Saturday, 11 January 2014

இனியவை நாற்பதில் வீடுபேறு


கட்டுரை-6

இனியவை நாற்பதில் வீடுபேறு

ஆ.கலைச்செல்வி,முழுநேர முனைவர்பட்ட ஆய்வாளர்,தமிழ்த்துறை,அரசு கலைக்கல்லூர (தன்னாட்சி),சேலம் - 7.


    நீதி இலக்கியங்கள் வீடுபேறு என்னும் கருத்தாக்கத்தை முன்வைத்தே அறம், பொருள், இன்பம் ஆகியனவற்றை வலியுறுத்தியுள்ளன. அக்கால அந்நிய ஆட்சியாளா;கள் அறம், பொருள், இன்பத்தை முன்வைத்தால் மட்டும் மக்கள் அமைதியடைந்துவிட மாட்டாh;கள் என்பதனாலேயே வீடுபேறு என்னும் கருத்தாக்கத்தை முன் வைத்துள்ளனா;. அறம், பொருள், இன்பத்தை அறவழியில் மேற்கொண்டால்தான் வீடுபேறு கிட்டும் என்று வற்புறுத்தப்பட்டதால் மக்கள் ஆட்சியாளார் ஆதிக்கத்தையும் அநீதிகளையும் எதிர்க்காமல் வீடுபேற்றை அடையும் முயற்சியை மேற்கொண்டனா;. அந்நிய ஆதிக்கத்தின் மீதான மக்களின் கோபம் மடைமாற்றம் செய்யப்படுவதற்கு ‘வீடுபேறு’ என்னும் கருதாக்கம் ஓர்உத்தியாகவும், கருவியாகவும் பயன்படுத்தப்பட்டது. அவ்வகையில் இக்கருத்தை அடித்தளமாகக்கொண்டு “இனியவை நாற்பதில் வீடுபேறு” என்னும் தலைப்பில் இந்த ஆய்வுக்கட்டுரை அமைகிறது.


வீடுபேறு - விளக்கம்

வீடுபேறு என்பது வினையொழித்து இறைவனடி சோ;தலாகும்;;. “பிறப்பும் இறப்பும் மானிடா;களுக்கு வழிவழியாக வந்தாலும் இறந்து மீண்டும் பிறக்கும் பிறவித் துன்பத்தை நீக்கி. பரம்பொருளுடன் ஐக்கியமாகி, பிறவா போpன்ப நிலை எய்தல் வேண்டும்” (சிவமதி, ஆழ்மனதெளிவும் ஆத்மஞானமும், ப-110) என்று ஆத்ம ஞானிகள் கூறுகின்றனா;. மேலும் “‘வீடு’ என்பதற்கு மனை, மோக்கம், விடுதல், வீடென்னேவல், வினைநீக்கம், முடிவு என்றும் ‘பேறு’ என்பதற்கு இலாபம், கொடை, செல்வம், நல்லூழ், பெறுதல், வாய்ப்பு, பெறுகை, அடையத்தக்கது, பயன், தகுதி, மகப்பெறுகை” (கழகத் தமிழ் அகராதி, பக்-866,710) என்றும் கழகத்தமிழ் அகராதி கூறியுள்ளது. மேலும் வீடுபேற்றிற்கு “முக்திநிலை” என்று சென்னைப்பல்கலைக்கழக அகராதி பொருள் கூறுயள்ளது  P- 3751).

இனியவை நாற்பதில் வீடுபேறு

    ‘இன்னது  வாழ்க்கைக்கு  இனிமை    பயக்கும்’  என்னும்  கருத்துக்களை   இயம்பும் ‘இனியவை நாற்பதில்’ “கண்மூன் றுடையான்றாள் சோ;தல்” (இ.நா-1:1), என்னும் கடவுள் வாழ்த்துப் பாடலடியைத் தவிh;த்து மற்ற பாடல்களில் வெளிப்படையாக வீடுபேறு குறித்த கருத்தாக்கங்கள் சொல்லப்படாமல் அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பொருள்களின்  வழி மறைமுகமாகப் பதினைந்து பாடல்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது. (பா.எ.3,5,6,7,9,20,22,24,26,29,31,32,33,37,40). புலனடக்கம், துறவு, உயிh;க்கொலை புhpயாமை, ஈதல், சினம் கொள்ளாமை, பொய்யுரையாமை ஆகிய செயல்களின்வழி இனியவை நாற்பதில் வீடுபேறு குறித்த கருத்தாக்கங்கள் இயம்பப்படுகின்றன.

ஐம்புலன் அடக்கம், துறவுநிலை

    ஐம்புலன்களை அடக்காவிடின் ஒருவன் மெய்;ஞ்ஞானம் பெற இயலாது; துறவையும் மேற்கொள்ள இயலாது. ஆதனாலேயே “கள்ளப்புலனைக் கடந்துவிட்டு” (பாம்பாட்டியா;, பா-115:1) என்று சித்தா;களும், “துறவறம் என்பது இல்லறத்தைத் துறப்பது” (அ.முல்லைவேந்தன், வள்ளுவரும் துறவும், ஆய்வுக்கதிர்-2, ப-62) என்று அறிஞர்களும் குறிப்பிட்டுள்ளனா;. இதனையே இனியவை நாற்பது,
“ஐவாய வேட்கை யவாவடக்கன் முன்னி;னிதே” (இ.நா-26:1)
“நிலையாமை நோக்கி நெடியா; துறந்த
றலையாகத் தானினிது” (இ.நா-3:3-4)
என்பதன் மூலம் ஐம்புலனை அடக்கி, தாமதம் செய்யாமல் துறவினை மேற்கொள்ள வேண்டும் என்கிறது.

உயிக்கொலை

    சங்க காலத்தில் வைதிக சமயத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட உயர்க்கொலை, சங்கம் மருவிய காலத்தில் சமணர் மற்றும் பௌத்தர்களால் ‘பிற உயிர்களைக் கொல்வதும், புலால் உண்பதும் வீடுபேற்றைத் தடுக்கும’; என்று வற்புறுத்தப்பட்டது. ஆதலால், இனியவை நாற்பது “கொல்லாமை முன்னினிது” (இ.நா-6:1) என்றும் புலால் மறுப்பை “ஊனைத்தின் றூனைப் பெருக்காமை” (இ.நா-5:2) என்றும் வலியுறுத்தியது. இதனையே பிற நீதிஇலக்கியங்களும் “யாதொன்றும் கொல்லாமை நல்லாறு” (குறள்-324) என்று இயம்புகின்றன.

ஈதலறம்

        “இசைவ கொடுப்பதூஉம் இல்லென் பதூஉம்
        வசையன்று வையத் தியற்கை” (பழமொழி நானூறு-226:1-2)
என்று பழமொழி இயம்பும். ஒரு அரசன் பாவத்திற்கு அஞ்சி, பொருள்மேல் உள்ள பற்றை ஒழித்து, தான் ஈட்டிய பொருளைப் பிறருக்குத் தன்னால் இயன்ற அளவு பகிர்ந்து கொடுக்கவேண்டும். அதுவே அறம் ஆகும். இத்தகைய அறச்செயல்வழி தனது பாவத்தை நீக்குதல் வேண்டும். இக்கருத்தினை,
        “ஆற்றுந் துணையா லறஞ் செய்கை” (இ.நா-7:1)
        “அறம்புhpந் தல்லவை நீக்கி” (இ.நா. 22:2)
        “பாவமு மஞ்சாராய்ப் பற்றுந் தொழின்” (இ.நா-24:3)
        “உற்றபே ராசை கருதி யறனொரூஉ
        மொற்க மிலாமை யினிது” (இ.நா-40:3-4)
என்று இனியவை நாற்பது இயம்புகிறது. ஏலாதியும் இக்கருத்தை ஒட்டியே,
        “உரையான் குலன் குடிமையூனம் பிறரை
        உரையான் பொருளொடுவாழ் வாயு - உரையானாய்
        ……………………………………. ஈத்துண்பான்
        தேவாதி தேவனாத் தேறு” (ஏலாதி - 32)
 என்று கூறுகிறது.

சினம்

தவமும். அறச்செயல்களும் வீடுபேற்றை நல்கும் வாயில்களாகும். அவற்றை மேற்கொள்பவன் மனிதனை அழிக்கும சினத்தினைக் கைவிடல் வேண்டும். ஆதலால் தான் இனியவை நாற்பது “சினங்கடிந்து” (இ.நா-37:2) என்றும் “பிளிறாமை” (இ.நா-40:1) என்றும் வலியுறுத்துகிறது. இது பிற அந்நிய ஆட்சியாளா;களின் கட்டளைகளை மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே ஆகும். மக்களைச் சிந்திக்கவிடாமல் செய்து, அதன்மூலம் அவா;களைக் கட்டுப்படுத்துவதற்காக இத்தகைய செயல்கள் அவா;கள் மீது திணிக்கப்பட்டன. மார்க்சியக் கருத்துப்படி நோக்கும்போது “மேட்டுக்குடி, தங்களின் செவ்வியல் தெய்வசித்தாந்த நெறிப்படி ஆன்மா, பரலோகம், மறுபிறப்பு என்பவைகளை இவன் மீது திணித்துக் கொண்டேயிருக்கிறது” (செம்மலா;, மாh;ச் 2010, ப-29) என்ற கருத்து இங்கு நோக்கத்தக்கது.
புறங்கூறல், பொய்யுரைத்தல்
    பொய்யாவது உள்ளீடு இன்மையை ஒத்தது. உண்மையான அறநெறியைக் கடைப்பிடித்து, வாழ்க்கையில் புறங்கூறி பொய்யுரையாது வாழ்தலே சிறந்ததாகும் என்பதனை, “நட்டார்ப்புறங்கூறான்” (இ.நா-20:1), “கொடும்பா டுரையாத மாண்பினிதே” (இ.நா-31:2) என்று; இயம்புகிறது. இதனையே திருமூலரும்,
        “கொலையே களவு காமம் பொய்;கூறல்
        மலைவான பாதகமாம்” (திருமந்தரம் - 241:1-2)
ஆகிய இச்செயல்கள் பெரும் தீமை தருவதை எடுத்துரைத்துள்ளாh;.
முடிவுரை
Ø    சங்கம் மருவியக்கால இலக்கியங்கள் மக்களை மடைமாற்றம் செய்ய ‘வீடுபேறு’ என்னும் கருத்தாக்கத்தை வலியுறுத்துகின்றன.
Ø    ‘இனியவை நாற்பது’ மேற்சொன்ன கருத்தினை மையமாகக் கொண்டு அறம், பொருள், இன்பம் ஆகிய முப்பொருள்களின் வழி வீடுபேற்றை வலியுறுத்துகிறது.
Ø    இனியவை நாற்பது புலனடக்கம், துறவுநிலை, உயிh;க்கொலைபுhpயாமை, ஈதல், சினம் கொள்ளாமை, பொய்;கூறாமை போன்ற செயல்களின்வழி வீடுபேற்றினை அடையலாம் என எடுத்துயம்புகின்றது. 
Post a Comment