Saturday 11 January 2014

நூலாசிரியர் பண்பாடு - பூங்கொடிக் காப்பியம்



கட்டுரை-9

நூலாசிரியர் பண்பாடு - பூங்கொடிக் காப்பியம்

 ஆ. கலைச்செல்வி, முனைவர்பட்ட ஆய்வாளார் (முழுநேரம்),

தமிழ்த்துறை,அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),சேலம் - 7.

முன்னுரை

     பண்படுதல் பண்பாடு ஆகும். பண்பாடு என்பது மனித வளார்ச்சியோடு பின்னிப்பிணைந்தது. பண்பாட்டு வளார்ச்சி மனிதனை மனிதனாக வாழ  வழிகோலும் இலக்கிய வளார்ச்சியோடு தொடார்புடையது ஆகும். ஒரு மொழி திருந்திய மொழியாக இருக்க வேண்டுமெனில் அதற்கு, அம்மொழியில் செவ்வியல் இலக்கியங்கள் தோன்றியிருக்க வேண்டும். அத்தகைய சிறப்புற்ற இலக்கியங்கள் அமைவது ஒரு நூலாசிpயன் கையில்தான் உள்ளது. நூலாசிpயன் ஒரு நூலை இயற்றுவதற்கு சில குறிப்பிட்ட மரபு சார்ந்த பண்பாடுகளைக் கையாளுகிறான். இவ்வழியிலேயே மணிமேகலை காப்பியத்தின் சார்பு நூலான பூங்கொடிக் காப்பியத்தில் முடியரசன் கையாண்டுள்ள நூல்மரபுசார் பண்பாடு நன்னூல் வழி ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது.

சார்பு நூல்

     முதல்நூல் மற்றும் வழி நூலினது பொருள்முடிபு ஒத்து, மற்றவையெல்லாம் வேறுபட்டிருப்பது சார்புநூல்ஆகும். இதனை,
           இருவார் நூற்கு மொருசிறை தொடங்கித்
           திரிபுவே றுடையது புடைநூ லாகும்” (நன்னூல். நூற்பா - 8)
என்கிறது நன்னூல். மணிமேகலைக் காப்பியம் முதல்நூலாகும். மணிமேகலையின் தலையாயக் கொள்கை பசிப்பிணி நீக்கி அறச்செயல் புpந்து, பௌத்த மதத்தைப் பரப்புதல்ஆகும். இதனை முழுவதும் அடியொற்றி வழிநூலாக விளங்குவது பாரதிதாசன் இயற்றிய மணிமேகலை வெண்பாஆகும். அதற்குப் பின் தோன்றிய பூங்கொடி, மாதவமேகலை, ஆபுத்திர காவியம் ஆகியன சார்புநூல்களாகும். பூங்கொடிக் காப்பியம் அறச்செயலாக, தமிழ்மொழிகுறித்த அறச்செயலையே வலியுறுத்துகிறது. இந்நூலில் பெயார் மாற்றங்கள்,  செயல் மாற்றங்கள் ஆகியன அமைத்து படைக்கப்பட்டுள்ளன.

எழுவகை மதம்

     நூல் படைப்பதில் பின்பற்ற வேண்டிய கொள்கையை நன்னூல் ஒரு நூலாசிpயனுக்குpய பண்பாடாக மொழிகிறது.
           எழுவகை மதமே யுடன்படல் மறுத்தல்
           பிறார்தம் மதமேற் கொண்டு களைவே
           தாஅ னாட்டித் தனாது நிறுப்பே
           இருவார் மாறுகோ ளொருதலை துணிவே
           பிறார்நூற் குற்றங் காட்ட லேனைப்
           பிறிதொடு படாஅன் றன்மதங் கொளலே” (நன்னூல். நூற்பா - 11)
என நன்னூல் உரைக்கிறது. இக்கருத்தை மட்டும் அடியொற்றி பூங்கொடிக் காப்பியத்தை ஆராயலாம். மணிமேகலை பௌத்தமதம்குறித்த செய்திகளை ஆராய்வதாகவும், ஆனால் பூங்கொடிக் காப்பியத்தில் தமிழ்மொழி குறித்த செய்திகளை, மதம் என்ற கருத்திற்கு இணையாகக் கூறுவதாக அமைக்கப்படுகிறது.

(அ) உடன்படல்

     உடன்படல் என்பதற்கு பிறார் கொள்கையை உடன்பட்டு இருப்பது என்பது பொருள். மணிமேகலைக் காப்பியத்தில் பிற மதத்திற்கு உடன்படல் குறித்த செய்திகள் காணப்படாமல், பௌத்தமத கொள்கைகளை பரப்ப, சமயக்கணக்கார் திறம் கேட்ட காதையில் பிற சமய கருத்துகளைக் கேட்டறிகிறாள் மணிமேகலை என்றச் செய்தி காணப்படுகிறது. பூங்கொடிக் காப்பியம் தமிழ்மொழி பெருமையை நிலைநாட்டிட, பிறமொழிகளையும் கற்றுத் தோர்தல் வேண்டுமென உரைக்கிறது. தாமரைக்கண்ணிர் கதைத்தலைவியான பூங்கொடியிடம் பன்மொழிப்புலமை பெற்றவளாகத்திகழ வேண்டுமென வலியுறுத்துகிறார். இதனை,
           வேற்று மொழிகள் விரைவில் பயில்நீ!
           தெலுங்கு கன்னடம் தென்மலை யாளம்
           ஒழுங்கு பெறநீ ஓதுதல் வேண்டும்
           பழம்பெரு மொழியுடன் ஒன்றெனப் பகுக்கும்
           வழங்குதல் இல்லா வடமொழி முதலா
           நெருநெல் முனைத்திவண் வருமொழி வரையில்
           மறுவறப் பயின்று” (பூங்கொடி - 10:76-82)
என்று தொல்காப்பியம் உணார்ந்த காதை வழி பூங்கொடி காப்பியம் இயம்புகிறது.

(ஆ) மறுத்தல்

     பிறார் கொள்கையை ஏற்க மறுப்பது மறுத்தல் எனக் கூறப்படுகிறது. மணிமேகலையில் சுதமதி புத்தமதமே மேன்மை உடையது என்றும், அதுவே என் தந்தையின் உயிரைக் காப்பாற்றியது எனவும், ஆதாலாலே நான் சமண மதத்திலிருந்து குற்றமில்லாத புத்த மதத்தைத் தழுவினேன்” (சிலம்பொலி சு. செல்லப்பன், மணிமேகலை, பக். 86, 88)என்றும் உரைக்கிறாள். இக்கருத்தை மையமிட்டே பூங்கொடிக் காப்பியத்தில் தமிழ்மொழி பெருமை வாய்ந்த சிறப்பு மிக்க மொழியாக நூலாசிரியர் படைத்துக் காட்டியுள்ளார். இந்நூலை வடமொழி எதிர்ப்புக் காப்பியமாகக் கொள்ளலாம். ஆசிpயார் மீனவன் என்னும் கதைமாந்தரின் வழி, “குயிலன் குரலொடு கோழியின் குரலும்
           இணையின் என்னாம்?” (பூங்கொடி - 14:118-119)
எனச் சுவடியின் மரபு தொpவுறு காதையில் வடமொழியை எதிர்க்கும் பான்மையை வலியுறுத்துகிறார்.

(இ) பிறர் மதத்தை உடன்பட்டு, அதனை மறுத்தல்

     மணிமேகலைக் காப்பியத்தில் சாத்தனார்சமயக்கணக்கார் திறம் கேட்ட காதையில் மணிகேகலை பிற சமயத்தினாpன் கொள்கைகளைக் கேட்டறிவதாக உரைக்கிறார். ஆனால், அவள் அனைத்து கொள்கைகளையும் விட புத்தமதக்கொள்கையும், புத்தமதமுமே மேலானது என்று பரவி பணிகிறாள். பூங்கொடி ஆசிpயரும் இதற்கு இணையாக தமிழ்மொழியின் புலமையை விளக்க பூங்கொடி பிறமொழிகளைக் கற்றுணார்ந்ததாக உரைக்கிறார்.

(ஈ) ஒரு பொருளையே வருமிடந்தோறும் நிலைநாட்டுதல்

     பூங்கொடிக்  காப்பியத்தில்  முடியரசன்  தம்முடைய  தமிழ்ப்பற்றை நிலைநிறுத்தும் வகையில் கதைமாந்தார்களைப் படைத்துகாட்டியுள்ளார். காதைகள் தோறும் தமிழ்  பரப்பும் கொள்கையையும், தமிழ்மொழியின் பெருமையையும் வலியுறுத்தி எடுத்துரைத்துள்ளார். தமிழ்மொழியின் சிறப்பை,
           அன்னாய்! என்னுயிர் அன்னாய்! தமிழே!
           ஒன்னார் மனமும் உருக்குந் தமிழே!
           அகப்பகை புறப்பகை கடந்தாய் தமிழே!
           தகப்பன் தாயெனத் தகுவழி காட்டி
           மிகப்பல் லறநூல் மொழிந்தாய் தமிழே!” (பூங்கொடி - 11:130-134)
என்று ஏடுபெற்ற காதையில் உணார்த்துகிறார்.

(உ) ஒன்றை துணிந்து சொல்லுதல்

     மணிமேகலையும், மணிமேகலை வெண்பாவும் ஒன்றுபோல் அமைந்த காப்பிய கதை உருக்களாகும். இவ்விரு காப்பிய ஆசிpயார்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறச்செயலானது, பூங்கொடிக் காப்பியத்தில் தமிழ்மொழியின் பெருமை உலககெலாம் நிலைநிறுத்துதல் என்னும் அறச்செயலாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

(ஊ) பிற நூலில் உள்ள குற்றங்களைக் காட்டுதல்

     மணிமேகலைக் காப்பியமும், பூங்கொடிக் காப்பியமும் பிற நூலில் உள்ள குற்றங்களை எடுத்தியம்பாமல், பிறமதத்திலும், பிறமொழிகளிலும் உள்ள குற்றங்களைச் சுட்டிக்காட்டுகின்றன. தம் மதம் மற்றும் மொழியின் சிறப்பை எடுத்தியம்புகின்றன. தமிழ்வழிக் கல்வி குறித்து,
           ஓதிய கல்வி உயர்வினை நல்கும்,
           சாதியில் உயர்வு தாழ்வுகள் சாய்க்கும்
           குடிக்குயார் வாக்கும், கொடுமைகள் போக்கும்” (பூங்கொடி - 12:25-27)என மலையுறையடிகள் வாழ்த்திய காதையில் உரைக்கப்படுகிறது.

(எ) தன் மதத்தை ஏற்றல்

     பிறருடைய கொள்கையினை உடன்படாமல் தன் கொள்கையினை உயார்வாகக் கூறுவதாகும். மணிமேகலையில் சாத்தனார் பிறசமயக் கருத்துகளை உரைத்திருப்பினும், பௌத்த மதத்தையே உயார்வாக உரைக்கிறார். புத்தமதக் கொள்கையான இளமைநிலையாமை குறித்து,
           பூவினும் சாந்தினும் புலால் மறைத்து யாத்துத்
           தூசினும் மணியினும் தொல்லோர் வகுத்த
           வஞ்சம் தொpயாய் மன்னவன் மகன்                        (சிலம்பொலி அ.செல்லப்பன், மணிமேகலை, 20:67-69)என்று மணிமேகலை கூறுகிறது. இதேபோல் தமிழ்மொழியின் சிறப்பை,
           தாய்மொழி மானம் தமதென நினையும்
           ஆய்முறை தொpந்த ஆன்றோர் தாமும்
           உயிரெனத் தமிழை உன்னுவோத் தாமும்
           செயிரறத் தமிழைத் தெளிந்தோர் தாமும்
           புகுந்து தமிழிசை போற்றுதல் வேண்டும்
(சிலம்பொலி அ.செல்லப்பன், மணிமேகலை, 15:81-85)என்று இசைத்திறத்தால் அதனால் பரப்புதல் வேண்டும் எனவும் முடியரசன் உரைக்கிறார்.

முடிவுரை

·               பூங்கொடிக் காப்பியம் மணிமேகலைக் காப்பியத்தைத் தழுவி பல மாற்றங்களுடன் படைக்கப்பட்ட சார்பு நூல் ஆகும்.·   நன்னூலின் நூற்பா வழி சாத்தனார் உணார்த்தும் சமயச்செய்திகளும், முடியரசன் உணார்த்தும் தமிழ்மொழிச் சிறப்புகளும் ஆய்ந்துணரப்பட்டுள்ளன.·            மணிமேகலைக் காப்பியம் பௌத்த மதக்கொள்கைகளை உயிர்மூச்சாகவும், இதற்கு இணையாக பூங்கொடிக்காப்பியம் தமிழ்மொழிப் பரப்புதலை உயிர்மூச்சாகவும் கொண்டுள்ளது. ·                முடியரசன் முதல் நூலுக்கேற்ப கருத்து ஒத்து, தம்முடைய பூங்கொடிக் காப்பியத்தில் மரபு பண்பாட்டு மாற்றங்களைச் செய்துள்ளார் என்பதும் பெறப்படுகிறது.

No comments: