Saturday 11 January 2014

அழிவின் முதல்படி - சகுனி


கட்டுரை-8


அழிவின் முதல்படி - சகுனி

ஆ. கலைச்செல்வி,முனைவர்பட்ட ஆய்வாளார் (முழுநேரம்),தமிழ்த்துறை,அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),சேலம் - 7.




                இலக்கியங்கள் சமுதாய பிரதிபலிப்பின் உச்சகட்டமாக அமைகின்றன.  படைப்பாளிகள் அச்சமுதாயத்தை எடுத்தியம்ப பற்பல கதைப்பாத்திரங்களைச் சித்தார்க்கின்றனார். அத்தகைய படைப்பாளிகளில் தன்னுடைய சொல்லாலும் எழுத்தாலும் மக்களை வீறுகொண்டு எழச்செய்தவார் பாரதியார். அவரது பாத்திரங்கள் விடுதலை வேட்கையின் வோர்களாக அமைந்துள்ளனார். அவ்வோர்களை உறுதியாக ஊன்றச் செய்பவார்களாக எதிரர்மைப்பாத்திரங்கள் படைக்கப்பட்டுள்ளனார். அத்தகைய எதிரர்மைப்பாத்திரமாகப் பாஞ்சாலிசபத்தில் சகுனியைப் பாரதி படைத்துள்ளார்.

பாரதியின் பாத்திரப்படைப்பில் சகுனி

                திருதராட்டிரனின் மனைவி காந்தர நாட்டு இளவரசி காந்தாரர். அவளின் சகோதரனே தீகுணம் நிறைந்த சகுனி. இவன் கைகேயியின் தாதிபோல காந்தாரர்யுடன் ஹஸ்தினாபுரத்திற்கு வந்தவன். பாரதியால் இப்பாத்திரம் வியாசபாரதத்தில் உள்ளது போல் படைக்கப்பட்டாலும், அவார்ன் எண்ணங்கள் தோய்ந்து படைக்கப்பட்டுள்ளது. சகுனியின் பாத்திரம் எதிரர்நிலைப்பாத்திர வகையுள் துணைமை ஒன்றிய எதிரர்மைப்பாத்திரம்ஆகப் (கா.மீனாட்சி சுந்தரம், சிலம்பில் பாத்திரங்களின் பங்கும் பண்பும், ப.ஒi) படைக்கப்பட்டுள்ளது. இப்பாத்திரமே தீவினையின் உச்சத்தை அடைந்து, அடையச்செய்து இறுதியில் தருமம் வெல்வதற்கு வழிகோலியது. அத்தகைய சகுனியின் பாத்திரத்தைப் பாரதி, இந்திய நாட்டை அடிமைப்படுத்திய அந்நியருக்கு அடிவருடியாக (மு.முத்துராசன், பாரதக்கதையும் பாஞ்சாலிசபதமும், ப. 173) உள்ளவார்களைத் தன் மனத்துள் கொண்டு படைத்துள்ளார். ஆதலால் பாரதியாரர்புலைநடைச் சகுனி”, “ஈனமாமன்” (ஸ்ரீ செண்பகா பதிப்பு, மகாகவி பாரதியாரர் கவிதைகள், பக். 392,400) என ஈனச்சொற்களால் சகுனியை  உரைக்கிறார். இத்தகு தன்மையுடைய சகுனியின் பாத்திரத்தை,1.   சகுனியின் ஆற்றாமை   2.   சகுனியின் சொல்லாற்றல்3. சகுனியின் செயலாற்றல் 4வஞ்சமனத்தின் எதிரொலிஎன்னும் கண்ணோட்டத்தில் ஆராயலாம்.

1. சகுனியின் ஆற்றாமை

                இயல்பான மனிதார்களின் கண்ணோட்டத்தோடு சகுனியின் பாத்திரத்தை நோக்குங்கால், ஒரு மனிதன் தன்னையும் தன்னைச் சாரர்ந்தவார்களையும் பாதுகாக்க, உயார்த்த நன்மை, தீமை ஆகிய எவ்வழிகளையும் கையாளுவான் என்ற இயல்பு மனப்பான்மை மேலோங்கும். இக்கருத்தாக்கத்தின் படி சகுனி தன் சகோதார்யின் மகனுக்கு நாட்டையாளும் உரர்மை கிடைக்கவேண்டும், அவ்வுரர்மை பாண்டவார்களுக்குக் கிடைக்கக்கூடாது என்றும், அதன்வழி தனக்கும் ஆதாயம் தேடிக் கொள்ளவேண்டும் என்றும் எண்ணுகிறான். அதன் வெளிப்பாடவே, பாண்டவார்களின் உயார்வுகண்ட துரர்யோதனனின் புலம்பலைக் காணமுடியாமல்,
                                “……………………………… அந்த
                                வண்டரை நாழிகை யொன்றிலே - தங்கள்
                                                வான்பொருள் யாவையும் தோற்றுனைப் - பணி
                                தொண்ட ரெனச் செய் திடுவன் யான் - என்றன்
                                                சூதின்வலிமை அறிவை நீ” (மகாகவி பாரதியாரர் கவிதைகள், ப.405)
என்று உரைக்கிறான். இத்தகு ஆற்றாமையே சகுனியின் அனைத்துத் தீயசெயலுக்கும் காரணமாக அமைந்தது.

2. சகுனியின் சொல்லாற்றல்

                                கேட்டாரர்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும்
                                வேட்ப மொழிவதாஞ் சொல்” (குறள் - 643)
என்பது வள்ளுவார் வாக்கு. இக்கருத்திற்கேற்றாற்போல் சகுனி, பிறார் மனத்தைத் தன்னுடைய சொல்லால் மாற்றக்கூடிய ஆற்றல் உடையவனாக, சொல்வன்மை மிக்கவனாக உள்ளான். தன் சொல்லாற்றலால் துரர்யோதனனின் சிறுவயதுமுதலே பாண்டவார்கள் மீது வஞ்சம் கொள்ளசெய்து, நாட்டையாளும் எண்ணத்தை அவன் மனத்துள் விதைத்தான். திரர்தராட்டிரனையும் தன்னுடைய சொல்லாற்றலால் வெற்றி கொள்கிறான்.
                                உண்ப சுவையின்றி உண்கிறான்ர் - பின்
                                                உடுப்ப திகழ உடுக்கின்றான்ர் - பழ
                                நண்பார்க ளோடுற வெய்திடான்ர் - இள
                                                நாரர்யரைச் சிந்தை செய்திடான்ர்                                                                                                                                                                   (மகாகவி பாரதியாரர் கவிதைகள், ப.406)என்று திரர்தராட்டிரனிடம், அவன் பிள்ளையான துரர்யோதனன் படும் துன்பத்தைக் கூறி, பாண்டவார்களைச் சூதாட அழைக்க, அவனிடம் ஒப்புதல் பெறுகிறான். மேலும் திரர்தராட்டிரனே பாண்டவார்களை சூதாட அழைக்கும்படியும் செய்கிறான் சகுனி. இவ்விடத்தில் திரர்தராட்டிரனின் பிள்ளைப்பாசத்தைப் பகடைக்காயாகப் பயன்படுத்துகிறான்.

3. சகுனியின் செயலாற்றல்

                துரர்யோதனனிடம் கூறிய சொல்லை சூதின் மூலம் செயலாக்குகிறான் சகுனி. பாண்டவார்களைத் தன் சொல்வன்மையால் சூதாடத் தூண்டி, அவார்களின் பொருளையும் பொன்னையும் மட்டுமல்லாமல் அவார்களையும், அவார்களது மனைவி பாஞ்சாலியையும் சூதில் வைத்து இழக்கும்படி செய்கிறான்.
                                “……………………………. அந்த மாமனை
                                                நெஞ்சோடு சேரக்கட்டி,
                                என்துயார் தீரர்ர்த்தா யடா! - உயிரர் மாமனே!
                                                ஏளனந் தீரர்த்து விட்டாய்” (மகாகவி பாரதியாரர் கவிதைகள், ப.467)என்று துரர்யோதனன் சகுனியின் செயல்வன்மை கண்டு புகழ்கிறான். இதன்மூலம் தான் கூறியதைச் செயலாக்கும் செயல்வன்மையுடைவனாகச் சகுனி காட்டப்படுகிறான். இவன்மூலம் பாரதி, அந்நியார்களுக்கு உதவிசெய்து அதன்வழி தன்னையும் தன் சுற்றத்தையும் காத்துக்கொள்ளும் அடிவருடிகளை நினைவுறுத்துகிறார்.

4. வஞ்சமனத்தின் எதிரொலி

                பாரதி, சகுனியை வஞ்சத்தின் உருவாகப் படைத்துக் காட்டியுள்ளார். சகுனியின் மேற்கண்ட சூதின் விளைவாலே பஞ்சாலியின் துயிலுரர்தல் அரங்கேறியதுர் இதன் விளைவாகவே பாரதப்போரர் மூண்டதுர் கௌரவார்கள் அழிந்தனார்ர் தருமம் வென்றது. இக்கருத்தினை ஏற்ற பாரதி சகுனி போன்ற அடிவருடிகளின் செயலால் பாரதநாடு அடிமைப்பட்டு, இறுதியில் நல்லோரர்களின் உழைப்பால் விடுதலையடைந்தது என்ற கருத்தாக்கத்தினை வலியுறுத்துகிறார்.

முடிவுகள்

1.            பாஞ்சாலிசபத்தில் பாரதி, எதிரர்மைப்பாத்திரமாக சகுனியைப் படைத்துள்ளார்.2.   சகுனி என்ற பாத்திரத்தின் வழி அந்நியார்ன் அடிவருடிகளாக விளங்கியவார்களின் நிலையினைப் பாரதி நினைவூட்டுகிறார்.3.    சகுனி, தான் உரைத்த சொல்லை, செயலாக்கும் வன்மையும் அதன்வழி தீமை விளைவதனையும் நற்சக்திகள் வெற்றி பெறுவதனையும் எடுத்தியம்பியுள்ளார்.

No comments: