தமிழ்த்துறை நிகழ்வுகள் 2017 -2018
துறை நிகழ்வுகள் 2017 -2018
5.7.2017 இளங்கலை
முதலாண்டு மாணவர்களுக்கான அறிமுக கூட்டம் நடைபெற்றது. முன்னாள் குடியரசு
தலைவர் அப்துல்கலாம் அவர்களின் படம் திறந்து வைக்கப்பட்டது.
7.08.2017 & 8.08.2017 தன்னாட்சி பாடத்திட்டத்திற்கான வல்லுநர் குழு
கூட்டம் நடைபெற்றது. துறைப் பேராசிரியர்கள் புறப்பாடத்திட்ட வல்லுநர்கள்துனைவர்
ஆறுமுகம், முனைவர் உலகு சுப்ரமணியம், வா.மு.சே. ஆண்டவர், முனைவர் வீரமணி, முனைவர்
ஆர்.கண்ணன்,முனைவர் க.கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் இளங்கலை,முதுகலை மற்றும்
ஆய்வியல் நிறைஞர் பாடங்களுக்கான பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டன.
12.10.2017 சேலம் மாவட்ட ஆட்சித் தலைவரின்
தலைமையில், தமிழ்த்துறையில் பசுமை புரட்சி, இயற்கை உணவு, சுகாதார பொருட்காட்சி,
40க்கும் மேற்பட்ட கடைகளுடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இக்கடைகளில் இயற்கை
சார்ந்த முசுமுசுக்கை சூப்,முருங்கைப்பூ சூப், தூதுவளைசூப்,கொள்ளுநரிப் பயிறு
சூப்,மணத்தக்காளிபூசூப், ஆவாரம்பூசூப்,பொன்னாங்கன்னி
சூப், நெருஞ்சிமுள்சூப், வாழைத்தண்டு பூ சூப் என அரிய பல மூலிகை சூப் வகைகள் விற்கனை
செய்யப்பட்டன. நவதானிய சுண்டல், சிறுதானிய உருண்டைகள், தேனில் ஊறிய நெல்லிக்கனி,
உளுந்துகஞ்சி, திணைபாயாசம், இனிப்புஅவல், அதிரசம்,மூலிகை ஊறுகாய்
வகைகள் ,வாழைப்பழம்,இளநீர், நுங்கு, இயற்கை அழகு சாதனப் பொருட்கள், பருத்திப்
புடவைகள், புத்தகக் கடைகள் என பல கடைகள் அமைக்கப்பட்டன. மாணவர்கள் சுயதொழில்
செய்வதற்கான அடித்தள மேம்பாட்டுத்திறன் பெற்றனர்.
14.10.017 ஒருநாள் கணினித் தமிழ் பயிலரங்கு
“இலக்கியத்தில் பெருந்தரவு பகுப்பாய்வு” (Big Data Mining in Literature) என்னும் தலைப்பில்
முனைவர். சு.சந்திரசேகரன் –ஸ்ரீரங்கநாதர் பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி,
கோவை அவர்கள் தலைமையில் சிறப்பாக நடை பெற்றது.
8.12.2017 அன்று விக்கிப்பீடியாவில் பங்கேற்பது தொடர்பான
பயிற்சியினை மாணவர்கள் பெற்றனர்.
18.12.2017 மாணவர்களின் தனித்திறனை
மேம்படுத்தும் வகையில் கலைநிகழ்ச்சிகளுக்கான போட்டிகள் நடத்தப்பட்டன. தனிநடனம்,
குழு நடனம், பாட்டு, பலகுரலில் பேசுதல், நாடகம், சிலம்பாட்டம், கரகாட்டம், கராத்தே
என பல திறமைகளை மாணவர்கள் வெளிப்படுத்தினர்.
3.1.2017 தமிழ்மன்ற விழா நடைபெற்றது. “மறக்கப்பட்ட
தமிழகத் தலைவர்களும் அவர்களின் தமிழ்ப்பணிகளும்“
என்ற தலைப்பில் பேச்சாளர் அனிதா கு.கிருஷ்ணமூர்த்தி அவர்கள் சொற்பொழிவாற்றினார்.
போட்டியில் வென்ற மாணவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
14.7.2017 – சித்த மருத்துவம்
என்ற பாடத்திட்டத்திற்கு வடிவம் கொடுக்கும் வகையில் மூலிகைப்பண்ணை அமைப்பட்டது.
18.8.2017- 100 கன்றுகள் வனத்துறைமூலம்
பெறப்பட்டு, துறைத்தலைவரின் முன்னிலையில் ஆசிரியர்களும் மாணவர்களும் இணைந்து
வளாகத்தைப் பசுமையாக்கும் வகையில் மரம்நடும் விழா நடத்தினர்.
7.9.2017 ஆயுதபூசை, சரஸ்வதி பூசையின் பொருட்டு மாணவர்களுக்குக் கோலம் இடுதல், பூ கட்டுதல், மருதாணி வைத்தல் முதலான போட்டிகள் நடத்தப்பட்டது.
கோலப்போட்டியில் மாணவர்களே வென்றனர்.
28.9.2017 துறையினை அழகுபடுத்தும் பொருட்டு
அனைத்துப் பேராசிரியர்களும் இணைந்து ஒருமித்த கருத்துடன் ஒரே மாதிரியான மேசை விரிப்பு, பெயர் பலகை போன்றவற்றை அமைத்தனர்.
10.1.2018 இந்தியா வேற்றுமையில் ஒற்றுமை காணும்
நாடு என்பதை நிரூபிக்கும் வகையில் இந்து,
இசுலாம், கிருத்துவ மாணவர்கள் இணைந்து நடத்திய, சமத்துவ பொங்கல் விழா
கொண்டாடப்பட்டது.
19.1.2018 துறை நிகழ்வுகளைப் புகைப்படங்கள் வழி
காட்சிப்படுத்துதல் தொடர்பான பணிகளைத் துறை பேராசிரியர்கள் மேற்கொண்டனர்.
25.1.2018 தேசியதர மதிப்பீட்டுக்குழு தொடர்பான உள் மதிப்பீட்டு பணிகளைப் புறமதிப்பீட்டாளர்கள்
பார்வையிட்டனர்.
2.2.18 அன்று இசை வகுப்பு நடைபெற்றது.
ஆசிரியர்களும் மாணவர்களும் திருப்புகழ் பாடல்களைச் சந்தத்துடன் பாடக் கற்றனர்.
4.2.2018 கம்பன் கழகத்தில் நடைபெற்ற கம்பன்
சொற்பொழிவில் முனைவர் பட்ட மாணவர்கள் து.ராணி, க. கவின்பிரியா, கலைக்கேசவன்,
கார்த்திகா போன்றோர் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றி பாராட்டைப் பெற்றனர்.
2.2.2018
- துறைத்தலைவரின்
பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
2017 -2018 கல்வியாண்டு - தமிழ்த்துறை –பொதுவாய்மொழித்தேர்வு மற்றும் கணினி பயிலரங்கு
கீழ்க்கண்ட தலைப்புகளில் வாய்மொழித்தேர்வுகள் நடைபெற்றன.
1. 23.6.2017
- இலட்சுமி புதினங்களில் வாழ்வியல் கூறுகள்
2. 28.6.2017 வாசந்தி புதினங்களில் கதைக்கருவும்
சமுதாய கருத்தியல் வளமும்
3. 05.07.2017 எட்டுத்தொகையில் அகமும் அகவெளியும்
4. 6.7.2017 வரலாற்று நோக்கில் பக்தி
இலக்கியங்கள்
5. 10.7.2017 பதிணென் கீழ்க்கணக்கில் அறிவியல்
6. 11.7.2017 ஓமலூர் வட்ட தாலாட்டுப் பாடல்களில்
வாழ்வியல் கூறுகள்
7. 1.9.2017 சேலம் மாவட்ட வன்னியர் குல மக்களின்
சடங்கு முறைகள்
8. 4.9.2017 பன்முக நோக்கில் சு.போசுவின்
படைப்புகள்
9. 8.12.2017 சிலப்பதிகாரத்தில் காப்பிய மரபுகள்
10. 11.12.2017 - புதிய தலைமுறை இதழ்களில்
சமுதாய விழிப்புணர்வுச் சிந்தனைகள்
11.1 4.12.2017 தமிழ்ச்சிறுகதைகளில் குழந்தை சித்திரிப்பு
No comments:
Post a Comment