Wednesday, 29 July 2015

ஆசாரக்கோவையில் அறிவியல்
                                                ஆசாரக்கோவையில் அறிவியல் 
க.கவின்பிரியா இ
ஆய்வியல் நிறைஞார்,
தமிழ்த்துறை,
அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி ) ,
சேலம் -7.


முன்னுரை
                                தமிழர்களின்  வாழ்வுநெறிகள் பற்றி மிகச்சிறந்த முறையில் கூறுவன
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களாகும் .பதினெண்கீழ்க்கணக்கு நூல்களாவன , நாலடியார்,
நாண்மணிக்கடிiகை, இனியவை நாற்பது, இன்னா நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை
ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, முப்பால், திரிகடுகம்,
ஆசாரக்கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், முதுமொழிக் காஞ்சி, ஏலாதி, கைந்நிலை அல்லது
இன்னிலை ஆகியவையாகும் . இப்பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் மொத்தம் ஏறக்குறைய 3250
பாடல்களைக் கொண்டுள்ளது. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் நீதி நூல்கள் 11, அகப்பொருள்
நூல்கள் 6, புறப்பொருள் நூல் 1 ஆகும். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் அறிவியல் செய்திகள் நிறையஉள்ளன.அவற்றுள் ஆசாரக்கோவையில் உள்ள அறிவியல் செய்திகளைப் பற்றிக்  காண்பதே
 இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.
ஆசாரக்கோவை
                                ஆசாரக்கோவை என்பதற்கு ஒழுக்கங்களின் தொகுதி என்று பொருள். அதாவது
ஆசாரங்களைத் தொகுத்த கோவை என்பதாகும். இந்நூலிலும்  ஆசாரம் என்ற சொல் ஒழுக்கம் என்ற
 பொருளிலே பயன்படுத்தப்பட்டுள்ளது. பொதுவான ஒழுக்கங்களைத் தவிர நாள்தோறும் வாழ்க்கையில்
கடைபிடிக்க வேண்டிய ஒழுக்கங்களையும் இந்நூல் மிகுதயாக எடுத்துக் காட்டுகின்றது. அகத்தூய்மை
அளிக்கும் அறநெறிகளைக் கூறுதலோடு புறத்தூய்மையாகிய வைகறை எழுதல், நன்னீராடல்,
உடுத்தல், உண்ணல், உறங்கல், போன்ற பல நிகழ்ச்சிகளில் ஒழுகும் நெறிமுறைகளை இந்நூல்
தெளிவாகக் கூறுகின்றது. இந்நூலின் ஆசிரியார்  கயத்தூர்ப் பெருவாயில் முள்ளியார் ஆவார்.
வண்கயத்தூர் என்பது இவரது ஊர்ப்பெயார். முள்ளியார் என்பது இவரது இயற்பெயார் ஆகும். இந்நூல்
 மொத்தம் 100 வெண்பாக்களைக் கொண்டுள்ளது.
                                நம்மைச் சுற்றி கண்ணுக்குத் தொpயாத நுண்கிருமிகள், நுண்துகள்ககள்
காணப்படுகின்றன. நுண்கிருமிகளிடமிருந்து நாம் நம்மைப் பாதுகாக்கவும், நோய் வராமல் தடுக்கவும், தூய்மையாக இருப்பது மிகவும் அவசியம் ஆகும். நாம் தூய்மையாக இருக்க வேண்டும் என்பது பற்றி நிறைய செய்திகள் இந்நூலில் உள்ளன.
ஆசாரக்கோவையில் அறிவியல்
                                நம் முன்னோர்கள் பற்கள் உறுதியாகவும், தூய்மையாகவும் இருக்க ஆலமரத்து  குச்சியிலும், கருவேலமரக் குச்சியிலும் பல்துலக்கியுள்ளனார் என்பதை,
ஆலும் வேலும் பல்லுக்குறுதி
நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி என்ற பழமொழி உணார்த்தும்.இந்நூலிலும்  அதிகாலையில் எழுந்து பல்குச்சியைக் கொண்டு பல்துலக்க வேண்டும் என்பதை,                                                     நாளந்தி கோல்தின்று கண்கழீஇத்......
(பா.எ.9)
                என்ற வரிகளில் ஆசிரியார் குறிப்பிட்டுள்ளார்.
                தலையில் பூசிய எண்ணெயை வழித்து, பிற உறுப்புகளில் பூசுதல் கூடாது என்ற செய்தியும்
இந்நூலில் உள்ளது. ஆம் அது உண்மையே ஏனெனில் தலையில்  நோய்க்கிருமிகள் இருந்தால், கை கால்களில் எண்ணெய் தேய்க்கும் போது நோய்க்கிருமிகள் உடலில்
பரவி, தோல் நோய்கள் உண்டாக வாய்ப்புள்ளது.
                இரவில் மரத்தின் அடியில், நிற்கக் கூடாது என்ற செய்தி இந்நூலில் உள்ளது. ஏனென்றால்
 இரவில் மரம் கார்பன் டை ஆக்சைடை வெளியிடும். அந்தக் கெட்டக் காற்றை சுவாசித்தால்
 உடலுக்கு தீமை விளையும்.
                வடக்கு திசையிலும், கோணத்திசையிலும் தலைவைத்துப் படுக்கக்கூடாது என்ற செய்தி இந்நூலில் கூறப்பட்டுள்ளது. வடக்குத் திசையில் காந்த விசை மிகுதி என்பதால் மூளை பாதிக்கக் கூடும். எனவே வடக்கு நோக்கி தலைவைத்துப் படுக்கக் கூடாது என்பார். இதனை இன்றைய அறிவியலாளரும் ஏற்பார்.  எவ்வளவு துன்பம் வந்தாலும் பிறருடைய அழுக்காடையை பயன்படுத்தக் கூடாது. தாம் உடுத்திய ஆடையின் காற்று மற்றவார் மீது போய்ப்படுமாறு செய்யக் கூடாது. பலார் நடுவில் நின்று ஆடையை உதறக் கூடாது என்ற செய்தியை,                                                    இடரெனினும் மாசுணி கீழ்தம்மேல் கொள்ளார்
                                                                படைவரினும் ஆடை வளியுரைப்பப் போகார்
பலாpடையாடை யுதிராரே யென்னும்
(பா.எ.36)
                என்ற வாpகளில் இந்நூலாசிரியார் குறிப்பிட்டுள்ளார். நம் உடலில் கழிவுகள் வியார்வையாக வெளியேறி நாம் உடுத்தும் ஆடைகளில் படிவதால், அழுக்கான ஆடையின் காற்று பிறார் மேல் படாமலும், பலார் நடுவில் நின்று ஆடையை உதறாமலும் இருக்க வேண்டும்.மின்னலின் ஒளியையும், ரிநட்சத்திரத்தையும், பகற்காலத்திற்கு உரிய கதிரவனின்
காலை ஒளியையும், மாலை ஒளியையும் உற்றுப்பார்க்கக் கூடாது என்ற செய்தியும் இந்நூலில் உள்ளது.                                                                மின்னொலியும் வீழ்மீனும்.......
                                                                தம்மொளி வேண்டுவோர் நோக்கார் பகல்கிழவோன்
                                                                முன்னொளியும் பின்னொளியும் அற்று
                                                                                                                                (பா.எ.51)
 .மின்னலின் ஒளியையும்,கதிரவனின் ஒளியையும் உற்றுப் பார்த்தால் கண்கள் பாதிக்கும்.

உணவு உண்ணும் முறை
                                நீராடிக் காலைக் கழுவி , கிழக்கு நோக்கி அமார்ந்து ஆடாமல், அசையாமல், நன்றாக இருந்து, எங்கும் நேறொன்றையும் நோக்காது, பேசாமல் உணவு உண்ண வேண்டும். உணவு உண்ணும் போது பேசினால் உணவுக் குடலில் காற்று நிரம்பிவிடும். படுத்துக் கொண்டும், நின்று கொண்டும், திறந்த வெளியிலும் உண்ணுதல் கூடாது. கட்டிலில் அமார்ந்தபடி உண்ணக் கூடாது. விரும்பி அதிகமாகவும் உண்ணக் கூடாது. அளவுக்கு மீறினால் அமிழ்தமும் நஞ்சுஎன்ற பழமொழிக்கு ஏற்ப அளவோடு உண்ண வேண்டும். உண்டபின் வாயில் புகுந்த நீர் உள்ளே போகாதவாறு நன்றாய்க் கொப்பளித்து எச்சில் அறும்படி¬¬ வாயை நன்றாகத் துடைத்தல் வேண்டும். தண்ணீரில் நின்று கொண்டும், நடந்து கொண்டும் வாய் அலம்புதல் கூடாது. வழியில் தேங்கியுள்ள நீரிலும் வாய் அலம்பக்கூடாது என்ற செய்திகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. நாம் உண்டபின் உணவுத் துணுக்குகள் வாயில் தங்கிவிடுவதால் அந்த உணவுத் துணுக்குகள் எச்சிலில் கலந்து நஞ்சாக மாறி வயிற்றினுள் செல்லும்போது, உடல்நலம் பாதிக்கக்கூடும் என்பதால்,வாயை நன்றாகக் கொப்பளித்து துடைத்தல் வேண்டும்.
நீராடும் முறை
                                குளத்தில் நீராடும் போது நீந்தக்கூடாது, அந்நீரில் எச்சிலை உமிழக்
கூடாது,ஆடையை நீரில் பிழியக் கூடாது என்பது போன்ற செய்திகள் இந்நூலில் உள்ளன. நீரில் எச்சிலை உமிழ்வதாலும்,ஆடையை நீரில் பிழிவதாலும் தனக்கு நோய் வருவது மட்டுமல்லாமல், மற்றவார்களுக்கும் நோய் வரக்கூடும்.

வீட்டைபேணும் முறை
                                விடியற்காலையில் எழுந்து வீடு விளங்கும் வண்ணம் குப்பைகளைப்
 போக்கி, பசுஞ்சாண நீரைத் தெளித்துச் சுத்தம் செய்து,பின் காpய கலங்களைக் கழுவி,
பின் அடுக்களையை சுத்தம் செய்து பின் அடுப்பினுள் தீ மூட்ட வேண்டும் என்ற
செய்தியை,
                                                காட்டுக் களைந்து கலம்கழீஇ இல்லத்தை 
                                                ஆப்பி நீர் எங்கும் தெளித்துச் சிறுகாலை.......
                                                                                                                                                (பா.எ.46)
                என்ற வாpகளில் இந்நூலாசிரியார் கூறியுள்ளார். இன்றும் கிராமப் புறங்களில், பெண்கள் பசுஞ்சாணம் தெளித்து வீட்டைச் சுத்தம் செய்து பின்,தன் பணிகளைச் செய்கின்றனார். பசுஞ்சாணம் கிருமிநாசினியாக பயன்படுவதால் நோய்க்கிருமிகள் இல்லாமல் நலமாக வாழ வேண்டும் என்பதற்ககாகப் பயன்படுத்துகின்றனார்.                நோயில்லாமல் வாழ விரும்பினால் பகற்பொழுதில் தூங்கக் கூடாது என்ற செய்தியை இந்நூலாசிரியார் பின்வரும் வாpகளில் குறிப்பிடுகின்றார்......பகல்வளரார்           நோயின்மை வேண்டுபவார்(பா.எ.57)
                நோயின்றி வாழ விரும்புவார் பகற்பொழுதில் நன்றாக உழைக்க வேண்டும். பகலில் தூங்கக் கூடாது.ஆசாரக்கோவையில் தூய்மையாக இருக்க வேண்டும் என்பது பற்றி அதிகமாக செய்திகள் உள்ளன.நாம் தூய்மையாக இருந்தாலே நோய்களிலிருந்து 70 சதவிகிதம் விடுபடலாம். நோய் வரும் முன்னமே நம்மைக் காத்துக் கொள்ளலாம்.                                கூழானாலும் குளித்துக் குடி கந்தையானாலும் கசக்கிக் கூடாது       என்ற நீதி நூலின் வாpகளுக்கு ஏற்ப நன்றாகக் குளித்து உடலுக்கு நன்மை தரும் உணவுப் பொருள்களை உண்டு தூய்மையான ஆடைகளை பயன்படுத்தினால், நம்மைச் சுற்றி உள்ள சுற்றுச் சூழலை தூய்மையாக வைத்துக் கொண்டால் நோயிலிருந்து நம்மைக் காத்துக் கொள்ள இயலும்.
முடிவுரை
                ஆசாரக்கோவையில் கொள்ள வேண்டியவை இவை, தள்ள வேண்டியவை இவை,இதைச் செய்ய வேண்டும், இதைச் செய்யக் கூடாது என்று இந்நூலாசிரியார் கூறியுள்ளாரே தவிர காரணங்களைக் கூறவில்லை. அக்காரணங்களை இன்று ஆராயும்போது பல  அறிவியல் செய்திகள் ,மருத்துவச் செய்திகள் தொpய வருகின்றன.அச்செய்திகள் நமக்கு  பயனுள்ள வகையில் அமைகின்றன.
துணை நின்ற நூல்கள்

சண்முகம் பிள்ளை .மு  (பதிப்பாசிரியார்) - பதினெண்கீழ்க்கணக்கு  (மூன்றாம் பகுதி)
இராசாராம் . துரை  (தெளிவுரை)            முல்லைநிலையம்
                                                                                                   43, புதுத் தெரு,மண்ணடி,
                                                                                                   சென்னை -600001.

                                                                                                 

Post a Comment