம் குரைப்ப மண்ணா மயிர்
#108
உள்ளூரவரால் உணர்ந்தார் முதல் எனினும்
எள்ளாமை வேண்டும் இலங்கிழாய் தள்ளாது
அழுங்கல் முது பதி அங்காடி மேயும்
பழம் கன்று ஏறு ஆதலும் உண்டு
#109
மெய்யா உணரின் பிறர் பிறர்க்கு செய்வது என்
பை ஆர் அகல் அல்குல் பைந்தொடி எக்காலும்
செய்யார் எனினும் தமர் செய்வர் பெய்யுமாம்
பெய்யாது எனினும் மழை
#110
கூற்றம் உயிர் கொள்ளும் போழ்து குறிப்பு அறிந்து
மாற்றம் உடையாரை ஆராயாது ஆற்றவும்
முல்லை புரையும் முறுவலாய் செய்வது என்
வல்லை அரசு ஆட்கொளின்
ஆசாரக்கோவை
18 உணவு உண்ணும் முறைமை இன்னிசை வெண்பா
நீராடி கால்கழுவி வாய்பூசி மண்டலம் செய்து
உண்டாரே உண்டார் எனப்படுவார் அல்லாதார்
உண்டார் போல் வாய்பூசி செல்வர் அது எடுத்து
கொண்டார் அரக்கர் குறித்து
#19 கால் கழுவிய பின் செய்ய வேண்டியவை இன்னிசை சிந்தியல் வெண்பா
காலின் நீர் நீங்காமை உண்டிடுக பள்ளியும்
ஈரம் புலராமை ஏறற்க என்பதே
பேர் அறிவாளர் துணிவு
#20 உண்ணும் விதம் இன்னிசை வெண்பா
உண்ணுங்கால் நோக்கும் திசை கிழக்குக்கண் அமர்ந்து
தூங்கான் துளங்காமை நன்கு இரீஇ யாண்டும்
பிறிதி யாதும் நோக்கான் உரையான் தொழுது கொண்டு
உண்க உகாஅமை நன்கு
 
மேல்
 
#21 ஒழுக்கம் பிழையாதவர் செய்வது இன்னிசை சிந்தியல் வெண்பா
விருந்தினர் மூத்தோர் பசு சிறை பிள்ளை
இவர்க்கு ஊண் கொடுத்து அல்லால் உண்ணாரே என்றும்
ஒழுக்கம் பிழையாதவர்
#22 பிற திசையும் நல்ல இன்னிசை சிந்தியல் வெண்பா
ஒழிந்த திசையும் வழிமுறையான் நல்ல
முகட்டு வழி ஊண் புகழ்ந்தார் இகழ்ந்தார்
முகட்டு வழி கட்டில் பாடு
#23 உண்ண கூடாத முறைகள் இன்னிசை சிந்தியல் வெண்பா
கிடந்து உண்ணார் நின்று உண்ணார் வெள்ளிடையும் உண்ணார்
சிறந்து மிக உண்ணார் கட்டில் மேல் உண்ணார்
இறந்து ஒன்றும் தின்னற்க நின்று
#24 பெரியோருடன் இருந்து உண்ணும் முறை இன்னிசை சிந்தியல் வெண்பா
முன் துவ்வார் முன் எழார் மிக்கு உறார் ஊணின்கண்
என் பெறினும் ஆற்ற வலம் இரார் தம்மின்
பெரியார் தம்பால் இருந்தக்கால்
#25 கசக்கும் சுவையுடைய பொருள்களை உண்ணும் முறைமை இன்னிசை சிந்தியல் வெண்பா
கைப்பன எல்லாம் கடை தலை தித்திப்ப
மெச்சும் வகையால் ஒழிந்த இடை ஆக
துய்க்க முறை வகையால் ஊண்
#26 உண்ணும்கலம் இன்னிசை வெண்பா
முதியவரை பக்கத்து வையார் விதி முறையால்
உண்பவற்றுள் எல்லாம் சிறிய கடைப்பிடித்து
அன்பின் திரியாமை ஆசாரம் நீங்காமை
பண்பினால் நீக்கல் கலம்
#27 உண்டபின் செய்ய வேண்டியவை பஃறொடை வெண்பா
இழியாமை நன்கு உமிழ்ந்து எச்சில் அற வாய்
அடியோடு நன்கு துடைத்து வடிவு உடைத்தா
மு கால் குடித்து துடைத்து முகத்து உறுப்பு
ஒத்த வகையால் விரல் உறுத்தி வாய்பூசல்
மிக்கவர் கண்ட நெறி

நல்லாதனாரின் திரிகடுகம்

11. ஊரவர் துன்பப்படும் குற்றம் உடையவைவிளியாதான் கூத்தாட்டுக் காண்டலும் வீழக்

களியாதான் காவா துரையும் - தெளியாதான்

கூரையுள் பல்காலும் சேறலும் இம்மூன்றும்

ஊரெல்லாம் நோவ துடைத்து.12. நன்மை அளிப்பவைதாளாளன் என்பான் கடன்படா வாழ்பவன்

வேளாளன் என்பான் விருந்திருக்க உண்ணாதான்

கோளாளன் என்பான் மறவாதான் இம்மூவர்

கேளாக வாழ்தல் இனிது.13. பெறற்கு அரியார்சீலம் அறிவான் இளங்கிளை சாலக் 

குடியோம்பல் வல்லான் அரசன் - வடுவின்றி

மாண்ட குணத்தான் தவசியென்ற இம்மூவர்

யாண்டும் பெறற்கரி யார்.14. அறிவுடையார் அடையாதவைஇழுக்கல் இயல்பிற்று இளமை பழித்தவை

சொல்லுதல் வற்றாகும் பேதைமை - யாண்டும்

செறுவொடு நிற்கும் சிறுமைஇம் மூன்றும்

குறுகார் அறிவுடை யார்.15. நட்புக் கொள்ளத் தகாதவர்.பொய்வழங்கி வாழும் பொறியறையும் கைதிரிந்து

தாழ்விடத்து நேர்கருதும் தட்டையும் - ஊழினால்

ஒட்டி வினைநலம் பார்ப்பானும் இம்மூவர்

நட்கப் படாஅ தவர்.
 
நான்மணிக்கடிகை

கன்றாமை வேண்டும், கடிய; பிறர் செய்த
நன்றியை நன்றாக் கொளல் வேண்டும் - என்றும்
விடல்வேண்டும், தன்கண் வெகுளி; அடல்வேண்டும்,
ஆக்கம் சிதைக்கும் வினை.
11

பல்லினான் நோய் செய்யும் பாம்பு எல்லாம்; கொல் களிறு
கோட்டான் நோய் செய்யும், குறித்தாரை; ஊடி,
முகத்தான் நோய் செய்வர், மகளிர்; முனிவர்
தவத்தின் தருக்குவர், நோய்.
12

பறை நன்று, பண் அமையா யாழின் நிறை நின்ற
பெண் நன்று, பீடு இலா மாந்தரின்; பண் அழிந்து
ஆர்தலின் நன்று, பசித்தல்; பசைந்தாரின்
தீர்தலின் தீப் புகுதல் நன்று.
13

வளப் பாத்தியுள் வளரும், வண்மை; கிளைக் குழாம்
இன் சொற் குழியுள் இனிது எழூஉம்; வன் சொல்,
கரவு எழூஉம், கண் இல் குழியுள்; இரவு எழூஉம்,
இன்மைக் குழியுள் விரைந்து.
14

இன்னாமை வேண்டின், இரவு எழுக! இந் நிலத்து
மன்னுதல் வேண்டின், இசை நடுக! தன்னொடு
செல்வது வேண்டின், அறம் செய்க! வெல்வது
வேண்டின், வெகுளி விடல்!
15
 


     


           Post a Comment