Sunday 31 January 2016

.பிள்ளைத்தமிழ் ""குழவி மருங்கினும் கிளவதாகும் வழி பிள்ளைத்தமிழ்""



பேரா. ந. சேஷாத்திரி த.து.தலைவர்
அ.ஆ.க.க. நந்தனம்

.பிள்ளைத்தமிழ்
""குழவி மருங்கினும் கிளவதாகும்
வழி பிள்ளைத்தமிழ்""
பிள்ளைத்தமிழ் இஇலக்கியத்திற்கு இலக்கணம் கூறப்பட்டுள்ளது. அதனடிப்படையில் பெரியாழ்வார் பெரியாழ்வார் திருமொழியில் கண்ணனைக் குழந்தையாகப் பாவித்து தன்னை யசோதையாக மாற்றி ஆண்பிள்ளைக்குரிய 10 பருவங்களை உள்ளடக்கி பனுவல் செய்கிறார்.
செங்கீரை சப்பாணி தாலாட்டு அம்புலி சிறுதேர் உருட்டல் காப்பு நீராட்டம் என்று பல்லகை பருவச் செயல்பாட்டில் பனுவலை விரித்துக் காட்டுகிறார். இவர்தம் மகளாகிய ஆண்டாளோ கூடிடுகூடல சிற்றில்வந்து சிதையலே ஏர்தழுவல் பிருந்தாவனத்து நிலை குடமாடிக் கூத்தம் என்று விவரித்துக் கண்ணனின் அனுபவத்தைப் பெறுகிறார். இஇறைவனை முன்னிட்டு வந்த பிள்ளைத்தமிழ் பிற்காலத்தில் இஇறையடியாளர்களை முன்னிட்டு தோன்றலாயிற்று. அதனடிப்படையில் சேக்கிழார் பிள்ளைத்தமிழ் இராமனுஞ்சர் பிள்ளைத்தமிழ் வடக்கு திருவீதிப் பிள்ளைத்தமிழ் திருவாய்மொழி பிள்ளைத் தமிழ் தேசிகர். பிள்ளைத்தமிழ் என்று பல்வேறு இஇலக்கிய வடிவங்கள் வைணவ அடியாளர்களால் படைக்கப்பட்டுள்ளது.

திருப்பள்ளியெழுச்சி
இஇறைவனைத் துயில் எழுப்பி நம் மனத்துஇறை இஇறைவனைக் காண்பதற்காகச் சரியை கிரியை ஞானம் யோகம் என்ற நான்கு நிலைப்பாட்டில் உணர்ந்து உணர்த்தி உள்வாங்கிக் கொள்கிற பொருளை இஇலக்கிய வடிவமாகத் தருவது திருப்பள்ளியெழுச்சியாகும்.
நம்மாழ்வார் மனத்தை நோக்கி ஆணையிட்டு இஇறைவனைக் காணச் செய்கிறார். மனம் விழிப்புக் கொண்டதால்தான் கர்மேந்திரியங்கள் ஐந்தும் ஞானேந்திரியங்கள் ஐந்தும் கட்டுக்குள் வரும் என்பதால் நம்மாழ்வார்
""உயர்வர உயர்நலம் உடையவன் எவன்அவன்
மயர்வரு மதிநலம் அருளினன் எவன் அவன்
அயர்வரு அமரர்கள் அதிபதி எவன் அவன்
துயர்அரு சுடரடி தொழுது எழுதி மனனே""
என்று குறிப்பிட்டுக் காட்டுவதில் மன எழுச்சியும் மனவிழிப்பும் ஆன்மாவைத் தெளிவாக்கி உணர வைக்கும். எனவேதான் தொண்டரடிப்பொடி ஆழ்வார் அரங்கனைத் துயில் எழுப்ப திருப்பள்ளியெழுச்சி என்கிற பாசுரம் இசைக்கிறார்.
""கதிரவன் குணதிசை சிகரம் வந்தடைந்தன்
கரைஇருள் அகன்றது காலையும் பொழுதாய்
மதுவருந்தி ஒழுகின மாமலர் எல்லாம்
வானவர் அரசர்கள் வந்து வந்துஈண்டி
எதிர்திசை நிஇறைந்தனர் இவரொடும் புகுந்த
இருங்களிர் தீட்டமும் பிடியொடு முகசும்
அதிர்தளில் அலைகடல் போன்றுள்ளது எங்கும்
அரங்கத்தம்மா பள்ளியெழுந்தருளாயே""
இதில் வைணவ மெய்நெறியாகிய குருதொடர்பினை மையப் படுத்தி மெய்ஞானம் அஞ்ஞானம் என்கிற அறியாமையை விரட்டல் ஆதிமூலம் ஆகிய மனத்துள்ளல் அறிவின் அழுத்தமாகிய ஆனவக்களி இவை அடையாளப்படுத்தப்பட்டு விளைக்கி வைப்பதற்கான நெறிக்கோட்பாட்டை வலியுறுத்துவதால் எழுச்சியும் வீழ்ச்சியும் விழுமங்களாகக் கிடைக்கின்றன.
திருப்பள்ளியெழுச்சி என்றவுடன் பள்ளி கொண்ட எண்ணங்கள் துள்ளியெழுவது ஆனால் மேன்மை பொருந்திய எண்ணங்கள் எழுந்தால்தால் உள்ள முரணும் உடனும் அழிய வழிவகை செய்யும் இத்தகு நிலைப்பாட்டில் நாதமுனி திருப்பள்ளியெழுச்சி திருவாய்மொழிப்பிள்ளையின் திருப்பள்ளியெழுச்சி போன்றவை இன்இறைக்கும் தென் மாவட்டங்களில் வழக்கத்திலுள்ளது.
வைணவச் சிற்றிஇலக்கியங்கள் திருமாலையும் திருமால் அடியார்களையும் மையப்படுத்தி வெளிப்பட்டாலும் வைணவ மெய்நெறிக் கோட்பாடுகளைச் சமூக அமைப்பு சார்ந்து செயலாக்கம் பெறச் செய்கிறது யுக்தியில் கால சுழற்சி மாற்றத்திற்கு உட்பட்டு கருத்தாளுமையுடன் பெருத்த இஇலக்கிய வளம் கொண்டதாகச் சிற்றிஇலக்கியத்துஇறை வளர்ச்சி அடித்தளமாக உள்ளது.
உலைக்கு ஒரு இஇலக்கியம் என்றாலும் மனத்தை இஇலக்கிய எண்ணத்தோடு கட்டிவைப்பது வைணவ சிற்றிஇலக்கியத்தின் தனிச்சிறப்பாகும்.
எளிமையான மொழி வழங்களும் இசை இழைவும் கற்பனை பண் அமைவும் காலச் சூழலின் தாள மாற்றமும் உரையாடலாய் மெய்ப்பாட்டோடு வெளிப்படும் பாங்கு மேலும் சிறப்பிற்கு உரியது சைவத்தில் ஒதுவாமூர்த்தி அமைந்தது போல் வைணவத்தில் அஇறையர் அபிநயம் காட்டி பாசுரம் இசைப்பது வைணவச் சிற்றிஇலக்கியத்தின் உயிர்நாடி. பகல் பத்து விழாவில் இன்இறைக்கும் திருவரங்கத்தில் அஇறையிர் திருநெடுந்தாண்டகம் இசைத்து கருணை விழிகளின் பொழிவை மெய்ப்பாட்டோடு இசைப்பார். திருக்குருங்குடி திருக்குருகூர் திருவைகுண்டம் திருக்கோவலூர் போன்ற தென் மாவட்டமாகிய ஒன்பது திருத்தளங்களில் தென் மாவட்ட சமூக வழக்காற்இறை மெய்யியல் நெறியோடு வெளிப்படுத்தி வளம் சேர்ப்பது வைணவச் சிற்றிஇலக்கியம்.
25.வைணவச் சிற்றிஇலக்கியங்கள்
பேரா. ந. சேஷாத்திரி த.து.தலைவர்
அ.ஆ.க.க. நந்தனம்
சிற்றிஇலக்கியம்
தமிழரின் முன்னோடி இலக்கண நுhலாக விளங்கி பெருமை சேர்த்து வரும் தொல்காப்பியப் பொருளதிகாரம். செய்யுள் மரபு என்கிற இயலில் 40 42-ம் நுhற்பாலில்
""அங்கம் முதுசொல்"" என்று குறிப்பிடும் இடத்தில் இஇலக்கிய வகைகளை பட்டியலிடுகிறார். அதில் சிறுநிகழ்வுகளையும் மையப்படுத்தி வருகிற சொல்லால் சுட்டப்படும் இஇலக்கிய வெளிப்பாட்டை பிரபந்தம் என்று குறிப்பிட்டு வகை செய்கிறார். அவை 96 என்றும் நுhற்றுக்கும் மேற்பட்ட வகை என்றும் பின்னர் வந்த இஇலக்கிய வரலாற்று ஆசிரியர்கள் விரிவாக்கம் செய்கின்றன. சிற்றிஇலக்கியம் என்பது குறுகிய கால குறிப்பிட்ட நிகழ்வு தருகிற துய்க்க தூண்டுகிற உணர்வியலை நிலைக்கு ஏற்ப வகைகொண்டு வெளிப்படுத்துவதாகும்.
""தூது உலா கலம்பகம் பரணி
தாண்டகம் மடல் அந்தாதி பிள்ளைத்தமிழ்
குறவஞ்சி திருவெழுக்கூற்றிருக்கை
மாலை மணம் பரப்புமே""
என்ற 19-ம் நுhற்றாண்டில் வந்த தனிப்பாடல் ஒன்று பஇறைசாற்றும்.
தூது
சங்க இஇலக்கியங்களில் ஒத்த தலைவன் தலைவிடத்தில் ஏற்படும் ஊடலால் பிரிவு ஏற்பட அவ்வூடலைத் தீர்க்கும் வாயிலாக கருத்துப் பரிமாற்றத்துக்குத் தோழி பாங்கன் பாங்கி விரலியர் பாணர் செவிலி என்று தூதுக்குரிய நபர்கள் செயல்பாட்டிற்குக் கொண்டு வரப்பட்டு தூதுப்பொருள் உணர்த்தப்பட்டு சிக்கல் தீர வழி ஏற்படுத்தும். இது அகத்தூது புறத்தூது என்று வகைநெறி வகுக்கப்பட்டு சிறப்பான முஇறையில் கையாளப்பட்டமை தமிழருக்குரிய சிறப்பாகும். காதல்வயப்பட்ட தலைவி தோழியையோ பறவை விலங்கு மேகம் மொழி என்று ஊடகத்தை வழியாகக் கொண்டு தூது அனுப்புவர். இத்தகு தூது நிகழ்வு ஓர் இஇலக்கியமாக வெளிப்படுவது தூது இஇலக்கியமாகக் கொள்ளப்பட்டது. அவற்றில் அழகர் கிள்ளைவிடுதூது தமிழ்விடுதூது புகையிலை விடுதூது மேகம் விடுதூது என்று பல்வேறு தூது சிற்றிஇலக்கியங்களை நாம் பயின்று இன்புற்று இருக்கிறோம்.
அழகர் மலையில் உள்ள இஇறைவன் மீது கொண்ட காதலால் தலைவி தான் வளர்த்த கிளியைத் தூதாக அனுப்பி கைக்கூடுமானால் தன் மாலையோடு மனத்iயும் தர உறுதியளிக்கிறான். தொல்காப்பியம் பொருளதிகாரம் அகத்திணையியலில் 30 32 நுhற்பா.
""தூதே துவளறு சூல் நிரை சொல்லே"" என்றும்
""துகில் அணை மேனி சோர்வுறா எண்ணம்"" என்றும் தூதின் நிலைப்பாட்டை மனக்கிளர்ச்சியோடு கூட்டிப் பொருள் கொள்ள வைக்கிறது.
""எங்கனையோ அன்னமீர்காய்
என்னமுனிவது நீர் நங்கல்கோல
திருக்குறுங்குடி நம்பியை
நான் கண்டபின் சங்கினோடும் நேமினோடும்
தாமரைக் கண்ணினோடும் செங்கனிவாய்
ஒன்றினோடும் செல்கிறது என் நெஞ்சமே""
என்று நம்மாழ்வாரின் திருக்குருங்குடிப்பதிகம்.
""வெண்ணில மேலாப்பூ விரித்தாற்போல் மேங்காள்""
என்ற ஆண்டாளின் நாச்சியார் திருமொழி திருவேங்கடப் பதிகம்.
இப்படி தூது இஇலக்கியங்கள் காலத்திற்கேற்ப அகம் புறம் சார்ந்து வெளிப்பட்டுள்ளன. தூது செல்பவரின் சிறப்பு. தூதினால் நிகழும் நிகழ்வின் விளைவினைப் புறத்தூது செயல்பாட்டில் காணமுடியும். பாண்டவர்களுக்குத் தூதாகக் கண்ணபிரான் நடந்தது அதியமானின் பெருமையை தொண்டைமானுக்கு ஔவை புறநானூற்றில் 97வது பாடல் குறிப்பிடுவதில் புறத்தூது சிறப்பை உணர முடியும்.
அந்தாதி
ஒரு செய்தியை மையமாகக் கொண்டு ஒரு பாடலின் ஈற்றுச்சொல் அடுத்தப் பாடலின் துவக்கமாக வைத்துப் பயின்று வருகிற இஇலக்கியம் அந்தாதி ஆகும். முடிவாகவும் தொடக்கமாகவும் ஒரு சொல் அமைவதற்கு சிறப்பு பொருள் கையாளப்படுகிறத் தன்மையே இவை கட்டளைக் கலித்துஇறை பாவினாலோ வெண்பாவினாலோ அந்தாதி பாடப்படும். இவை ஆன்மீகம் சமூகம் அரசியல் சார்ந்து பெருமைக்குரிய இஇலக்கிய வகையாக விளங்கியுள்ளது. 12ம் நுhற்றாண்டில் கம்பன் எழுதிய சரஸ்வதி அந்தாதி 30 பாடல்களைக் கொண்டது. கலைமகளின் பெருமை உருவம் அவளின் அருள் இவற்றினை மையப்படுத்தி வந்ததாக வெளிப்படுகிறது. ஆனால் சிற்றிஇலக்கிய வகையில் வந்த எல்லா அந்தாதிகளும் சமூகம் சார்ந்தோ ஆன்மீகம் சார்ந்தோ வெளிப்பட்டதைவிட மொழியின் சிறப்பு சார்ந்து வெளிப்பட்டதை விட மொழியின் சிறப்பு சார்ந்து வெளிப்பட்டமை அதிகம். வைணவ சிற்றிஇலக்கியங்களில் அந்தாதி 60 சதவீத பங்களிப்பை பெற்றுள்ளது. இவை முதல் ஆழ்வார் மூவர் பாடிய மூன்று திருவந்தாதிகளும் பக்திசாரன் என்ற திருமழிசை ஆழ்வார் பாடி நான்முகன் திருவந்தாதியும் மணவாள மாமுனிகள் அருளிச் செய்த திருவாய்மொழி நுhற்றந்தாதியும் திருவரங்கத்து அமுதனார் வழங்கிய ராமானுச நுhற்றந்தாதியும் நாலாயிர திவ்யபிரபந்தத் திரட்டில் உள்ள அந்தாதி நுhல்கள் ஆகும். இவை திருமாலின் பெருமைகளைச் சொல்லுவதோடு சமூகத்தில் மனிதமனம் தழுவிய சலனத்தையும் சங்கதியிட்டு வெளிப்படுத்தியுள்ளது. இவற்இறை
""கைதைசேர் பூம்பொழில்சூழ்
கச்சிறகர் வந்துதித்த பொய்கைப் பிரான்
கவிஞர் போரேறு
வையத்த வியலர்கள் வாழ அருந்தமிழ்
நுhற்றந்தாதி""
என்ற பொய்கை ஆழ்வாரின் வாக்குமூலம்.
""என் பிறவி தீர இறங்கினேன் இன்னமுத""
என்ற பூதத்தாழ்வாரின் வாக்குமூலம்.
""சீராரும் மாடத் திருக்கோவலூர் அதனுள்
காரார் கனிமுகிலை காணப்புக்கு""
என்ற பேயாழ்வாரின் வாக்குமூலமும் அந்தாதியின் மையநோக்கை வலியுறுத்துகிறப் பாங்கினை உணரலாம்.
பிள்ளைப் பெருமான் அய்யங்கார் அஷ்டப்பிரபந்தம் என்கிற நுhற்திரட்டினை வழங்கியுள்ளார். அதில் திருவரங்கக்கலம்பகம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
தாண்டகம்
பன்னிருபாட்டியல் என்கிற இலக்கண நுhல் தாண்டகம் என்கிற இஇலக்கியத்திற்கு பின்வருமாறு வரையஇறை செய்கிறது.
24 எழுத்துக்களையும் அசை மூன்றும் துள்ளலோசை உடையதாகவும் அசைக்குறியீட்டோடு எழுத்து எண்ணிக்கை கணக்கில் கொள்ளப்பட்டும் மனநிலை தடத்தை வலியுறுத்துவது திருமங்கை ஆழ்வாரின் திருக்குறு தாண்டகம். திருநெடுந்தாண்டகம் வைணவ சிற்றிஇலக்கியத்தின் சிறப்புக்குரியதாகும். திருக்குறுந்தாண்டகத்தில் 20 பாடல்களையும் திருநெடுந்தாண்டகத்தில் 30 பாடல்களையும் உள்ளடக்கிப் படைத்துள்ளார். அனுமனின் பெருமை திருமாலைப் பகைத்தவர்களின் பெருமை மானிடர் ஆன்மநிலை மஇறையின் உட்பொருள் இவை யாவும் உலகியல் பயன்பாட்டில் உள்ள செயல்பாடுகளை எடுத்துக்காட்டடாக கொண்டு விளக்கப்படுகிற தன்மையில் தாண்டகம் பெருமைக்குரியதாக அமைகிறது. இவரின் தொடக்கமே
""நிதியினைப் பவளத்தூணை
நெறிமையாள் நினைய வல்லார்.""
என்ற முதல் பாடலின் வரியும்
""இருபன் உண்ட நீரும்
போதரும் கொள்க""
என்ற 5வது பாடலின் வரியும்
""உள்ளமோ ஒன்றில் நில்லாது
ஓசை நெறியன்று உன்னும்""
என்ற 10வது பாடலின் வரியும்
""பேசினார் பிறவி நீத்தார்
பேருளான் பெருமைப்பேசி
ஏசினார் உய்ந்து போனார்""
என்ற 15வது பாடலின் வரியும் இவர்தம் தாண்டக அனுபவத்தைப் பண் அமைவுக்கு ஏற்ப வெளிப்படுவதிலிருந்து உணரலாம்.
மடல்
தலைவன் கொண்ட காதலை வெளிப்படுத்தி மணம் புரிந்துகொள்ள முடியாத நிலையில் தலைவியின் மீது கொண்டுள்ள அன்பை ஊரார் அறியும் வண்ணம் குதிரையில் தீட்டி பனையால் ஆன குதிரையின் மீது ஊர்ந்து வெளிப்படுவது மடல் என்று குறிப்பிடப்பட்டது. எத்தகு நிலையிலும் ஆண்மக்கள் மடல் ஏறுகிறேன் என்று அச்சுறுத்தலாமே அன்றி மடல் ஏறுதல் முஇறை அன்று. அத்தகு அடிப்படையில் பரகாலநாயகி ஆகிய திருமங்கை மன்னன் சிறிய திருமடல் பெரிய திருமடல் என்று இரண்டு இஇலக்கியங்களைப் படைத்துப் பெருமை சேர்க்கிறார்.
""ஊரார் துடியேன் உலகறிய ஒண்ணுதளிர்
சீரார் முளைத்தடங்கல் சேரளவும்
பார் எல்லாம் அன்று ஓங்கி
நின்று அளந்தான் நின்ற திருநரையூர்
மன்னோர் ஊர்வன் மடல்""
என்ற பாடலினால் மடல் இஇலக்கிய வளமையை உணர்ந்துகொள்ள முடியும்.
திருமங்கை மன்னனின் மடல் இஇலக்கியங்கள் கண்ணிகள் என்கிற பா வகையால் அமைந்தது ஆகும். இதில் திருமாலின் திருத்தலம் திருமாலின் திருவிளையாடல் திருமாலின் அவதாரம் மையப்படுத்தப்பட்டு இஇலக்கியத் திறன் சார்ந்ததாக வலம் வருகிறது. இவரின் தனிச்சிறப்பாகச் சிலாரூபம் கொண்ட அச்சாவதார பெருமையில் ஈடுபடும் இன்பத்தை வெளிப்படுத்துவதாக இவர்தம் படைப்பு அமைகிறது. எனவே இவை திருமங்கை மன்னனின் நாற்கவித்திறத்தை வெளிப்படுத்துவது சிறப்புக்குரியது. இவரே சித்திரக்கவி பாடுவதில் ஆல்லவர் என்கிற திறனைத் திருவழக்கூற்றிருக்கை என்கிற இவர்தம் படைப்பு தேர்வடிவ வெளிப்பாட்டினை உணர்த்துகிறது.
""சீபார் திருவேங்கடமே திருக்கோவலுடரே
மதில்கச்சி ஊரகமே பேரகமே
ஆர்ஆனும் ஆழ்ந்த அரங்கம்""
இவை நில வடிவியலையும் கோவில் கட்டட அமைப்பையும் மனநிலைப்பாட்டையும் ஒருங்கிணைத்துத் தரவல்லதாக அமைகிறது.
கலம்பகம்
அகம் என்றால் மனம் கலம் என்றால் தானியங்களைப் பகுத்து எடுக்கிற இடம என்று கலம்பகத்தை வரையஇறை செய்வார்கள். 12 அலகு கொண்ட தானிய அளவுகோலை கலம்பகம் என்று குறிப்பிடுவார்கள். அப்படி 12 செய்யுள் உறுப்புகளை உள்ளடக்கி பாடப்படுகிற பா வகைக கலம்பகம் ஆகும். இத்தகு கலம்பகம் பாடப்படுகிற தலைவன் தலைமைப் பொருள் இவையெல்லாம் ஈமக்கடன் செய்யும் மேடையமைத்து அதன்மேல் அமர புலவன்பாடஉயிர்வதை உடல் சிதைவு வடிவச் சிதைவு என்ற நிலைப்பாடு தோன்ற துயரநிலைப்பாட்டில் மொழிகளுக்குக் கிடைக்கும் ஓர் அற்புத இஇலக்கிய வகை கலம்பகமாக கிடைக்கிறது.
கையறு தூது புகழ் கீர்த்தி என்ற 12 உறுப்புகளால் 100 பாடல்களால் பாடப்படும் இதில் முதன்முதலாக வந்தது நந்திக்கலம்பகம். நந்திவர்ம பல்லவனைப் பகைவர்கள் போரில் வெல்ல முடியாமல் புலவனை வைத்துத் தந்திரமாக பா வினால் வென்றார்கள் என்று குறிப்பிடுவர். ஆனால் பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் திருவரங்கக் கலம்பகத்தில் தன் ஆன்மாவை பனையம் வைத்துத் திருவரங்கனைப் பாடுகிறார்.
""காவிரி கொள்ளிட மாலை சூழ்
திருவரங்கத் தருலனை கொல்லும் மாயோன்
நெற்றிதரள்சேர் திரு ஆழியான்
திருக்கலமபாதம் துணை நெஞ்சே""
என்ற பாடலால் நெஞ்சத்தை உய்விக்க வல்லவன் அரங்கன் என்று பிள்ளைபெருமாள் ஐயங்கார் குறிப்பிடுகின்றார். தன் மனக்கிடப்பாட்டைத் திருவரங்களுக்குச் சொல்ல முயலுகிற போது
""அலைசீர் திருமுகமும் ஆழிகையொடு
சங்கும்
பஞ்சியசென்னியமும் அரவு அடி நிழலே""
என்று தவளையாகத் தன்னையும் உலகியல் செயல்பாடுகளை அரவின் நிழலாக்கி அரங்கனைப் பற்றுகின்றனர்.
""வினையை அடைந்தது மாயை உலகு
விழிகள் அடைந்தன திருவெண்காங்களிர்
திருக்கரம் அடைந்தது திருவைகுந்தம்
திருமேனி அடைந்தது தன்மைச் சோதி
யானும் கலியும் எவ்விடம் புகுவோம்
திருவரங்கத்தானே""
என்று விளம்புவது கையறு நிலைப்பாட்டினை வளிக்கவல்லதாக உள்ளது இப்படி கர்மம் யோகம் ஞானம் பக்தி வைராக்கியம் போன்ற செயல்பாடுகளை உறுப்புகளாக வைத்துத் திருவேங்கட கலம்பகத்தில் எடுத்துரைக்கிறார். அனந்தாழ்வானின் மலர் செடி வைத்துப் பராமரிக்கிற தொண்டினையும் திருமலை நம்பி நாமசங்கீர்த்தனம் என்ற பொய்மொழித் தொண்டினையும் ஆகாச ராசனின் தொண்டைமான் சக்ரவர்த்தியின் பொருள் செலவழிப்புத் தொண்டினையும் ராமானுசர் என்கிற வைணவ ஆச்சாரியாரின் சமய செயல்பாட்டு விளக்கத் தொண்டினையும் திருவேங்கட கலம்பகத்தில் எடுத்துரைக்கின்றார்.
மாலை
ஆண்கள் அணிவது தார் ஆகும். பெண்கள் அணிவது மாலை என்றும் கண்ணி என்றும் வழங்கப்படும். இருந்தாலும் புருசோத்தமாக விளங்குகின்ற திருமாலை பிராட்டியுடன் சேர்த்துப் புகழ்ந்து அணி செய்வது மாலை ஆகும். இது எண்ண மாலை அந்திமாலை கண்ணினுள் நின்று ஆடும் நீலமாலை நித்திலம்சூல் நித்தியசூரிமாலை என வைணவத்தின் மாலை பலவிதமாக மலர்கிறது. அடியார்க்கு அடியாராக இருந்த விப்ர நாராயணர் தொண்டரடி பொடியாக ஆழ்ந்து வெளிப்படத்தியது. திருமாலை ராமனின் பக்தியிலும் கிருஷ்ணனின் பக்தியிலும் ஆழ்ந்து அடியார்க்கு அடியாராக அரங்கன் கோயில் முற்றத்தில் ஆழ்ந்த குலசேகர ஆழ்வார் அருளிய முகுந்தமாலை என்று இஇலக்கியம் வெளிப்பட்டாலும் வேதாந்த தேசிகர் என்கிற பெரியவர். தேவராச பெருமானை நோக்கி பாடிய அத்திகிரி அருளாளாப் பெருமாள் மாலை என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பிற்காலத்தில் வந்த சில அடியார்கள் திருவேங்கட மாலை திருமாலிடும் சோலைமாலை என்று பல்வேறு திருத்தலங்களை அடையாளப்படுத்துகின்ற திருத்தலங்களை மாலை இஇலக்கியங்களாகத் தொகுத்துள்ளனர்.

26. மடல் இலக்கியத்தில் படிநிலைகள்
முனைவர் ஐ.ஜான்சிராணி,துஇறைத்தலைவர்,
தமிழ்த்துஇறைஅரசர் கல்லூரி,
திருவையாறு-613 204.தஞ்சாவூர் மாவட்டம்

தமிழ் இலக்கிய வரலாற்றின் திருப்புமுனைகளாகப் பல இலக்கிய வகைகளைக் காணமுடிகிறது. காலத் தேவைக்கேற்ப இலக்கியங்கள் பொpய அளவிலும் பின்னர்ச் சிறிய அளவிலும் உருவாயின. ஒரு பெருந்திரளின் உறுப்பு எனச் சொல்லும் அளவிற்கு ஒன்றிலிருந்து ன்னொன்று பிரிந்து தனி இலக்கியமென விளங்கிய வரலாற்இறைத் தமிழில் நெடுகவும் காணமுடிகிறது. தற்போது சிற்றிஇலக்கியங்கள் எனச் சொல்லப் பெறுபவை தொடாpஇலக்கியப் பகுதியினின்று பிரிந்து வந்தவையென அறிஞர் அஇறைகுவர். இலக்கிய வரலாறும் தனைத் தெளிவுறுத்தும்.

இலக்கிய வகைமை குறித்தாய்ந்த பலரும் ம்முடிபுக்கு வந்துள்ளனர். அம்மானை, உலா, கோவை, தூது போன்றவை கலம்பகம் என்னும் இலக்கியத்தின் உள்ளுறுப்புக்களாய் ருந்தன. பின்னர் அவை தனித்தனியே பிரிந்தன.

படிப்படியாக பிரிந்த இலக்கியக் கூறுகள் அல்லது உத்தி, பின்னர்த் தனித்த இலக்கியப் பகுதியாக வளர்ந்தமைக்குச் சான்றாக மடல் இலக்கியத்தையும் கூறலாம். அகத்துஇறைகளுள் ஒன்றாயிருந்த து பிற்காலத்துத் தனித்து நின்றது. தமிழில் மடல் இலக்கிய ஆய்வு எனத் தனித்துத் தொடங்கும் அளவிற்கு வ்விஇலக்கியம் பல்கியுள்ளது.

மடல் - பொருள்
மடல் என்பது பலபொருள் ஒருசொல். ஃது பெரும் பகுதியும் பெயர்ச்சொல்லாக நிற்கும். ச்சொல் பனை ஓலையைக் குறிக்க எழுந்தது. காலப்போக்கில் வாழை, பூ போன்றவற்றின் லை, தழ் ஆகியவற்இறை குறித்தள்ளதாகத் தொpகிறது. புறவாழ்வில் பயன்படும்; ச்சொல் அகத்துஇறைக்குள்ளும் டம்பெறலாயிற்று. ஒருவருக்கொருவர் செய்தியைப் பாpமாறிக் கொள்ளப் பயன்படுத்தப்பட்ட கடிதம் என்பதற்கும் து பொருளாக அமைந்தது. தனித்தமிழ் யக்கச் சிந்தனைகள் வலுப்பெற்ற காலத்தில் கடிதம் எனப் பேசி, எழுதிப் பழகியோர் மடல் என்னும் சொல்லைப் பொpதும் பயன்படுத்தினர். தற்காலத்தில் பள்ளி பாடநூல்களிலும் கடிதப் பயிற்சிப் பகுதியில் ச்சொல்லைப் பயன்படுத்தி வருகின்றனர். மொழி வரலாற்றில் காலச் சூழலுக்கேற்பச் சொற்கள் பொருள் மாறிவரும் என்பது மொழியியலார் கொள்கையாகும்.

மடல் என்பது மடலேறுதல் என்னும் பொருளைச் சுட்டித் தொழிற்பெயராய் அமைந்தது. பொதுவாகத் தொழிற்பெயர் அல் விகுதியைப் பெற்று நிற்பன. போர், டி போல்வன அல்லீறின்றி நிற்கின்றன. அஃதே போல் ச்சொல்லும் தனித்து அல் விகுதி பெறாது மடலேறுதலைக் குறித்தது.

ந்த வகையில் மடல் என்பது கடிதம் எனும் பொருளினின்று விலகி மடலேறுதல் என்பதைச் சுட்டிற்று.
தொல்காப்பியர் எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என முதற்கண் கூறிப் பின்னர்,
பொருண்மை தொpதலும் சொன்மை தொpதலும்
சொல்லி னாகும் என்மனார் புலவர்
எனத் தொடர்கிறார். சொற்கள் சூழ்நிலையை நோக்கிப் பல்வகைப்பட்ட பொருள் நுட்பங்களைப் புலப்படுத்துவன. பொருண்மை சுட்டல் வெளிப்படையாகவே அல்லது சூழ்நிலையைப் பொருத்துக் குறிப்பாகவே அமைகிறது. வ்லக்கண அமைதிகளுக்கேற்ப மடல் என்னும் சொல் பல்வேறு பொருள் மாற்றம் கொண்டுள்ளது. ப்பொருள் மாற்றம் லக்கண இலக்கியங்களில் பதிவாகியுள்ளன.

நிகண்டுகள்
சமுதாயத்தில் முன்னரே பதிவாகியுள்ள சொற்களுக்கு அவ்வக்காலத்தில் வழங்கப்பட்ட பொருளை விளக்குவதில் நிகண்டுகள் சிறப்பிடம் வகிக்கின்றன. வை மடல் பற்றியும் விளக்க முற்பட்டுள்ளன. சூடாமணி நிகண்டு மடலின் பொருள் வளர்ச்சியை,
நடலை வஞ்சனை பொய்என்ப,
நடுங்கிய துடக்கம் முப்பேர்;
மடல் பனையேடு போல்வ,
மலாpதழ், ஓர் நூற்கும்பேர்;
படர்நடை நினைப்பு, நோஆம்
பகர்ந்திடில் வீரர்க்கும் பேர்;
குடம்நகர், பசு, ஓர்கூத்து
கும்பமே, கரும்பின் கட்டி
என வாpசைப்படுத்தும். மடல், பனை முதலியவற்றின் ஏடு என ங்கு கூறப்பட்டுள்ளமை எண்ணத்தக்கது.


அகராதிகள் தரும் விளக்கம்
தமிழ்மொழி அகராதி பலவற்றுள் மடல் என்ற சொல் தலைச்சொல் (ர்நயன றழசன) பதிவாகவே உள்ளது. அகராதிகள் ச்சொல்லுக்கு பல பொருள் கூறுகின்றன. வரலாற்றுப் போக்கில் மடல் என்னும் சொல்லுக்குரிய பொருண்மைகள் அறியப்பட்டிருக்கின்றன. வீரமாமுனிவர் மடல் என்ற சொல்லிற்கு,
ஈந்தில் ஏற்ற மடல், ஓர் பிரபந்தம், கமுகு, தாழை,
தெங்கு, பனை, வாழையவற்றிற்குரியவேடு,
பூவிதழ், வியங்கோள் முற்று
எனப் பொருளெழுதுகின்றார்.
வரலாற்று அடிப்படையில் சொற்களைத் தொகுத்துக் கூறும் நூல்களும் ச்சொற்குப் பல பொருள்களைச் சுட்டியுள்ளன.
பனையின் ஓலை, தாழம்பூவின் மேலுள்ள ஓலை, நிலப்பூவின் தழ், வாழையிலையின் பரப்பு, பனை மடலாற் செய்த குதிரை வடிவம், பனங்கருக்கு, தழ், பூ, தோகை, ஏடு, மட்டை, கிளை, பாளை, ஒரு பிரபந்தம், தென்னை, பனை, வாழை முதலியவற்றின் ஏடு, கள்ளுண்ணும் வாயகன்ற பாத்திரம், நூல்கள் யற்றும் முஇறைமை, அறுபத்தொன்றுள் ஒன்று
என்பது மிகப் பழங்காலத்திலிருந்தே ச்சொல் பழகி வந்துள்ளமையை உணர்த்துகின்றது.
பவானந்தம் பிள்ளைதாம் தொகுத்த சொற்பதிவுகளில்,
ஈந்து முதலியவற்றின் ஏடு, திருநீற்று மடல், ஓர் பிரபந்தம், கண்ணிமை, சோளக்கதிர் முதலியவற்றின் பௌத்தி, பூவிதழ், ஏற்றமடல், சிறுவாய்க்கால், காதின் மடல்
எனப் பலபொருள்களை மடல் என்ற சொல்லுக்குக் குறிப்பிடுகின்றார். வற்றுள் பிரபந்தம் என்பது மடல் இலக்கியம் என்பதைச் சுட்டுகிறது.
கழகப் புலவர் குழுவினர்,
ஈந்து, கமுகு, தாழை, தெங்கு, பனை முதலியவற்றின் மடல், ஒரு பிரபந்தம், ஓலை மடல், காதின் மடல், கைச்சீப்பு, சிறுவாய்க்கால், பனமட்டைக் கங்கு, பூவிதழ், நீற்று;கலம், தோண்மேலிடம், கண்ணிமை, கை, பனை மடலைப் பாpயாக்கி ஊர்து
என மடலுக்குப் பொருள் விளக்கம் தருகின்றனர்.

தமிழ்ச் சொற்களஞ்சியம் ஒன்று மடலை லை வகைகளுள் சேர்த்துப் பின்வருமாறு கூறுகிறது.
லை; ஓலை; மடல்; முட்டை; கறிவேப்பிலை; திரளியிலை; தேக்கிலை; தேயிலை; பச்சிலை; புகையிலை; காரப்புகையிலை; தாமரையிலை; மருதோன்றியிலை; மாவிலை; வாழையிலை; வெற்றிலை; கொத்தமல்லியிலை; புதினாயிலை; முருங்கையிலை; தென்னையோலை; பனையோலை; தென்னைமடல்; தென்னைமட்டை; பனை மடல்; பனைமட்டை
போன்ற சொற்பதிவுகள் மடலுக்கு மட்டை என்னுமொடு பொருளும் சேர்க்கப்பட்டுள்ளமையை உணர்த்துகிறது.
மடல், தென்னை, பனை முதலியவற்றோடும் ணைத்துக் கூறப்பட்டுள்ளமை தாவரவியல் மற்றும் மொழி மரபியல் சார்ந்த கருத்தாகும்.
பிற்காலத்தில் எழுந்த அகராதிகளும் ச்சொல்லின் தற்காலப் பொருளை வரையஇறை செய்யும்.
தாழை போன்ற தாவரத்தின் சற்று அகலமாக நீண்டிருக்கும் தடித்த லைப்பகுதி; அவரை விதை போன்று வளைந்து ருக்கும் காம்பின் புறப்பகுதி; கடிதம்
போன்ற பொருட்களும் மடல் குறித்துச் சொல்லப்பட்டுள்ளன.
மேற்குறித்த சான்றுகள் மடல் என்பது தாவரத்தின் அகன்ற லைப்பகுதி என்றும் அது தென்னை, பனை, வாழை ஆகியவற்றுடன் ணைத்துக் கூறப்படுவது என்றும் கருதுவதற்கு டமளிக்கின்றன.

மடலூh;தல் என்னும் வழக்குப் பிற்காலத்து, தான் விரும்பிய தலைவியை அடையவியலாத நிலையில் தனக்கும் அவளுக்கும் ருக்கும் காதல் உணர்வை வெளிப்படுத்த ஆடவன் மேற்கொள்ளும் செயல் மடலூர்தல் எனப்படுகிறது. மடற்குதிரையிவர்தல் - ஃது அகப்பொருட்டுதையுள்ளொன்று எனப் பவானந்தர் கூறுகிறார்.

பிற்காலக் கலைச்சொல் அகராதி, தான் காதலித்த தலைவியை அடைதல் வேண்டிப் பனை மடலாலான குதிரையைத் தலைவன் ஏறி ஊர்தல் எனப் பொருளுரைக்கும்.

பனை மடலாற் செய்த குதிரையில் தலைவன் ஏறி வந்தான் என்பதை து உறுதிப்படுத்துகிறது. மடன்மா, மடற்றிறம் என்ற சொற்கள் இலக்கியப் பயிற்சியுடையன. மடன்மா என்பதற்கு, பனைமடலாற் செய்த குதிரை என்றும் மடற்றிறம் என்பதற்கு மடலேறுவேன் எனக் கூறல் எனவும் பொருளுரைக்கப்படுகின்றது.

மேற்குறித்த அகராதிச் சான்றுகள் மடல் என்பது பனைமடல் என்றும், அது குதிரை வடிவாகச் செய்யப்பட்டது என்றும் அதன்மீது தலைவன் ஏறி வருவான் என்றும் பொருளுரைக்கின்றன.

கலைக்களஞசியங்கள்
சொல்லின் பொருளை வாழ்வியலோடு ணைத்துப் பொருள் கூறுவன கலைக்களஞ்சியங்கள், பல்வேறு செய்திகளை அகராதியின் முஇறையில் அடுக்கி விளக்கம் தருவன வை. வற்றுள் பல மடல் குறித்து நுணுக்கமாகப் பொருள் விளக்கம் தந்துள்ளன.

அண்ணாமலைப் பல்கலைக்கழக கலைக்களஞ்சியம் மடல் என்பதற்கு ஏற்றுக்கழி, சிறுவாய்க்கால் என்று பொருள் தரும்.

தமிழ்ப் பல்கலைக்கழகக் களஞ்சியம், மடல் என்பதற்கு, மடல் இலக்கியமானது உலா இலக்கியத்தோடு ணைந்த நிலையில் மடல் உலா எனப் வழங்கப்பட்டு லக்கணப் போலியாக உலா மட்டும் என ஆகியிருக்கலாம் எனப் பொருளுரைக்கும்.

பிற்கால லக்கண நூல்களில் மடல்
தொல்காப்பியத்திற்குப் பின்னர் வந்த பல லக்கண நூல்கள் சமணர்களால் யற்றப் பெற்றவை. வற்றுள் பெரும்பாலான விதிமுஇறைகள் தொல்காப்பியத்தின் அடிப்படையில் எழுந்தவை.
1.கல்லாடம்
2.நம்பியகப்பொருள்
3.மாறனகப்;பொருள்
4.புறப்பொருள் வெண்பாமாலை
5.லக்கண விளக்கம்
என்பவை மடல் குறித்து சான்றாதார நூல்கள் ஆகும்.                                

அறிஞர்கள் விளக்கம்
தமிழ் நூல்கள் பலவற்இறைப் பதிப்பித்துப் பழைய இலக்கியங்களுக்கு உரை எழுதிய உ.வே.சாமிநாத ஐயர் மடல் குறித்து,
தலைவன் மடலேறுகின்ற காலத்துத் தன் உருவத்தையும் தலைவியின் உருவத்தையும் எழுதிய படத்தைக் கையில் ஏந்திச் செல்வானாதலால் வளுடைய கணவன் வன் என்பதை ஊரார் அறிய துணைபுரியும்
எனக் கூறுகின்றார்.

மரபு சார்ந்த அகப்பொருள் துஇறை என்னும் அடிப்படையில் மு.ராகவையங்கார் மடலுக்குப் பொருளெழுதுங்கால்,
மடலேறுதல் உண்மையாகவே பண்டு ருந்த ஒரு பழக்கம். ம்மடலேற்றம் தமிழ் நாட்டில் முன்னாளில் வழங்கி வந்த தற்கொலை முஇறை வகை. அதற்கு மடல் மாது ஒரு கருவி
எனக் குறிக்கின்றார். கவிராஜபண்டிதர் எனும் புலவர், மடல் நிகழ்த்தப்பெற்ற சூழலைச்சுட்டி மடல் ஊர்கிறதாவது, தலைவன் அந்த ஸ்திரியைப் போலப் படத்தில் எழுதிக் கொண்டு அதைப் பார்த்துக் காமவருத்தம் தீருகிறது எனக் குறிக்கின்றார்.


புராணங்களில் மடல்
காப்பியம், பக்தி இலக்கியம் போன்றவை மட்டுமின்றிப் புராணங்களிலும் மடல் பற்றிய குறிப்பு உள்ளது. கந்தபுராணம், தணிகைப் புராணம் ஆகியவற்றில் மடல் பேசப்பட்டுள்ளது. கச்சியப்பசிவாச்சாரியார் கந்தபுராணத்தில் மடல் குறித்துச் சுட்டியுள்ளார்.

சிற்றிஇலக்கியத்தில் மடல்
சிற்றிஇலக்கியங்கள் அகம், புறம், நீதி பற்றிய கருத்துக்களை வெளிப்படுத்துவன. வ்விஇலக்கியங்களில் மடல் பற்றிய உறுப்புக்கள் பல காணப்படுகின்றன. பின்வரும் நூல்களில் மடல் குறித்த செய்திகள் வருகின்றன.
1.அந்தாதி
2.கப்பற்கோவை
3.குற்றாலக்கோவை
4.சங்கரமூர்த்திக் கோவை
5.தஞ்சைவாணன் கோவை
6.திருக்கழுக்குன்றக் கோவை
7.திருக்கோவை
8.திருமயிலைக் கோவை
9.திருவெங்கோவை
10.பாண்டிக்கோவை
11.பேரூர்க் கோவை
12.நந்திக் கலம்பகம்
13.மயூரிக் கலம்பகம்
என்பன மடல் பற்றிக் கூறும் சிற்றிஇலக்கியங்களாகும்.

தொல்காப்பியத்தில் மடல்
அகம், புறம் என்னும் வாழ்க்கை அவற்றிற்குரிய இலக்கிய வகைமை ஆகியனவற்இறை எடுத்துக்கூறும் வாழ்வியல் நூல் தொல்காப்பியம் ஆகும். தொல்காப்பியர் அகத்திணையியலில் மடல் பற்றிக் குறிப்பிடுகின்றார். மடலேறல் எனும் வ்வொழுகலாறு பெண்களுக்கு ல்லை என்கிறார் தொல்காப்பியா;.
எத்திணை மருங்கினும் மகடூஉ மடன்மேல்
பொற்புடை நெறிமை ன்மையான
என சொல்லப்படுகிறது. வ்வொழுக்கம் அன்பின் ஐந்திணைப் பாற்படுத்தப்படாது பெருந்திணையில் சேர்க்கப்பட்டுள்ளது.

பெருந்திணையென்பது பொருந்தா ஒழுக்கமென்பது மரபு. மடல் அதன்பாற்படும் என்பது தொல்காப்பியர் கருத்து.
ஏறிய மடற்றிறம் ளமை தீர்திறந்
தேறுத லொழிந்த காமத்து மிகுதிறம்
மிக்க காமத்து மிடலொடு தொகைச்
செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே
என்னும் நூற்பா பெருந்திணை ஒழுகலாறுகளைச் சுட்டவது. மடலேறுதல் திலடக்கப்பட்டிருப்பது எண்ணத்தக்கது.

இலக்கியச் சுவை குறித்து து புனையப்படுவது என்ற கருத்தில் தனைப் பொய் தலையடுத்த மடல் எனத் தொல்காப்பியர் சுட்டியுள்ளார்.

தலைவனின் கூற்று நிகழும் டங்களில் து மடல் ஏறுவேன் எனக் கூறுவதாய்க் குறிக்கப்படுகின்றது.
காப்பியங்களில் மடல்
ஐம்பெருங்காப்பியங்களான சீவகசிந்தாமணியிலும் வளையாபதியிலும் மடல் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. கதைத் தலைவனாகிய சீவகன் மீது கொண்ட காதலால் குணமாலை மடலூர முயல்கிறாளெனச் சிந்தாமணி நவில்கிறது.

சமயக் காப்பியமான வளையாபதியில் ணை விழைச்சு என்ற பகுதியில் மடலேற்றம் காமத்தால் வரும் தீமையை எடுத்துரைக்கும் கருவியாகச் சுட்டப்பட்டுள்ளது. மாந்தர்க்குக் காமப்பிணி முதிர்ந்துவிட்டால் பனைமடலால் மடலேறுவர் என்றும், நாணத்தைவிட்ட செயலாக து அமையும் என்றும், மணமாலை என்று கூறிக்கொண்டு எருக்கமாலைக் கொத்தினைச் சூடுவர் என்றும் மடலேறியவரைப் பேய் என்று கூறி ஆரவாரித்து ஊர்ச்சிறார்கள் குதிரையினை ழுத்துச் செல்வர் என்றும், மடலேற்றத்தின் புன்மையினை வளையாபதி சுட்டுகின்றது.

காதல் வாழ்வு வலியுறுத்தப்பட்ட சங்ககாலத்திலிருந்து, துறவுக் கொள்கை வலியுறுத்தப்பட்ட காப்பிய காலம் வரை மடலூரும் நிகழ்ச்சி காணப்படுகிறது. தலைவியைக் காணத் தடையாக நிற்கும் தோழி தலைவனை விலக்கிடுங்கால் அது பொறாது அவன் உரைக்கும் மறுமொழியாகவும் து வெளிப்படுத்தப்படுகிறது. ப்பகுதி,
. . . . .தோழி
நீக்கலின் ஆகிய நிலைமையும் நோக்கி
மடன்மா கூறும் டனுமா ருண்டே
எனக் குறிக்கப்படுகிறது. தற்கு உரை வகுக்கும் ளம்பூரணர் துவே மடன்மா கூறுவதற்கு ஏதுவாயிற்று என்கிறார்.

சங்க இலக்கியத்தில் மடல்
சங்க இலக்கியங்கள் தொல் சமூகப் பதிவுகளாகும். அகவியல் துஇறைச் செய்திகள் புனைவியல் அழகு கொண்டவை. வற்றில் மடல் குறித்த செய்திகள் பரவிக் கிடக்கின்றன. நற்றிணை, குறுந்தொகை, கலித்தொகை ஆகியவற்றில் மடலேறல் பேசப்பட்டுள்ளது.

நற்றிணையில் மடல் என்றும் மா என்றும் து குறிக்கப்பெறுகின்றது. நற்றிணைப் பாடல்கள் ஐந்தில் மடலேறலின் செய்கை, மடலேறும் ஆடவனின் செயலையும் உள்ள உணர்வையும் உணர்த்துவன.

குறுந்தொகையில் ஆறு பாடல்களில் மடலூர்தல் பற்றிய குறிப்புக்கள் உள்ளன. மடல், மடல்மா என்னும் சொற்களின் வழி வெளிப்படையாகக் கூறுகின்றன. மாவென மடலொடு, பனைபடு கலிமா, மாமடல் என்பன அவை. மேற்சுட்டியவற்றுள் பனைபடு கலிமா என்பது மடல் செய்யப்பட்ட பொருளைக் குறிக்கின்றது.

கலித்தொகை அகத்துஇறைச் செய்திகளை மிகுதியும் நாடகப் பாங்கிலும் உரையாடல் உத்தியிலும் கூறும். தன்கண் ஏழு டங்களில் மடல் பற்றிய தகவல்கள் டம்பெற்றுள்ளன. அவற்றுள் பனையும் எருக்கம்பூ முதலான பூக்களும் சொல்லப்பட்டுள்ளன. மடலேறுவேன், உயிர் துறப்பேன் எனத் தலைவன் வெளிப்படையாகக் கூறும் டங்களும் உள்ளன.

திருக்குறளில் மடல்
கருத்து வாக்கியங்களாக அமைந்து இலக்கியச் சுவை குன்றாதுள்ள மரபிஇலக்கியம் திருக்குறள். தன் காமத்தப்பால் முழுமையும் தமிழ் மரபைச் சுட்டுவது. நாணுத்துறவு உரைத்தல் என்னும் அதிகாரத்தில், மடல் பற்றி ஆறு டங்களில் சொல்லப்பட்டுள்ளது. ஏமம் மடலல்லது ல்லை, காமுற்றார் ஏறும் மாமடல், மடலொடு மாலை என்னும் தொடர்களில் மடலென்ற சொல் தனித்து டம்பெற்றுது. மடலேறும், மடலேறா, மடலூர்தல் என்ற தொடர்களில் தொழிற்பெயராக அமைந்துள்ளது.

பக்தி இலக்கியங்களில் மடல்
பக்தி இலக்கியம் புறத்திணைப் பாற்படுவது. தமிழில் டைக்காலத்தில் எழுந்த பக்தி இலக்கியங்களில் மடல் பற்றிய செய்தி காணப்படுகின்றது.
சைவத் திருமுஇறைகளில் சேர்ந்தனாh; மட்டுமே மடல் பற்றிப் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. திருவாய்மொழி நூற்றந்தாதி, அழகரந்தாதி, சடகோபரந்தாதி எனும் வைணவ அந்தாதிகளில் மட்டும் மடல் பற்றிய குறிப்பு அமைந்துள்ளது.

No comments: