Friday 18 October 2013

பி.ஏ., தமிழ் முதன்மைப்பாடம் -இரண்டாம் பருவம்

இரண்டாம் பருவம்


அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),
சேலம் - 636 007.
பகுதி - 1 தமிழ் - இரண்டாம் பருவம் (2013 - 2014 கல்வியாண்டு முதல்)
தாள் : 2 இடைக்காலச் சமய இலக்கியங்களும் தமிழ்ச்செம்மொழி வரலாறும்   13FTL 02


பாடநோக்கம்    :
1.    தமிழ் மொழியில் உள்ள சைவ, வைணவ இலக்கியங்களை அறிதல்
2.    சமய இலக்கியத் தோற்றத்திற்கான வரலாற்றுப் பின்புலத்தை அறிதல்
3.    தமிழ் மொழியின் செம்மொழிப்புண்புகளைக் கற்றல்
4.    தமிழ்ச் சிற்றிலக்கியங்களின் இலக்கியச் சிறப்பைக் கற்பித்தல்
மாணவர் பெறும் திறன் :
1.    தமிழ்ப்  பக்தி இலக்கியங்கள் பற்றி அறிகிறான்
2.    நாயன்மார், ஆழ்வார்களின் பக்தியை உணர்கிறான்
3.    சிற்றிலக்கியங்களின் இலக்கியச் சுவையை அறிவதன் மூலம் தமிழ் இலக்கியங்கள் மீதான ஆர்வத்தைப் பெறுகிறான்
4.    தமிழ்மொழி, செம்மொழி என்பதையும் அதன் பண்புகளையும் அறிகிறான்

உள்ளடக்கம்
அலகு 1 : சமய இலக்கியங்கள்
    அ. சுந்தரர்  - தேவாரம் - ‘திருப்புக்கொளியூர் அவிநாசி’
    ஆ. குலசேகராழ்வார் - ஐந்தாம் திருமொழி - ‘தருதுயரம் தடாயேல்’
    இ. பட்டினத்தார் பாடல்கள் - பாடல் எண்  5, 7, 13, 18, 19
    ஈ. வீரமாமுனிவர் - திருக்காவலூர் கலம்பகம்  (புயவகுப்புப் பகுதி)
    உ. குணங்குடி மஸ்தான் சாகிபு பாடல்கள் - பராபரக்கண்ணி (1-10 கண்ணிகள் )

அலகு  2 : சிற்றிலக்கியங்களும் தனிப்பாடல்களும்
    அ. முத்தொள்ளாயிரம் -    சேரன்     -  ‘அடைப்பும் திறப்பும்’ (2)
                                    ‘இழந்ததும் பெற்றதும்’ (3)
-    சோழன்     -   ‘பெரும்பழி’ (24) 
                      ‘கானல் நீர்’ (25)
-    பாண்டியன் - ‘ஆற்றாமையும் அறியாமையும்’ (55)
                       ‘நானும் இழப்பதா’ (56)
ஆ. தமிழ்விடு தூது     -   முதல் 16 கண்ணிகள்
இ. காளமேகம்           -  தனிப்பாடல் திரட்டில் 5 பாடல்கள்
ஈ.  ஔவையார்      - பாடல் எண் 12, 31,  39, 50, 66
உ. நந்திக்கலம்பகம்      - பாடல் எண் : 6, 12, 13, 21, 23, 68 (சூஊக்ஷழ பதிப்பு)
ஊ. கலிங்கத்துப்பரணி  - களம் பாடியது (முதல் பத்து பாடல்கள்)
எ. முக்கூடற்பள்ளு       - பள்ளியர் தம் நாட்டுவளம் கூறுதல்        


அலகு  3 : தமிழ்ச்செம்மொழி வரலாறு
மொழி - விளக்கம் - மொழிக்குடும்பங்கள் - உலகச் செம்மொழிகள் - இந்தியச் செம்மொழிகள் - செம்மொழித்தகுதிகள் - வரையறைகள் - வாழும் தமிழ்ச்செம்மொழி - தமிழின் தொன்மை - தமிழின் சிறப்புகள் - தமிழ்ச்செம்மொழி நூல்கள் .

தமிழ்ச்செம்மொழி அறிந்தேற்பு - பரிதிமாற் கலைஞர் அவர்கள் முதல் கலைஞர் திரு மு.கருணாநிதி அவர்கள் வரை ( அறிஞர்கள் - அமைப்புகள் - நிறுவனங்கள் - இயக்கங்கள் தொடர் முயற்சிகள் - அறப்போராட்டங்கள் - உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு, கோவை - 2010)

அலகு 4 : இலக்கிய வரலாறு
    அ. தமிழ்ச் சிற்றிலக்கிய வரலாறு
    ஆ. பன்னிரு திருமுறை
    இ. நாலாயிர திவ்வியப் பிரபந்தம்
    ஈ. கிறித்துவர் தமிழ்த் தொண்டு
    உ. இசுலாமியர் தமிழ்த்தொண்டு
    எ. பதினெண் சித்தர்கள்

அலகு 5 :  மொழித்திறன்
    அ. சந்தி விதிகள்
    ஆ. சொற்றொடர் பிரிப்பும் சேர்ப்பும்
    இ.  வலி மிகும் இடங்களும் மிகா இடங்களும்
    ஈ.  சொற்றொடர் மாற்றம்
        தன்வினை         - பிறவினை
        செய்வினை        - செயப்பாட்டு வினை
        உடன்பாட்டு வினை    - எதிர்மறை வினை
        நேர்க்கூற்று        - அயற்கூற்று
    உ. அலுவலகக் கடிதம் எழுதுதலும் விண்ணப்பம் எழுதுதலும்

திட்டக்கட்டுரைகள் :
1.    பக்தி இலக்கியத் தோற்றம்
2.    பன்னிரு திருமுறைகள்
3.    நாலாயிர திவ்விய பிரபந்தம்
குழுச்செயல்பாடு :
1.    நாயன்மார் வாழ்ந்த தலங்களுக்குச் சுற்றுலாச் செல்லுதல்
2.    தேவாரம் ஓதுவார்களின் இசைப்பாடல்களைக் கேட்டல்
3.    சிற்றிலக்கியங்களின் இலக்கிய நயங்களை விவாதித்தல்
   
பார்வை நூல்கள்
1.    அ.கி.பரந்தாமனார்            - நல்ல தமிழ் எழுதவேண்டுமா?
                       ( பக். 214 -280; 337- 348)
2.    புலவர் கோ.இளையபெருமாள்    - தமிழில் பிழையின்றி எழுதுவது எப்படி?
                         ( பக். 48-64, 69-70, 116- 119)

3.    கா. பட்டாபிராமன்            - மொழிப்பயன்பாடு
                          ( பக். 30-59)
                          நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (2005)
                          சென்னை - 600 020.
4.    முனைவர் பா.ரா.சுப்பிரமணியன்    - தமிழ்நடைக் கையேடு ( பக். 74.101)
                         அடையாளம் (2004)
                         1205/1, கருப்பூர் சாலை,
                          புத்தநத்தம் -621 310.
5.    கலைஞர் மு.கருணாநிதி        - செம்மொழி வரலாற்றில் சில செப்பேடுகள்
6.    ஆய்வரங்கச் சிறப்பு மலர்        - உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு,
                        கோவை - 2010.
7.    சென்னை மாநகர் தமிழ்ச்சங்கம்    - தமிழ்ச் செம்மொழி ஆவணம்
ஆசிரியர் குழு                மணிவாசகர் பதிப்பகம்,
                        சென்னை -2005.
8.    கால்டுவெல்            - திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்
                        கழக வெளியீடு, சென்னை.
9.    மு.அருணாசலம்            - தமிழ் இலக்கிய வரலாறு
   அருண் பதிப்பகம்,
   திருச்சி - 1.
10.    மு.வரதராசன்            - தமிழ் இலக்கிய வரலாறு
    சாகித்திய அகாடமி,
    புது தில்லி.
இணைய முகவரிகள்:
1.   
1.        www.tamilheritage.org
2.       www.thehistoryofsrivaishnavam. weebly.com
3.       www.sivasiva.dk
4.      www.shaivam.org
5.       www.periyapuraana.minhinduism.blogspot.com
 -----------------------------------------------------------------------------------------------------

இரண்டாம் பருவம் - (2013 - 2014 கல்வியாண்டு முதல்)
முதன்மைப்பாடம் : தாள் 3 : இலக்கணம் 2
நன்னூல் காண்டிகை - சொல்லதிகாரம்
13UTL 03
Core - III

பாடநோக்கம் :
1.    நால்வகைச் சொற்களின் இலக்கணத்தைத் தெளிவுறுத்தல்
2.    தமிழ்ச் சொற்றொடர்களைப் பிழையின்றி எழுதக் கற்பித்தல்
3.    தமிழ்ச் சொற்களின் ஆற்றல் மிகு பயன்பாட்டை அறிதல்

மாணவர் பெறும் திறன் :
1.    தமிழ்ச் சொற்களின் இலக்கணத்தை அறிகிறான்
2.    தமிழ்ச் சொற்களின் பயன்பாட்டை அறிகிறான்
3.    மொழிநடையில் தேர்ச்சி பெறுகிறான்

உள்ளடக்கம்
அலகு 1    :     பெயரியல்

அலகு 2    :     வினையியல்

அலகு 3    :     பொதுவியல்

அலகு     4    :     இடையியல்

அலகு 5    :     உரியியல்

திட்டக்கட்டுரைகள்:
1.    பெயர்ச்சொற்களின் வகைகள்
2.    வினையெச்ச வாய்பாடுகள்
3.    தொகைநிலை, தொகாநிலைத் தொடர்கள்
4.    உரிச்சொல்லின் வகைகள்

குழுச் செயல்பாடு :
1.    சிறுகதை, அல்லது நாவலைப் படித்து அதில் உள்ள பெயர்ச்சொற்களை வகைப்படுத்துதல்
2.    தொகை நிலைத் தொடர்களைத் திரட்டுதல்
3.    தொகா நிலைத் தொடர்களை வகைப்படுத்துதல்


பாடநூல் :
1.    ---------            - நன்னூல் சொல்லதிகாரம் ( காண்டிகையுரை),
    சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம்,
    சென்னை.
                   
பார்வை நூல்கள்:
1.    செ.வை.சண்முகம்        - சொல்லிலக்கணக்கோட்பாடு,
    மீனாட்சி புத்தக நிலையம்,
    மதுரை.
2.    சொ.பரமசிவம்        - நற்றமிழ் இலக்கணம்,
          ஐந்திணைப்பதிப்பகம்,
       சென்னை.

இணைய முகவரிகள்:
1.  
3.      www.noolagam.com
4.      www.tamilpeper.net
5.      www.sangatham.com
----------------------------------------------------------------------------------------------------------------

 இரண்டாம்  பருவம் - (2013 - 2014 கல்வியாண்டு முதல்)

முதன்மைப்பாடம் : தாள் 4 : தலித்தியமும் பெண்ணியமும்

13UTL 04  Core - IV


பாடநோக்கம் :
1.    தமிழ் இலக்கியத்தின் புதிய வகைமைகயான தலித்தியத்தையும் பெண்ணியத்தையும் அறிமுகப்படுத்துதல்
2.    விளிம்பு நிலை மக்களைப்பற்றி வெளிவந்த படைப்புகளை அறிமுகப்படுத்துதல்.

மாணவர் பெறும் திறன் :
1.    இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் வெளிவந்த பல புதிய படைப்புகளைத் தெரிந்து கொள்கின்றனர்.
2.    ஒடுக்கப்பட்டோரின் படைப்புகள்வழி நின்று தள மற்றும் நிலை மாற்றங்களை அறிகின்றனர்.
உள்ளடக்கம்
அலகு - 1     தலித்தியம்
    தலித்தியம் விளக்கம் - தலித்திய வரலாறு - தலித்தியமும் இலக்கியமும் - தலித் மீதான கட்டமைப்புகள் - தலித் கலைவடிவம் - தலித்தியத் திறனாய்வு.
1.    தலித்தியத்தின் நோக்கும் போக்கும் - வே. பொன்ராஜ்,                                     காவ்யா பதிப்பகம், சென்னை.
2.    தலித்தியம்                - கா. சண்முகசுந்தரம், (தொ.ஆ)
                              காவ்யா பதிப்பகம், சென்னை.
அலகு - 2     பெண்ணியம்
    பெண்ணிய விளக்கம் - மேலை நாடுகளில் பெண்ணிய தோற்றமும் வளர்ச்சியும் - இந்தியாவில் பெண்ணியத்தின் தோற்றமும் வளர்ச்சியும் - மேலைநாட்டுப் பெண்ணியமும் இந்தியப் பெண்ணியமும்.
1.    பெண்ணியம் தோற்றமும் வளர்ச்சியும்  - முனைவர் முத்துச்சிதம்பரம்,
                                முத்து பதிப்பகம், திருநெல்வேலி.
அலகு - 3     தலித்தியம் மற்றும் பெண்ணியம் சார்ந்த சிறுகதைகள்.
1.    சிறந்த இந்தியப் பெண் எழுத்தாளர் சிறுகதைகள்    - ராஜராஜன் பதிப்பகம்,
                                          சென்னை.
2.    அழகிய பெரியவன் கதைகள்                - நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
   சென்னை.
அலகு - 4     தலித்தியம் மற்றும் பெண்ணியம் சார்ந்த நாவலும் உரைநடையும்
1.    தகுதிப்பிழை                - ஆ. சந்திரபோஸ்,
                                   நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்.
2.    பெரியாரின் பெண்ணியம்        - அருணன்,
                                  வசந்தம் வெளியீட்டகம்,
                                  மதுரை.
அலகு - 5     தலித்தியம் மற்றும் பெண்ணியம் சார்ந்த கவிதைகள்
1.    கண்ணாடிப் பாதரட்சைகள்        - திலகபாமா
                                  காவ்யா பதிப்பகம்,
                                 சென்னை.
2.    நெருப்பில் காய்ச்சிய பறை        - அன்பாதவன்,
                                  காவ்யா பதிப்பகம்,
                                  சென்னை.
திட்டக்கட்டுரைகள்:
1.    தலித்தியத்தின் தோற்றம் வளர்ச்சி.
2.    பெண்ணியத்தின் படி நிலைகள்
3.    பெரியாரின் பெண்ணியம்
குழுச் செயல்பாடு :
1.    தலித், பெண்ணியப் படைப்பாளர்கள் குறித்து விவாதித்தல்.
2.     படைப்புகள் படைக்கச் செய்து அது குறித்து விவாதித்தல்.
பாடநூல் :
1.    சு.சண்முகசுந்தரம்            - தலித்தியம்,
                              காவ்யா பதிப்பகம்,
                              சென்னை.
2.    முனைவர் முத்துச்சிதம்பரம்    - பெண்ணித் தோற்றமும் வளர்ச்சியும்,
    முத்து பதிப்பகம்,
    திருநெல்வேலி.
3.    அன்பாதவன்            - நெருப்பில் காய்ச்சிய பறை,
    காவ்யா பதிப்பகம்,
    சென்னை.
4.    அருணன்                - பெரியாரின் பெண்ணியம்,
   வசந்தம் வெளியீட்டகம்,
    மதுரை.
பார்வை நூல்கள்:
1.    வே.பொன்ராஜ்            - தலித்தியத்தின்நோக்கும் போக்கும்,
                           காவ்யா பதிப்பகம்,
                           சென்னை.
2.    இரா.பிரேமா            - பெண்ணிய அணுகுமுறைகள்,
   தமிழ்ப்புத்தகாலயம்,
                           சென்னை - 17
3.    அரங்க.மல்லிகா            - தமிழ் இலக்கியமும் பெண்ணியமும்,
   சூஊக்ஷழ
   சென்னை - 98
4.    இரெ.மிதிலா            - பெண்ணிய எழுத்து,
    அடையாளம், திருச்சி.
5.    மா.கார்த்திகேயன்            - நவீன கவிதைகளில் பெண்ணியமும்
   தலித்தியமும்,
   கௌரா ஏஜன்சீஸ், சென்னை.
6.    இராஜம் கிருஷ்ணன்        - காலந்தோறும் பெண்,
    கௌரா ஏஜன்சீஸ், சென்னை.
7.    விழி.பா.இதயவேந்தன்        - பெண் படைப்புலகம் இன்று,
    இருவாட்சி பதிப்பகம், சென்னை.
இணைய முகவரிகள்:
1.  
1.      www.dalittiyam.com
3.      www.penniyam.com
4.      www.uyirmmai.com
5.      www.noolaham.com
9.      www.tamilvu.org

---------------------------------------------------------------------------------------------------------------
இரண்டாம் பருவம் - (2013 - 2014 கல்வியாண்டு முதல்)
முதல் சார்புப் பாடம் - II  தாள் : 2
தமிழர் நாகரிகமும் பண்பாடும் - தாள் -II

13ATL 02

First Allied - II


பாடநோக்கம் :
1.    மக்கள் வரலாற்றையும் பண்பாட்டையும் கற்பித்தல்
2.    தமிழ் மக்களின் சமூக வரலாற்றைக் கற்பித்தல்
3.    தமிழகத்தில் ஏற்பட்ட பண்பாட்டுப் படையெடுப்பை எடுத்துரைத்தல்
மாணவர் பெறும் திறன் :
1.    சமூகம், பண்பாடு, பொருளாதாரம் குறித்த வரலாற்றுணர்வு பெறுதல்
2.    தமிழக அரசின் போட்டித்தேர்வு முதலானவற்றிற்கான அறிவூட்டம்பெறுதல்.
3.    தாய்மொழி மற்றும் தாய்நாட்டுணர்வு பெறுதல்

உள்ளடக்கம்
அலகு - 1     பிற்காலச் சோழர்காலம்
சோழப் பேரரசின் தோற்றம் - ஆதித்தன் வெற்றிச் சிறப்பு - பராந்தக சோழன் - தக்கோலப்  போர் - கண்டராதித்தன் - சோழர்கள் பற்றிய கல்வெட்டும் - செப்போடுகளும்.
சோழப் பேரரசின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் - முதலாம் இராசராசன் - இராசேந்திரன் ஆட்சிச் சிறப்பு - முதலாம் இராதிராசன் - முதலாம் குலோத்துங்கன் - விக்கிரம சோழன் - இரண்டாம் ராசராசன் - இரண்டாம் இராசேந்திரன் - மூன்றாம் குலோத்துங்கன் - கோப்பெருஞ்சிங்கன்.
அலகு - 2     சோழர்காலச் சமுதாயம்
    சோழர் காலத்தில் தமிழரின் சமுதாயம் - படைகள் - கோயில் சிறப்பு - வலங்கை இடங்கைக் குலங்கள் - பெண்கள் - தேவரடியார் - அடிமைத்தொழில் - கட்டடங்களும், சிற்பங்களும் ஓவியக்கலை - மன்னர்களின் அரண்மனைகள் - அணிகலன்கள் ஆடைகள் - உணவு - ஒப்பனை, கலைகள் - இசை - பழக்கவழக்கங்கள் - நம்பிக்கைகள் - பொழுதுபோக்கு - மருத்துவம் - மடம் - சமயம் - அவ்வையார் - புகழேந்தி - சமண காவியங்கள் - சைவம் - வைணவம் - இலக்கியங்கள்.
அலகு - 3     பிற்காலப் பாண்டியர் காலம்
    பாண்டியரின் ஏற்றமும் வீழ்ச்சியும் - மாறவர்மன் சுந்தரபாண்டியன் - சடையவர்மன் சுந்தரபாண்டின் - மாறவர்மன் குலசேகர பாண்டியன் - பாண்டிய உள்நாட்டுப்போர் - சுல்தான் ஆட்சி - விசயநகர ஆட்சி - கிருஷ்ணதேவராயன் - நாயக்கர்கள் - பிற்காலத்துப் பாண்டியர்கள்.
அலகு - 4     நாயக்கர் காலம்
    மதுரை நாயக்கர்கள் - ஆங்கிலேயர் புகுதல் - மதுரை திருமலை நாயக்கன் - செஞ்சி - மதுரை நாயக்கர்கள் - சொக்கநாதன் - பிற்கால மதுரை நாயக்கர்கள் - மீனாட்சி - தமிழகத்தில் 13 முதல் 18 ஆம் நூற்றாண்டுவரை சமூகநிலை - பிராமணர்கள் - முஸ்லீம்கள் - பறையர் - பழக்கவழக்கங்கள் - இலக்கியம் - சித்தர் பாடல்கள் - சமயம்.

அலகு - 5     ஐரோப்பியர் காலம்
    ஐரோப்பியரின் வரவு - போர்ச்சுகீசியர் - டச்சுக்காரர்கள் - கிழக்கிந்தியக் கம்பெனி - முதல் கருநாடகப்போர் - இரண்டாம் கருநாடகப்போர் - மைசூர்ப் போர்கள் - பாளைக்காரரின் கிளர்ச்சிகள் - மருதுபாண்டியர் - தீர்த்தகிரி - 19  ம் நூற்றாண்டின் அரசியலும் தமிழகத்தின் சமூகநிலையும் - அரசியல் - வேலூர்கலகம் - நாணயங்கள் - தீய பழக்கவழக்கங்கள் - குலப்பூசல்கள் - கல்வி - தமிழ் இலக்கியம் - ஆராய்ச்சி - இருபதாம் நூற்றாண்டாண்டில் தமிழகத்தின் நிலை - பொருளாதார நிலை - உழவு - சுதந்திரத்துக்குப் பின்.

திட்டக்கட்டுரைகள் :
1.    சோழர்கால ஆட்சிமுறை
2.    பிற்காலப்பாண்டியரின் பொருளாதார நிலை
3.    தமிழகத்தில் அயலார் ஆதிக்கம்

குழுச்செயல்பாடு :
1.    மாணவர் வாழும் பகுதியில் உள்ள பழம்பண்பாட்டுத் தரவுகளைச் சேகரித்தல்.
2.    தமிழக வட்டாரம் சார்ந்த பகுதிகளைப்பற்றி மாணவரிடையே கலந்துரையாடுதல்

பாடநூல் :
    டாக்டர் கே.கே. பிள்ளை,        -   தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்,
     உலகத்தமிழாராய்ச்சி நிறுவனம்,
                             சென்னை - 113.
                              பதிப்பு 2009.
பார்வை நூல்கள் :
    1. டாக்டர் ஹ. சுவாமிநாதன்.        -  தமிழக வரலாறும் பண்பாடும்
                            தீபா பதிப்பகம், சென்னை.
    2. பிரேம் (மொழிபெயர்ப்பு)        - வரலாறு, அடையாளம் பதிப்பகம், திருச்சி.
    3. பக்தவச்லபாரதி            - சமூக பண்பாட்டு மானிடவியல்,
                           அடையாளம் பதிப்பகம், திருச்சி.
    4. தி.வை. சதாசிவப்பண்டாரத்தார்    - பாண்டியர் வரலாறு,
                           தமிழ்மண் பதிப்பகம், சென்னை.
    5. தி.வை. சதாசிவப்பண்டாரத்தார்    - பிற்காலச் சோழர் சரித்திரம்,
                           தமிழ்மண் பதிப்பகம், சென்னை.
    6. பி. இராமநாதன்            - தமிழர் வரலாறு,
                            தமிழ்மண் பதிப்பகம், சென்னை.


இணைய முகவரிகள்: 
1.        www.tamil virtualuniversity.com
2.       www.maduraiproject. in
3.       www.tamilnoolagam.com
---------------------------------------------------------------------------------------------------

 பி.ஏ., தமிழ் இரண்டாம் பருவம்  (2013 - 2014 கல்வியாண்டு முதல்)

சுற்றுப்புறச் சூழலியல்
    13UENST


பாடநோக்கம் :
    மாணவர்கள் சுற்றுச்சூழல் பற்றியும், உயிரின வகைகள், இயற்கை வளங்கள், அதன் பாதுகாப்பு சட்டங்கள் குறித்து அறிவர்.

மாணவர் பெறும் திறன் :
    சூழல் தூய்மை, சூழல் காப்பு, சூழலைப்பேண வேண்டிய திறன்களைப் பெறுவர்.

உள்ளடக்கம்
அலகு 1 :     சுற்றுச்சூழல் - ஓர் அறிமுகம்
    சுற்றுச்சூழல் - பொருள் விளக்கம் - சுற்றுச்சூழல் மாசுபாடுகள் - மாசுபாடுகளின் தன்மை - சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு - சுற்றுச்சூழலின் அங்கங்கள் - நீர் மண்டலம் - நில மண்டலம் - கடல் வாழிடம் - வளி மண்டலம் - மனிதனால் உண்டாக்கப்பட்ட சுற்றுச்சூழல் - சுற்றுச்சூழல் பாதிப்பில் மனிதனின் பங்கு - வேளாண்மையும் சுற்றுப்புறச் சூழலும் - தொழில் வளர்ச்சியும் சுற்றுப்புறச்சூழலும் - அணுசக்தியும் சுற்றுப்புறச்சூழலும் - இயற்கை வளங்களின் பிரிவுகள் - இயற்கை வளங்களின் அழிவு - இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் - காடுகளின் பயன்கள் - காடுகள் அழிக்கப்படுவதற்கான காரணங்கள் - காடுகள் அழிக்கப்படுவதால் ஏற்படும் பிரச்சனைகள் - காடுகள் அழிப்பதைத் தடுப்பதற்கான வழிமுறைகள் - காடுகளும் மலைவாழ் மக்களும் - சிப்கோ இயக்கம் - நீர்வளத்தின் பங்கீடு - தாதுவளம் - உணவுவளம் - உரங்கள் - ஆற்றல் வளம் - நிலவளம் - பாலையாகுதலுக்கான காரணங்கள்.

அலகு 2 :     சூழ்நிலை மண்டலம்
    சூழ்நிலையியல் படிப்பின் வளர்ச்சி - உயிர்க்காரணிகள் - உயிரற்ற காரணிகள் - சூழ்நிலை மண்டலத்தின் ஆக்கக்கூறுகள் - சூழ்நிலை மண்டலத்தின் உணவு நிலைகள் - உணவுச்சங்கிலிகள் - உணவு வலை - ஆற்றல் ஓட்டம் - சூழலியல் பிரமிடு - சூழ்நிலை முறை தொடர் வரிசை - சமுதாயத் தொடர் வரிசையின் வகைகள் - சூழ்நிலை மண்டலத்தின் வகைகள் - காட்டு சூழ்நிலை மண்டலம் - சதுப்பு நிலத் தாவர வகை - சதுப்பு நில விலங்கு வகை - புல்வெளி சூழ்நிலை மண்டலம் - பாலைவனச் சூழ்நிலை மண்டலம் - நீர்ச்சூழ்நிலை மண்டலம் - கழிமுக சூழ்நிலையியல்.

அலகு 3 :     பல்லுயிர்ப் பெருக்கமும் சூழல் மாசுபாடும்
    பல்லுயிரின வேறுபாடுகளின் வகைகள் - இந்தியாவில் உயரிய புவியியல் வகைப்பாடுகள் - பல்லுயிரின வேறுபாட்டின் பயன்கள் - உலக அளவிலும் தேசிய அளவிலும் பல்லுயிரின வேறுபாடு - பல்லுயிரின வேறுபாட்டின் அழிவு - பல்லுயிரின வேறுபாட்டைப் பராமரித்தல் - காற்று மண்டல மாசுபாட்டிற்கான ஆதாரங்கள் - காற்று மாசுபாட்டை ஏற்படுத்தும் பொருட்கள் - நதிநீர் மாசுபாடு - ஆற்றுநீர் மாசுபாட்டால் ஏற்படும் விளைவுகள் - கங்கைநதி மாசுபாட்டிற்கான காரணங்கள் - காவிரிநதி மாசுபாட்டிற்கான காரணங்கள் - மண் மாசுபாட்டிற்கான காரணங்கள் - கடல்நீர் மாசுபாடு - வளைகுடாப் போரினால் கடல்நீர் மாசுபாடு - பம்பாய் எண்ணெய்க் கசிவு - இரைச்சல் மாசுபாடு - அனல் மாசுபாடு - அணுக்கதிர் வீச்சு மாசுபாடு.

அலகு     4 :      சுற்றுச்சூழல் மேலாண்மை
    திடக்கழிவு மேலாண்மை - திடக்கழிவுகளின் வகைகள் - அவற்றை அகற்றும் முறை - பேரழிவு மேலாண்மை - வெள்ளம் ஏற்படுவதற்கான காரணங்கள் - நிலநடுக்கத்தின் வகைகள் - புயல்காற்று - நிலச்சரிவு - சமுதாயப் பிரச்சனைகளும் சுற்றுச்சூழலும் - நீர் பராமரிப்பு முறைகள் - நீர்பிடிப்பு நிர்வாகத்தின் நோக்கங்கள் - சுற்றுச்சூழல் ஒழுக்கநெறிகள் - தரிசுநில மேம்பாடு - நுகர்தலும், பொருட்கள் வீணாகுதலும்.

அலகு 5 :     சூழல் மாசிற்குக் காரணிகளும் - தீர்வுகளும்
    பசுங்கூட விளைவு - பசுங்கூட வாயுக்களின் அளவு காற்று மண்டலத்தில் அதிகரிக்கக் காரணங்கள் - உலக சூடேற்றம் - அவற்றினால் ஏற்படும் விளைவுகள் - உலகளாவிய நடவடிக்கைகள் - அமிலமழை பற்றிய ஆராய்ச்சியும், தகவல்களம் - அமில மழை ஏற்பட காரணங்கள் - அமில மழையின் தீய விளைவுகள் - தாஜ்மகாலின் சலவைக் கற்களில் தொழுநோய் கொப்பளிப்பு - பிரிட்டிஸ் மன்றக் கட்டடம் - ஓசோன் படலத்தின் அமைப்பு - அதன் சிறப்புத் தன்மைகள் - ஓசோன் குறைதலுக்கான காரணங்கள் - சுற்றுச்சூழல் பாதுகாப்பபுச் சட்டங்கள் - மனித உரிமைகளும் சுற்றுச்சூழலும் - மதிப்பீட்டுக் கல்வியும் சுற்றுச்சூழலும் - எய்ட்ஸ் - பெண்கள் மற்றும் குழந்தை நலமும் சுற்றுச்சூழலும் - சுற்றுச்சூழல் மற்றும் மனித நலனில் தகவல் தொழில் நுட்பத்தின் பங்கு - ஐ.நாவின் சுற்றுப்புறத் திட்டத்தின் பணிகள்.

திட்டக்கட்டுரைகள்:
1.    இயற்கை வளங்கள் குறித்தும் பாதுகாப்பு சட்டம் குறித்தும் எழுதச்செய்தல்.
2.    சூழ்நிலை மண்டலம் - பல்லுயிர்ப்பெருக்கம் குறித்து எழுதச்செய்தல்.

குழுச் செயல்பாடு :
1.    பல்லுயிர்ப் பரவல் மற்றும் அழிவதால் ஏற்படும் பின் விளைவுகளை விவாதப் பொருளாக்கலாம்.
2.    சுற்றுப்புறச்சூழல் பேணல் எங்கிருந்து தொடங்குவது - பூமிப்பந்தின் பாதுகாப்புக்கு மாணவர் ஆற்றும் பங்கு.

பாடநூல் :
    1. ஜே. தர்மராஜ்                சுற்றுச்சூழல் இயல்,
                        டென்சி பப்ளிகேஷன்ஸ்,
                        சிவகாசி, 2004.
பார்வை நூல்கள்:
    1. அருள் நம்பி                மாசற்ற சுற்றுச்சூழலும் மனித மேம்பாடும்,
                        சுவாதி பதிப்பகம்,
                        சென்னை - 17, 1996.
   
2. கு. குமாரசாமி, மு. வசந்தி,         சுற்றுச்சூழல் அறிவியல்,
            கு. அழகப்பா மோசஸ்,        பாரதிதாசன் பல்கலைக்கழகம்,
                        திருச்சி, 2005.
   
3. ப. சந்திரசேகரன்            சுற்றுச்சூழல் மாசுபாடு,
                        கூ.மு. பதிப்பகம்,
                        புதுக்கோட்டை, 1996.
இணைய முகவரிகள்:
1.   
1.        www.esd.oml.gov
2.       www.unige.ch
3.       www.evs.anl.gov
4.      www.geology.usgs.gov

No comments: