Wednesday 23 October 2013

புறநானூறு கருத்தரங்க நிகழ்வுகள்

புறநானூறு கருத்தரங்க நிகழ்வுகள்

2 சனவரி 2013

முனைவர்ப.மருதநாயகம் அவர்கள், புறநானூறு வீரயுகப்பாடல்கள் அதாவது வாய்மொழிப்பாடல்கள் அல்ல.அவை செம்மைப்படுத்தப்பட்ட பாடல் வகையைச் சார்ந்தவை. பறநானூற்றுக் காலத்திற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வாய்மொழி மரபு தமிழில் தோன்றிவி்ட்டது என்றும், கைம்பீம் என்ற ஹீப்ரு மொழியறிஞர் 5000 காலத்திற்குமுன் சாலமன் என்ற மன்னனால் எழுதப்பட்ட ‘ கவிதைகளில் கவிதை‘ songs of song என்ற பாடல் சங்க அக இலக்கிய மரபைச் சார்ந்து எழுதப்பட்டிருப்பதாகக் கூறியதை எடுத்துரைத்தார். தமிழக வணிகர்கள் மயில் குரங்கு மணப்பொருட்களோடு தமிழ்மரபையும் பிற நாடுகளில் பரவவிட்டுள்ளனர் என்பதற்கு சாலமனின் பாடல்களே சான்று.உருவகமும் ஆகுபெயரும் எதிர்துருவங்கள் அவை இரண்டையும் ஒன்று சேர்த்து எழுதுவது இயலாத காரியம் என ருஷ்ய நாட்டறிஞர் ஜாக்கப்சன் கூறுகிறார். ஆனால் 2000ஆண்டுகளுக்கு முன்னரே இரண்டையும் அற்புதமாக இணைத்து உள்ளுறை என்ற பெயரில் தமிழன் கவிதைகளில் அதைப் படைத்துவிட்டான். புறம் 118ம் பாடல் இதற்கு சான்று.ஜார்ஜ் ஹார்ட் என்ற அறிஞர் இவ்வுத்தியை வால்மீகியும் வியாசரும் அசுவகோசரும் கையாளமுயன்று தோற்றுவிட்டனர் என்கிறார்.புறநானூற்றில் வரும் அறிவுடைநம்பியின் படைப்புப் பல படைத்து என்னும் மழலை இன்பம் தொடர்பான பாடலை காளிதாசன், சாகுந்தலைநாடகத்தில் பரதன் குழந்தையாக இருந்தபோது துஷ்யந்தன் பாடுவதைப்போல பயன்படுத்தியிருக்கிறார். இவையெல்லாம் தமிழின் தொன்மையைப் பறைசாற்றும் கூறுகளாகும்.
Photo: முனைவர்ப.மருதநாயகம் அவர்கள், புறநானூறு வீரயுகப்பாடல்கள் அதாவது வாய்மொழிப்பாடல்கள் அல்ல.அவை செம்மைப்படுத்தப்பட்ட பாடல் வகையைச் சார்ந்தவை. பறநானூற்றுக் காலத்திற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே வாய்மொழி மரபு தமிழில் தோன்றிவி்ட்டது என்றும், கைம்பீம் என்ற ஹீப்ரு மொழியறிஞர் 5000 காலத்திற்குமுன் சாலமன் என்ற மன்னனால் எழுதப்பட்ட ‘ கவிதைகளில் கவிதை‘ songs of song என்ற பாடல் சங்க அக இலக்கிய மரபைச் சார்ந்து எழுதப்பட்டிருப்பதாகக் கூறியதை எடுத்துரைத்தார். தமிழக வணிகர்கள் மயில் குரங்கு மணப்பொருட்களோடு தமிழ்மரபையும் பிற நாடுகளில் பரவவிட்டுள்ளனர் என்பதற்கு சாலமனின் பாடல்களே சான்று.உருவகமும் ஆகுபெயரும் எதிர்துருவங்கள் அவை இரண்டையும் ஒன்று சேர்த்து எழுதுவது இயலாத காரியம் என ருஷ்ய நாட்டறிஞர் ஜாக்கப்சன் கூறுகிறார். ஆனால் 2000ஆண்டுகளுக்கு முன்னரே இரண்டையும் அற்புதமாக இணைத்து உள்ளுறை என்ற பெயரில் தமிழன் கவிதைகளில் அதைப் படைத்துவிட்டான். புறம் 118ம் பாடல் இதற்கு சான்று.ஜார்ஜ் ஹார்ட் என்ற அறிஞர் இவ்வுத்தியை வால்மீகியும் வியாசரும் அசுவகோசரும் கையாளமுயன்று தோற்றுவிட்டனர் என்கிறார்.புறநானூற்றில் வரும் அறிவுடைநம்பியின் படைப்புப் பல படைத்து என்னும் மழலை இன்பம் தொடர்பான பாடலை காளிதாசன், சாகுந்தலைநாடகத்தில் பரதன் குழந்தையாக இருந்தபோது துஷ்யந்தன் பாடுவதைப்போல பயன்படுத்தியிருக்கிறார். இவையெல்லாம் தமிழின் தொன்மையைப் பறைசாற்றும் கூறுகளாகும். 

 முனைவர் தி.உமாதேவி போர் நிமித்தங்கள் பற்றிக் குறிப்பிடும்பொழுது சங்கப்புலவர்கள் மன்னன் மற்றும் மக்களின் நன்மைக்காக பின்னால் வருவதை முன்னரே சகுனங்களின் மூலமாக அறிந்து எச்சரிக்கும் விதமாக தீ நிமித்தங்களை எடுத்துரைத்துள்ளனர் என்றும் மன்னன் தோற்றுவிடக்கூடிய வகையில் சகுனங்கள் தென்படும்பொழுது புலவரகள் மன்னனின் வீரத்திற்குமுன் சகுனங்கள் ஒன்றம் செய்யாது என தைரியமூட்டி தன்னம்பிக்கை ஊட்டவும் செய்துள்ளனர் என்றும் கூறினார்.உன்ன மரம் என்ற மரமே போர்க்காலங்களில் மன்னனின் வெற்றி தோல்வி பற்றி கணிக்க உதவியுள்ளது என்றம் தெரிவித்தார்.இருவருடைய உரையும் மிகச்சிறப்பாக அமைந்திருந்தது.முனைவர் தி.உமாதேவி போர் நிமித்தங்கள் பற்றிக் குறிப்பிடும்பொழுது சங்கப்புலவர்கள் மன்னன் மற்றும் மக்களின் நன்மைக்காக பின்னால் வருவதை முன்னரே சகுனங்களின் மூலமாக அறிந்து எச்சரிக்கும் விதமாகதீ நிமித்தங்களை எடுத்துரைத்துள்ளனர் என்றும் மன்னன் தோற்றுவிடக்கூடிய வகையில் சகுனங்கள் தென்படும்பொழுது புலவரகள் மன்னனின் வீரத்திற்குமுன் சகுனங்கள் ஒன்றம் செய்யாது என தைரியமூட்டி தன்னம்பிக்கை ஊட்டவும் செய்துள்ளனர் என்றும் கூறினார்.உன்ன மரம் என்ற மரமே போர்க்காலங்களில் மன்னனின் வெற்றி தோல்வி பற்றி கணிக்க உதவியுள்ளது என்றம் தெரிவித்தார்.இருவருடைய உரையும் மிகச்சிறப்பாக அமைந்திருந்தது.











Photo: பேராசிரியர்கள்  உரை.......

No comments: