Sunday 31 January 2016

பள்ளு இலக்கியம்



பள்ளு இலக்கியம்
சி.மா. இரவிச்சந்திரன்
பேராசிரியர்
தமிழ்த்துறை
பாரதியார் பல்கலைக்கழகம், கோவை

தமிழில் தோன்றிய சிற்றிலக்கியங்களில் பள்ளு இலக்கியம் ஒரு வகையாகும். நெல்வகையை எண்ணினாலும் பள்ளுவகையை எண்ண முடியாது என்பது முதுமொழி. தமிழில் தோன்றிய பிள்ளைத்தமிழ், தூது, உலா, கோவை போன்ற இலக்கிய வகைகளின் தோற்றத்திற்கு உரிய மூல வேர்களை பழந்தமிழ் இலக்கிய இலக்கண நுhல்களில் கண்டறிய முடிகிறது.

குழவி மருங்கினும் கிழவ தாகும் என்ற தொல்காப்பிய நுhற்பா பிள்ளைத்தமிழுக்குரிய அடையாளமாகத் திகழ்கிறது. பெரியாழ்வார், குலசேகராழ்வார் பாடிய தாலப் பருவப் பாடல்களில் பிள்ளைத்தமிழின் மூலத்தைக் கண்டறிய வியலுகிறது. சங்க அகப்பாடல்களே கோவை இலக்கியத்தின் மூலமாகும்.
சங்க இலக்கியத்தில் இடம்பெறும் வேலன் வெறியாடல், கட்டுவிச்சி குறிகூறல் முதலானவை குறவஞ்சி இலக்கியத்தை அடையாளம் காட்டுகிறது. இவ்வாறு பள்ளு இலக்கியத்தின் தோற்றத்தைக் கண்டறிவதற்கான மூலங்கள் பழந்தமிழ் இலக்கியங்களில் விரிவாகப் பதிவு செய்யப்படவில்லை. பழந்தமிழ் இலக்கண இலக்கியங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கிடைக்கும் குறிப்புகளிலிருந்தே பள்ளு இலக்கியத் தோற்றத்தைக் கட்டமைக்க முடிகிறது.
பள்ளு இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
1. தொல்காப்பியர் அம்மை, அழகு, தொன்மை, தோல் முதலான எண் வகை வனப்புகளைக் குறிப்பிடுகிறார். அவ்வனப்புகளில் புலன் என்பது ஒருவகை வனப்பாகும். வழக்குச் சொல்லினானே தொகுக்கப்பட்டு ஆராய வேண்டாமற் பொருள் விளங்குவது புலன் என்பது இளம்பூரணர் கூற்று. பேராசிரியர் இதை சேரிமொழி என்று குறிப்பிடுகிறார். இந்தப் புலன் என்ற வனப்பு பள்ளு இலக்கியத்திற்கு மூலமாக இருக்கலாம் என்ற கருத்து அறிஞர்களிடையே உள்ளது.
2. சிற்றிலக்கிய வகைகளுக்கு இலக்கணம் கூறும் பாட்டியல் நுhல்கள் பள்ளு இலக்கிய வகைக்கு இலக்கணம் கூறவில்லை. பாட்டியல் நுhல்களில் பள்ளு என்ற சொல்லும் இடம்பெறவில்லை. பன்னிரு பாட்டியல் கூறும் வழக்குப்பாட்டு, நவநீதப்பாட்டியலில் இடம்பெற்றுள்ள மிகச் செய்யுள்கள், வழக்குப் பாட்டிற்கு சதுரகராதி கூறும் இலக்கணம் போன்ற இலக்கணக் கூறுகளிலிருந்தே பள்ளு இலக்கியத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சிக்கான அடையாளத்தைக் காண அறிஞர் குழு முயல்கிறது. நவநீதப்பாட்டியல், சதுரகராதி ஆகியவை குறிப்பிடும் வழக்குப் பாட்டிற்குரிய இலக்கணம் முக்கூடற்பள்ளு இலக்கியத்தோடு பொருந்தி வருகிறது. சதுரகராதி கூறும் இலக்கியம் நவநீதப் பாட்டியலின் மொழிபெயர்ப்பே ஆகும்.
3. சிலப்பதிகார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் தம் அரங்கேற்றக் காதை உரையில் குறிப்பிடும் விருத்திப்பாணி, ஏர்மங்கலம், முகவைப்பாட்டு முதலிய பகுதிகள் பிற்காலத்தில் எழுந்த பள்ளு இலக்கிய தோற்றுவாயாக இருக்கலாம்.
4. கச்சியப்ப முனிவர் பாடிய பேரூர்ப் புராணத்தில் இடம்பெற்றுள்ள பள்ளு படலம், வைணவ மரபிலுள்ள கோயிலொழுகு ஆகிய சமய வழக்காறுகள் ஆகியவை பள்ளு இலக்கியத் தோற்றத்திற்குத் துணை நின்றிருக்கலாம். எனவே, தொல்காப்பியம் குறிப்பிடும் சேரிமொழி இலக்கியம் பற்றிய செய்தியைக் கருவாகக் கொண்டும் சிலப்பதிகாரத்தில் நாம் காண்கின்ற விருந்திற் பாணி, ஏர்மங்கலம், முகவைப்பாட்டு முதலிய வடிவுப் பாடல்களையும் ஆடும்படுபள்ளி, அழகுடைய பள்ளி முதலிய வரிக்கூத்துகளையும் தழுவியும் கோயிலொழுகுதில் காணும் பள்ளுப்பாட்டு போன்றவற்றோடும், பன்னிரு பாட்டியல் கூறும் வழக்கிப் பாட்டின் பொருளமைதியோடும் இணைந்து கதைப்போக்குடன் எழுந்த ஒருவகை இலக்கிய அமைப்பே பள்ளுச் சிற்றிலக்கியம் ஆகும் என்பது புலனாம்.
முதல் பள்ளு இலக்கியம்
பள்ளு இலக்கியங்களுள் முதலில் எழுந்த நுhல் எது என்பது குறித்து அறிஞர்களிடையே கருத்துவேறுபாடுகள் நிலவுகின்றன. பள்ளு இலக்கியத்தின் முதல் நுhல் முக்கூடற்பள்ளு என்பது ஒருசாரார் கருத்து. திருவாரூர்பள்ளு என்பதே பள்ள நுhல்களுள் காலத்தால் முந்தியது என்பது பெரும்பான்மையோர் கருத்து. இந்நுhல் 16ஆம் நுhற்றாண்டில் கமலை ஞானப்பிரகாசரால் எழுதப்பட்டது. இந்நுhலை தியாகேசர் பள்ள என்றும் குறிப்பிடுவர். முக்கூடற்பள்ளு, திருவாரூர்ப்பள்ளு ஆகிய இரு நுhல்களைக் காட்டிலும் காலத்தால் முந்தியது சிதம்பரநாத ஞானப்பிரகாசர் என்பார். இயற்றிய ஞானப்பள்ளு என்பர் சிலர். இந்த நுhல் கிடைக்கவில்லை. திருவாரூர்ப் பள்ளு என்ற நுhலே ஞானப்பள்ளு என்ற கருத்தும் நிலவுகிறது.
பள்ளு இலக்கியம் பெயர்பெறும் முறை
பள்ளு இலக்கியமும் பிற சிற்றிலக்கியங்கள் போலவே சில வரையறைக்குட்பட்டு தத்தம் பெயர்களைப் பெற்றுள்ளன. பாட்டுடைத் தலைவனின் ஊர்ப்பெயரைக் கொண்டமையும், முக்கூடற்பள்ளு, குருகூர்ப்பள்ளு முதலியவை பாட்டுடைத் தலைவன் இறைவன் எழுந்தருளியுள்ள ஊர்ப்பெயரைத் தாங்கியவை. வடகரைப் பள்ளு, சேற்றுhர்ப்பள்ளு முதலியன பாட்டுடைத் தலைவனாகிய குறுநில மன்னர்களின் ஊர்ப்பெயர்களைத் தாங்கி நிற்பவை. மேலும் சிலவகைப் பள்ளு நுhல்கள் ஊர்ப்பெயரோடு பாட்டுடைத் தலைவன் பெயரையும் பெற்று நிற்கும். இதற்குச் சான்றாக திருமலை முருகன் பள்ளுவைக் குறிப்பிடலாம். மேலும் சிலவகை பள்ளு நுhல்கள் பாட்டுடைத் தலைவன் அல்லது பாட்டுடைத் தலைவியின் பெயரால் அமையும். செண்பக ராமன் பள்ளு, கண்ணுடையம்மை பள்ளு என்பன அதற்குச் சான்றுகளாம்.
பள்ளுப் பாடலின் பொருளமைதி
பள்ளு இலக்கியங்களில் நாம் காணுகின்ற பொருளமைதி மருதநில மக்களாகிய பள்ளர்களின் வாழ்க்கையை விரித்து உரைக்கும் முறையில் அமைந்துள்ளது. சிறப்புக்குரிய பண்ணையொன்றில் பள்ளனொருவன் தன் இருமனைவியருடனும் பரம்பரையாகத் தொழில் செய்து வருகின்றான். பள்ளனுக்கு இளைய பள்ளியின் மீதுள்ள காதல் மூத்த பள்ளியின் மீது இல்லை. இதனால் மூத்தப்பள்ளி பணைக்காரனிடம் பள்ளனின் பொறுப்பின்மையைச் சுட்டிக் காண்பிக்கிறாள். மேலும் பள்ளன் தன் கடமைகளைப் புறக்கணித்து விட்டு இளைய பள்ளியுடன் வீட்டிலேயே இருப்பதையும் கூறி முறையிடுகிறாள். இதனால் பள்ளன் தண்டிக்கப்படுகிறான். பின்பு திருந்தி முறையாக வாழ்கிறான் பள்ளன். இரு பள்ளியர்களுக்கு இடையேயிருந்த பிணக்கு நீங்கி இணக்கமாக வாழ்கின்றனர். இதுவே பள்ளு இலக்கியப் பொருண்மை ஆகும். சிற்சில பள்ளு நுhல்களில் இப்பொருளமைகு சற்று மாறுபட்டும் இருக்கும்.
பள்ளு நுhல்களில் பொருளமைதிசார் அடிக்கருத்துகளை பின்வருமாறு காணலாம்.
1. பள்ளியர் வரவு
2. பள்ளன் வரவு
3. குடித்தரம் கூறல்
4. நாட்டு வளம்
5. குயில் கூவுதல்
6. மழைவேண்டி தெய்வம் போற்றுதல்
7. மழைக்குறியோர்தல்
8. ஆற்றின் சிறப்பு
9. பண்ணைத்தலைவன் வரவு
10. மூத்தபள்ளி முறையீடு
11. இளையபள்ளி பள்ளன் இல்லை எனல்
12. பள்ளன் வெளிவருதல்
13. பட்டி அடைத்தல்
14. பள்ளன் பண்ணைச் செயல் கூறல்
15. மூத்தபள்ளி முறையீடு
16. பள்ளனைத் தொழுவில் மாட்டல்
17. இளைய பள்ளி புலம்பல்
18. மூத்தபள்ளி பள்ளனுக்கு சோறு கொண்டு வருதல்
19. மூத்தபள்ளி குட்டையை நீக்கும்படி பண்ணைத் தலைவனை வேண்டல்
20. பள்ளன் வருவிக்கப்படல்/பண்ணை வேலை
21. மாடு முட்டுதல்
22. பள்ளியர் புலம்பல்
23. மீண்டும் பள்ளன் எழுந்து வேலை செய்தல்
24. நெல் அறுத்தல்
25. பள்ளேசல்
மருதநில மக்கள்-மள்ளர்/பள்ளு இலக்கியம்
மருதநில மக்கள் மள்ளர், மழவர், உழவர், களமர், கடையர், கடைசியர், உழத்தியர் என்ற நிலம் சார் மக்கள் பள்ளு இலக்கியங்களில் இடம் பெறுகின்றனர். பெரும்பாலும் மள்ளர் என்ற சொல் வழக்கு மிகுதி; ""பள்ளர்"" என்ற சொல் வழக்கு சங்க இலக்கியத்தில் இல்லை. இந்த மள்ளர்கள் யார் என்று நிகண்டு கீழ்க்கண்டவாறு விளக்கம் அளிக்கின்றன.
அருந்திறல் வீரர்க்கும் பெருந்திறல் உழவர்க்கும்
வரும் தகைத்தாகும் மள்ளர் என்னும் பொல்
திவாகர நிகண்டு
செருமலை வீரரும் திண்ணி யோரும்
மருதநில மக்களும் மள்ளர் என்ப
பிங்கல நிகண்டு
நாமதீப நிகண்டு, சதுரகராதி போன்ற நுhல்களும் இப்பொருண்மைகள் மள்ளருக்குச் சுட்டப்படுகின்றன; சிந்தாமணி, இராமாயணத்திலும் மருதநிலத்தாரை மள்ளர் என்று சொல்லால் சுட்டியுள்ளனர். மள்ளர் என்ற பெயரில் அம்மள்ளனார், மதுரை அளக்கர் ஞாழார் மகனார் அம்மற்பினார், கருவன் மள்ளனார் போன்ற புலவர்களும் சுட்டப்பட்டுள்ளனர்.
பழந்தமிழ் இலக்கியங்கள் மள்ளர்களைப் பள்ளர் என்றும் சுட்டுவதில்லை; தீண்டத்தகாதவர்களாகவும் பேசுவதில்லை. ஆனால் முக்கூடற்பள்ளு இலக்கியம் முதன்முதலாக மள்ளர்களை பள்ளர் என்றும் தீண்டத்தகாதவர்களாகவும் சுட்டுகிறது.
""தெக்கண விட்டுணுவான முக்கூடலுற்றழகர்
திருவடி வைக்குமன்றே வரும அடியேன்
பக்கமே தூறப் போயும் தக்க சோழன் வெள்ளாமை
பள்ளா பள்ளா என்பார் மெய் கொள்ளாதவர்""
எனவே மள்ளர்களாக நானிலங்களிலும் உழவர்களாகவும், வீரர்களாகவும், புலவர்களாகவும், மன்னர்களாகவும் வாழ்ந்த மக்களை பள்ளர்களை பண்ணை படிமைகளில் ஒருவக்குவதற்கு உதவிய சிற்றிலக்கிய வகையாக டாக்டர் குருசாமி சித்தன், டாக்டர், ஞானசேகரன் போன்ற அறிஞர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
வையாபுரிப் பற்றில் பண்ணைக்காரன் பற்றியரிடம் வம்பு செய்வதையும், கள்ளுக் குடித்தவர் போல் பள்ளியர் மேல் புரண்டு விடுவதையும் சுட்டிக்காட்டி ""ஆண்டாள், அடிமை வேறுபாடின்றிக் கலந்துரையாடு சமநீதி நிலவும் பண்பட்ட சமுதாயத்தை பள்ளு இலக்கியம் படம் பிடித்துக் காட்டுகின்றன"" என்று ர.ந.வீ. செயராமன் குறிப்பிடுகிறார்.
பள்ளு இலக்கியத்தில் எளிய ஒடுக்கப்பட்ட மக்கள் இலக்கியப் பாத்திரங்களாக இடம் பெறுவதால், நாய்ப் பிறப்பிடம் நெறியில், பேச்சுவழக்கில் பாடல்கள் அமைவதால் இவ்வகை பள்ளு இலக்கியத்தை மக்கள் இலக்கியம் என்று போற்றுதும் தவறு என்பார்.
1) அ.மார்க்ஸ் பண்ணத்தமிழ்  இலக்கிய இலக்கணங்கள் ஆழமாகக் கற்ற புலவர்கள், கற்றோருக்காக படைக்கப்பட்ட இலக்கியமே பள்ளு என்பார் டாக்டர். மார்க்ஸ்.
மள்ளர்களை தாழ்த்தும் நோக்கிங் கொண்டே பள்ளு இலக்கியம் பாடப்பட்டுள்ளன என்ற கருத்தை டாக்டர். நாகராஜ் ஏற்றுக் கொள்வதில்லை. பள்ளு இலக்கியங்களில் பள்ளர் உயர்வாக பேசப்படுகின்றன. எனவே இது ஒரு நாடக இலக்கயி வகை என்பது டாக்டர். நாகராஜ் கருத்து.
பள்ளு இலக்கியம்-மழை ஆற்று வருணணை
வையை வெப்பம் பரிபாடலில் வருணிக்கப்பட்டுள்ளது (6, 7, 10, 11, 12, 16, 20, 22) மதுரைக் காஞ்சியிலும் இடம்பெற்றுள்ளது (335) அசிரில்கிழார் ஒரு ஆற்று வெள்ளப் பெருக்கை உலகம் தாங்காது என வருணித்துள்ளார் (பதிற்று.72) காவேரி வெள்ளப் பெருக்கை ஆவுர் மூலங்கிழார் (அகம்.341) நக்கீரனார் (அகம் 126) பரணர் (பதிற்று 50) பாடியுள்ளனர். இத்தகைய ஆற்று வருணனையில் பள்ளு இலக்கியத்தில் நானில வருணைக்கும் ஆற்று வெள்ளப் பெருக்கைப் பாடுவதற்கும் உதவியிருக்கலாம்.
ஏசல் மரபு
பள்ளு இலக்கியத்தில் பள்போசல் குறிப்பிடத்தக்க பகுதி. இது பற்றி டாக்டர். நாகசாமி தரும் குறிப்பை கீழ்வருமாறு காணலாம்.
""இன்னும் ஒரு மரபு; ஏசல் என்பது தாழ்மைப் படுத்துவதற்காக வந்தது என்று நினைக்கிறார்கள். ஏசல் என்பது தாழ்மைப்படுத்துவதற்காக வரலை . . . . . . . பரிபாடலில் இந்த மரபு இருக்கிறதைப் பார்க்கிறோம். முருகனுடைய மாணவியர் இருவர். வள்ளி, தெய்வானை இரண்டு பேரும் நான் பெரியவள், நீ பெரியவள் என்று சொல்லிச் சண்டை போட்டு ஒருத்தரை ஒருத்தர் ஏசுகின்ற மாதிரி ஒரு அருமையான பாடல் இருக்கிறது. அது நான் நாட்டியமாகவே சென்னையில் போட்டுக் காண்பித்தேன் இவ்வளவு அருமையாகச் சங்க இலக்கியத்தில் இருக்கிறதா என்றார்கள். . . . . . . . . . . இன்பச் சுமையை மையமாகக் கொண்டு இரு பெண்கள், மனைவியராக இருப்பவர்கள் ஒருவர் மீது ஒருவர் மோதுவதாகக் காண்பித்து அதன் வாயிலாக உழவர்களுடைய பெருமையை, அதற்குப் பயன்படுத்திய கருவிகளுடைய பெருமையை, பயிர்களுடைய பெருமையைக் கூறுவார்கள். எத்தனை விதமான நெல்லைச் சொல்லுகிறார்கள் . . . . .இறுதியிலே, ஒரு அழகான, உயர் நிலைக்கு எடுத்துச் செல்கின்ற ஒப்பற்ற காப்பியமாக இதைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்று தெரிகிறது ""
என்று டாக்டர். ஆர். நாகசாமி பன்ளேசன பரிபாடலின் வளர்ச்சி என்று கருதுவதோடு, பள்ளு இலக்கியம் பள்ளர்களின் உன்னத வாழ்வையும் படம்பிடிக்கும் இலக்கியம் என்று கூறுகிறார்.




9.அகப்பொருள் மரபும் கோவை இலக்கியமும்
சி.மா. இரவிச்சந்திரன்
பேராசிரியர், தமிழ்த்துறை
பாரதியார் பல்கலைக்கழகம்
கோவை.
மாணிக்கவாசகர் பாடிய திருககோவையாரில் சங்க இலக்கிய அகப்பொருள் மரபைக் காண்பது இச்சொற்பொழிவின் நோக்கம்
மணிவாசகர் இயற்றிய திருவாசகம், திருக்கோவை பன்னிருதிருமுறைகளில் எட்டாம் திருமுறையாகத் தொகுக்கப்பட்டுள்ளன. திருவாசகம் புடிந்திகா வடிவம் என்றும் திருக்கோவை அகத்திணை வடிவம் என்றும் அருண வடிவேலு முதலியார் கூறுவார். தமிழ் மொழியில் புதுவகை மரபாகவும் அமைந்த இப்பக்தி இலக்கியம் புதிய அகப்பொருள் இலக்கிய மரபாகத் திகழ்கிறது.
நுhல் தோன்றிய காலச்சூழல்
சமண புத்த மதங்களின் தாக்கத்தால் புறக்கணிக்கப்பட்ட காதல் உணர்வு, இல்லற நெறி, ஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், பண்ணமைந்த அகப்பொருள் பதிகங்களால் மறுமலர்ச்சி பெற்றன; நிலையாமையை வலியுறுத்தி மண்ணக வாழ்வை வெறுக்கச் செய்த சமண புத்த சமயங்களுக்கு எதிராக இரு நாயன்மார்களின் பதிகங்கள் புது வாழ்வை அறிமுகப்படுத்தின. ""மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம்"" என்று புது வாழ்வு நெறியைக் கற்றுத் தந்தனர். சங்க கால அகப்பாடல் மரபும், சமய மறுமலர்ச்சிக் கால சைவ சமய மரபும் இணைந்து எடுத்த புதிய மரபே திருக்கோவையார் பாட உதவின.
பாட்டியல் கூறும் கோவை இலக்கணம்
கோவை என்பது கூறுங்காலை
மேவிய களவு கற்பெனும் கிளவி
ஐந்திணை திரியா அகப்பொருள் தழீஇ
முந்திய கலித்துறை நானூறெயை
(பன்னிரு பாட்டியல் -721)
திருக்கோவையார் நுhல் அமைப்பு
சங்க இலக்கியங்களில் தனித்தனியே விளங்கிய அகப்பொருள் துறைகள் இந்நுhலின்கண் தொடர்ச்சியாக அமைக்கப் பெற்று, நாடகத் தன்மையோடு கூடிய வரலாறு போல் பாடப்பெற்றுள்ளது. இந்நுhல் தலைவன் காவியத் தலைவன் போல் உள்ளான். ஆனால் கதை இல்லை.
பாட்டுடைத் தலைவன், கிளவித் தலைவன் என்ற இரு தலைவர்கள் உண்டு; பாட்டுடைத் தலைவன் அம்பலவானர், அம்பலவாணர் பால் பேரன்பு கொண்டவள் கிளவித்தமான் - இத்தகைய அமைப்பு பட்டினப்பாலையில் உள்ளது. அகப்பொருள் செய்திகள் நிரல்படக் கூறுவதால் ""கோவை"" என்றும் அழைக்கப்படுகின்றது.
இந்நுhலில் களவியல் பகுதி 18 அதிகாரமும், கற்பியல் 7 அதிகாரமும் மொத்தம் 25 அதிகாரம் உள்ளது. திருக்குறள் 25 அதிகாரம் அமைந்துள்ளது. இந்நுhலின் முன்னோடி. திருக்குறள் நீதி கூறுவதற்கு ஐந்திணையைப் பயன்படுத்தியது போல பக்தியைக் கூறுவதற்கும் ஐந்திணை அமைப்பை திருக்கோவையார் பயன்படுத்தியுள்ளது.
நுhல் சிறப்பு
ஒவ்வொரு துறைகள் அறிஞர்களும் திருக்கோவையாரை தம் துறைசார் நுhல் என்று போற்றத்தக்க புகழ் வாய்ந்த நுhல் என்று பழம்பாடல் கூறுகிறது.
ஆரணங் காணென்பர் அந்தணர்
யோகிர் ஆகமத்தின்
காரணங் காணென்பர்; காமுகர்
காம நன் னூலதென்பர்
ஏரணங் காணென்பர் எண்ணர்;
எழுத்தென்பர் இன்புலவோர்
கீரணங் காயசிற் றம்பலக்
கோவையைச் செப்பிடினே!!

இதனையே முதல் கோவை நுhல் என்றும் கூறுவர்; பாண்புக் கோவை முதல் நுhல் என்ற
கருத்தும் உண்டு; திருக்கோவை நுhலின் சிறப்பும் முதன்மையும் கருதி இராசக் கோவை என்று அறிஞர்கள் போற்றுவார்கள்
துறை அமைப்பு  கொடு
காட்சி முதலாக ஊதியமெடுத்துரைத்து ஊடல் தீர்த்தல் வரை 400 துறைகள் பாடப்பட்டுள்ளன. தொல்காப்பியர், இறையனார் அகப்பொருள் துறைகள் இந்நுhலில் பாடப்பட்டுள்ளன; மேற்கண்ட துறைகள் மட்டுமல்லாது மாணிக்க வாசகரே படைத்துக் கொண்ட துறைகளும் உள்ளன (2.0)
கருத்தறிவித்தல்
ஒவ்வொரு பாடலுக்கும் இரண்டடிகளில் ஆன குறும்பாடல் ஒன்று ""கொளு என்ற பெயரில் உள்ளது, கொளுப்பாடல் கூற்று மாந்தரையும், பாடலின் நுட்பத்தையும் சுட்டுகிறது. கொளு ஆசிரியர் பற்றிய குறிப்பு இல்லை.
இந்நுhலுக்கு பேராசிரியர் உரை எழுதியுள்ளார்.
ஓவ்வொரு அதிகார முகப்பாலும் துறை தொகுப்புப் பாடலும் நுhலுள் அதிகாரங்கள் தொகுக்கப்பட்டு ""அதிகார வரலாறு"" பாடலும் உள்ளது.
திருக்கோவையாரில் அகப்பொருள் கூறுகள்
1) சங்க அகப் பாடல்கள் போலவே திருக்கோவையார் பாடல்களும் தனிநிபப் பாடல்களோ அகத்துறைகள் கோர்வையாக நிரல்படப் பாடப்பட்டுள்ளன.
2) சங்கப் பாடல்கள் போலவே திருக்கோவையார் பாடல்களும் நாடகத் தனிமொழிகளே கூற்றுப்பாடல்களாகவே அமைந்துள்ளன.
3) முதல், கரு, உரிப்பொருள் அடிப்படையில் பாடல்கள் பாடப்பட்டுள்ளன.
4) கட்டி ஒருவர் பெயர் சுட்டப்படவில்லை
5) திருக்கோவையார் அக நிபமாந்தர்கள் அனைவரும் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத நற்பண்பினர்.
6) செம்மொழி இலக்கியத்திற்கு ஏற்ற நிலையில் அகப்பொருள் நிகழ்வில் அவல முடிவுகள், அஞ்சத்தக்க காட்சிகள், சிக்கலான காதல் நிகழ்வுகள் பாடப்படவில்லை.
7) இயற்கை வருணனை அகத்துறையை விளக்குவதாக அமைந்துள்ளன.
8) உள்ளுரை, இரைச்சி  அமைந்துள்ளன. இவ்வாறு அகப்பொருள் கூறுகள் திருக்கோவையாரில் நிறைவாக அமைந்துள்ளன.
திருக்கோவையாரில் ஐந்ததி கள அமைப்பு
திருக்கோவையாரில் உள்ள ஐந்திகள அமைப்பைப் பின்வருமாறு காணலாம்.
குறிஞ்சி:
திருக்கோவையாரில் இயற்கைப் புணர்ச்சி தொடங்கி, ஒருவழித்தணத்தல் ஈறாக உள்ள 15 அதிகாரம் மொத்தம் 183 பாடல்கள் அமைந்துள்ளன.
பாலை:
உடன்போக்கு, வரை பொருட் பிரிவு என களவியலில் 89 பாடல்கள், ஓதல், காவல், பகை தனிவினை, வேந்தற் குற்றுழி, பொருள்வயிற்பிரிவு என கற்பியலில் 44 என மொத்தம் 133 பாடல்கள் பாபத் திணையில் பாடப்பட்டுள்ளன. உடன்போக்கு பாலை சார்ந்த பிரிவு என்பது மரபு.
மருதம்:
பரத்தையர் பிரிவு சார்ந்த 49 பாடல்கள் மருதத்திணை; மாணிக்கவாசகர் பாடிய திருக்கோவையார் தமவனிடம் பரத்தையர் பிரிவு இருக்கலாமா? செவ்வணி விடுதல் என்ற பழங்கால மரபு (பா.எண்:361) பற்றிய குறிப்பு.
நெய்தல்:
நெய்தல் திணை திணை மயக்கமாகவே பாடப்பட்டுள்ளது. ஒருவழித்தலைத்தலில் ""அகன்றணைவு கூறல்"" முதல் ""வருத்தமிகுதி கூறல்"" ஈறாக 13 துறைகள் நெய்தல் திணை.
முல்லை:
திருக்கோவையாரில் ஒரு பாடல் மட்டுமே (பா. எண்:136) மட்டும்
உள்ளுரை-இரைச்சி
திருக்கோவையாரில் இரண்டு வகை உள்ளுரை அமைந்துள்ளது. 1. மாணிக்கவாசகர் தாமே படைத்துக் கொண்ட உள்ளுரை 2. சுங்க இலக்கிய உள்ளுரையைப் பொன்னே போல் போற்றும் மரபு.
முதல் வகை
அ) பாடல் எண்: 168 - ""குறிஞ்சிக் கருப்பொருளாகிய மூங்கிலில் பற்றிய தீ விண்ணகத்தில் உள்ள கற்பகச் சோலையில் சென்று பற்றும் காட்சி""
ஆ) அன்னப் பறவை தன் பெடையைத் தவிக்கவிட்டுச் சலஞ்சலமிடம் தங்குதல் (பா.எண்: 377)
இரண்டாம் வகை
சங்க இலக்கியத்தில் கபிலர் படைத்த உள்ளுரைகளைத் தம் நுhலில் பொன்னே போல் போற்றியுள்ளார்: - (குறுந்தொகை: 85-திருக்கோவையார்: 369)
குறுந்தொகை-38
திருக்கோவையார்-276
இரைச்சி:
திருக்கோவையார் பாடல் எண் 86ல் இரைச்சி பயின்று வந்துள்ளது.
இவ்வாறு தமிழ் அகப்பொருள் மரபுகள் திருக்கோவையாரில் பல்வகையில் பயின்று வந்துள்ளது.

No comments: