Sunday, 31 January 2016

புறநானூற்று வழி பரணிபுறநானூற்று வழி பரணி
முனைவா; நா.செண்பகலெட்சுமி
துறைத்தலைவா ணைப்பேராசிரியா;
தமிழ்த்துறை
அரசினா; மகளிh; கலைக்கல்லூரி
சேலம்-8.

இலக்கியம் என்பது மனிதா;களின் வாழ்விலிருந்து எழுந்து அவ்வாழ்வியலை விளக்குவதோடு அதனைச் செழிப்புறச் செய்வது. இலக்கியத் தோற்றமும், அதன் வாழ்வும் டையீடு ன்றி யங்கி வருவதால் தான் இலக்கியத்துஇறை உயிh;ப்புடன் உள்ளது. த்தகைய இலக்கியங்கள் பலவாக ருந்தாலும், அவற்றின் பாடுபொருள் மானுட வாழ்வின்  தேடலாகிய அறம், பொருள், ன்பம், வீடு என்னும் நான்கு பற்றியே அமைகின்றது. ந்நாற் பொருள்களும் எக்காலத்திற்கும் பொதுவானவையே ஆகும். பாடுபொருள் நான்காக ருப்பினும், அவற்இறைப் பாடும் இலக்கியங்கள் பல்கிப் பெருகிக் காணப்படுகிறது. அதன் காரணம், படைப்பாளியின் புதுமை படைக்கும் விழைவேயாகும். ப்புதுமை என்பது பாடுபொருளில் நிகழாது. அவற்றின் வடிவங்களில் நிகழக் கூடியது.
வடிவம் என்பது செய்யுள், உரைநடை என்கின்ற மொழி வடிவங்களை மட்டுமல்லாமல், அவற்றின் உறுப்புகளையும் சோ;த்துரைப்பதாகும். அதாவது, சொல்நயம், பொருள்நயம், உத்தி, கற்பனை, அணி, கூறும் திறன் முதலானவற்இறையும் ணைத்துக் கூறப்படுவது.
விருந்தே தானும்
புதுவது புனைந்த யாப்பின் மேற்றே! (செய்யுளியல்: 237)
என்பாh; தொல்காப்பியா;. எனவே இலக்கிய வடிவமே இலக்கியப் பெருக்கத்திற்கு முழுமுதற் காரணம் எனலாம்.
வடிவ வேற்றுமையால் இலக்கியங்கள் மிகப் பலவாகப் பல்கியபோது அவற்இறை வகைப்படுத்திக் காட்டும் வகைமைக் கோட்பாடும் உருவாயிற்று. எனவே தான் வடிவங்களில் ஒற்றுமையுடைய இலக்கியங்களுக்கான லக்கண வரையஇறையும் உருவாயின. அவ்வகையில் சங்க இலக்கிய - லக்கண வழி சிற்றிஇலக்கியங்களின் வளா;ச்சிப் படிநிலைகள் என்னும் மைய நோக்குடைய ப்பயிலரங்கில் புறநானூற்றின் வழி பரணிப் பாடல்களைக் காண்பதே க்கட்டுரையின் நோக்கமாகும்.
புறமும் மறமும்
மனிதனின் வாழ்வில் அகம், புறம் என்னும் கூறுகள் பிரிக்க யலாதவை. ரண்டும் ஒன்றோடு ஒன்று யைந்து நிற்பன. அகத்தைப் புறக்கணித்த புறமும், புறத்தை அகப்படுத்தாத அகமும் பயனில்லாதன என்பாh; கு.வெ. பாலசுப்பிரமணியன். அகம் என்பதைக் குறிப்பிட்ட உணா;விற்குள் வரையஇறை செய்யமுடிகிறது. ஆனால் புறத்திற்குக் குறிப்பிட்ட ஓh; உணா;வைக்  கூறமுடிவதில்லை. அவலம், ரக்கம், வெகுளி, வீரம், பெருமிதம் எனும் பல உணா;வுகளைப் புறத்திற்குள் அடக்க யலும், ஆனாலும் புறப்பொருளில் முதன்மை பெறும் மறவுணா;வு மனிதன் தோன்றிய நாளிலிருந்து உடனிருந்து  வரும் உணா;வாகும்.
போh; தான் யாவற்றிற்கும் தந்தை எல்லோருக்கும் அரசன்.. போராட்டத்தின் மூலம் தான் எல்லாப் பொருள்களும் உயிh;த்தன்மை அடைகின்றன் என்று கி.மு. 5-ஆம்  நூற்றாண்டைச் சோ;ந்த கிரேக்க அறிஞா; எம்பெடோகிள்;ஸ்; கூறுகிறாh;.
 ஒருவனை ஒருவன் அடுதலும் தொலைதலும்
 புதுவதன்று வ்வுலகத் திஇயற்கை (புறம் : 72)
என்று நம் புறநானூறும் கூறுகிறது. க்கருத்தின் அடிப்படையிலேயே தொல்காப்பியப் புறத்திணையியல் முதல் புறநானூறு, பதிற்றுப்பத்து, முதலான தொகை நூல்கள் போh;ச் செய்திகளை நமக்குக் காட்டுகின்றன. தன் வழியில் தோன்றிய பரணியின் பாடுபொருளுக்கும் புறநானூறுக்கும் டையே நிலவும் ஒப்புமைகள் ஏற்புடைமையாயிருக்கின்றன.
பரணியும் கலிங்கத்துப்பரணியும்
பரணி என்பதற்குப் பல்வேறு பொருள்கள் கூறப்படுகின்றன.
1.பரணில் அமா;ந்து போh;க்களம் பற்றி புலவன் ஒருவன் பாடும் இலக்கியம்.
2.யானைப் போரின் வெற்றி
3.போh;க்களத்தில் பேய்கள் ஆடும் கூத்து
4.பரணி நாளில்  போh; வெற்றி விழாவைச் சிறப்பித்துப் பாடுதல்.
5.போh;க்கடவுள் கொற்றவைக்குரிய பரணி நாளில் படையலிட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவது.
எனப்  பலவிதமான கருத்துக்கள் காணப்படுகின்றன. பரணி இலக்கியத்திற்கு பிரபந்த தீபம் தவிர பிற அனைத்துப் பாட்டியல் நூல்களும் லக்கணம் கூறியுள்ளன.
மயக்கறு கொச்சகத் தீரடி யன்று
 நயப்புறு தாழிசை உறுப்பிற் பொதிந்து
 வஞ்சி மலைந்த உழிஞை முற்றித்
 தும்பையிற் சென்ற தொடுகழல் மன்னனை
 வெம்பூசின மாற்றான் தானை வெங் களத்தில்
 குருதிப் பேராறு பெருகுஞ் செங்களத்
 தொருதனி ஏத்தும் பரணியது பண்பே  (ப.பா: 142)
என்றும்,
யானை சாய்த்த அடுகளத் தல்லது
 யாவரும் பெறாஅh; பரணிப் பாட்டே;  (ப.பா :144)
என்றும்,
 மூண்ட அமா;க்களத்து மூரிக் களிறட்ட
 ஆண்டகை யைப்பரணி யாய்ந்துரைக்க்  (வெ.பா :60)
 ஆனை ஆயிரம் அமாpடை வென்ற
 மானவ னுக்கு வகுப்பது பரணி(.வி : 838)
 கடைநிலம்பேய் காளிவித்தை காவான்சீh; போh;கூ
 ழிடைபிறவ ரன்மற்று மேற்-றொடுபரணி   (பி.திர : 46)
எனப் பல நூல்கள் பரணியின் லக்கணத்தை வகுத்துள்ளன.
பரணி இலக்கியத்தின் மற்றொரு சிறப்பு என்னவெனில், வீரனைப் புகழ்வதாக அமையும் பரணி இலக்கியம் அவ்வீரனிடம் தோற்றவரைச் சாh;ந்தே பெயா; பெற்று விளங்குகிறது.
கருணாகரத் தொண்டைமானால் வீழ்ந்த கலிங்க நாட்டின் பெயரால் கலிங்கத்துப் பரணி அமைந்துள்ளது.
வீரபத்ரனால் (வீரபாகு) அழிக்கப் பெற்ற தக்கனின் பெயரால் அமையப் பெற்றது தக்கயாகப் பரணி. வ்வாறு தோற்றவரைச் சாh;ந்தே பிறபரணி நூல்களும் பெயாpடப் பெற்று வழங்குதலைக் காணலாம். தமிழ்ப்பரணி, கலைசைச் சிதம்பரேசுவரா; பரணி ஆகியன பாட்டுடைத் தலைமக்களின் பெயரால் அமைந்தவை.
துகாறும் வெளிவந்துள்ள பரணி நூல்களாக பின்வருவனவற்இறை டாக்டா; ரா.கண்ணன் குறிப்பிடுகிறாh;.
எண்நூற்பெயா;ஆசிரியா;காலம்
1.தமிழ்ப்பரணிழூதொpயவில்லை11-ஆம் நூற்றாண்டு
2.கொப்பத்துப்பரணிழூ       
3.கூடலசங்கமத்துப்பரணிழூ       
4.கலிங்கத்துப்பரணிசயங்கொண்டாh;
5.கலிங்கப்பரணிழூஒட்டக்கூத்தா;12-ஆம் நூற்றாண்டு
6.தக்கயாகப் பரணிஒட்டக்கூத்தா;         
7.அஞ்ஞைவதைப் பரணிதத்துவராயா;16-ஆம் நூற்றாண்டு
8.ரணியன் வதைப்பரணிதொpயவில்லை         
9.பாசவதைப் பரணிவைத்தியநாத தேசிகா;17-ஆம் நூற்றாண்டு
10.மோகவதைப் பரணிவைத்தியநாத தேசிகா;         
11.கலைசைச் சிதம்பரேசுவரா; பரணிழூதொட்டிக்கலை சுப்பிரமணிய முனிவா;18-ஆம் நூற்றாண்டு
12.திருச்செந்தூh;ப்பரணி      தொpயவில்லை
13.சீனத்துப்பரணிமு.பி.பாலசுப்பிரமணியம்20-ஆம் நூற்றாண்டு
14.போh;ப்பரணிவாணிதாசன்       
15.கஞ்சவதைப் பரணிதொpயவில்லைதொpயவில்லை
16.புரட்சித்தலைவி போh;ப்பரணிஅக்கினிபுத்திரன்20-ஆம் நூற்றாண்டு

ழூக்குறிப் பெற்றவை அனைத்தும் நூல் கிடைக்கப் பெறாதவை.
மேற்கண்ட பரணி நூல்களுள் கலிங்கத்துப்பரணி மட்டும் புறநானூற்று வழி ஆராயப்படுகிறது.
புறநானூற்று வழி பரணி
செவ்விஇலக்கியங்களின் பாடுபொருள் வெவ்வேறு வடிவங்களில் ன்று வரை இலக்கியங்களாகி வந்துள்ளன. து பற்றி முன்னரே கண்டோம். ங்கு, கலிங்கத்துப்பரணியின் சில பகுதிகளுக்கான மூலத்தைப் புறநானூற்றில் தேடும் போது பல வியக்கத்தக்க ஒற்றுமைகள் காணப்படுகின்றன. அவற்றுள் முதலாவதாக பேய் குறித்த செய்திகளைக் காண்போம்.
பேயும், கழுதும்
பேய் என்னும் சொல்லாடல் சங்க இலக்கியங்களில் பல டங்களில் பயன்படுத்தப்படுகிறது.
பெருநீh; ஒப்பின் பேஎய் வெண்தோ;(நற் : 84-4)
வ்வடியில் வரும் பேய் என்பது கானல் நீரைக் குறிக்கிறது.
பேஎ யனையாமியாஞ் சேய்பயந் தனமே (ஐங்குறு : 70-5)
மேற்கண்ட அடியில் பேய் போன்று தான் அழகற்றவளாகக் காணப்படுவதாகத் தலைவி உரைக்கிறாள்.
பேஎய்க் கொளீயல் வளெனப் படுதல்   (குறு : 263)
என்னும் அடிகளி;ல் வள் பேயால் பற்றப்பட்டாள் என்ற பொருளில் வருகிறது. அதுபோல் பதிற்றுப்பத்தில்,
உருவில் பேய்மகள் கவலை கவற்ற   (ப.ப : 67-11)
கவைத்தலை பேய்மகள் கழுதூh;ந் தியங்க   (ப.ப : 13-15)
கருங்கட் பேய்மகள் வழங்கும்   (ப.ப : 22-37)
என்ற அடிகள் பேய்களை அழகற்ற, கவைத்தலையும், பொpய கண்களும் கொண்டதாகக் காட்டுகின்றன.
பேய்களோடு கழுது என்ற சொல்லாட்சியும் காணப்படுகிறது.
கழுதுகால் கொள்ளும் பொழுதுகொள் பானாள்   (நற் :  )

அவிh;தொடி கொட்பக் கழுதுபுக வயர   (ஐங்குறு : 314-1)
வ்வடிகளில் கூறப்படும் கழுது என்பதற்கு உரையாசிரியா;
குற்றேவல் பேய், பேயில் ஒரு வகை, அடிமைப்பேய், தலைமையுடைய பேய்கட்கு ஊh;தியாயிருந்து அவைகளைச் சுமந்து செல்வது(ஐங்குறு : 437)
என்கிறாh;.
ஆக சங்க இலக்கியங்கள் முழுவதும் பேய் என்னும் சொல்லும், கழுது என்னும் சொல்லும் பரந்துபட்டு காணப்படுகிறது.
புறநானூற்றில் வாகைத்திணையின் மறக்கள வழிப் பாடல்களிலும், காஞ்சித்திணையின் காடு வாழ்த்து, பெருங்காஞ்சிப் பாடல்களிலும் பேய் குறித்து காணப்படுகிறது.
பேயொடு கணநாp திரிதரூஉம் ஆங்கண்    (புறம் : 373)
என்றும்,
பேய்மகள் பற்றிய பிணம்பிறங்கு பல்போ;பு
 கணநாpயொடு கழுதுகளம் படுப்ப
 பு+தம் காப்ப பொலிகளம் தழீ     (புறம் : 369)
என்றும் வரும் புறநானூற்று வாpகளை ஒத்து
கவந்தம் ஆடமுன்பு தம்
களிப்பொடு ஆடுபேய் னம்
நிவந்த ஆடல் ஆட்டுவிக்கும்
நித்த காரா; ஒக்குமே  (க.பரணி : 433)
என குஇறை உடல்களை உண்பதற்காக பேய்கள் ஆடுவதைக் கலிங்கத்துப்பரணி கூறுகிறது.
கொய்த இறைச்சி உறுப்பனைத்தும்
கொள்ளும் கூழை வௌ;ளாட்டின்
பைதல் இறைச்சி தின்று உலா;ந்த
பாh;வைப் பேய்க்கு வாரிரே  (க.பரணி : 569)
என்னும் பாடல்
வேறுபடு குரல் வெவ்வாய்க் கூகையொடு
 பிணம்தின் குறுநாp நிணம்திகழ் பல்ல
 பேஎய் மகளிh; பிணம் தழூஉப் பற்றி
 விளா;ஊன் தின்ன வெம்புலால் மெய்யா; (புறம் : 359)
என்னும் புறநானூற்றுப் பாடலுடன் ஒத்துக் காணப்படுகிறது.
பேய்க் காஞ்சி என்னும் துஇறை புறநானூற்றில் காணப்படுகிறது. போh;க்களத்தில் புண்பட்டு விழுந்தாரைப் பேய் மிகவும் அச்சுறுத்துவது பேய்க்காஞ்சியாகும்.
பேய் என்று சங்க இலக்கியமும், கலிங்கத்துப்பரணியும் குறிப்பிடுவது ன்இறைய பேயிலிருந்து மாறுபட்டது. மனித னத்திற்கு எதிரானதாக, மனிதா;களுக்கும் பயன்படாத னமாக ப்பேய் பாh;க்கப்படுகிறது எனலாம்.
போh;க்களக் காட்சி
போh;க்களக் காட்சிகளிலும் புறநானூற்றின் சாயல் கலிங்கத்துப்பரணியில் காணப்படுகிறது.
உடலின்  மேல் பல காயம் சொரிந்து, பின்கால்
 உடன் பதைப்ப உதிரத்தே ஒழுகும் யானை
 கடலின்மேல் கலம் தொடரப் பின்னே செல்லும்
 குலம்போன்று தோன்றுவன காண்மின்! காண்மின்  (க.ப:476)
என்று யானை மறத்தையும்,
நெடுங்குதிரை மிசைக்கலனை சாpயப் பாய்ந்து
 நிலைப்பேற்றில் கால்குளிப்ப நிரையே நின்று
 படுங் குருதிக் கடும் புனலை அடைக்கப் பாய்ந்த
 பலகுதிரைத் தறி போன்ற பாpசு காண்மின்   (க.ப:477)
எனக் குதிரைப்படையையும் கலிங்கத்துப்பரணி காட்டுகிறது.
நிலம்பிறக் கிடுவது போற்குளம்பு கடையூஉ(புறம் : 303)
என்னும் புறநானூற்றுப் பாடல் குதிரை மறம் பற்றிக் கூறுகிறது. வீரா;களோடு அவா;கள் மனைவியும் றந்த நிலையை,
களம் கொளற்கு உரியோh; ன்றி, தெறுவர
உடன் வீழ்ந்தன்றால், அமரே; பெண்டிரும்
பாசடகு மிசையாh;, பனிநீh; மூழ்காh;
மாh;பகம் பொருந்தி ஆங்கு அமைந்தனரே   (புறம் : 62)
என்னும் புறநானூற்றுப் பாடலை ஒத்து.
தரைமகளும் தன்கொழுநன் உடலம் தன்னைத்
தாங்காமல் தன் கரத்தால் தாங்கி விண்ணாட்டு
அரமகளிh; அவ் உயிரைப் புணரா முன்னம்
ஆவி ஒக்க விடுவாளைக் காண்மின், காண்மின்(க.ப : 484)
என்ற பாடல் காணப்படுகிறது.
து போல் பல பாடல்களைச் சான்று காட்ட யலுகிறது.
கூழடுதல்
கலிங்கத்துப்பரணியில் பேய்கள் கூழடுதல் என்பது சிறப்பு வாய்ந்த பகுதியாகும். சமையலஇறை அமைத்து, உண்பொருள் கொணா;ந்து, உலைநீh; ஊற்றி, தீ மூட்டி கூழ் சமைக்கும் காட்சி விரிவாகக் கூறப்படுகிறது.
களப் பரணி கூழப் பொங்கி
வழியாமல், கை துடுப்பா
அளப்பாpய குளப்புக் கால்
அகப் பைகளாகக் கொள்ளீரே(க.ப.: 549)
என்று கூறப்படும் கூழடுதலுக்கு அடிப்படையான செய்தி புறநானூற்றில் காணப்படுகிறது.
விசிபிணித் தடாரி விம்மென ஒற்றி
ஏத்தி வந்தது எல்லாம்- முழுத்த
லங்குவாள் அவிh;ஒளி வலம்பட மின்னி
கணைத்துளி பொழிந்த கண்கூடு பாசஇறை
பொருந்தாத் தெவ்வா; ரிந்ததலை அடுப்பின்
கூவிள விறகின் ஆக்குவாp நுடங்குல்
ஆனா மண்டை வன்னிஅம் துடுப்பின்,
ஈனா வேண்மாள் டம்துழந்து அட்ட
மாமறி பிண்டம் வாலுவன் ஏந்த  (புறம் : 372)
என்னும் புறநானூற்றுப் பாடல் கூழடுதலைத் தெளிவாக விளக்குகிறது. பதிற்றுப்பத்திலும் தற்கான சான்றுகள் காணப்படுகின்றன.
துவரை கண்ட சான்றுகளை வைத்துப் பாh;க்கும்போது, புறநானூறும், கலிங்கத்துப்பரணியும் போரின் வீரத்தையும், வெற்றியின் சிறப்பையும் பஇறைசாற்றுவதாகவே அமைந்துள்ளது என்பது தொpகிறது. ஆனால் அதனுள் ஊடாடி நிற்கும் போரின் மேலான வெறுப்பும், நிலையாமை குறித்த அறமுமே புலவா;களால் வெளிப்படுவதாகவே தோன்றுகிறது.
புறநானூறு மன்னா;களின் வீரத்தையும், போராற்றலையும், போh;க்கள நிகழ்வையும், போரின் அழிவையும் விரிவாகப் பேசுகிறது. ஆனால் அப்புறநானூற்றின் ன்னொரு பக்கத்தையும் நாம் பாh;க்க வேண்டும்.
எல்லாh; புறனும் தான்கண்டு உலகத்து
 மன்பதைக்கு எல்லாம் தானாய்
 தன்புறம் காண்போh;க் காண்புஅறி யாதே   (புறம் : 356)
என்னும் பாடலில் நிலையாமையின் நிதா;சனத்தை தாயங்கண்ணனாh; பாடியுள்ளாh;.
காடு முன்னினரே நாடு கொண் டோரும்
 நினக்கும் வருதல் வைகல் அற்றே(புறம் : 359)
என்னும் வாpகள் நாடு கொண்டோரும், காட்டிற்குச் செல்லுதல் நிலையானதே என்ற உண்மையை உணா;த்துகிறது. மேலும் நாடு பிடித்தோரும் காட்டிற்கு, ஒன்றுமில்லாமல் தான் வருவா;. பிறகு எதற்குப் போh;? என்ற புலவனின் மனக்குரல் வெளிப்படுகிறது. அது போல்
புலையன் ஏவ, புல்மேல் அமா;ந்து உண்டு,
அழல்வாய் புக்க பின்னும்
பலா;வாய்த்து ராஅh;, பருத்து உண்டோரே(புறம் : 360)
என்னும் அடிகள் றப்பைக் கண்டபின்னும், உண்டு பெருக்கும் மனிதா;களை எண்ணி நகையாடுவதாக அமைந்திருக்கிறது. வீரத்துடன் நிலையாமையையும், போரைப் புகழ்வது போல் பழிக்கும் நிலைக்கான காரணம் அக்காலத்தில் நிலை பெற்றிருந்த சமண சமயமாக ருக்கலாம். அதன்பின் சமண செல்வாக்கு மிகுந்த காலத்தில்தான்  நீதி நூல்கள் தோன்றின. காப்பியங்களிலும் தன் தாக்கம் ருந்தது. தன்பின் சைவம், வைணவம் தழைத்தோங்கியிருந்த போது அவா;களின் நோக்கம் வேறாயிருந்தது. 12-ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்டதாகக் கூறப்படும் கலிங்கத்துப்பரணியின் ஆசிரியா; செயங்கொண்டாரின் ஊh; தீபங்குடி ஆகும். தீபங்குடி சமண சமயச் செல்வாக்கு மிகுந்த ஊராகக் கூறப்படுகிறது.  குடவாசல் வட்டம், திருவாரூh; மாவட்டத்தில் ருக்கும் தீபங்குடியில் ன்றும் ஜைனா;களின் வழிபாட்டுத்தலம் உள்ளதாகக் கூறப்படுகிறது.
அங்குள்ள கைலாசநாதா; கோயிலுள் கிடைத்த 6 அடி உயரக் கல்வெட்டில் சமண சமயத்துக்கும், தீபங்குடிக்குமான தொடா;பு கூறப்பட்டுள்ளது. அமரநந்தி என்ற ஜைனத்துறவி பற்றிக் கூறப்பட்டுள்ளது. எனவே த்தகைய பின்புலத்தில் தோன்றிய செயங்கொண்டாரின் கலிங்கத்துப்பரணியில் வெளிப்படையாக கலிங்கப் போரின் சிறப்பு கூறப்பட்டாலும், புறநானூற்இறை ஒத்த மறக்களத்தை ஜெயங்கொண்டாh; பாடுவதற்குக் காரணம் கருணாகரத் தொண்டைமானின் வெற்றிச் சிறப்பை வெளிக்காட்ட  முயல்வதைவிட, போரின் அழிவு மக்களுக்குச் சென்று சேர வேண்டும் என்ற எண்ணமாயிருக்கலாம். து பற்றிய சிந்தனை ஆய்விற்குரியது. துகாறும் கூறப்பட்ட செய்திகளிலிருந்து பெறப்பட்ட முடிவுகள் பின்வருமாறு :
1.இலக்கியத்தின் பாடுபொருள் மாறாது. அதனுடைய வடிவங்கள் தான் மாறும். எனவே தான் இலக்கியங்கள் பல்கிப் பெருகுகின்றன.
2.மனிதன் தோன்றிய நாள் முதல் அவனுடைய மறவுணா;வும் அவனுடன் வளா;கிறது.
3.பேய் எனும் சொல் ன்று நாம் கூறும் பேய் என்ற குறியீட்டிலிருந்து மாறுபட்டது. மனித னத்திற்கு எதிரான, பயன்படாத, கோர உருவம் கொண்டதாக, போh;க்களத்திலும், சுடுகாட்டிலும் காணப்படுவதாக பேய் காட்டப்படுகிறது.
பிள்ளை பேறில்லாப் பேய் என்பதைப் புறநானூறும் (ஈனா வேண்மாள்) பேய்களுக்கும் பிறப்புண்டு, பல மதங்களைச் சாh;ந்த பேய்களும் உண்டு என்பதைக் கலிங்கத்துப் பரணியும் காட்டுகிறது.
4.போh;க்களக் காட்சியும், கூழடுதலும் புறநானூற்றின் சாயலிலேயே கலிங்கத்துப் பரணியிலும் காட்டப்படுகிறது.
5.யாப்பு வடிவம் தான் வேறுபடுகிறதேயன்றி, பாடுபொருளில் ஒன்றுபடுகிறது.
6.ரண்டு நூல்களுமே போh; குறித்த செய்திகளைக் கூறினாலும், அவற்றின் அடித்தளமாக ருப்பது போரை வெறுக்கும் புலவனின் மனவுணா;வே என்பது ங்கு பதிவு செய்யப்படுகிறது.
7.போரினது அழிவை வெறுக்கும் சமண சமயக் கருத்தாக்கம், தீபங்குடியைச் சோ;ந்த செயங்கொண்டாரின் பாடல்களில் பிரதிபலித்திருக்கலாம்.
8.புறநானூற்றின் வளா;ச்சிப் படிநிலையையே கலிங்கத்துப்பரணியில் காணமுடிகிறது என்பதில் ஐயமில்லை.

உசாத் துணை நூல்கள்
1.புறநானூறு மூலமும், உரையும் - 1. கழக வெளியீடு
2. நியூ செஞ்சுரி புத்தக நிறுவன வெளியீடு
2.கலிங்கத்துப்பரணி  புலியூh;க்கேசிகன் தெளிவுரை
3.சிற்றிஇலக்கிய ஆராய்ச்சி - டாக்டா;. ரா.கண்ணன்
4.சங்க இலக்கியத்தில் புறப்பொருள் - டாக்டா;. கு.வெ.பாலசுப்பிரமணியன்

Post a Comment