Thursday 5 November 2015

நன்னூல் -எழுத்து 6



138.அல்வழி புணர்ச்சி பற்றி எழுதுக?
வேற்றுமை ஐம்முதல் ஆறாம் அல்வழி
தொழில்பண்பு உவமை உம்மை அன்மொழி
எழுவாய் விளிஈ ரெச்சம் முற்று இடைஉரி
தழுவு தொடர்அடுக்கு எனஈரேழே.
அல்வழி புணர்ச்சி
வேற்றுமையுருபு அல்லாத வழியில் புணர்வது அல்வழிப்புணர்சி எனப்படும். இது இரண்டு
வகைப்படும்.
i)தொகைநிலை தொடர்
ii)தொகாநிலைத் தொடர்
அ) தொகைநிலை தொடர்
தொகை என்றால் மறைந்து வருவது என்றுப் பொருள். வினைத்தொகை, பண்புத்தொகை, உவமைத்தொகை, உம்மைத்தொகை, அன்மொழித்தொகை என தொகைநிலை 5 வகைப்படும்.
(உம்) 1. கொல்யானை-வினைத்தொகை
2.கருங்குவளை-பண்புத்தொகை
3.மதிமுகம்-உவமைத்தொகை
4.இராப்பகல்-உம்மைத்தொகை
5.பொற்றொடி-அன்மொழித் தொகை
ஆ) தொகாநிலைத் தொடர்
தொகாநிலைத்தொடர்கள் எட்டு வகைப்படும். அவை பின்வருமாறு
(உ.ம்)
1) வேலன் வந்தான்-எழுவாய்த்தொடர்
2) வேலா வா- விளித்தொடர்
3) வந்து போனான்-பெயரெச்சத் தொடர்
4) வந்தான் வேலன்-தெரிநிலை வினைமுற்றுத் தொடர்
5) பெரியன் வேலன்- குறிப்பு வினைமுற்றுத் தொடர்
6) மற்றொன்று- இடைச்சொற்றொடர்
7) நனிபேதை- உரிச் சொற்றொடர்
8) பாம்பு பாம்பு  அடுக்குத் தொடர்
இவை தொகா நிலை தொடர்கள் ஆகும்.
தழுவு தொடர்
நிலைமொழியானது வருமொழியோடு பொருள் பொருத்தமுறத் தழுவிய தொடர் தழுவு தொடர் எனப்படும்.
உ.ம்
கண்ணன் வந்தான்.
தழா தொடர்
நிலைமொழியானது வருமொழியோடு பொருட்பொருத்தமுறத் தழுவாத தொடர் தழாதொடர் எனப்படும்.
(உ.ம்) சுரையாழ அம்மி மிதப்ப
சுரையாழ அம்மி மிதப்ப என்பது, சுரை மிதப்ப, அம்மி ஆழ எனக் கூட்டப்படுதலால் சுரை என்பது ஆழ என்பதையும் அம்மி என்பது மிதப்ப என்பதையும் தழுவாது தொடர்ந்தன.
இது தழா தொடராகிய அல்வழிப் புணர்சி ஆகும்.

139.எண்கள் புணரும் முறையை விளக்குக?
Image result for எழுத்து பிறக்குமிடம்
ஒன்று, இரண்டு என்ற இரு எண்களோடு வருமொழி முதலில் உயிர்வரின் ஓர், ஈர் என திரியும். வருமொழி முதலில் மெய்வரின் ஒரு இரு எனத் திரியும்.
(உ.ம்) ஒன்று+ஆயிரம்= ஓராயிரம் (ஒன்று என்பது முதல்)
ஒன்று+கழஞ்சு=ஒருகழஞ்சு (நீளாமல் ரகர மெய்)
இரண்டு+ஆயிரம்=ஈராயிரம் (இரண்டு என்பது முதல்)
இரண்டு+கழஞ்சு=இருகழஞ்சு (நீளாமல் ஈற்று உயிர்மெய்)
மூன்று என்பதற்கு சிறப்பு விதி
இறுதி உயிர்மெய் கெட்டு நின்ற மூன்று என்னும் எண்ணினது னகர மெய் கெடுதலும், வருமொழி முதலில் வரும் மெய்யாகத் திரிதலும் ஏற்குமிடங்களில் ஆகும்.
(உ.ம்) மூன்று+ஆயிரம்=மூவாயிரம் (உயிர்வர குறுகாமல்)
மூன்று+நூறு=முந்நூறு (வருமொழி மெய்யாகத் திரிந்தது)
நான்கு என்பதற்கு சிறப்பு விதி
நான்கன் மெய்யே லறஆ கும்மே
நான்கு என்பதில் இறுதி உயிர்மெய் கெட்டு நின்ற நான்கு என்னும் எண்ணினது னகரம், லகரமாகவும், றகரமாகவும் திரியும்.
கு கெட்டு விடும். ன்-ற் ல் ஆக மாறிவிடும்
(உ.ம்) நான்கு+அடி=நாலடி
நான்கு+கழஞ்சு=நாற்கழஞ்சு
ஐந்து என்பதற்குச் சிறப்பு விதி
ஐந்தன் ஒற்று அடைவதும் இனமும் கேடும்.
""து"" கெட்டுவிடும். அதே எழுத்தோ அல்லது அதன் இனவெழுத்து வரும்.
(உ.ம்) ஐந்து+மூன்று=ஐம்மூன்று
ஐந்து+கலம்=ஐ+கலம்=ஐங்கலம்
ஐந்து+வகை=ஐவகை
ஆறு, ஏழு தவிர்த்த பிற எண்களின் ஈற்று உயிர் கெடும்.
(உ.ம்) ஒன்று+ஆடு=ஓர் ஆடு (று கெட்டது)
மூன்று+தமிழ்=முத்தமிழ்
ஐந்து+வகை=ஐவகை
ஏழு என்பதின் ஈற்றுயிர் சில சமயம் கெடும்.
(உ.ம்) ஏழு+கடல்=ஏழ்கடல்
எட்டு என்பதற்கு சிறப்பு விதி
எட்டன் உடம்பு ணவ் வாகும் என்ப.
""டு"" என்னும் உயிர்மெய் கெட்டு ட், ண் ஆக மாறும்.
(உ.ம்) எட்டு+ஆயிரம்=எண்ணாயிரம்
எட்டு+வகை=எண்வகை
ஒன்பது என்னும் எண்ணுக்கான புணர்ச்சி விதி
தொண்ணூறு என்பது ஒன்பது+பத்து என்பதன் சேர்க்கை.
தொள்ளாயிரம் என்பது ஒன்பது+நூறு என்பதின் சேர்க்கை.
9+10 (பத்து என்பதை 100 என்று மாற்றிக் கொள்ள வேண்டும்.)
9+100 ஒகாரத்தோடு தகரம் சேர்க்க வேண்டும். பத்து என்பதை நீக்க வேண்டும்.
தொண்ணூறு என்பதில் ன கரத்தை ண கரமாக மாற்ற வேண்டும்.
தொ+ண்+நூறு
Image result for எழுத்து பிறக்குமிடம்
ஆ) தொள்ளாயிரம்
100யை 1000 ஆக்க வேண்டும்.
ஓகாரத்தோடு தகரம் சேர்க்க வேண்டும். பத்து என்பதை நீக்க வேண்டும். ன் என்பதை ல கரமாக மாற்றிக் கொள்ள வேண்டும்.
(உ.ம்) தொள்+ஆயிரம்= தொள்ளாயிரம்
பத்து, ஒன்பது என்பனவற்றின் முன் பிற எண்கள்
ஒன்று முதல் ஈர் ஐந்து ஆயிரம்கோடி
எண், நிறை, அளவும், பிறவரின் பத்தின்
ஈற்று உயிர் மெய்கெடுத்து இன்னும் இற்றும்
ஏற்பது ஏற்கும், ஒன்பதும் இணைத்தே.
பத்து என்பது நிலைமொழியாக வருமிடத்து வருமொழியில் எந்த எண்ணுடன் சேரும்போதும் இரண்டு வகையான மாற்றங்களை பெறும்.
i)இன் சாரியை பெறும்
ii)இற்றுச் சாரியை பெறும்
அ) இன் சாரியை பெறும்
(உ.ம்) அ) பத்து+ஒன்று=பதினொன்று
பத்+ஒன்று (து கெட்டது), பத்+இன்+ஒன்று
(இன் சாரியை தோன்றியது.) = பதினொன்று என புணர்ந்தது. இதுபோல், பதிமூன்று, பதினொன்று, பதிநாயிரம், பதின்கலம், பதின்மடங்கு போன்றவை புணரும்.
ஆ) இற்றுச் சாரியை
அ) பத்து+மூன்று=பதிற்று மூன்று
(உ.ம்) பத்+மூன்று (துகரம் கெட்டது) பத்+ற்+மூன்று (ற் சாரியை தோன்றியது)=பதிற்றுமூன்று என புணர்ந்தது.
பதிமூன்று= பத்து+மூன்று= பதிமூன்று என வரும்.
பதிற்று மூன்று= பத்து ஒ மூன்று= முப்பது என வரும்.
பத்து முன் இரண்டு
இரண்டு முன்வரின் பத்தின் ஈற்று உயிர்மெய்
கரந்திட ஏற்று னவ்வாகும் என்ப.
பத்தின்முன் இரண்டு வரின் இரண்டு மாற்றங்கள் நிகழும்.
அ) தீ கெடும்  ஆ) த்-ன் ஆகும்.
(உ.ம்) பத்து+இரண்டு=பத்+இரண்டு=பன்னிரண்டு

No comments: